Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 55

Thread: இவளின் விடுதலை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    இவளின் விடுதலை


    யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.

    பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.

    அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

    வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.

    வாங்கோ அண்ணே!

    நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.

    பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.

    சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.

    அப்ப நான் வாறன்

    சரி அண்ணே

    விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.

    அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்?? மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.

    பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.

    முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா.. அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.

    முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.

    வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.

    விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே ! வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.

    அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.

    இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.

    இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.

    ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத விடு விடு எனப் பேசி முடித்தாள்.

    ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.

    முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.

    அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.

    சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.

    வாங்கோ..மச்சாள்..

    அம்மா என்னபாடு?? வழைமையான கேள்வி.

    அதே நிலைமைதான் மச்சாள் இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.

    பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.

    தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.

    அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.

    ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..

    இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள் சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.

    ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.

    தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.

    இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.

    சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.

    மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.

    எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.

    குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.
    Last edited by மயூ; 07-10-2006 at 08:11 AM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    வாவ். மயூரேசன் மிகத் தெளிந்த நடை. அவ்வப்பொழுது வரும் ஈழத்துச் சொற்கள். குசினி (அடுப்பறை), கதிரை (நாற்காலி) சரியா??. சிறு குழப்பம் ரஞ்சன், குமரன் இருவரும் ஒருவரா அல்லது தட்டச்சு செய்கையில் நேர்ந்த பிழையா? அருமையா எழுதியிருக்கீங்க.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by mukilan
    வாவ். மயூரேசன் மிகத் தெளிந்த நடை. அவ்வப்பொழுது வரும் ஈழத்துச் சொற்கள். குசினி (அடுப்பறை), கதிரை (நாற்காலி) சரியா??. சிறு குழப்பம் ரஞ்சன், குமரன் இருவரும் ஒருவரா அல்லது தட்டச்சு செய்கையில் நேர்ந்த பிழையா? அருமையா எழுதியிருக்கீங்க.
    நன்றி முகிலன் இரண்டு சொற்களும் நீங்கள் ஊகித்தது சரியே!!

    குமரன் ரஞ்சன் ஒருவரே !! இப்போது மாற்றிவிடுகின்றேன். தட்டச்சுப் பிழைதான்....மன்னிக்கவும்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    இலங்கை தமிழில் கதை படிப்பதே அலாதிதான்.. தொடர்ந்து நிறைய கதையுங்க...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by மன்மதன்
    இலங்கை தமிழில் கதை படிப்பதே அலாதிதான்.. தொடர்ந்து நிறைய கதையுங்க...
    நன்றி மன்மதன் அவர்களே!
    தொடர்ந்தும் எழுதத்தூண்டும் உங்களிற்கு நன்றி!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நன்றி மயூ,

    கதையின் கரு உண்மை சம்பவமா?
    கதை சுருக்கமாய் ஈழத்து தமிழில் அருமையாய் இருக்கு.

    இன்னும் அதிகம் எழுதவும்... வாழ்த்துக்கள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    மயூரேசா, இந்தக் கதைக்கு என்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டுமா! :-) நீ அறிவாய். நல்ல கதை.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    மயூரேசா....
    சொல்லவந்த விஷயமும் விதமும் அருமை...
    நல்ல படைப்பு இது....

    ஒரு சில குறிப்புகள் மட்டும்...
    கதையில் பேச்சு வார்த்தைகளை மட்டும் யாழ்ப்பான தமிழில் வைத்துவிட்டு மீதியை தூயதமிழில் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்
    பேச்சு வழக்கை கதையில் கொண்டுவருன்ம் போது சரியான இணைப்பை கொடு.
    எழுத்து பிழை சரி செய்யவும்....

    மற்றபடி ஓக்கே...
    யப்பா ராகவா... நல்லாஇருக்குன்னு மட்டும் சொல்லாம ... நல்லா எழுதுறதுக்கும் உதவி பன்னலாமே...

    செல்வரே இந்த பையனையும் கொஞ்சம் கடித்து குதறவும்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நாகலிங்கம் என்று ஒரு மனிதர் யார் அவர் என்ன உறவு? ஏன் தான் பிடித்த மீனை பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
    காலில் உள்ள சங்கிலி
    கனத்தாலும்
    வேலைக்கு உணவு
    உண்டென்றால்
    யானைக்கு விடுதலை
    என்று கொள்ளலாமா?
    சுற்றியுள்ள மானுடங்களை
    கண்திறந்து பாராமல்
    சொந்தங்கள் மட்டுமே
    சொர்க்கங்கள் என்பது
    மண் மறைத்த கண்
    ஆதரவு நாடுவது
    விடுதலை அல்ல
    ஆதரவு தருவதே
    விடுதலை
    (பென்ஸு உமக்கு இப்ப நிம்மதியா?)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    மயு கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு தான் இலங்கை தமிழ் புரிய கொஞ்சம் தாமதம் ஆச்சு.

    தாமரை நீங்க சொன்ன மாதிரி எனக்கும் நாகலிங்கம் யாருனு கேள்வி இருக்கு.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மயூரேசா...!
    அழகான கதை...அற்புதமான நடை...!
    வாழ்த்துக்கள்..!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஓவியா
    நன்றி மயூ,

    கதையின் கரு உண்மை சம்பவமா?
    கதை சுருக்கமாய் ஈழத்து தமிழில் அருமையாய் இருக்கு.

    இன்னும் அதிகம் எழுதவும்... வாழ்த்துக்கள்
    நன்றி ஓவியாக்கா!
    இது தனிப்பட்ட முறையி்ல் உண்மைக் கதையில்லை. ஆனால் இது போல ஆயிரம் கதைகளை யாழ்ப்பாணத்தில் காணலாம்.

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •