Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 71

Thread: கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    Post கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலி

    சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

    வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
    சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
    வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
    தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வானூர்தி சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

    வானூர்தி நிலையத்துக்கான அனைத்துப் பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
    தாக்குதல் ஆரம்பித்தவுடன் தமது வானூர்தி எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கியதாகவும் வான்படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

    சிறிலங்காவை நோக்கி வரும் வானூர்திகள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வானூர்தி நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வானூர்தி சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    தாக்குதல் தொடங்கிய பின்னர் வானூர்தி நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதலில் இரு உலங்கு வானூர்திகளும் வானூர்திகள் தரித்து வைக்கப்படும் இடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனம் தெரிவிக்கின்றது.

    வானூர்திகளின் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து கொழும்பின் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்விளக்குகளை எரிய விடவேண்டாம் என்று பொதுமக்களுக்கு சிறிலங்கா வான்படையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

    படங்கள்: விடுதலைப் புலிகள்
    Last edited by pradeepkt; 29-03-2007 at 05:50 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    செய்தி புதினம்.காம் இல் இருந்து எடுக்கப்பட்டது

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நேற்று இரவு பிபிசி'யில் படித்ததுமே மனம் கலங்கிவிட்டது.

    மீண்டும் போரா.....அச்சோ. கடவுளுக்கே வெளிச்சம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஓவியா அக்கா எங்க இருக்கிறீங்க...
    இங்க யுத்;தம் தொடங்கி எத்தனையோ நாள் ஆகிட்டுது!!!!
    வழமையா தமிழர் படையில் இலங்கை வானூர்திகள் குண்டு மழை தூவும்... ஆனால் இம் முறை சற்றே மாறுதலாக.....
    அரச தலைவர் இப்ப என்ன செய்கிறாரோ தெரியாது!!!!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அப்படியா!!!

    குட்டிக் -குட்டி செய்தியாகதான் போடுகிறார்கள்.
    நேற்றுதன் முதல் பக்கத்தில் முதல் செய்தியா போட்டார்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தங்களிடமுன் வான்வழி தாக்கக் கலங்கள் இருக்கின்றது என்பதனை காட்டி விட்டார்கள். இனிமேல் அடக்கி வாசித்தால்த்தான் நாட்டிற்கு நல்லது...

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    இப்போதைய நிலை என்ன மயூரேசன்?
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1
    தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய சகாப்த்தம் ஆரம்பம்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    போரிலே புலிகளிடம் முறையாக வாங்கிக் கட்டும் பொழுதெல்லாம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பதிலடி அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடாத்தப் படுவதே வழமை. மக்கள் மீது தாக்கி விட்டு விடுதலைப் புலிகளின் இலக்குகளை அழித்து விட்டதாக அறிக்கை விடுவது அவர்களுக்கு கை வந்த கலை. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த அறிக்கையை பல ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிடுவது தான்.

    வழமை போல் இன்றும் மக்கள் குடியிருப்புக்காளை இலக்கு வைத்து அரச பயங்கரவாதம் தாக்கியுள்ளது.


    வன்னியில் சிறிலங்கா வான்படையினர் வான் தாக்குதல்

    சிறிலங்கா வான்படையினரின் வான்படைத் தளம் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் அழிவுகளை மறைக்கும் நோக்கில் சிறிலங்கா வான்படையினரின் கிபீர் வானூர்திகள் வன்னிப் பகுதியில் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

    வன்னிப் பகுதியில் உள்ள வெள்ளாங்குளத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக வன்னிப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நன்றி - புதினம்.கொம்

    சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் மன்னாரில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் வெள்ளாங்குளத்தில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளன. தாக்குதலில் ஏற்பட்ட தேசவிபரங்கள் இதுவரை அறிய முடியவில்லை.

    நன்றி - பதிவு.கொம்
    Last edited by ஓவியன்; 26-03-2007 at 01:20 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    புதியவர் பண்பட்டவர் rmsachitha's Avatar
    Join Date
    17 Feb 2007
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    0
    Uploads
    0
    சபாஸ் சரியான பதிலடி சிங்களர்களுக்கு
    என்றும் உங்கள் ஆர் எம் சசிதா

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அதிசயமான செய்தி. படங்களைத் தவிர்த்திருக்கலாமே.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் rajasi13's Avatar
    Join Date
    21 Sep 2005
    Location
    துபாய்
    Posts
    321
    Post Thanks / Like
    iCash Credits
    14,977
    Downloads
    144
    Uploads
    0
    மிகவும் பாராட்டத்தக்க சாதனை புலிகளிடமிருந்து. ஆனால் இது எந்த அளவுக்கு பயன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் புலிகளின் வான் வழித்தாக்குதல்களால் இந்தியா கவலைக்குள்ளாகியிருக்கிறது. இது சிங்களவற்க்கு ஆயுத பலத்தை இந்தியா அளிப்பதற்க்கு ஒரு காரணமாகி விடக்கூடாது.
    Last edited by rajasi13; 26-03-2007 at 03:33 PM.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •