Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: ஆறு நட்சத்திர ஹோட்டல் அனுபவம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் saguni's Avatar
    Join Date
    07 Oct 2006
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    13,884
    Downloads
    125
    Uploads
    0

    ஆறு நட்சத்திர ஹோட்டல் அனுபவம்

    நான் அடிக்கடி பணிநிமித்தமாய் உலக நாடுகளுக்கு பயணிப்பவன். இம்முறை புருனே நாட்டிற்கு பயணித்தேன்.

    எனக்கு உலகின் ஆறு நட்சத்திர ஹோட்டலான புருனே நாட்டின் EMPIRE HOTEL AND COUNTRY CLUBல் தங்க நேர்ந்தது. துபாயின் BURJ AL ARAB என்ற ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு முன் உலகின் மிகச்சிறந்த ஹோட்டலாகத்திகழ்ந்த இந்த ஹோட்டலை சுற்றிப்பார்க்க மட்டும் குறைந்தது 1நாள் வேண்டும்.

    ஹோட்டலின் மெயின் வரவேற்பரைக்குக் கீழே 3திறந்தவெளி மாடியினை அமைத்திருக்கிறார்கள். 24மணி நேரமும் டூரிஸ்டுகளின் கேமரா படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டே இருக்கின்றன.

    ரூமின் அமைப்பினை லாகூன் மற்றும் sea view என இரண்டாக அழைக்கிறார்கள். lagoon எடுத்தாலும் sea view எடுத்தாலும் அறைக்கான விலை என்னவோ ஒன்று தான். Lagoonல் கார்டன் வியூ எடுத்திருந்தேன். அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் பிரம்மாண்டமான கட்டமைப்பு. அறையின் பின்வாசலைத் திறந்தால் ஒரு வரண்டா மாதிரி அமைத்து அதைச்சுற்றிலும் ஆறு ஓடுவது போல நீரோட்டம் சில சமயம் போட்டிங் கூட செல்லலாம். தவறி தண்ணீருக்குள் விழுந்துவிடாமலிருக்க ரூமின் பின் பக்கம் முழுவதும் fence அமைத்திருக்கிறார்கள்.

    தியேட்டர், குழந்தைகளை மகிழ்விக்க கிட்ஸ் கிளப், Empire Emporium, சிற்சில கடைகள், பல வகையான உணவு விடுதிகள் மற்றும் பீச் ரிசர்ட் பார்க் என ஏகப்பட்ட வசதிகளை உள்ளடக்கியது இந்த ஹோட்டல். எங்கு பார்த்தாலும் தங்கத்தை கொட்டியிரைத்தது போன்ற பிரம்மிப்பு ஹோட்டல் முழுக்க வியாபிக்கிறது.

    பல கிலோமீட்டர் பரப்பளவில் கோல்ப் கிளப் அமைத்திருப்பது பிரம்மாண்டம். நடந்து வந்தாலே தூங்கி எழுந்தால்தான் களைப்பு தீரும்.ஹோட்டலைச் சுற்றிப்பார்க்க சென்றால் மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் நடந்தே செல்ல முடியாது என்பதால் ஒவ்வொரு இடத்திலும் செல்வதற்கு boggy எனப்படும் pool car இலவச சேவையை hot line phone மூலம் அமைத்திருக்கிறார்கள். Phone பூத் நிறைய இடங்களில் அமைத்திருக்கிறார்கள் நாம் போனை எடுத்தாலே உடனே boggy serviceக்கு நாம் அழைக்கும் இடமும் தெரிகிறது. எத்தனை நபர் மற்றும் அடுத்து எங்கே செல்லவேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும் அடுத்த சில நிமிடங்களில் pool car வந்துவிடுகிறது.

    காலை உணவு இலவசமாய் தருகிறார்கள். கிட்டத்தட்ட 100 வகையான உணவுகள் அதில் சிறப்பாய் பெரும்பாலும் நம்மூர் பரோட்டா மற்றும் வெஜிடபுள் சப்ஜியும் இடம்பெறுவது பெருமை.

    ஒரு இரவு தங்க விலை என்னவோ மற்ற ஹோட்டல்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான் ஆமாம் ஓர் இரவுக்கு தற்போது 130 அமெரிக்க டாலர் நமது பணத்தில் கிட்டத்தட்ட ரூ6000 மட்டுமே.

    இந்த விடுதி உலகின் பணக்கார தனி நபராய் திகழ்ந்த புருனேசுல்தானின் பங்கில் உருவானது என்பது சிறப்புச்செய்தி

    அனுபவம் புதுமை ஆனாலும் என்றென்றும் நினைவில் நிற்கும் என்பது உறுதி.
    Last edited by saguni; 25-12-2006 at 02:27 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உங்கள் அனுபவத்தைப் படித்ததன் மூலம்
    ஒரு 'மெய்நிகர்' சுகம் கிடைத்தது..

    நன்றி நண்பரே...

    தொடர்ந்து படையுங்கள்..



    ( உங்கள் பயனாளர் பெயரை மாற்றும் எண்ணம் இருந்தால் சொல்லுங்கள்.. நன்றி)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ம்... அனுபவித்து எழுதுகின்றீர்கள்!!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பதிவுக்கு மிக்க நன்றி

    துபாயின் BURJ AL ARAB என்ற ஏழு நட்சத்திர ஹோட்டலை பற்றி சில வரிகள் எழுதலாமே!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    6 நட்சத்திர ஹோட்டல் இவ்வளவு குறைவான கட்டணத்திலா.... போயிட வேண்டியது தான்.. ஆமா பிளைட் சார்ஜை ஓவியாக்கிட்ட வாங்கிக்கலாமா......

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் saguni's Avatar
    Join Date
    07 Oct 2006
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    13,884
    Downloads
    125
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    பதிவுக்கு மிக்க நன்றி

    துபாயின் BURJ AL ARAB என்ற ஏழு நட்சத்திர ஹோட்டலை பற்றி சில வரிகள் எழுதலாமே!!
    Burj Al Arab உள்ள பார்க்கவே காசு கேக்கறாங்க! நீங்க புக் பண்ணி கொடுத்தீங்கண்ணா அனுபவத்தை உங்களுக்கு அர்பணித்து நன்றி மடல் எழுதுவேனுங்க! எப்போதங்கப்போறனோ தெரியலீங்க!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    6 நட்சத்திர ஹோட்டல் இவ்வளவு குறைவான கட்டணத்திலா.... போயிட வேண்டியது தான்.. ஆமா பிளைட் சார்ஜை ஓவியாக்கிட்ட வாங்கிக்கலாமா......
    அதானே ல இது ஜுஜிபி தவிர வட்டி நிறைய வருது எண்டு கேள்வி வேற......
    இனாமா கேட்காதிங்க கடனா கேட்டா கிடச்சாலும் கிடைக்கும் அறிஞர்.

    கிடைச்சா நமக்கும் சொல்லுங்க நாமளும் கொஞ்சம் கடன் வாங்கணும்,
    இங்க சும்ம ஹோட்டலே விலை அதிகம். போய் பாத்திட வேண்டியது தான்.

    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இவ்வளவு வசதிகளோடும் இந்த விலையில் கொடுக்கிறார்கள் என்றால் வியப்புதான். அங்கு எடுத்த புகைப்படங்களையும் கொடுங்களேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா View Post
    துபாயின் BURJ AL ARAB என்ற ஏழு நட்சத்திர ஹோட்டலை பற்றி சில வரிகள் எழுதலாமே!!
    நான் துபாயில் தான் வேலை புரிந்து வருகின்றேன், இன்னமும் அந்த ஹோட்டலின் உள்ளே நுளையவில்லை என்றாலும் அதனை அடிக்கடி பார்தவன் மற்றும் அறிந்தவன் என்ற வகையிலே அதனைப் பற்றி எழுதவிளைகின்றேன்.

    இந்த ஹோட்டலின் வடிவமைப்பும் இதன் புகழுக்கு ஒரு காரணம். இது ஒரு பாய் விரித்தோடும் பாய்மரக்கப்பலைப் போன்று வடிமைக்கப் பட்டுள்ளது. டுபாயின் பிரசித்தி பெற்ற யுமேய்ரா கடற்கரையில் அமைந்துள்ள இக் ஹோட்டல் கடலின் உள்ளே ஒரு சிறிய தீவு போன்று அமைத்துக் கட்டப் பட்டுள்ளது. இந்த செற்கைத் தீவு கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 280 மீற்றர் தூரத்தில் அமைக்கப் பட்டுள்ளது அத்துடன் இக் ஹோட்டலின் உயரம் சுமார் 321 மீற்றர்.

    இந்த இக் ஹோட்டலின் உள்ளே அமைக்கப் பட்டுள்ள ரெனீஸ் விளையாட்டுத் திடலும் புகழ் பெற்ற ஒன்று. இக் ஹோட்டலினை இரவு வேளையில் மின் விளக்கு ஒளியில் பார்ப்பதற்கு கோடி கண் வேண்டுமென்றால் அது மிகையாகாது.
    Last edited by ஓவியன்; 05-02-2007 at 07:32 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    புர்ஜ் அல் அரபை இடிக்கப்போகிறார்களாமே..?? உண்மை செய்தியா??

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    இந்த புர்ஜ் அல் அரப் விடுதியைப் பற்றிச் சில வாரங்களுக்கு முன் டிஸ்கவரி டிராவல் அண்ட் லிவிங் சானலில் ஒரு மணி நேர நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.

    அடடா, அடடா! நிஜமாகவே பார்க்கக் கண்கோடி வேண்டும். அத்தோடு அந்த விடுதியைக் கட்டிய முறையையும் காட்டினார்கள். ஹ்ம்ம்... இதுக்கெல்லாம் எங்கயோ மச்சம் இருக்கணுமாமே...

    ஓவியன், படங்கள் எங்கே ஐயா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #12
    இளையவர்
    Join Date
    29 Jan 2007
    Location
    colombo,இலங்கை
    Posts
    76
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் மிகப்பெரிய செல்வந்தர் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீகள்.........நான் சொன்னது உண்மைதானே?
    உண்மையிலே அப்படியான இடங்களுக்குச் செல்லவேண்டும் போலுள்ளது ......... அது நடக்கிறகாரியமா!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •