Results 1 to 8 of 8

Thread: 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி இல்லையாம்????

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    Angry 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி இல்லையாம்????

    சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் ஓர் நாட்டின் தலை நகருக்குச் சென்றார். அந்த நகரின் எழிலைப் பார்த்து இரசித்த பிரதமர் தன் நாடும் ஒரு நாள் இப்படி மாறும் என்று கூறினார். அந்த நாடு வேறெந்த நாடுமில்லை நம்ம இலங்கைதான். இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே?. மலையும் மடுவும் போலே.

    இலங்கை தற்போது தூரநோக்கற்ற நகைச்சுவையாளர்களால் ஆளப்பட்டு வருகின்றது என்பதற்கு அடுத்த உதாரணம். இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பிற்குத் தடை காரணம் மின்சார சேமிப்பாம்.

    மீறி ஒளிபரப்பும் நிறுவனங்களிற்கு தண்டப்பணம் அறவிடப்படுமாம். மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். ஏற்கனவே இலத்திரனியல் ஊடகங்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களின் விளம்பரங்களில் பெரும் பகுதி 9 11 மணி வரையான நேரத்தில் ஒளிபரப்பாகும் நேரத்தில் இதன் மூலம் தாம் நஷ்டம் அடையவேண்டும் எனக் கூறியுள்ளன.

    அரச தொலைக்காட்சி கூட இது சாத்தியமில்லாத முயற்சி என்று கூறியுள்ளது. சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாகினியின் தலைவர் நியூட்டன் குணரத்ன கூறுகையில், இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்புகளை நிறுத்துவது என்பது சாத்தியம் இல்லை என்றார்.

    சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு கண்டிப்பாக உறங்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தில் நகைப்புக்குரிய நாடாகிவிடுவோம்" என்று தெல்சான் நிறுவன தலைவர் சான் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

    "இந்த நாட்டை நகைச்சுவையாளர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் முதலில் இரவு கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடட்டும் என்றும் அவர் சாடினார். நாட்டின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு மக்கள் பற்றரி மூலமே தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர். 52 விழுக்காட்டினர்தான் மின்சாரத்தை சார்ந்துள்ளனர் என்றும் சான் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

    இந்த முயற்சி மூலம் அரசு தன் எதர்பார்ப்பை அடையுமா என்றால் அது நடக்கப் போவதில்லை. இம் முயற்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எதர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தப்போகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பீதிகொண்டு நாட்டை விட்டு வெளியேறப்போவது மட்டும் உறுதி. ஏற்கனவே இனப் பிரச்சனை காரணமாக அதள பாதாளத்தில் விழ ஆரம்பித்து விட்ட இலங்கைப் பொருளாதாரம் இதன் மூலம் மேலும் ஒரு மரண அடி வாங்கப்போகின்றது.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by mayooresan
    இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பிற்குத் தடை காரணம் மின்சார சேமிப்பாம்.

    .
    மின்சாரத்தை உற்பத்தி செய்து செலவழிக்கத்தான் முடியும்.. அனல் மின்சார நிலையங்கள், அணுமின் நிலையங்களை பகலில் ஓடவிட்டு இரவில் நிறுத்த முடியாது.. அப்படிப்பட்ட வசதியைக் கொண்டது நீரின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மட்டுமே..

    மஹாராஷ்டிரத்தில் ட்ராம்பேயில் உள்ள அனல் மின்சார நிலையத்தின் ரவு நேர மின்சாரம், தொங்கர்வாடி (அடிவாரம்) பகுதியிலிருந்து பீரா(மலை மேல் உள்ள அணை) பகுதிக்கு நீரேற்றம் செய்ய பயன்படுத்தப் படுகிறது..

    இதனால் அனல் மின்சார நிலையத்தில் தயாராகும் மின்சாரம் வீணாகாமல், மீண்டும் மின் உற்பத்தி செய்ய வழி வகுக்கிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan
    இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பிற்குத் தடை காரணம் மின்சார சேமிப்பாம்.

    மீறி ஒளிபரப்பும் நிறுவனங்களிற்கு தண்டப்பணம் அறவிடப்படுமாம்.
    நகைச்சுவை பகுதியில் பதிக்க வேண்டியதை ஏனையா இங்கு பதிந்திருக்கிறீர்..?

    :angry: :angry:
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இலங்கை பார்த்து முன்னேறிய சிங்கப்பூரில் இன்று... எந்த அடைப்படை குறையும் இல்லை...

    தொலைக்காட்சி பற்றிய அரசின் கருத்து வியப்பாக உள்ளது.....

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    இம்சை அரசன் 23-ம் புலிகேசி இலங்கையில் வெளிவந்துவிட்டதுபோலவே?!!.......

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by poo
    இம்சை அரசன் 23-ம் புலிகேசி இலங்கையில் வெளிவந்துவிட்டதுபோலவே?!!.......
    ஆமுங்கோ சுமார் 50 வருடங்களாக பல இம்சைங்க நாட்டை மாறி மாறி ஆண்டுவருதுங்கோ.....

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    இரவு நேர தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை: ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
    [வெள்ளிக்கிழமை, 23 யூன் 2006, 05:49 ஈழம்] [கொழும்பு நிருபர்]
    சிறிலங்காவில் இரவு நேர தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையான தகவல் அறியும் உரிமையை மீறுவதாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளதாவது:

    அரசாங்கத்தின் இம்முடிவானது ஊடகத்துறையினரின் சுதந்திரத்தை சீர்குலைப்பதகவும். அரசாங்கத்தின் இந்த் நடவடிக்கையானது சர்வாதிகாரத்தனமானது.

    இந்த முடிவை அரசாங்கம் செயற்படுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய கூறுகையில், மிகவும் மலினமான அரசியல் இலாபங்களுக்காக இத்தகைய முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றார்.

    இறந்த சடலங்கள் மீது அதிகாரத்தைக் கைப்பற்ற செயற்படாமல் மனிதாபிமானமற்ற படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் கரு ஜயசூர்ய கேட்டுக்கொண்டார்.


    நன்றி : புதினம்.காம்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan
    ஆமுங்கோ சுமார் 50 வருடங்களாக பல இம்சைங்க நாட்டை மாறி மாறி ஆண்டுவருதுங்கோ.....

    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •