Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: மின்சார (ரயில்) தேவதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    மின்சார (ரயில்) தேவதை

    மின்சார இரயிலில்
    உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
    இறகுகளோடு அல்ல
    இரு பை நிறைய உடைகளோடு!

    பரிச்சயமான முகமென
    மூளை எண்ணியது!

    பேசச் சொல்லி
    மனசு உறுத்தியது!

    திட்டிவிட்டால்
    பயம் உறுத்தியது!

    பரவாயில்லை,
    தேவதைதானே!

    பயத்தின் உறுத்தலை விட
    மனதின் உறுத்தல் அதிக நாள்
    நீடிக்கும் என்பதால்
    தேவதையிடம் பேசிவிட்டேன்...

    நீங்க அந்த ஸ்கூல்லதான
    படிச்சீங்க!!
    அதிர்ஷ்டம்! ஆமாம் என்றாள்;

    நானும் அந்த ஸ்கூல்ல......
    துரதிர்ஷ்டம்! அது பெண்கள் பள்ளி!

    எப்படியோ சமாளித்துவிட்டேன்..

    ஏதேதோ பேசினோம்!
    அவ்வப்போது சிரித்தோம்!

    பிரியும்போது
    கேட்டதனால், கூறினாள்!
    அவளது அலுவலக எண்னை!

    மறு நாள்!
    மிகவும் பயத்துடன்
    தேவதையை தொடர்பு
    கொள்ளும் எண்களை
    அழுத்தினேன்;

    என் மூச்சுக்காற்றின் வேகம்
    எனக்கே வியப்பானது!

    எதிர்முனையில் ஆண்குரல்!

    நான்தான் எடுப்பேன் என்று
    அவள் கூறியிருந்ததால்
    ஆண்குரலிடம் பேச
    ஆர்வமில்லாமல்
    தொடர்பை துண்டித்தேன்...

    அடுத்து வந்த
    இரண்டு தினங்களும்
    விடுமுறை!

    அந்த இரண்டு தினங்கள்
    என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

    பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
    தொலைத்தவனின் அழுகை;
    இவர்களின் உணர்வுதான்
    எனக்கும் ஏற்பட்டது..

    விடுமுறைகளின் மீதே
    கசப்பு உண்டானது!

    வாரத்தின் முதல் நாள்!

    தேவதையை தொடர்பு
    கொள்ளும் எண்களை
    இம்முறை கூடுதல்
    பயத்துடன் அழுத்தினேன்;

    கூடவே பதற்றத்துடன்...

    மீட்டினால்தானே வரும்
    வீனையின் ஒலி;
    தொலைபேசியில் எண்களை
    அழுத்தினாலே வருகிறது!

    ஆம்! தேவதையின் குரல்!!

    பேசினோம்!
    சிரித்தோம்!
    பழகினோம்!

    உம்! அப்புறம்! என்ற
    வார்த்தைகள் மட்டும்
    கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
    எங்கள் உரையாடல்களின்
    நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!

    இன்றும்
    பல தொலைபேசி காதல்கள்
    துளிர்த்துக்கொண்டிருக்காது!!!

    நாட்கள் கடந்தன!

    வெளியில்
    சந்திக்க மட்டும்
    மறுத்தாள்!

    மீண்டும் மீண்டும்
    முயற்சித்தேன்!
    மீண்டும் மீண்டும்
    மறுத்தாள்!

    மறுக்க ஒரு காலம்
    உண்டென்றால் -இணங்க
    ஒரு காலம் உண்டல்லவா!

    இந்த இயற்கை விதிதான்
    இன்றும் எனக்குள்
    நம்பிக்கை விதைகளை
    தூவிக்கொண்டிருக்கிறது!

    தேவதை இணங்கினாள்
    வெளியில் வர
    சம்மதித்தாள்!

    கூட்டம் அதிகமாக
    சேரும் இடத்தை
    தேர்வு செய்தோம்!

    என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
    அவளை சந்தித்த பொழுது!

    அந்த இடங்கள் எல்லாம்
    அன்று புனிதப்பட்டன;
    தேவதையின் பாதங்கள்
    அங்கே பயணப்பட்டதால்!!

    அன்றே என் காதலை
    அவளிடம் சொல்ல
    முயற்சித்தேன்,

    என் பேச்சும், செயலும்
    என் காதலை
    அவளுக்கு வெளிப்படுத்தின!

    சமயமும் காலமும்
    வாய்க்காதலால் என் காதலை
    வெளிப்படுத்தவில்லை..

    அவள் உறவுகளின் நிகழ்வுகளை
    என்னிடம் கூறினாள்!
    என் உறவுகளின் நிகழ்வுகளை
    அவளிடம் கூறினேன்!

    எல்லா நிஜங்களையும்
    பரிமாறிக்கொண்டோம்!
    காதலைத் தவிர!

    என் நிலை தெரிந்தும்
    தன் நிலை காட்டாமல்,
    தன்னிலை மறைத்தாள்!

    ஒரு மெல்லிய
    மாலைப் பொழுதில்,
    காதல் வலி உண்டாகி,
    என் காதலை பெற்றெடுத்தேன்!

    நான் ஏற்கெனவே
    நிச்சயமானவள் என்றாள்!

    துடிக்கின்ற இதயம்
    அன்று கொஞ்சம் அழுதது!

    அழுகின்ற கண்களோ
    அன்று கொஞ்சம் துடித்தது!

    உன் உறவுகளைப் பற்றி
    பலமுறை கதைத்தாய்?! இதை
    மட்டும் ஏனடி மறைத்தாய்?!

    வலித்த இதயம்
    எழுப்பிய கேள்வியை
    உதடுகள் வெளியிடவில்லை!

    நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்
    சாதா ரகப் பெண்தானா?!

    இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

    உன்னில் வசித்திட,
    அவள் தகுதியானவளல்ல!
    Last edited by ஷீ-நிசி; 22-02-2007 at 02:49 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமையான கவிதை வரிகள் ஷீ நிசி

    மறுக்க ஒரு காலம்
    உண்டென்றால் -இணங்க
    ஒரு காலம் உண்டல்லவா!

    இந்த இயற்கை விதிதான்
    இன்றும் எனக்குள்
    நம்பிக்கை விதைகளை
    தூவிக்கொண்டிருக்கிறது!
    உன்மையிலும் உன்மை
    உன்னில் வசித்திட,
    அவள் தகுதியானவளல்ல!
    சரியான முடிவு நன்றி ஷீ நிசி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    இளையவர்
    Join Date
    29 Jan 2007
    Location
    colombo,இலங்கை
    Posts
    76
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    உம்! அப்புறம்! என்ற
    வார்த்தைகள் மட்டும்
    கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
    எங்கள் உரையாடல்களின்
    நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!


    மிக நன்றாகவுள்ளது. வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமா?உணர்ச்சியுடன் கவிதையை வடித்துள்ளீர்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி மனோ, நன்றி ஷாம்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இன்றிரவு நேரம் ஒதுக்கி படிக்கிறேன் நண்பரே!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இருக்கட்டும் ஆதவா... பொருமையாக... படித்து பின்னூட்டமிடுங்கள்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமையாக இருக்கிறது ஷீ!.. வாழ்வியல் நிகழ்வுகளாய் தொகுத்ததுபோலத்தான் இருக்கிறது.. மின்சார தேவதை என்றதும் நினைவுகள் எங்கோ சென்றது... கவனிக்க தலைப்பில் பிழை இருக்கிறது... புள்ளி வைக்கவில்லை. இனி என் கருத்துக்கள் (மட்டுமே)

    மின்சார இரயிலில்
    உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
    இறகுகளோடு அல்ல
    இரு பை நிறைய உடைகளோடு!

    மின்சார ரயில்... தமிழும் ஆங்கிலமும் கலந்த வார்த்தை. எங்காவது நாம் ரயில் பயணங்கள் செய்கின்ற வேளைகளில் எதிரே எப்படியும் தேவதை அமர்ந்து இருப்பதைக் கண்கூடாக காணலாம். எனக்கும் அந்த அனுபவமுண்டு.. சில பேருக்கு மட்டும் நீங்கள் சொன்னவர்கள் தேவையான தேவதையாக மனது நினைக்கலாம்.
    இரு பை நிறைய உடைகளொடு என்றால் உங்கள் அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்ட வரிகளாகத் தோணுகிறது............


    பரிச்சயமான முகமென
    மூளை எண்ணியது!
    பேசச் சொல்லி
    மனசு உறுத்தியது!
    திட்டிவிட்டால்
    பயம் உறுத்தியது!
    பரவயில்லை,
    தேவதைதானே!

    நம் மூளை என்றுமே இப்படித்தானுங்க... மனதின் சாவி மூளை.. ஏதாவது திருவிக்கொண்டேதான் இருக்கும். அதிலும் காணும் பெண்களை எங்காவது பார்த்த பெண் என்று சொல்ல வைக்கும்.. வயதும் அப்படித்தான்...
    மனது இரு பாகம் உடையது. ஒன்று மறுக்கும் ஒன்று ஏற்கும்... பரவாயில்லை அது ஒரு அழகிய தேவதைதானே என்றால் மறுத்த மனமும் மண்டியிட்டுப் போகும்...

    பயத்தின் உறுத்தலை விட
    மனதின் உறுத்தல் அதிக நாள்
    நீடிக்கும் என்பதால்
    தேவதையிடம் பேசிவிட்டேன்...

    பயம் மனதிடம் என்றுமே ஜெயிக்க முடியாது. அதேசமயம் சில நேரங்களில் மனதின் கோணங்கள் பயத்தைவிட மோசமானவை... முன்னம் சொன்னது போல ஏற்கும் மனது சொன்னது போலவே செய்வதுதான் இயல்பான மனிதம்...

    நீங்க அந்த ஸ்கூல்லதான
    படிச்சீங்க!!
    அதிர்ஷ்டம்! ஆமாம் என்றாள்;
    நானும் அந்த ஸ்கூல்ல......
    துரதிர்ஷ்டம்! அது பெண்கள் பள்ளி!
    எப்படியோ சமாளித்துவிட்டேன்..

    இந்த சமாளிப்புப் பொய்கள் அந்தந்த வயதில் ஏராளமாய் தங்கும் நண்பரே! உரையாடல் ஆரம்பம் அங்கே அருமையாக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது... உங்களின் வரிகள் அதை நிரூபிக்கிறது.. நல்லவேளை அந்த பள்ளி பெண்கள் பள்ளீ என்ற விபரம் தெரிந்தது. இல்லையென்றால் மாட்டிக்கொண்டிருப்பீர்கள்

    நான் ஒரு முறை ஒருத்தியின் பெயரைக் கேட்பதற்காக இந்த உத்தியைக் கையாண்டேன். அவளிடம் போய் "நீங்க காவ்யா தானே? " என்றேன். அவளோ "இல்லை நான் ரஞ்சனி" என்றால்... நம் கேள்வி சந்தேகமாக்த்தான் இருக்கும்.. பதில் கிட்டத்தட்ட நமக்கு சாதகமாகவே இருக்கும்...


    ஏதேதோ பேசினோம்!
    அவ்வப்போது சிரித்தோம்!
    பிரியும்போது
    கேட்டதனால், கூறினாள்!
    அவளது அலுவலக எண்னை!

    அதான் ஆரம்பமே கலைகட்டியாச்சே!! பிறகென்ன? தூள் கிளப்ப வேண்டியதுதான்.. அலுவலக எண் என்றால் அவளிடம் கைப் பேசி இல்லை.. ஆக நடந்த இந்த விபத்து தற்சமயமில்லை என்று தெரிகிறது... ஆறேழு வருடங்களுக்கு முன் நடந்த விஷயம்போலத் தெரிகீறது...

    மறு நாள்
    மிகவும் பயத்துடன்
    தேவதையை தொடர்பு
    கொள்ளும் எண்களை
    அழுத்தினேன்;

    அதான் அவ்வளவு பேசினீங்கள்ல... பிறகென்ன பயம்?

    என் மூச்சுக்காற்றின் வேகம்
    எனக்கே வியப்பானது!

    ரிசீவரில் படும் மூச்சுக்காற்று வேகமாவது இதயத்தின் அழுத்தத்தினால்... நல்ல வரிகள்

    எதிர்முனையில் ஆண்குரல்!

    அய்யய்யோ!! (உடனே மனது நினைக்குமே! பாவி ஏமாற்றிவிட்டாளே என்று!)

    நான்தான் எடுப்பேன் என்று
    அவள் கூறியிருந்ததால்
    ஆண்குரலிடம் பேச
    ஆர்வமில்லாமல்
    தொடர்பை துண்டித்தேன்...

    அடுத்து வந்த
    இரண்டு தினங்களும்
    விடுமுறை!

    கொடுமைதான் ஷீ!

    அந்த இரண்டு தினங்கள்
    என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

    உண்மைதான்... நல்ல கற்பனை/

    பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
    தொலைத்தவனின் அழுகை;
    இவர்களின் உண்ர்வுதான்
    எனக்கும் ஏற்பட்டது..

    மனது இருக்கிறதே! அது ஒரு மாயை... நம் கண்களுக்குத் தெரியாமல் புதைக்கப் பட்ட பிணம்.. எப்போதும் நோண்டிக்கொண்டேதான் இருக்கும். இங்கே இவர்களினுக்கு பதில் இவைகள் என்று போட்டிருக்கலாம்..

    விடுமுறைகளின் மீதே
    கசப்பு உண்டானது!
    வாரத்தின் முதல் நாள்!

    தேவதையை தொடர்பு
    கொள்ளும் எண்களை
    இம்முறை கூடுதல்
    பயத்துடன் அழுத்தினேன்;

    மீண்டுமொருமுறை முயற்சி செய்ய எப்போதும் மனம், இந்த மாதிரி விஷ்யங்களுக்குத் தூண்டும்... அவ்வகையில் இந்த நடவடிக்கை...

    கூடவே பதற்றத்துடன்...

    மீட்டினால்தானே வரும்
    வீனையின் ஒலி;
    தொலைபேசியில் எண்களை
    அழுத்தினாலே வருகிறது!

    ஆம்! தேவதையின் குரல்!!

    வொண்டர்.. நல்ல கற்பனை. இதைவிட நான் என்ன சொல்லவேண்டியிருக்கிறது?

    பேசினோம்!
    சிரித்தோம்!
    பழகினோம்!

    உம்! அப்புறம்! என்ற
    வார்த்தைகள் மட்டும்
    கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
    எங்கள் உரையாடல்களின்
    நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!

    நிஜமான உண்மை... உம் என்ற வார்த்தை காதலர்களுக்கும் கடலை போடுபவர்களுக்கும் கெட்ட வார்த்தை... சிந்தனை உடையவர்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்க்ள்.. ஆனால் காதலில் சிந்தனைச் சிதைவு ஏற்பட்டு விடும்... உங்கள் வரிகளில் அனுபவமே மேலோங்கி நிற்கிறது..

    இன்றும்
    பல தொலபேசி காதல்கள்
    துளிர்த்துக்கொண்டிருக்காது!!!

    உண்மைதான்.... அனுபவம் மாமே அனுபவம்....

    நாட்கள் கடந்தன!

    வெளியில்
    சந்திக்க மட்டும்
    மறுத்தாள்!

    மீண்டும் மீண்டும்
    முயற்ச்சித்தேன்!
    மீண்டும் மீண்டும்
    மறுத்தாள்!

    முதலில் அப்படித்தான் சொல்லுவார்கள்.... பிறகு அவர்களே கூப்பிடுவார்கள்.. சில பெண்கள் இப்படித்தான்...

    மறுக்க ஒரு காலம்
    உண்டென்றால் -இணங்க
    ஒரு காலம் உண்டல்லவா!
    இந்த இயற்கை விதிதான்
    இன்றும் எனக்குள்
    நம்பிக்கை விதைகளை
    தூவிக்கொண்டிருக்கிறது!

    எங்கோ இருந்து வரிகளை அள்ளி எடுத்த மாதிரி இருக்கிறது... இயற்கை விதியான இது இல்லையென்றால் காதல் ஏது? வாழ்கை ஏது? அருமை///

    தேவதை இணங்கினாள்
    வெளியில் வர
    சம்மதித்தாள்!

    கூட்டம் அதிகமாக
    சேரும் இடத்தை
    தேர்வு செய்தோம்!

    நிச்சயமாக் இது அனுபவம் மாதிரி தெரிகிறது... கவிதைகளில் இம்மாதிரி இருப்பது தான் ஆரோக்கியம். கூட்டம் அதிகமுள்ள இடங்களில்தான் நாம் என்ன பேசுகிறோம் என்று கவனிக்கமாட்டார்கள்... அதுபோக தனியாக அமர்ந்து பேசினால் அது பிரச்சனையும் கூட..

    என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
    அவளை சந்தித்த பொழுது!

    அந்த இடங்கள் எல்லாம்
    அன்று புனிதப்பட்டன;
    தேவதையின் பாதங்கள்
    அங்கே பயணப்பட்டதால்!!

    அங்கங்கே உங்கள் மலர்களைத் தூவி விடுகிறீர்கள். கால் பட்ட இடங்கள் புனிதங்கள்... அற்புதம்..

    அன்றே என் காதலை
    அவளிடம் சொல்ல
    முயற்ச்சித்தேன்,

    என் பேச்சும், செயலும்
    என் காதலை
    அவளுக்கு வெளிப்படுத்தின!

    நண்பரே நிச்சயம் அது அவளுக்குத் தெரியும்... அவன் பேசுவது காதல்தான் என்று தெரிந்தும் தெரியாமல் அவனை நோகடிப்பவர்கள் நிறையபேர்.... (எனக்கு அந்த அனுபவம் நடந்து கொண்டிருக்கிறது...) காதல் வார்த்தைகளை தெரியாதது போல எடுத்துக்கொண்டு விளையாடும் பெண்களை கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கீறேன்.. செயல் காதலை வெளிப்படுத்துகிறதா... என்ன சீண்டலா ஷீ?

    சமயமும் காலமும்
    வாய்க்காதலால் என் காதலை
    வெளிப்படவில்லை..

    அந்த தவறு எப்போதும் நடக்கக்கூடாதுங்க... நான் புதிதாக ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதை நிச்சயம் படியுங்க... இந்த வரிகளின் ஆழம் உங்கள் கதாநாயகனுக்குப் புரியும்

    அவள் உறவுகளின் நிகழ்வுகளை
    என்னிடம் கூறினாள்!
    என் உறவுகளின் நிகழ்வுகளை
    அவளிடம் கூறினேன்!
    எல்லா நிஜங்களையும்
    பரிமாறிக்கொண்டோம்!
    காதலைத் தவிர!

    உங்களை வெறும் நண்பனாகவே பார்த்திருக்கிறாள்...

    என் நிலை தெரிந்தும்
    தன் நிலை காட்டாமல்,
    தன்னிலை மறைத்தாள்!

    ஒரு மெல்லிய
    மாலைப் பொழுதில்,
    காதல் வலி உண்டாகி,
    என் காதலை பெற்றெடுத்தேன்!

    சொல்லீட்டீங்களா? காதல் வலி, பெற்றெடுப்பு.... அருமையான உவமைகள்..

    நான் ஏற்கெனவே
    நிச்சயமானவள் என்றாள்!
    துடிக்கின்ற இதயம்
    அன்று கொஞ்சம் அழுதது!
    அழுகின்ற கண்களோ
    அன்று கொஞ்சம் துடித்தது!

    இருவரிகளில் அர்த்தம் பொதிய எழுதும் பாங்கு நிறையவே உங்களிடம் இருக்கிறது.. அழுத இதயம், துடித்த கண்கள்.. அந்த ரகம்..

    உன் உறவுகளைப் பற்றி
    பலமுறை கதைத்தாய்?! இதை
    மட்டும் ஏனடி மறைத்தாய்?!

    பெண்களே இதற்கு பதில் வைத்திருப்பார்கள்.

    வலித்த இதயம்
    எழுப்பிய கேள்வியை
    உதடுகள் வெளியிடவில்லை!

    மென்மையானவனோ?.. காதலன் என்றுமே மென்மையானவன் தானுங்க.. நிராகரிப்பில் அவர்கள் நிலைகுலைந்து போவது இன்று நேற்றா நடக்கிறது?..இதயம் வலிப்பது தோல்வியுற்றவனுக்கே தெரியும். இந்த மாதிரி பெண்களுக்குத் தெரியாது. (எல்லா பெண்களையும் சொல்லவில்லை..)

    நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்
    சாதா ரகப் பெண்தானா?!

    இருக்கலாம்.. அவள் ஒருமுறையேனும் உங்களிடம் காதலாய் பேசினாளா?.. அப்படிப்பட்ட வரிகளும் இங்கில்லை. இதில் ஆணின் தவறே அதிகம் உள்ளது. நீங்களாகவே காதல் என்று ஏன் எடுத்துக்கொண்டீர்கள்...?

    இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

    உன்னில் வசித்திட,
    அவள் தகுதியானவளல்ல

    கடைசி வரிகளில் சின்ன ஏமாற்றம்.. அந்த பெண்ணிடம் காதல் என்ற வார்த்தை வெளிவரவே இல்லை. நாமாகவே நினைத்துக்கொண்டு,, அதை காதல் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் அந்த பெண் என்ன செய்யும் பாவம்?..
    என் நிலை தெரிந்தும்
    தன் நிலை காட்டாமல்,
    தன்னிலை மறைத்தாள்!


    இப்படி மறைத்ததற்கே நாம் அர்த்தம் புரிந்து கொண்டிருக்கவேண்டியல்லாமல் காதல் என்று நினைப்பது அர்த்தமற்றதுதானே!



    இறுதியாக, வரிகளில் சில நேரங்களீல் அரிய அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. நல்ல கற்பனைக் கதை.. நிஜமாக நடந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது.. சுட்டி இருக்கிறேன். சரி செய்யவும்... மற்றபடி ஒரு எளிமையான (காட்சிகள் அடங்கிய) கவிதை.. பாராட்டுக்கள்...

    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தேவதை பற்றிய கவிதை அருமை...

    நிச்சயம் செய்யப்பட்டவளின் கண்களின் நீங்கள் நண்பர்...
    உங்கள் கண்களில் அவள் காதலி...

    கனவுக் காதலியாக இருந்துவிட்டு போகட்டும்..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Code:
    இறுதியாக, வரிகளில் சில நேரங்களீல் அரிய அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. நல்ல கற்பனைக் கதை.. நிஜமாக நடந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது.. சுட்டி இருக்கிறேன். சரி செய்யவும்... மற்றபடி ஒரு எளிமையான (காட்சிகள் அடங்கிய) கவிதை.. பாராட்டுக்கள்...
    பல்வேறு காதல் அனுபவங்களில் இதுவும் ஒரு வகை....

    அவள் உறவுகளின் நிகழ்வுகளை
    என்னிடம் கூறினாள்!
    என் உறவுகளின் நிகழ்வுகளை
    அவளிடம் கூறினேன்!
    எல்லா நிஜங்களையும்
    பரிமாறிக்கொண்டோம்!
    காதலைத் தவிர!


    இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.... அவன் அவளை காதலித்திட... அவள் அவனை காதல் செய்ய தூண்டிட.....

    எழுத்துப்பிழைகள் இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன். இத்தனை பிழைகளா என்று என்னை நானே கடிந்துக்கொண்டேன்....
    Last edited by ஷீ-நிசி; 13-09-2007 at 04:44 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    தேவதை பற்றிய கவிதை அருமை...

    நிச்சயம் செய்யப்பட்டவளின் கண்களின் நீங்கள் நண்பர்...
    உங்கள் கண்களில் அவள் காதலி...

    கனவுக் காதலியாக இருந்துவிட்டு போகட்டும்..

    கலக்கறீங்க அறிஞரே! கனவுக்காதலி கவிதையின் தலைப்பு போல் உள்ளது
    ..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    Code:
    இறுதியாக, வரிகளில் சில நேரங்களீல் அரிய அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. நல்ல கற்பனைக் கதை.. நிஜமாக நடந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது.. சுட்டி இருக்கிறேன். சரி செய்யவும்... மற்றபடி ஒரு எளிமையான (காட்சிகள் அடங்கிய) கவிதை.. பாராட்டுக்கள்...
    எனக்கு ஏற்பட்ட பல்வேறு காதல் அனுபவங்களில் இதுவும் ஒரு வகை....

    அவள் உறவுகளின் நிகழ்வுகளை
    என்னிடம் கூறினாள்!
    என் உறவுகளின் நிகழ்வுகளை
    அவளிடம் கூறினேன்!
    எல்லா நிஜங்களையும்
    பரிமாறிக்கொண்டோம்!
    காதலைத் தவிர!

    இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.... நான் அவளை காதலித்திட... அவள் என்னை காதல் செய்ய தூண்டிட.....

    எழுத்துப்பிழைகள் இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன். இத்தனை பிழைகளா என்று என்னை நானே கடிந்துக்கொண்டேன்....
    காதல் செய்யத் தூண்டியது என்பதே நம்மவர்களின் தப்புக் கணக்குதானே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    கடைசியில் ஒரே டச்சிங்கா முடிச்சிட்டீங்களே...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •