Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 95

Thread: எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    ஆதவா அவர்களே,

    அருமையாக ஆரம்புத்திருக்கிறீர்கள். கவிஞர்கள் இப்படித்தான் தோன்றியிருப்பார்களா என்று தோன்ற வைத்திருக்கிறது உங்கள் தொடக்கம். தொடருங்கள். இன்னும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    மிக்க நன்றி ஆரென்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆரம்பமே அசத்தல் ஆதவன்..
    இன்னும் தொடருங்கள்..
    படிக்க ஆவலாய் உள்ளோம்..

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா, டைரி படித்தேன்... ஆரம்பம் நல்லா இருக்கு..
    அந்த வெண்பா ஒவ்வொன்றும் தேன்பா....

    தொடர்ந்து எழுதிடுங்கள்..... வாழ்த்துக்கள்
    Last edited by ஷீ-நிசி; 29-01-2007 at 03:56 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    தொடருங்கள் ஆதவா..
    சுகுணா ஆனந்தன்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஆதவா View Post
    மிக்க நன்றி மயூரேசன். எமது தாய்மொழி தெலுகு... ஒவ்வொரு கவிஞன் மனதிலும் அமர்ந்திருக்கும் ஒருவன்.....பாரதி.............
    நீங்கள் தெலுங்கா? நம்ப முடியவேயில்ல...
    தமிழர்களே தமிழை மறக்கும் போது உங்கள் தமிழ் ஆற்றல் கண்டு வியக்கின்றேன் தலைசாய்கின்றேன்...
    உங்கள் தமிழுக்கு நான் அடிமை.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Rajeshkumar View Post
    ஆரம்பமே அசத்தல் ஆதவன்..
    இன்னும் தொடருங்கள்..
    படிக்க ஆவலாய் உள்ளோம்..
    உங்கள் அவதார் குழந்தைகள் நினைவு வந்துட்டுது.. நன்றி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    ஆதவா, டைரி படித்தேன்... ஆரம்பம் நல்லா இருக்கு..
    அந்த வெண்பா ஒவ்வொன்றும் தேன்பா....

    தொடர்ந்து எழுதிடுங்கள்..... வாழ்த்துக்கள்
    Quote Originally Posted by guna View Post
    தொடருங்கள் ஆதவா..
    மிக்க நன்றி........ தொடர்ந்து படித்திடுங்கள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan View Post
    நீங்கள் தெலுங்கா? நம்ப முடியவேயில்ல...
    தமிழர்களே தமிழை மறக்கும் போது உங்கள் தமிழ் ஆற்றல் கண்டு வியக்கின்றேன் தலைசாய்கின்றேன்...
    உங்கள் தமிழுக்கு நான் அடிமை.
    நண்பரே! ஆரம்பத்தில் தமிழ் பேச சிரமமிருந்தது.. காரணம் நான் வளர்ந்தது எல்லாமே ஒரு தெலுகு சூழ்நிலையில்.... இருப்பினும் வாழ்ந்தது வாழ்வது தமிழ்நாடு எனும் போது தமிழ் எளிமையா போட்டுது.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    குழந்தைப் பருவ நினைவுகள்

    மீண்டும் தொடர்கிறேன்..
    மேலே நான் சொன்னதுகள் எல்லாம் ஒரு முன்னுரை போல... அதை மீண்டும் நோண்டுகிறேன்..
    முதலில் அப்பா குடும்பத்திலிருந்து வருகிறேன்.

    அப்பாவின் அப்பா ஒரு பொற்கொல்லர். ஈரோட்டில் அவருக்கு நிகர் யாருமில்லை என்ற அளவிற்கு மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர். அவருக்கு ஐந்து பெண்கள் மூன்று மகன்கள்... மூன்றாவதாகவும் கடைசி பெண்ணுக்கு முந்தினவாகவும் பிறந்தவர்தான் எனது அப்பா.. இத்தனை பெண் இருந்தால் எந்த தகப்பனால்தான் நிம்மதியாக சம்பாதிக்க முடியும்? அவர் சம்பாத்தியத்தை பெண்களின் கலியாணச் செலவிலும், மேற்படி குழந்தை பிறப்பு, வரவேற்பு ஆகிய வைபவத்திலுமே செலவிட்டார்.. ஆக என் அப்பாவால் அவ்வளவாக படிக்க இயலாமல் போய்விட்டது.. இருப்பினும் அவர் ஓவியத்தில் மிகுந்த திறமை மிக்கவராக விளங்கினார். ஈரோட்டில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாவட்டத்திலேயே மூன்றாவது இடமாக வ்ந்து திறமையை நிரூபித்தார். வறுமைக்கும் திறமைக்கும் தூரம் அதிகம். அதனால் படிப்பை நிறுத்திவிட்டு பெங்களூர் சென்று பிழைக்கலாமெனக் கருதி அங்கே விண்ணப்பித்து சென்றார்,, அங்கே ஓவிய வேலைதான். வாரம் 1000 ரூபாய் சம்பளமாம். அதுவே பற்றாதாம்... (மொத்தமாக ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதே இல்லையாம் அதுவரை/.. ) ஈரோட்டை விட பெங்களூரில் அதிக செலவுகள் துலைத்தெடுத்தது..
    அதுசரி,, என் டைரி குறிப்புகளை விட்டுவிட்டு நான் எங்கோ செல்வதாகத் தெரிகிறது...
    இனி அம்மா:
    அம்மா குடும்பத்தில் நான்கு மகன்கள். மூன்று பெண்கள்.. ஒன்று இறந்துவிட்டது. (குழந்தையாக இருக்கும்போதே) வறுமையும் இங்கே ஆட்டி படைத்திருக்கிறது. நான்கு மாமாக்களும் சுத்தமான தங்கம்... அவர்களின் வேலையும் தங்க வேலையே!! நால்வர் இணைந்தால் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா? பெண்களில் இளையவர் என் அம்மா! மூத்த பெண்ணான எனது பெரியம்மாவுக்கு நான்கு பெண்கள் ஒரு பையன்.. என் வீட்டில் இரண்டு மகன் ஒரு பெண்..
    அப்பா வீட்டில் அவ்வளவாக டச் இல்லை. உறவுகளுடன் பிரிவினை வந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் முகத்தையே பார்க்காமல் வாழ்ந்துவிட்டார்கள்.. எல்லாம் தேவையில்லாத பிரச்சனைதான்... அம்மா வீட்டில் ஏகப்பட்ட தொடர்பு. எங்கள் வீட்டு உறவினர்களின் வரவேற்பைக் கண்டீர்களேயானால் மலைத்துப் போய்விடுவீர்கள். ஆனால்

    இவர்கள் எல்லாரும் சாதி பார்க்கிறவர்கள். மற்ற சாதி மக்கள் வந்தால் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலபேர் அப்படி; சில பேர் இப்படி.. மற்றபடி மிக நல்லவர்கள் என்றே சொல்லவேண்டும்.. எனக்குத் தெரிந்து யாரும் ஒரு சிகரெட் பிடிப்பதுகூட நான் பார்த்ததில்லை...

    இளமையில் படித்தது ஈரோட்டில் 2ம் வகுப்புவரை... தமிழ் மீடியம். நான் வகுப்பில் சேரும்போது எனக்கு ஆனாவும் கனாவும் அத்துப்படி.. மிக எளிதில் தமிழில் பூந்து விளையாடினேன். எனது உறவினர்கள் அக்கப் பக்கத்தினர் யாவரும் தெலுகாகவே இருந்ததினால் எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கொஞ்சம் சிரமமாகவே இருந்ததாம்...
    நான் வாழ்ந்த வீடு இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஒரே காம்பெளண்டில் இருந்தோம்.. முதல் வீட்டில் மாவு அரைப்பார்கள்... இரண்டாவது வீடு எங்களோடது... மூன்றாவது வீட்டில் பூங்கொடி என்ற ஒரு அக்கா இருந்தார்கள்.. நான்காவது வீட்டில் செந்தில் அல்லது ராமு அண்ணன் இருந்ததாக ஞாபகம். ரஞ்சனி என்ற ஒரு அக்காவும் இருந்தார்கள்.. நாங்கள் எல்லாரும் ஒரே செட்.. அதனாலதான் என்னவோ எனக்கு இன்னும் பெயர் ஞாபகம் இருக்கிறது. மேலே மாடி. கழிவறைகள் தாண்டி செல்லவேண்டும். மாடியில்தான் நிறையபேர் தூங்குவார்கள். நானும் என் அப்பாவும் நிறைய முறை உறங்கியிருக்கிறோம். அந்த வீட்டில் இருந்தபோதுதான் எனது தாத்தாவைப் பார்க்க முடிந்தது.. அப்பா பெங்களூரில் இருந்து வந்தபிந்தான் கலியாணம் நடந்தது. பின் சொந்தமாகவே தொழில் தொடங்கினார்,, அப்போது எனக்கு 6 வயதிருக்கலாம். எங்கள் வீட்டுக்குப் பின் ஒரு மாடியில் தனியாக வைத்து நடத்தினார்.. மாடிக்கு நேர் கீழே தண்ணீர்த் தொட்டி இருந்ததாக ஞாபகம்... என் தம்பி அதில் விழுந்துவிட்டதாகவும் ஞாபகமிருக்கீறது.
    சிலநாட்களில்,,, ஈரோட்டை விட திருப்பூரில் ஓவியத் தொழிலுக்கு மதிப்பும் பணமும் அதிகமிருந்ததால் அப்பா அங்கே வேலைக்குச் சென்றுவிட்டார்... அங்கேயே சொந்தமாக தொழில் தொடங்கி, வாரம் ஞாயிறு மட்டும் ஈரோடு வருவார்.. அதுவும் சில மாதங்களாக இருந்தது... பின் ஒரு நாள் மூட்டை முடிச்சுகளோடு திருப்பூரே வந்துவிட்டோம்.................
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ம்ம்ம்... அருமையான கவிதை நினைவுகள். ஒவ்வொருவருக்கும் தத்தமது இளமைப் பருவம் ஒரு வரம்.
    வரத்தை எப்படி நாம் உபயோகிக்கிறோம் என்பதே முக்கியம்.
    நீங்கள் இப்படி எழுதி வைப்பதை நாளை உங்கள் வருங்காலம் காணும்! எழுதுங்கள்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    ம்ம்ம்... அருமையான கவிதை நினைவுகள். ஒவ்வொருவருக்கும் தத்தமது இளமைப் பருவம் ஒரு வரம்.
    வரத்தை எப்படி நாம் உபயோகிக்கிறோம் என்பதே முக்கியம்.
    நீங்கள் இப்படி எழுதி வைப்பதை நாளை உங்கள் வருங்காலம் காணும்! எழுதுங்கள்.
    நன்றிங்க...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆதவா


    பாரதி, பரஞ்சோதி வகையில் இன்னொரு இலக்கியத் தொடர்..

    ஆமாம்.. இவ்வகைப் பதிவுகள்..
    காலப்பதிவுகள்.. பொக்கிஷங்கள்..


    சுந்தரத் தெலுங்கு முறைப்பெண்ணை மீறி
    தமிழ்நங்கை உங்களை ஆட்கொண்டமைக்காக
    உங்கள் அற்புதப் பதிவுகளால் மகிழும் நம்
    தமிழ்மன்றம் நன்றி சொல்கிறது..

    தமிழுக்கும்.. உங்களுக்கும்.. இருவருக்கும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •