Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

    கவிதை எழுத தயங்கிடும் யாவருக்குமே நான் சொல்லவிரும்புவது....

    நான் முதன்முதலில் எழுதின கவிதை.... 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த என் தோழி ஒருத்திக்காக என் இளவயது நாளில் எழுதியது... "தோல்வியை வெற்றியாக நினைத்து தொடர்ந்து முயற்சி செய்!தோல்விகள் இனி உன்னிடம் நெருங்காது" இது மிகச் சாதாரணமானதுதான்.. ஆனால் இன்று நான் கண்டெடுத்திருக்கும் கவிதை என்னும் கிணற்றில் அன்று தென்பட்டது இந்த சிறுதுளிதான்...அதன் பின்னர் நிலவையும், காதலியையும் ஒப்புப்படுத்தி ஒரு கவிதை எழுதினேன்.. அதற்கு இன்று வரை பெயர் சூட்டவில்லை... கவிதை எழுதிடும் ஆர்வத்தை பன்மடங்காக்கின கவிதை.. அந்தக் கவிதையை இதுவரை எங்கேயும் நான் வெளியிடவில்லை.. அது என் மனதுக்குள்ளேயே இருக்கிறது.. விரைவில் அதை இங்கே பதிக்கிறேன். அதன் பின்னர் கவிதை எழுதாமல் இருந்த காலங்களில் ஒரு நாள் கொஞ்ச காலம் என்னுடன் பழகிக்கொண்டிருந்த என் தோழி திடீரென்று கேட்டாள்.. உனக்கு கவிதை எழுத தெரியுமா என்று..... ம்... என்றேன், அவளுக்கு கவிதைகள் எழுதி காட்ட வேண்டும் என்று காதல் கவிதைகள் தான் எழுதினேன்... "முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்..." ஒன்று மறக்காதீர்கள்.. குழந்தையிடம் முடிவெட்ட பழகியபின் தான் பெரியவர்களுக்கு வெட்ட அனுமதிப்பார்கள்.. அதனால் காதல் கவிதை எழுதுவதும் சாதாரணமானதல்லல...இப்படியாய் போய்க்கொண்டிருந்த காலக்கட்டதில் வேலை செய்யுமிடத்தில் சக நண்பர் ஒருவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.. அவர் வைரமுத்து கவிதைகள் அடங்கிய பெரிய புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தார்.. இரயிலில் நாங்கள் பயணிப்பது வழக்கம்... அப்பொழுதுதான் முதன் முதலில் வைரமுத்துவின் கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.. அந்தக் கவிதைகள் படித்தபிறகுதான், வார்த்தைகளை எப்படி கையாளவேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன், அதுமட்டுமில்லாமல் காதலைத் தாண்டி அவர் எழுதியிருந்த பல்வேறு கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன... பிறகுதான் நான் எழுதும் கவிதைகளின் எல்லையை விரிக்க ஆரம்பித்தேன்... கவிதைகள் என் சிறகினுள் தஞ்சம் அடைந்தன.. திருமணம் ஆனது... கவிதைகள் எழுதுவதையே முழுமையாய் விட்டிருந்த காலத்தில்தான் ஆர்கூட் அறிமுகமானது.. மறுபடியும் என் கவிதைகளுக்கு தூசுதட்டினேன்.. அருமை நண்பர் ஆதவா அறிமுகமானார்.. என் கவிதைகளுக்கு விமர்சனம் என்னும் பல்வேறு ஆடைகளை அணிவித்தவர்.... அவர்தான் இம்மன்றத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார்... இங்கே வந்தேன்... முதலில் கைவசம் இருந்த கவிதைகளை பதிக்க ஆரம்பித்தேன்.. வாழ்த்துவதற்கு வஞ்சனை இல்லாத உள்ளங்கள்.... என் கவிதைகளை வாழ்த்தி வரவேற்றன... அன்பு அறிஞர் கவிதைப் போட்டிகளை அறிமுகப்படுத்தினார்.. இது எனக்கு கவிதை எழுதிட ஊன்றுகோலாய் அமைந்தது... இதோ, இன்று எழுதியிருக்கும் கவிதைகள் வரையில் இம்மன்ற உறவுகள் உற்சாகமான பின்னுட்டங்கள் இல்லையென்றால் என் கவிதைகள் பலவும் உயிர்பெற்றிருக்காது... என்னை வாழ்த்தின, என்னை வளர்க்கின்ற நம் மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி கூறி என் கவிதைகளை இங்கே தொடர்ந்து பதிக்கிறேன்....

    என்றும் அன்புடன்.
    உங்கள்.

    ஷீ-நிசி..

    -----------------------------------------------------------------
    என் கவிதைகளின் சுட்டிகள்... உங்கள் வசதிக்காக....

    கவிதைகள் தொகுப்பு (பல கவிதைகள் உள்ளடக்கியது.. அந்த கவிதைகளின் சுட்டி கீழேயும் கொடுக்கப்பட்டுள்ளது)

    காதல் கவிதைகள்

    நிலவு தந்த வெளிச்சம் (முதல் நீள கவிதை)

    ஆசையாகத்தானிருக்கிறது!!!
    நிலவு களவு போனது
    கிராமத்துக் காதலன்
    உன்னை நான் பார்க்காமலிருந்திருந்தால்...
    காதல் தோல்வியரே!
    உன் திருமணம்
    மின்சார (ரயில்) தேவதை
    பிப்ரவரி 14-ல் ஒரு காதல் கடிதம்
    மெளனமான நேரம்
    யாருடன் அவளை ஒப்பிடுவேன்?!
    காதல் நினைவுகள்
    காதல் காலம்
    வான் விழியாள்


    நிகழ்வு கவிதைகள்

    குடந்தையில் கருகிய குழந்தைகள்
    கடல் நீர்
    கரையோர மீன்கள்
    காவிரி நீர்
    மரணத்தை நேசித்தவன்


    சமூக கவிதைகள்

    போர்க்களமா வாழ்க்கை?
    ஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை?!

    இவர்கள் தவழும் குழந்தைகள்!
    தீக்குச்சி
    பிள்ளைப்பேறு
    நடைபாதை மனிதர்கள்
    புதுமைப் பெண்
    விட்டுக்கொடுப்போம்
    சித்தாள்
    குயவனை வனையும் வாழ்க்கைச் சக்கரம்!


    குறுங் கவிதைகள்

    மனிதனைத் தவிர!
    கருப்பு வானவில்
    விழிவலை
    சாமிக்கு ஒரு கோவில்
    உயிர்க்காப்பான்!
    விழி நீர்
    விந்தை

    புகைப்படக் கவிதைகள்

    எப்போதடா வருவாய்?
    நிலாப் பெண்
    பூமியில் ஒரு வானவில்!
    உதிராத நினைவுகள்

    மற்றக் கவிதைகள்

    கோபம்
    அப்பா
    சமாதானம்
    தாய்மை
    இந்த நட்சத்திரங்கள்
    திருமண வாழ்த்து
    புத்தாண்டு!
    டிரிங்..... டிரிங்.....
    கல்லூரி கடைசி நாள்
    அம்மா....

    கவிதைபோட்டி கவிதைகள்

    1. குடியரசு தினம்
    2. நீயும் நானும் கவிதைக்கான படம்
    3. உயிர்ச்சிலைகள் கவிதைக்கான படம்
    4. முதல் முத்தம்
    5. பூக்காரி
    6. உடைந்த ஜாடி கவிதைக்கான படம்
    7. காதல் செய் காதலா கவிதைக்கான படம்
    8. அதிர்ஷ்டமில்லாத காதல்


    தொடரும்.....
    Last edited by ஷீ-நிசி; 08-07-2007 at 12:00 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    எனது அருமை ஷீ...
    கவிதை போன்ற உங்கள் அறிமுகம்....
    அட உங்க எழுத்துக்க்களை பார்க்கு நானும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும்...
    காலம் கனியட்டும்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    "முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்..."

    தொடரும்.......
    அற்புதமான அறிமுகம். உங்கள் கவிதை மழையில் நனைய எப்போதுமே காத்திருக்கிறோம்.

    என்னுடைய ஒரு பிரச்சனை பெரிய கவிதைகளை படிப்பது தான். சிறிய கவிதைகளை உடனடியாக படித்து விடுவேன்.

    இன்னொரு பிரச்சனை - கவிதைகள் சிறியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அன்பு ஷீ,,

    வாழ்த்துக்கள்

    (இன்று இரவு இங்கு எதாவது கிறூக்குகிறேன்.)
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஷீ-நிஷி!
    பெயரே கவிதையாய் கவர்கிறது.
    கவிதையோ,
    அப்படியே அள்ளுகின்றது...

    எளிய நடையில், பன்முகப்பட்ட பார்வையிலே கவிதை யாக்கும் உங்களுக்கு, எனது வாழ்த்துக்கள்...

    ஷீ-நிஷி...
    நடுநிசியின் இருளல்ல... அந்த இருளில் தானே ஒளிரும் தாரகைகளில் ஒன்று...

    என்றும் ஒளிருங்கள்... உங்கள் கவிதைகளால் மன்றை அலங்கரியுங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    கலக்கிப் போடுங்க ஷீ...
    உங்கள் கவிதைகளைப் போலே அறிமுகமும் அற்புதம்.
    வாழ்த்துகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    உங்களுக்கும் தூண்டுகோல் தோழிதானோ?எனக்கும் அப்படியே, இன்று அவள் எங்கோ நான் அறியேன் முகம்கூட மறந்துவிட்டதது.அனால் அவள் நினைவுகள் இன்றும் பசுமையாய் என் நெஞ்சில்.
    Last edited by சக்தி; 03-05-2007 at 05:24 AM.
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    அட்டகாசமன அற்புதமான அறிமுகம். அருமை கவிஞர் ஷீ-நிசி அவர்களே.
    பாராட்டுக்கள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கவிதையை மட்டுமல்ல ஷீ
    கவியாரகவும் காவியங்கள் படைக்கவும் என் வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    என்னை வாழ்த்தின அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

    மன்றத்தில் மேலெழும்பி இருக்கும் கவிதைகளை மட்டுமே படித்து வந்ததினால், உங்கள் பல கவிதைகளை தவறவிட்டிருக்கிறேன்.. எல்லாவற்றையும் படிக்கிறேன் விரைவில்..

    இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே...
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி பூ.. உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •