Results 1 to 12 of 32

Thread: வீராசாமி ! - மின்னஞ்சலில் வந்த விமர்சனம் !

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0

    Talking வீராசாமி ! - மின்னஞ்சலில் வந்த விமர்சனம் !

    பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை , திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..
    அதைவிட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர் ..

    மும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...
    கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...

    விமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின் ஆரம்பக்காட்சிகள் பார்வையாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன...என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்...ஆம்...ஸ்க்ரீனில் விஜய டி.ஆர் தோன்றியதும் தொண்டைக்குழி வறண்டு நாபி கமலத்தில் இருந்து உருண்டையாக பந்துபோல் ஒன்று தோன்று உடனே தியேட்டரை விட்டு வெளியேறு என்று மிரட்டுகிறது...

    கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.
    ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது...அவரது வசனம் மிரட்டுகிறது...எதிரில் இருப்பவரை அல்ல..நம்மையே...

    கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....அது ஏன் என்று கிளைமாக்ஸில் சொல்கிறேன் என்று இடைவேளையின்போது சொல்லி பயங்கரமான பீதியை கிளப்பி இண்டர்வெல் விடுகிறார்...நெம்பர் 1 அடிக்க கூட போகாமல் சீட்டிலேயே காத்திருக்கவேண்டியதாயிற்று...பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று...

    விஜய டி.ஆர் மற்றும் மும்தாஜ் ( படத்தில் மும்தாஜின் பெயர் அழகுதமிழ் கலைச்செல்வி மனோகரி) இடம்பெறும் காதல்காட்சிகள் கிழவிகள் கூட ரசிக்ககூடியவை...அதிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்து, அடுக்கு மொழியில், முத்தம் வேனுமா, சுத்தமா வேனுமா, மொத்தமா வேனுமா என்று சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...

    படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...
    அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி...பாடல்காட்சிகளில் மிக பிரம்மாண்டமான செட்டுகள்...செட் போடுவது கொஞ்சம் அரதப்பழசான ஐடியாவாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது...
    அதிலும் பெரிய சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...

    காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை...டி.ஆர் திரையில் வந்தவுடன் வெடிச்சிரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது...ஏன் எதற்கு என்று இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...

    படத்தில் எவ்வளவு அருமையான பஞ்சு டயலாக்குகள் மற்றும் அடுக்கு மொழிகள் இடம்பெறுகின்றன தெரியுமா ? மொத்த வசனமுமே அடுக்கு மொழியில் அமைந்திருப்பது மிகவும் அருமை...உதாரணம், டீ.ஆர் ஒருவரை கொல்லச்செல்லும்போது

    டேய் லூசு..
    உன்னோட பேரு தாசு..
    இப்ப போடப்போறேன் டாசு..
    நான் வெட்னா நீ பீசு..
    ஆகாது இது போலீஸ் கேசு.
    எனக்கு இருக்குது மக்கள் மாஸு..

    என்று கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...

    படத்தில் மைனஸ் பாயிண்டுகள் என்று சொல்லப்போனால் ஏகே.47, 56, .33 பிஸ்டல், என்று பல நவீன ஆயுதங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் டீ.ஆர் வெறும் அரிவாளை தூக்கிக்கொண்டு கொல்ல செல்வது மிக அரதப்பழசு டெக்னிக்...

    மொத்தத்தில் வீராசாமி, வீர ஆசாமிகள் பார்க்கவேண்டிய படம்...!

    நன்றி: செந்தழல் ரவி!
    Last edited by franklinraja; 31-01-2007 at 10:30 AM.
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •