Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 50

Thread: ஆதவனின் குளுகுளூ ஜொளுஜொளு பயணம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    ஆதவனின் குளுகுளூ ஜொளுஜொளு பயணம்

    வணக்கம் மன்ற நண்பர்களே!

    கோடை வெப்பத்தின் உக்கிரம் பாறையைப் பிளக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க திடீரென
    உதித்த யோசனைதான் ஊட்டி பயணம்... சென்ற சனி இரவு அலுவல் வேலைகளை முடித்துவிட்டு மன்றத்தில் விடுப்பு
    சொல்லிவிட்டு கிளம்பினேன்... நண்பர்கள் சிலர் மீன் கடையில் இருக்கவும், உடனே இரு மீன்களை உள்ளே தள்ளிவிட்டு
    பயணத்திற்கு யாரார் வருகிறார்கள் என்று அலைபேசியில் கேட்க, சிலர் குறைந்து இறுதியில் நான்கு பேர் மட்டும் என்று
    குறுகிப் போனது.. சரி என்று ஞாயிறு அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து (வேதனையான தருணங்கள்) பல்லு விளக்கு
    குளித்து முடித்து 5.45 க்கு நண்பர்கள் நால்வரும் ஒன்றிணைந்தோம்.

    நண்பர்கள் நாங்கள் யார் யார் எப்படி என்று சொல்கிறேன் ..

    நான் ஆதவன் - என்னைப் பற்றி சொல்லவேண்டியதில்லை PJP நான்.
    Hell - சிறுவயது முதல் நெருங்கிய நண்பன்... ஒரே வளவள... ஏன் இந்த பெயர் அவனுக்கு என்று தெரிந்ததா?
    Be or Scooby - சிறுவயது நண்பன். சென்னையில் இன்னும் படித்துக் கொண்டு அவனோட வேலையான லவ்விக்
    கொண்டிருக்கிறான்
    Rocky - என்னுடைய வேலை.... இவனுக்கு கவிதை, கதை போன்றவற்றில் விருப்பம்.. விரைவில் மன்றத்திற்கு வருவான்..
    அப்போது இன்னும் தெரிந்துகொள்வீர்கள்.

    நால்வரில் கடைசி மனிதரைத்தவிர மற்ற மூவரும் PJP. நாலாமவன் ரொம்ப நல்ல பையன் (?!)

    ஒருவழியாக வண்டியை முறுக்கிக் கொண்டு கிளம்பினோம். நன்றாக ஞாயம் பேசிக்கொண்டே..... அந்த நேரத்திலேயே
    நல்ல வெளிச்சம் இருந்தது. அவினாசி அருகே இரண்டு வண்டிக்கும் பெட்ரோல் ஐந்து லிட்டர்கள் அடித்துவிட்டு
    கிளம்பினோம்.... ஒரே மூச்சில் முக்கால் மணிநேரத்தில் பிளாக் தண்டர் வந்து சேர்ந்தாயிற்று. (ஏற்கனவே இங்கு வந்து
    அடித்த கூத்துக்கள் எனக்கே மறந்துவிட்டது..) அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிதுநேர
    இளைப்பாறலுக்குப் பிறகு வண்டியை உசுப்பி ஊட்டி மலையில் ஏற ஆரம்பித்தோம்... நாங்கள் சென்ற நாள்
    மலர்கண்காட்சிக்குண்டான நாளாகியமையால் சரியான கூட்டம்... ஊட்டியில் சுற்றுலா பயணிகள் மட்டுமே 2 லட்சம்
    பேராம்.... பின் எப்படி மலைப்பாதையில் வேகமாக செல்லமுடியும்..?? ஒரே ட்ராஃபிக்... கிட்டத்தட்ட இரண்டு
    மணிநேரங்கள் பிடித்தது.. குன்னூரைத் தொட... அப்படியே மலை அழகுகளை சில இடங்களில் ரசித்துவிட்டு குன்னூர்
    தாண்டி ஊட்டியைத் தொட, மணி 10 ஐ நெருங்கியது... ஞாயிறு அன்று ஏக கூட்டம்... சுள்ளென இல்லாவிடினும் ஓரளவும்
    வெயில். ஊட்டி டீ அருந்திவிட்டு திட்டம் போட்டோம்... முதலில் பைகாரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு பிறகு
    பொடானிகல் கார்டன் முடித்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பிவிடவேண்டும் என்பது... அடுத்தநாள் வரை நாங்கள் திட்டம்
    போடவில்லை.. ஊட்டியிலிருந்து பைகாரா கூடலூர் செல்லும் வழியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 கி.மீ மேலே.. மலை என்பதால் இயற்கையின் அழகு அற்புதமாக இருந்தாலும் பாதை மிக மோசமாக இருந்தது.. வெறும் கற்களே தாருக்கு மேலே இருந்தன.. வண்டியை ஓட்டிக் கொண்டு போவதில் மிகச் சிரமமாக இருந்தது. சிலசில இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு மிக மெதுவாக அழகை ரசித்துவிட்டு பைகாரா சேர்ந்தோம்...

    வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு பைகாரா படகு இல்லத்திற்கு வந்து பார்வையிட்டோம்... அங்கங்கே சில படங்கள் எடுத்துவிட்டு சில பெண்டுகளை ரசித்து ஜொல்லிவிட்டு நேரே நீர்வீழ்ச்சிக்குச் சென்றால், அங்கே வறண்டு போயிருந்தது. இருந்தாலும் விடுவதாக இல்லை. அதையும் படம் பிடித்துவிட்டோம்... அங்கே ஜொல்லமுடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது... ஒரு பக்கம் இயற்கை அழகு வறண்டு போயிருந்தாலும் இன்னொருபக்கம் இயற்கையாகவே அழகிகளின் அழகு ஊறிக் கொண்டிருந்தது... பாதிக்கும் மேற்பட்டவர்கள் வடநாட்டவர்கள். சில வெளிநாட்டவர்களும் கூட.... மறக்க முடியாத தருணங்கள். செய்த கூத்துக்களை நான் வெளியிடவும் மாட்டேன்

    இப்படியாக மதியம் சென்றுவிட்டது. அப்படியே நடந்துவந்து பஜ்ஜி சொஜ்ஜிகளைத் தின்றுவிட்டு கிளம்பினோம்... நேரே ஷூட்டிங் ஸ்பாட்... ஊட்டிக்கும் பைகாராவுக்கும் நடுவே இருக்கிறது.. மிக அழகிய பசுமை பிரதேசம். அங்கே கண்ட காட்சிகளை நான் சொல்லவா ? ஜொல்லவா? மதியம் 3 வரை தத்தளித்துவிட்டு பல படங்களை பல கோணங்களில் எடுத்துவிட்டு மீண்டும் வண்டியேறினோம்... இடையிடையே தின்றதையெல்லாம் சொல்லமுடியாது... கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தின்று தீர்த்தோம்...

    ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஏரி ஒன்று இருந்தது... மரங்களுக்கு ஊடான பாதையில் நடந்து சென்று ஏரியைக் காணும்போது.. அடட்டா!!!! என்னே அழகு!!!! அங்கேயும் சில படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு வண்டியில் கிளம்பினால், ஊட்டிக்கு 8 கி.மி இருக்கையில் மழை பின்னி எடுத்தது.... மணி கிட்டத்தட்ட 4 ஆகிவிட்டது. சீக்கிரமே பொடானிகல் கார்டன் ரசித்துவிட்டு வீடு திரும்பவேண்டும். மலைப்பாதை என்பதால் 7 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மழை பின்னி எடுத்தது. கிட்டத்தட்ட 5 மணி வரை..... என்ன செய்ய???

    யோசித்துக் கொண்டிருந்தோம்... காரணம் அன்று சீசன் காலம் என்பதால் அறை வாடகைக்குக் கிடைக்காது. இரவுக்குள் வீடு திரும்பவேண்டும்... வீட்டுக்கு கிட்டத்தட்ட 100 கி.மி இருப்பதாலும் மலைப்பாதையே 40 கி.மி என்பதாலும் பல சிக்கல்... மாட்டிக் கொண்டோம்..... இந்த சூழ்நிலையில் ஊட்டியை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை....
    ---------------------------------
    சரி இது இப்படியே இருக்கட்டும்.. வரும் வழி முதல் இதுவரை செய்த லூட்டிகள் என்ன?? நிச்சயமாக அசிங்கமாக ஏதும்
    செய்யவில்லை. ஊட்டிக்கு ஏறும் வரை எங்களது வழக்கமான பேச்சுக்கள் மட்டுமே இருந்தன. அங்கே சேர்ந்ததும்
    நாங்கள் மாறிவிட்டோம். எங்கள் கண்கள் எங்களிடமே இல்லை.. பைகாரா செல்லும் வரை நாங்கள் நல்லவர்களாக
    இருந்தோம்.. பைகாரா அடைவதற்கு முன்பாக ஒரு கேரட் விற்கும் பெண்மணி எங்களை அழைத்து கேரட் வாங்கச்
    சொன்னார். நாங்கள் கொஞ்சம் தூரம் சென்று நிறுத்தினோம்... அவசரம் வேறு.. அந்த பெண் ஓடிவந்து கேரட்டுகளை
    எங்களுக்கு விற்றுச் சென்றாள்... ஹி ஹி. அந்த பெண்மணி மிக அழகாக இருந்தாள். ஆனால் கை மட்டும் சூம்பிப் போய்
    ஆகாரம் திங்காத கோழிமாதிரி இருந்தாள்... மற்றபடி அவளுக்கு பெரிய மனசு.. இல்லாவிடில் எங்களுக்காக சுவை
    மிகுந்த கேரட் வழங்க ஓடி வந்திருக்கமாட்டாள்.. சரி சரி. ரொம்ப ஓவரா போறேன். பைகாரா அடைந்ததும் வாலிபம்
    வேலை செய்ய ஆரம்பித்தது. எங்கு திரும்பினாலும் கண்கள் பெண்களிடமே நின்றது. படகு இல்லத்தில் ஏகப்பட்ட
    இளசுகள்.. கையில் பாப்கார்ன், மாங்காய், ஐஸ்கிரீம் என்று இஷ்டத்திற்கு செலவு செய்துகொண்டு
    திரிந்துகொண்டிருந்தார்கள் சரி எதற்கு மொபைல் வைத்திருக்கிறோம்? படமெடுக்கலாம் என்று பார்த்தால் மொபைல்
    குறிப்பிட்ட தொலைவு வரை ஜூம் ஆகவில்லை. படகு இல்லத்தில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருக்கும்
    காதலர்கள் முதல் தம்பதியவர் வரை ஒருவரையும் விடவில்லை. இதில் உச்சகட்டமாக ஒரு தம்பதியரின் கொஞ்சலை
    படமெடுத்து சாதனை புரிந்தோம்... ம்ம்... மனைவியோடு இம்மாதிரி இடங்களுக்கு வந்தால் அது அலாதி சுகம்.. நமக்கு
    இன்னும் காலம் இருக்கிறது ... அந்த படகு இல்லத்தில் பயணம் செய்ய நாங்கள் திட்டமிடவில்லை... ஊட்டியில் சென்று
    பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தோம்.. சில ஊடல்களையும் அங்கே காணமுடிந்தது.

    அப்படியே பைகாரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் ஒரே அழகிகளின் அணிவகுப்பு. எங்களுக்கு திக் திக் என்று இருந்தது.
    (ஒரு போலீஸ் காரியைக் கூட விடாமல் ஜொல்லினோம். ) வெளிநாட்டவர்கள் வேறு வந்திருந்தார்கள்... சிலதுகள்
    பஞ்ச உடை.... நாங்கள் எங்களையே படமெடுக்கிறோம் பேர்வழி என்று சிலரை படமெடுக்க முயன்றோம்... ஆனால்
    முடியவில்லை.. எங்களுக்குண்டான நாகரீகமே தடுத்துவிட்டது. அங்கே சிறிது நேரம் அமர்ந்து இயற்கையை
    ரசித்தோம்.. கூடவே பலவும்.. மெல்ல கடைக்குச் சென்று வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி என்று
    ஒரு ஐயிட்டம் விடாமல் துரத்தித் துரத்தித் தின்றோம். ஒரு பெண் அருகே அமர்ந்திருக்கிறாள் என்பதற்காகவே ஒரு
    மினரல் வாட்டரை வாங்கி அதில் முகம் கழுவி நாங்கள் அதிசுத்தமானவர்கள் என்று உணரவைத்தோம்...ம்ம்ம்ம்ம் அந்த
    பெண் எங்களைப் பார்ப்பதாகத் தெரியவில்லை. மெல்ல நடந்து வந்து அந்த போலீஸ் காரியை மீண்டும் ரசித்துவிட்டு
    பைகாராவிலிருந்து இறங்கினோம்... ஹி ஹி மீண்டும் அதே கேரட் வாங்கலாம் என்று நினைத்தோம்... எங்கள் நினைவில்
    யாரோ மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள். அட குரங்குகளைக் கூட விடவில்லை. பல சேஷ்டைகள் செய்துவிட்டு
    நேரே ஷூட்டிங் ஸ்பாட் இறங்கினால், அங்கே ஆரம்பமே அமர்களம்.

    நாம் ரசிப்பதற்காகத்தான் பெண்கள் மேக்கப் செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து... வெறும் ரசிப்போடு இருப்பது
    ஒன்றுதான் சாலச் சிறந்தது. அளவுக்கு மீறிய ரசிப்புத் தன்மை என்னிடம் விட்டு விலகியிருந்தது நான்
    அறிந்துகொண்டேன். இதில் கொடுமை என்னவென்றால் பல பெண்கள் எங்களையும் ரசித்தார்கள். ஊட்டியில் சேலை
    கட்டிய பெண்களை நான் பார்த்தது மிக மிக குறைவு.. ஆனால் அதற்கு நேரெதிரே ஆடை குறைந்த பெண்களையே
    பார்க்க முடிந்தது. இம்மாதிரியான இடங்களுக்கு முழு சுதந்திரம் எடுத்துக் கொண்டு இப்படி செய்கிறார்களா அல்லது
    அவர்கள் வாழ்க்கை முறையே இப்படித்தானா என்று சந்தேகம் எழும்புகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வதற்கு
    முன்பாகவே இரு மாங்காய்களை வாங்கி கொறித்துக் கொண்டே இருவரை பின் தொடர்ந்தோம்... ஒரே மேடாக
    இருந்தமையால் என்னால் அவ்வளவாக ஏற முடியவில்லை. மெல்ல மெல்ல ஏறினால் அய்யோ... அப்படி ஒரு அழகுக்
    கூட்டமாக ஊட்டி மலைகள் இருந்தன,, எல்லாவற்றையும் மொபைல் படம் பிடித்துக் கொண்டது.. நாங்கள் ஒரு ஓரமாக
    நின்று/படுத்துக் கொண்டு பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் செல்ஃப் டைமர் வைத்து நாங்களே
    படமெடுத்தோம்.. அது ஒரு அழகிய அனுபவம்./ அப்படியே நடந்து சென்று குதிரை ஏற்றத்தைக் கண்டு ரசித்தோம்..
    ஏனோ எனக்கு குதிரை ஏறவேண்டும் என்று தோணவில்லை. அங்கே மொபை டவர் கிடைத்தது என்பதால் அவரவர்கள்
    தன் உட்பிக்கு அலை(ழை)த்தார்கள்.. நான் மட்டும் இயற்கையோடு காதல் புரிந்துகொண்டிருந்தேன். உடன் ஓடி
    விளையாடும் சில பெண்களையும் குழந்தைகளையும் சந்தோசமாகவும் அதேசமயம் நாம் குடும்பத்தோடு வந்திருந்தால்
    இந்த சந்தோசம் மேலோங்கியிருக்கும் என்றும் வருத்தப்பட்டேன். சிலருக்கு எல்லாமே அமைந்துவிடாதல்லவா? சரி.

    மெதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, அதையும் விடாமல் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள்..
    அதில் என்னென்னவோ பேசினேனே!!! இறங்கும்போது யாரும் ஏறவில்லை.. அதனால் மனம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே
    சுற்றீக் கொண்டிருந்தது. அப்படியே வண்டியை உசுப்பிவிட்டு கொஞ்ச தூரம் சென்று ஸ்கூபி வண்டியை நிறுத்தி ஏரி
    ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டுவிட்டு செல்லலாம் என்றும் சொன்னான். கொஞ்சம் இறக்கமாக செல்லவேண்டும்.
    அங்கிருந்த நீளமான மரங்கள் எங்களை வசீகரப்படுத்தின.. அந்த ஏரியை அடைந்ததும் ஒரு பெண்ணிடம் சொல்லி
    எங்கள் நால்வரையும் படம் எடுக்கச் சொன்னோம்... அவர்கள் சிரித்துக் கொண்டே படமெடுத்தார்கள். பின்னர் பஞ்சு
    மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிக் கொண்டே ஏரியிலிருந்து பாதைக்கு ஏற முற்பட்டால் சத்தியமாக முடியவே இல்லை.
    இதற்கு இரு காரணங்கள் உண்டு.. ஒன்று இறங்கிவரும் பெண்கள் கூட்டம்,. அடுத்து உயரமான மேடு... நடக்க
    முடியவில்லை. எப்படியோ ஏறி வண்டியில் ஊட்டிக்குச் சென்றால் பாதி தூரத்தில் மழை. வண்டியை ஓரம் கட்டிவிட்டு
    மழை நின்றதும் கிளம்பினோம். இடைப்பட்ட சம்பாசணைகளை ஏற்கனவே படித்திருப்பீர்களே!!

    அடுத்த பாகம் நாளைக்கு.... விரிவாகவே...

    தொடரும்.....

    படங்கள் :

    ஊட்டிக்கு செல்லும் வழியில்....



    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    பைகாரா நீர்வீழ்ச்சி செல்லும் வழியில்


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    பைகாரா படகு இல்லம்


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    பைகாராவில் வறண்ட நீர்வீழ்ச்சி


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    பைகாராவில் இன்னொரு அழகு


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    என் பார்வையில் சிக்கிய கன்று


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    நாங்கள் தின்ற மிளகாய் பஜ்ஜி


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    சூட்டிங் ஸ்பாட்


    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    ஊட்டிக்கு இறங்கும் வழியில் ஒரு ஏரி


    Last edited by ஆதவா; 23-05-2007 at 05:41 PM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    என்னது.. இவ்வளவு சிறிய கதை... இன்னும் தெளிவா/விரிவா வேண்டும்....

    பைக்கிலே பயணமா... மிகுந்த டிராஃபிக்கிற்கு.. காரை விட சிறந்தது... பாதுகாப்பிற்கு... கார் சிறந்தது...

    படங்களை ஆவலுடன் எதிர்நோக்கி...

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அப்புறம் என்ன தான் நடந்துச்சு...?

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமை ஆதவா?
    எங்கள் ஊருக்கு பக்கம் வந்திருகிறீர்கள்
    அடுத்த முரை ஊட்டி போகும் போது மறக்காமல் Lamps Rock என்ற இடம் செல்லவும்
    பாதையும், இடமும் நல்ல திரிலிங்காக இருக்கும்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அறிஞரே!! இன்னும் இருக்கிறது.. ஆனாலும் விரிவாக சொன்னால் நீங்கள் சென்சார் கத்திரி போட்டுவிடுவீர்கள்..

    -------------------------------------------------------------

    அப்பறமா நடந்ததை எழுதிக் கொண்டிருக்கிறேன்.. நன்றி நண்பரே!

    -----------------------------------------------------------

    நன்றிங்க வாத்தியாரே!! நிச்சயம் பார்வையிடுகிறேன்..

    நன்றி அனைவருக்கும்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    என்ன ஆதவா....
    அரைவாசியில.. விட்டுட்டே.. படங்கள் கூடப் போடவில்லை????

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஆதவா View Post
    அறிஞரே!! இன்னும் இருக்கிறது.. ஆனாலும் விரிவாக சொன்னால் நீங்கள் சென்சார் கத்திரி போட்டுவிடுவீர்கள்..
    அப்ப தனிமடலில் அனுப்பி விடுங்கள்.. ஹிஹிஹி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுவாரசியமாக ஒன்றுமில்லையே. அடுத்த பயணப்பாகம் எப்போ ஆதவா?

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஆதவா, உள்ளென்று வைத்து புறமொன்று எழுததீர். ஆதவன் என்றால் வெளிச்சம். அதனால் ..எல்லாத்தையும் வெளிப்படையா எழுதுங்க ..... நண்பர்களே சப்போர்ட் பன்னுங்கள்.. விடமாட்டோம்ல...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அறிஞர் View Post
    அப்ப தனிமடலில் அனுப்பி விடுங்கள்.. ஹிஹிஹி
    எனக்கும் அனுப்பி விடுங்கள்.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அனைவரின் விருப்பபடி ஆதவா..முன்னுரைக்குப் பிறகு இனி விளக்கவுரை எழுதவேண்டும் என்று செல்லமாய் மிரட்டல் விடுக்கிறோம்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஆஹா!! அறிஞர் ஆப்பு வெச்சுட்டாரே!! சரி சரி.. கூடுமானவரை சென்ஸாரால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் வெளியிடுகிறேன்..

    அமரன்.... சுவாரசியம் எங்களுக்கு இருந்தது....

    சரிங்க தங்கவேல்.... ஆனால் ஆதவனின் எல்லா கதிர்களும் பூமியைத் தாக்கினால் பிரச்சனை ஆகிடுமே? (சமாளிபிகேசன் செல்வன் அண்ணாவின் சிஷ்யன் சிமாளிகிபேசன் ஆதவன்.. )
    --------------------------------------
    இதுக்கே கண்ணக் கட்டுதே... இனி விளக்கவுரையா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •