Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 38

Thread: நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-1

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1

    நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-1

    பெஞ்ச்இன்னைக்குசாயும்காலத்துக்குள்ளால எல்லா ரிப்போட்டையும் தந்திடுங்க இல்லைனா அடுத்த வாரம் முளுவதும் நீங்க இங்க இருக்க மாட்டிங்க அப்புறம் நான் எதாவது தேவைனா உங்களை பிடிக்க கஷ்டமாயிடும்

    என்னயா நான் என்ன சந்திர மண்டலத்துக்கா போறென் பக்கத்து நாட்டுக்குதானே போறென், போன் பன்னினா தெரிய போகுது.

    சர்ரி இன்னாமோ பண்ணீகோ பத்திரமா போயீக்கினு வா.. அங்கிட்டு போயி உன் கில்மா வேலையை காட்டாத. J..

    எல்லா மனேஜரும் இப்படிதான், ரொம்பதாம் அட்வைஸ் கொடுப்பாங்க.. இங்க என்னடானா இன்னும் டிக்கட் வரலை, போரக்ஸ் வரலை என்ன பன்னுறங்க??? எல்லா அலுவலகமும் இப்படிதானா??? போறதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் என்று நினைத்து மீட்டிங், போன் என்று மட்டுமே அன்றைய தினம் போனது
    நாளை காலையில 3:00 மணிக்கு சீனா போகனும் , அவசரமாக டிக்கட் போட வேண்டி வந்ததால நல்ல விமான சேவைகளில் கிடைக்கல என்று சொல்லிட்டாங்க, கிடைத்த டிக்கட் பெங்களுர் மும்பை, மும்பை- பெங்காங், பெங்காங்- ஷாங்காய்.. இது-ல மும்பை ஷாங்காய் ஒரே விமானம் தானாம்

    அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வழக்கம் போல் இரவு 12 மணிக்கு வந்து அந்த ஒரு வாரத்திற்க்கான தேவையான துணி மணிகளை ஒரு பையில் திணிக்க ஆரம்பித்தேன்.
    டாக்ஸி புக் பண்ணுனியா??? இது அறை தோழன்
    இன்னும் இல்லைடா
    நீ இன்னும் கூறு கெட்டவன் தான், நானே பன்னுறேன்....
    டேய் 2 மணிக்கே வர சொல்லிரு..
    நீ முதலில் 2 மணிக்கு கிளம்புறதுக்கு வழியை பாரு

    அவசர குளியல், அவசர பேக்கிங்.. அவசரமற்ற ஜெபம் என்று 2 மணிக்கு ரெடியாகிவிட்டது.
    மனோஜ், டாக்ஸி வரைலைடா இன்னும் நான் அவசர படுத்த அவன் மீண்டும் டாக்ஸி அலுவலகத்தை அலைபேசியில் அழைத்தான்
    முன்னாலையே அனுப்பியாச்சே சார் பதில் வந்தது
    வீட்டின் கதவை திறந்து அங்கு நின்று கொண்டிருந்த மாருதி வேனை பார்த்து ஏண்டா கதவை திறந்து டாக்ஸி வந்திருக்கன்னு பாக்க மாட்டியா?? என்று திட்ட ஆரம்பித்தான்
    அடடா இனிய காலை பொழுது சுப்பிரபாதத்துடன் துவங்குகிறதே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்

    15 நிமிட பயணம்- விமான நிலையம்- செக்-இன் செக்கூரிட்டி செக் பயணம்- குட்டி தூக்கம் மும்பை விமான நிலையம்.

    அடுத்த விமானத்துக்கு இன்னும் 3 மணி நேரம் இருந்தது.. பெங்களுர் விமான நிலையத்தி விட கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு பேச்சுலர் ரூமை விட கேவலமாக இருந்தது. வாசிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் எதோ பெரிய ஆளுமாதிரி இப்படிதான் காதல் கவிதை புத்தகத்தை எடுத்து வாசிக்க துவங்கினேன் மனம் சில நேரங்களில் ஒத்து கொடுப்பதில்லை. புத்த்கத்தி மூடி வைத்து விட்டு பக்கத்தில் இருந்த காப்பி கடையில் காசு கொடுத்து ஒரு காபே மோக்கா வாங்கி கொண்டேன்.
    நேரம் போக்க வழி தெரியவில்லை அங்கு இருந்தவர்களை அலச ஆரம்பித்தேன் அதிகம் பேர் மத்திய கிழக்கு ஆசியா செல்பவர்கள், சிலர் சிங்கபூர், மலேசியா செல்பவர்கள். சிலர் வெள்ளையர்கள். மத்திய கிழக்கு ஆசிய செல்பவர்களில் பலர் மும்பை விமான் நிலையத்தை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்கள்.

    இயற்கை உபாதை வர சுற்றி பார்த்தேன் எங்கும் எந்த அடையாள குறியீடுகளும் இல்லை. அங்கு இருந்த போலிஸ்காரரிடம் ஒற்றிவிரலை காண்பிக்க அவரும் ஒரு மூலையை நோக்கி ஒற்றி விரலை காட்டினார். வாசலில் மட்டும் ஆண்/பெண் என்று பிரித்து படம் போட்டு இருந்தார்கள். உள்ளே போனால் இருந்த இரண்டு யூரினலையும் இரண்டு வெள்ளையர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். நான் அவசரத்துக்காக அறக்குள் அவசரமாக நுளைந்தேன், நுளைந்த வேகத்தில் திரும்ப வந்து விட்டேன். பாவம் எவனே ஒருவன் தண்ணீர் இல்லாமல் பிளஸ் அவுட் பண்ணாமல் போயிருக்கிறான். (மற்றதுக்கு பேப்பர் யூஸ் பண்ணி இருப்பானோ). வேளியே வந்த என்னை பாத்து ஒரு வெள்ளையன் என்ன உபயோகிக்க முடியலையா?? என்று நக்கலாக கேட்டதும் எனக்கு பதில் வரவில்லை. ஆனால் ராகவன் தன்னுடைய பயண கட்டுரையில் விண்வெளி வீரன் உடை என்று ஒரு கழிப்பறை நினைவை கூரையதை நினைத்து சிரித்து கொண்டேன்

    சிறிது நேரத்தில் மீண்டும் போர்டிங் அழைப்பு வர நான் சேக்கூரிட்டி சேக் வரிசையில்.. எதோ துபாயிலிருந்து மலேசியா போகும் ஒரு பாவத்திடம் நீங்கள் துபாயில் வாங்கிய டூட்டி பிரீ பிராந்தி எல்லாம் மும்பை வழியாக கொண்டு செல்ல கூடாது என்று வழிப்பறி செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் ஒரே ஒரு கேரி பேக் தான் அனுமதிப்போம் என்ரு அந்த போலிஸ் என்னை தடுக்க, வழக்கம் போல் நாம் சவுன்ட் கொடுக்க.. ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்
    லேப்டாப் மற்றும் ஒரு கேரி பேக் வைத்திருக்கிறேன் இவர் அனுமதிக்க மாட்டேன் என்கிறார், நான் பெங்களுரில் இருந்து வருகிறென் அங்கு அனுமதி கிடைத்ததே என்று முறையிட
    அவரும் அனுமதிக்க முடியாது, நீங்கள் ஏர்லைனிடம் பேசி கொள்ளுங்கள் என்றார்
    நான் ஏர்லைனிடம் வந்து முறையிட, இவர்களும் அது என்னவோ இவர்களுக்கு ஒன்னும் முடியாதது போல் பேசினார்கள் ஒருவர் வந்து சார், இவர்களிடம் லேப்டாப் என்ன என்று சொன்னாலும் புரியாது, தயவு செய்து நீங்க எல்லாததியும் ஒரு பையில் வையுங்கள் என்றார் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
    நான் அவர்களிடமே பேசி கொள்கிறென் என்று சேக்குரிடி சேக் நாக்கி நடந்தேன்.

    நான் அவர்களை நோக்கி நடக்க என்னை திருப்பி அனுப்பிய போலிஸ் என்னை எதோ கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

    தொடரும்.

    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அப்புறம் என்னாச்சு செக்குரீயிட்ட முறையாப் பேச்சு வாங்கினீங்களா?? அவனுகளுக்குத்தானே தமிழ் தெரிஞ்சிருக்காது.?? எப்படி சமாளிச்சீங்க?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மும்பை விமானநிலையம் என்றாலே எனக்கு நெஞ்சு கசக்கும் பென்ஸ்..

    இப்போதெல்லாம் முற்றிலும் தவிர்த்துவிடுகிறேன் அந்த வழி பயணங்களை..

    ஏனோ தெற்கத்தியவர்களை அவர்கள் மிக மிக அந்நியமாய் நடத்துவதாய் எனக்கு படுகிறது..

    சுவையான பென்ஸ் பாணி நொறுக்ஸ் பதிவு..

    சுவையாய்க் கொறித்தேன்..நாக்கு இன்னும் நமநமக்கிறது..

    இன்னும் ப்ளீஸ்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மனோஜ், டாக்ஸி வரைலைடா இன்னும் நான் அவசர படுத்த அவன் மீண்டும் டாக்ஸி அலுவலகத்தை அலைபேசியில் அழைத்தான்
    முன்னாலையே அனுப்பியாச்சே சார் பதில் வந்தது
    வீட்டின் கதவை திறந்து அங்கு நின்று கொண்டிருந்த மாருதி வேனை பார்த்து ஏண்டா கதவை திறந்து டாக்ஸி வந்திருக்கன்னு பாக்க மாட்டியா?? என்று திட்ட ஆரம்பித்தான்
    வினா ஏகிட்ட எதுக்கு திட்டு வாங்குறிங்க கதவ தொறந்து பாத்திருக்கலாமுல எப்படியே நல்லபடியா போயிட்டு வாங்க
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    நீ ஹாவ் அப்படீன்னா, மாண்டரீன் மொழியிலே ஹலோ அப்படீங்கற அர்த்தத்தில வர்ற சொற்றொடர்தானே? எனக்கும் சைனீஷ் தெரியும் (நிஜமாவே நம்புங்கப்பா, சைனீஷ் சாப்பாட்டைச் சொன்னேன்). ஏற்கனவே உங்களூர் கால்வாயில் பச்சை நண்டு பிடித்துண்ட கதையைப் படித்திருக்கிறேன். இங்கே பாம்புண்ணும் கதை உண்டோ? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    லேப்டாப்பையும் ஒரு லக்கேஜ் என்று சொன்னார்களென்றால், அந்த லக்கேஜில் என்னென்ன வைத்திருந்தீர்கள் ??

    பயண கட்டுரை என்றாலே அலாதி பிரியம்.. தொடருங்க உங்க அட்டகாசத்தை...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by mayooresan View Post
    அப்புறம் என்னாச்சு செக்குரீயிட்ட முறையாப் பேச்சு வாங்கினீங்களா?? அவனுகளுக்குத்தானே தமிழ் தெரிஞ்சிருக்காது.?? எப்படி சமாளிச்சீங்க?
    அட போங்கையா.. அவனுவளுக்கு சரியா இங்கிளிஸே வராது... பின்னையாக்கும் தமிழ்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    மும்பை விமானநிலையம் என்றாலே எனக்கு நெஞ்சு கசக்கும் பென்ஸ்..

    இப்போதெல்லாம் முற்றிலும் தவிர்த்துவிடுகிறேன் அந்த வழி பயணங்களை..

    ஏனோ தெற்கத்தியவர்களை அவர்கள் மிக மிக அந்நியமாய் நடத்துவதாய் எனக்கு படுகிறது..

    சுவையான பென்ஸ் பாணி நொறுக்ஸ் பதிவு..

    சுவையாய்க் கொறித்தேன்..நாக்கு இன்னும் நமநமக்கிறது..

    இன்னும் ப்ளீஸ்...
    வரபோகும் பயணத்துக்கும் எனக்கு சில பாதைகள் கொடுக்கபட்டது இளசு... மும்பை வழி பயணத்தை தவிர்த்து விட்டேன்.... இவர்கள் தெற்க்கத்தியர்கள் மட்டுமல்ல அவர்கள் இல்லாதவர்களில் யவரையும் மதிப்பதில்ல்... வெள்ளையர்கள் உட்பட...

    இந்த மாதிரி பொது இடங்களில் கொஞ்சம் படித்தவர்கள் யாரயாவது வேலைக்கு அமர்த்த்லாம்... இல்லை அடுத்தவரிடம் எப்படி பழகுவது என்று டிரேனிங் கொடுக்கனும்....

    பெங்களுர் விமான நிலையமும் பெரிய விஷேஷம் இல்லை....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by manojoalex View Post
    வினா ஏகிட்ட எதுக்கு திட்டு வாங்குறிங்க கதவ தொறந்து பாத்திருக்கலாமுல எப்படியே நல்லபடியா போயிட்டு வாங்க
    திட்டுவாங்குறதுன்னு முடிவெடுத்துதான் இப்படி செய்திருப்பேன்னு நினைக்கிறேன்....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by mukilan View Post
    நீ ஹாவ் அப்படீன்னா, மாண்டரீன் மொழியிலே ஹலோ அப்படீங்கற அர்த்தத்தில வர்ற சொற்றொடர்தானே? எனக்கும் சைனீஷ் தெரியும் (நிஜமாவே நம்புங்கப்பா, சைனீஷ் சாப்பாட்டைச் சொன்னேன்). ஏற்கனவே உங்களூர் கால்வாயில் பச்சை நண்டு பிடித்துண்ட கதையைப் படித்திருக்கிறேன். இங்கே பாம்புண்ணும் கதை உண்டோ? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    அப்படியா.... அப்படியேல்லாம் பொருள் இருக்கா??? நானும் நீ ஹாவ்-ன்னா ஏதோ சைனீஸ் டிஸ் என்ரு இல்லையா நினைத்தேன்..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by மன்மதன் View Post
    லேப்டாப்பையும் ஒரு லக்கேஜ் என்று சொன்னார்களென்றால், அந்த லக்கேஜில் என்னென்ன வைத்திருந்தீர்கள் ??

    பயண கட்டுரை என்றாலே அலாதி பிரியம்.. தொடருங்க உங்க அட்டகாசத்தை...
    ஒருவேளை நான் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்து ரெண்டு சீட் இடத்தை பிடிக்க போறதை பாத்து பொறாமையா இருக்கலாம்.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட்டகாசம் பென்ஸ்..
    சீக்கிரமா விமானம் ஏறி சீனா செல்லவும்....!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •