Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: என்னருமைக் காதலி கணனி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    என்னருமைக் காதலி கணனி

    அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.
    நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.
    இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விழங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
    1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
    பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் ... விஷ... என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
    இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.
    இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விழங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.
    இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.
    இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.
    2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்....!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.
    எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

    (தொடரும்.....)
    Last edited by மயூ; 01-04-2007 at 08:22 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமை மயூரா!! எனக்கும் உனக்கு இதே அனுபவங்கள்தான்..... தொடர்ந்து எழுதுங்கள்.. நான் பலரிடம் கணிணி என் முதல் மனைவி என்றே சொல்லிவருகிறேன்.. அந்த வகையில் உமக்கு காதலி...... மனைவியாக்கிவிடு சீக்கிரம்

    மேலும் அனுபவங்கள் தொடரட்டும்.... தொடர்ந்து படிக்கிறேன்.........

    (இண்டர்நெட்டில் ஏதாவது சில்மிசம் செய்திருந்தாலும் மறைக்காமல் சொல்லவும்... பில்கேட்சிடம் ரெகம்ண்ட் செய்ய ஐதராபாத்தில் ஆளுண்டு.... )

    பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை இதற்கு அர்த்தம் என்னப்பா!..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை மயூரேசன் எனது நிலைஇதுதான் தொடருங்கள் உங்கள் கதையை நானும் பின் நொக்கி எனது பழைய நினைவுகளில்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நினைவுகளை அழகாக சொல்லவும் திறமை வேண்டும்... மயூ விடம் அது நன்றாகவே உள்ளது.. நினைவுகள் அருமை மயூ..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எம்மையெல்லாம் கணணி அறைக்குள் கூட்டிச்சென்றபொழுது எம்மை தொடவிட்டதில்லை. (1994 அளவில் பாடசாலையில்) இன்னுமொரு நகைச்சுவையும் உள்ளது. ஆசிரியர் ஒருவர் பயிற்சிப்பட்டறைக்கு எமது பாடசாலை சார்பாக சென்று வந்திருந்தார். அவர்தான் எப்பொழுதும் கணணிமுன்பிருப்பார். முதலில் எம்மை அந்த அறைக்குள் கூட்டிச்சென்றபொழுது அவர் கூறினார். எல்லோரும் காலணிகளை கழற்றிவிட்டு சுத்தமாக கழுவிய பின்னர்தான் வரவேண்டுமென்று. இல்லாவிட்டால் கணணிக்கு வைரஸ் பிடித்துவிடுமென்று. நீண்டவரிசையில் நின்று கழுவியபின்தான் உள்ளே வந்தோம்.

    அதிலும் ஒரு நண்பன் கூறியிருந்தான் அப்படியானால் பூச்சிமருந்தடிக்கலாம் தானே என. அதற்கு அவருடைய பதில் அது கொழும்பிலிருந்து தருவிக்கப்பட வேண்டும். தற்சமயம் எமது கோட்டக்கல்லூரி அலுவலகத்தில் இல்லையென.

    இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

    10-12 வருடம் பின்சென்றது போல் உள்ளது. நன்றி மயூரேசா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை இதற்கு அர்த்தம் என்னப்பா!..
    பொதுத்தாராதர சராதாரண தரப் பரீட்சை = 10th பரீட்சை (GCE O/L - Ordinary Level)

    பொதுத்தாராதர உயர்தரப் பரீட்சை = 12th பரீட்சை (GCE A/L - Advanced Level)
    Last edited by crisho; 01-04-2007 at 10:51 AM. Reason: Spelling Mistake
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by crisho View Post
    பொதுத்தாராதர சராதாரண தரப் பரீட்சை = 10th பரீட்சை (GCE O/L - Ordinary Level)

    பொதுத்தாராதர உயர்தரப் பரீட்சை = 12th பரீட்சை (GCE A/L - Advanced Level)
    GCE (O/L) 11 ஆண்டுப் பரீட்சை
    GCE(A/L) 13 ஆண்டுப் பரீட்சை

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஆதவா View Post
    அருமை மயூரா!! எனக்கும் உனக்கு இதே அனுபவங்கள்தான்..... தொடர்ந்து எழுதுங்கள்.. நான் பலரிடம் கணிணி என் முதல் மனைவி என்றே சொல்லிவருகிறேன்.. அந்த வகையில் உமக்கு காதலி...... மனைவியாக்கிவிடு
    என்னதான் காதலியாக பல பேர் வரலாம் போகலாம் ஆயினும் மனைவி அந்தஸ்சு ஒரு வருக்கு மட்டும்தான். அந்தப் பதவிக்கு இந்த கணனி பெறுமதியானது இல்லை!!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by manojoalex View Post
    அருமை மயூரேசன் எனது நிலைஇதுதான் தொடருங்கள் உங்கள் கதையை நானும் பின் நொக்கி எனது பழைய நினைவுகளில்
    நன்றி மனோஜ்... ஒருவர் நினைவுகள் மற்றவர்களின் நினைவுகளையும் கிளறுவது இயல்புதானே...

    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    நினைவுகளை அழகாக சொல்லவும் திறமை வேண்டும்... மயூ விடம் அது நன்றாகவே உள்ளது.. நினைவுகள் அருமை மயூ..
    நன்றி ஷீ...!!!!

    Quote Originally Posted by anpurasihan View Post
    எம்மையெல்லாம் கணணி அறைக்குள் கூட்டிச்சென்றபொழுது எம்மை தொடவிட்டதில்லை. (1994 அளவில் பாடசாலையில்) இன்னுமொரு நகைச்சுவையும் உள்ளது. ஆசிரியர் ஒருவர் பயிற்சிப்பட்டறைக்கு எமது பாடசாலை சார்பாக சென்று வந்திருந்தார். அவர்தான் எப்பொழுதும் கணணிமுன்பிருப்பார். முதலில் எம்மை அந்த அறைக்குள் கூட்டிச்சென்றபொழுது அவர் கூறினார். எல்லோரும் காலணிகளை கழற்றிவிட்டு சுத்தமாக கழுவிய பின்னர்தான் வரவேண்டுமென்று. இல்லாவிட்டால் கணணிக்கு வைரஸ் பிடித்துவிடுமென்று. நீண்டவரிசையில் நின்று கழுவியபின்தான் உள்ளே வந்தோம்.

    அதிலும் ஒரு நண்பன் கூறியிருந்தான் அப்படியானால் பூச்சிமருந்தடிக்கலாம் தானே என. அதற்கு அவருடைய பதில் அது கொழும்பிலிருந்து தருவிக்கப்பட வேண்டும். தற்சமயம் எமது கோட்டக்கல்லூரி அலுவலகத்தில் இல்லையென.

    இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

    10-12 வருடம் பின்சென்றது போல் உள்ளது. நன்றி மயூரேசா...
    ஆகா!!!!
    நல்ல ஆசிரியர் நல்ல மாணவன்....!!!!
    எனக்கும் ஞாபம் இருக்கு ஒரு நண்பன் சொன்னான்... மின்சார வயர்களினூடாக வைரஸ் பரவும் என்று!!!!! நகைச்சுவைதான் போங்க!!!
    நன்றி அன்பு இரசிகன்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    உங்கள் அனுபவம் எனக்கும் கொஞ்சம் உண்டு மயூரேசன் அவர்களே. நல்லா எழுதியிருக்கீங்க.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உங்கள் காதல் கதை நன்றாக உள்ளது நண்பரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மயூ, கலக்கரடா தம்பி,

    அருமையாய் எழுதுறே. ரசித்தேன்.

    வாழ்த்துக்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •