Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: ராஜாவும் திருடனும்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1

    ராஜாவும் திருடனும்

    தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்(திரு.லியோனி என்று நினைக்கின்றேன்) கேட்ட கதை இது.

    ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.
    ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபநை பார்த்து அவனுக்கு உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு சென்றுவிடுகின்றார்.
    பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி த்ன்டனைக்காக ராஜாவிடம் அழைது வரப்பட்டான், அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிந்தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து மன்னியுங்கள் என்று கதறினான், உடனே ராஜா அவனை மண்ணித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய விதத்தினை யாரிடம்மும் கூறிவிடதே என்று கெஞ்சுகின்றார். அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மண்ணியுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.

    அவ்வளவுதான் கதை முடிந்தது. இதில் என்ன இருகின்றது என்கிறீர்களா, சிலர் இந்த கதையை ஏற்க்கனவே படித்திருக்கலாம், மற்றவர்களுக்காக இது.

    1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே கேட்டார்?
    2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்?

    யோசித்து பாருங்கள், இரன்டு நாளில் விடை சொல்லுகின்றேன். சரியாக கன்டு பிடித்தவர்களுக்கு நன்பர் manojoalex அவர்களிடம் தமிழ்கணபுலி பட்டத்துக்கு சிபாரிசு செய்கின்றேன்.
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........


  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அரசனாகப்பட்டவன் எதையும் ஆராயமல் உடனடியாக எதையும் நம்பிவிடக்கூடாது என்பது நியதி.

    முடவன் போல் நடித்த திருடனின் நடிப்பை கண்டு ஏமாந்ததால் அரசனுக்குறிய மரியாதையை இழந்து விடுகிறான், ஆகையால் தன் மானத்தை காக்க திருடனின் காலில் விழுகிறான்.

    திருடன் திருந்தக்காரணம், மாபெரும் அரசனே! தான் செய்த சிறு தவறுக்காக இத்தனை வருந்தும் போது, தினம் தினம் தான் செய்யும் தவறுகள் எத்தனை என்பதை அறிந்து அவனும் தனக்கு பாடம் போதித்த அரசனின் காலில் விழுந்து மனம் திருந்துகிறான்.

    விஜயன், ஏதோ சொல்லியிருக்கேங்கன்னு சரி என்று சொல்லிடாதீங்க, சரியாக சொல்லியிருக்கேனான்னு பார்த்து சொல்லுங்க.
    பரஞ்சோதி


  3. #3
    இளையவர்
    Join Date
    01 Apr 2007
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அறிவுக் கதை பிரமாதம்.


    ரெட்சன்
    எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
    ஒன்றும் அறியோம் பராபரமே

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நல்ல கதை விஜயன்
    பரம்ஸ் அவர்களுக்கு பட்டம் கொடுத்திடலமா ?
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ம்.. நல்ல படிப்பினை!!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    நிருடனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்னடா, மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடிய மாமண்ணன், சாதாரன விசயத்துக்காக, நம் காலில் விழுந்து, தான் ஏமாந்த விதத்தை யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகின்றானே என்று குழம்பிவிட்டான். காரணமில்லாமல் இப்படிசெய்ய மாட்டானே என்று யோசித்தான்.
    பளிச்சென்று அவன் மனதில் அதன் காரனம் பளிச்சிட்டது, அடடா இப்படிப்பட்ட மண்ணனின் ஆட்சியிலா இப்படி செய்தோம், இனிமேல் திருடக்கூடாது என்று என்னி, அழுது, மண்ணனிடம் மண்ணிப்பு கேட்டன்.

    திருடன் புரிந்துகொன்டது இதுதான்:

    கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்த அந்த மண்ணன் அவைகளனைத்தும் மக்களிடையேயும் தழைத்தோங்கவேன்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டன் என்று மக்கள் அறிந்தால், அடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்களே மனித நேயம் மறைந்துவிடுமே என்றஞ்சி, யாரிடமும் சொல்லிவிடாதே என்று கேட்டிருக்கின்றான்.

    தயவு செய்து, தற்கால ராஜா மற்றும் திருடன்களை எண்ணிப்பார்க்கதீர்கள்.

    ஆகவே மனோஜ்அலெக்ஸ அவர்களே ஒரு தமிழ்கணப்புலி பட்டம் சேமிப்பிலிருக்கட்டும்.
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........


  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அருமை விஜயன்...

    பரம்ஸும் நன்றாக முயற்சித்தார்...

    அடுத்த கதையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1
    ஆமாம் யாருமே முயர்ச்சிக்காதபோது பரம்ஸ் மட்டுமே முயர்ச்சித்தார். நல்ல முடர்ச்சி, வித்தியாசமான சிந்தனை.
    சிறுவயதில் இந்த மாதிரி கதைக்ள் நிறைய படித்ததுன்டு, ஞாபகப்படுத்தி எழுதுகின்றேன்.
    முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, பொம்மை வீடு எல்லாம் நினைவிலாடுதுங்க.
    இரும்புக்கை மயாவி, டேவிட் & லாரன்ஸ், ரிப்கெர்பி, ஜானிநீரோ, முகமூடிவேதாளர், மான்ட்ரெக் எல்லாம் இப்ப எப்படி இருக்காங்க்களோ.
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........


  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அறிவுக் கதை பிரமாதம்.

    வாழ்த்துக்கள் விஜயன் அண்ணா.

    அடுத்த கதையை தொடரவும்.
    Last edited by ஓவியா; 11-04-2007 at 01:01 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 Apr 2007
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் அருமை

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Nov 2006
    Location
    USA
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    9
    Uploads
    1

    புளியோதரை படுத்திய பாடு

    இதுவும் லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில்கேட்டதுதான்.

    நடுத்தர வயது சென்னை அலுவலகவாசியொருவர் சென்னைக்கேயுரித்தான இயந்திர கதி வாழ்கயில் உழலுகின்றார். தினமும் மின்சார-புகைவன்டி பயனம், கூட்டம், புளியோதரை கட்டு என்று வெறுத்துப்போனவர். அவர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கின்றார், அந்த புளியோதரையைத்தவிர. சுமார் எட்டு வருடங்களாக புளியோதரை மட்டுமே அவரது மனைவி கட்டிக்கொடுக்கின்றார். எவ்வளவோ கேட்டும் மாற்ற தயாராக இல்லை. சென்னைவாழ் கனவண்களுக்கே உரித்தான, சகிப்பு தன்மையில் பொறுத்துக்கொன்டு காலத்தை ஓட்டுகின்றார், ஆனால் மனதுக்குள் ஒரு வைராக்கியம் வளர்க்கின்றார், மனைவிக்கு த்ரியாமல் பனம் சேர்த்து, ஒரு நட்சத்திர ஓட்டலில் சென்று சாப்பிடவேன்டுமென்று. நன்பரிகளிடம் அது குறித்த விலை பற்றி விசாரித்ததில், அவர் ஆறு மாதங்கள் சேர்க்கவேன்டியிருப்பது தெரிகின்றது. நம்மவர்தான் வைராக்கிய புலியாயிற்றே, பொறுமையா வெத்திலை, பாக்கு, கடலைமிட்டாய் எல்லவற்றையும் தியகம் செய்து, பனம் சேர்க்கின்றார். அவரது கனவு நாளும் வந்தது. நட்சத்திர ஓட்டலுக்குள்போகின்றார், பணியாளர் அவரிடம் மெனுவை நீட்டுகின்றார், அவரும் வாங்கி பார்ப்பதுபோல நடிக்கின்றார், அவருக்கு எதுவுமே புரியலை, சரி எதாவது ஒன்றை டிக் பன்னி கொடுப்போம் என்று டிக் பன்னி கொடுக்கின்றார், அவரது மகா கெட்ட நேரம் புளியோதரையை போய் டிக் பன்னிவிட்டார். பணியாளர் கொன்டு வந்து கொடுத்ததும் பார்த்து நொந்து நொறுங்கி போய் விட்டார், பிறகு மனதை தேற்றிக்கொன்டு சரி அடுத்தமுறை சரியாக தெரிவு செய்யவேன்டும் என முடிவு செய்து, அந்த புளியோதரையை கஷ்டபட்டு சாப்பிடுகின்றார்.
    அவருக்கு அருகே உள்ள மேஜையில் ஒருவர் வித்தியாசமான உணவை வெட்டு வெட்டுனு வெட்டுறார், பிரமாதமான வாசனையுடன், பார்ப்பத்ற்கே சாப்பிட தூன்டுமளவுக்கான நேர்த்தியிலிருக்கின்றது அது. அருகிலுள்ளவர் அதை சாப்பிட்டு முடித்ததும் அடுத கட்டளைக்கு தயாராகின்றார், நம்ம ஆளும் காதை தீட்டிக்கொள்ளுகின்றார், பெயரை கேட்டு வைத்துக்கொள்ளுவோம், வரும் பதார்த்தம் நன்றாக இருந்தால் நாமும் அதையே கேட்க்கலாமென நினைக்கின்றார். அருகிலுள்ளவர் பணியாளரை அழைத்து "ரிபீட் த சேம்" என்று சொல்லுகின்றார், நம்மாளும் அதை எழுதி வைத்துக்கொள்ளுகின்றார். பணியாளர் , அருகிலுள்ளவருக்கு கொன்டு வந்ததைப்பார்த்ததும் அவருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை, ஆஹா வாழ்கையில் முதல் முறையாக உன்னதமான பதார்த்ததினை சாப்பிட போகின்றோமென அகமகிழ்ந்து பணியாளரை அழைத்து "ரிபீட் த சேம்" என்று சொல்லுகின்றார். பிறகு பணியாளர் கொன்டு வந்ததை பார்த்து நொந்து நூடுல்ஸாகி போனார், அதன் பிறகு அவர் நட்சத்திர ஓட்டல் ஆசையே விட்டுவிட்டார்.

    இதில் நீதி எதும் இருக்கிறதா என்று தெரியலை, நகைச்சுவையாக இருந்தது அதான் பதிந்தேன்.

    "தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடாது" என்ற நீதி இருப்பதாகக்கொள்ளலாமா?
    விஜயன்
    - கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........


  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    பாவம் அந்த மனுசன். ஆண்டவன் இப்படி அவரை சோதித்திருக்கக்கூடாது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •