Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: சந்தர் ஜீ பகிடிகள்...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    Unhappy சந்தர் ஜீ பகிடிகள்...

    சந்தர் ஜீ பகிடிகள்...........

    சனத்தொகை பற்றி ஓர் ஆசரியர் கற்பிக்கின்றார் இந்தியாவில் ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குளந்தையைப் பெறுகின்றாள்.
    சந்தர் ஜீ : நாங்கள் அவளைக் கண்டுபிடித்து நிறுத்த வேண்டும்


    சந்தர் ஜீ : ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க?
    மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு
    சந்தர் ஜீ : முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடுகினம்?


    ஆசிரியர் : நான் ஒருவனைக் கொலை செய்தேன். இதன் எதிர் காலம் என்ன?
    சந்தர் ஜீ : நீங்கள் சிறைக்குப் போவீர்கள்


    சந்தர் ஜீ ஒரு தடவை வேலைக்கு விண்ணப்பம் நிரப்பினார். அங்கு ஒரு பகுதியில் சம்பள எதிர்பார்ப்பு என்று இருந்தது. நீண்ட நேர யோசனையின் பின்பு சந்தர் ஜீ ஆம் என்று நிரப்பினார்


    பேராசிரியர் சந்தர் ஜீ ஒரு தடவை பிளம்பரை (plumber) பல்கலைக் கழகத்திற்கு வரச்சொன்னாராம். ஏன் என்றால் எப்படி பரீட்சை வினாத் தாள்கள் வெளியே கசிகின்றன என அறியத்தான்.


    சந்தர் ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!
    தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?
    சந்தர் ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது


    சந்தர் ஜீக்கு ஒரு தடவை சீட்டிழுப்பில் 20 கோடி பரிசு வீழ்ந்தது. முகவர் வரி முதலியவற்றை கழித்து விட்டு மீதம் 15 கோடியைக் கொடுத்தார். கோபம் அடைந்த சந்தர் ஜீ சொன்னார் என்னுடைய 20 கோடியைத்தா! இல்லா விட்டால் என் 20 ரூபா டிக்கட் காசைத்தா!


    சந்தர் ஜீ ஒரு தடவை அருங்காட்சியகத்திற்குச் சென்றார்.
    சந்தர் ஜீ விளக்க உரைஞருக்கு : என்னப்பா இது புதுச் சித்திரம் என்ற பெயரில இப்படி பயங்கரமான உருவமெல்லாம் வரைவீங்களா?
    விளக்க உரைஞர் : மன்னிக்கோணும் நீங்க பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு கண்ணாடி


    சந்தர் ஜீ ஒரு தடவை தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
    பெண் : எனக்கு உங்களயும் விட 1 வயது கூடவே?
    சந்தர் ஜீ : அதனால் என்ன அடுத்த வருடம் உன்ன நான் கட்டிக்கிறேன்


    சந்தர் ஜீ மிக மெதுவாக ஒரு கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார்
    நண்பர் : ஏன்யா இவ்வளது ஸ்லோவா கடிதம் எழுதறா?
    சந்தர் ஜீ : என் மகன் இப்பத்தான் எழுதப் பழகிறான் அவன் மெதுவாகத்தான் வாசிப்பான் அதுதான்


    சந்தர் ஜீ தன் மகனுக்கு : உன் வயசில வாஷிங்டன் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதித்தார் தெரியுமா? நீயும் இருக்கிறியே! தண்டச் சோறு???
    மகன் : உங்க வயசில அவர் அமேரிக்க ஜனாதிபதி ஆகிட்டார். நீங்களும் இருக்கிறீங்களே??? பொறுப்பில்லாத அப்பன்!.



    இவையெல்லாம் நெட்டில் சுட்டு நம்மவர்கட்காக மொழி பெயர்க்கப் பட்ட பகிடிகள்.
    இரசியுங்கள்... ருசியுங்கள்....

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் றெனிநிமல்'s Avatar
    Join Date
    09 Apr 2006
    Posts
    200
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    1
    Uploads
    0

    Smile

    சனத்தொகை பற்றி ஓர் ஆசரியர் கற்பிக்கின்றார் இந்தியாவில் ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குளந்தையைப் பெறுகின்றாள்.
    சந்தர் ஜீ : நாங்கள் அவளைக் கண்டுபிடித்து நிறுத்த வேண்டும்
    ஹி ஹி ஹி.........

    இதிலே பல பதில்களை ஆழமாக பார்த்தால் நகைச்சுவை போய் அல்லது தத்துவம் போல் தெரிகின்றது எனக்கு
    "உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    சந்தரை இப்படியே விட்டு விடாதீர்கள் மயூரா தொடருங்கள்


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    நண்பா ! ரசித்தோம் ருசித்தோம் இன்னும் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்
    Last edited by இணைய நண்பன்; 17-06-2006 at 12:41 PM.
    இணையத்தில் ஒரு தோழன்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    Wink சர்தார் ஜீ பகிடிகள் 2 ம் பாகம்.

    சர்தார் ஜீ தன் வாழ்க்கையில் இரயில் வண்டியைப் பார்த்ததில்லை. ஒரு நாள் மும்பாய் இரயில் நிலையத்தில் நின்றபோது ரயில் தடத்தைப் (Track) பார்த்தார். ஒன்றும் விளங்காத சர்தார் ஜீ அதன் நடுவால் நடந்து போனார். அப்போது அங்கு வந்து இரயில் ஒன்று சர்தார் ஜீயை அடித்துத் தள்ளியது. நல்ல வேளையாக சார்தார் ஜீ சிறிய காயங்களுடன் தப்பினார். சில நாட்கள் கழிந்து சர்தார் ஜீ தன் நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் வீட்டு சமயலறையில் தண்ணீர் கேத்தல் விசிலடித்தது. அருகிலிருந்த இரும்புக் கம்பியால் தண்ணீர் கேத்தலை அடித்து நொருக்கினார் சர்தார். சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த நண்பர் எதற்காக இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு சர்தார் ஜீ கூறினார் இந்த சாமான்களை சின்னதாக இருக்கும் போதே அழித்து விடவேண்டும் எனக் கூறினார்.


    சர்தார் ஜீ மீண்டும் ஒரு நாள் இரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு பயனியிடம் கேட்டார்.
    சர்தார் ஜீ : இராஜஸ்தான் எக்பிரஸ் இவ்விடத்தால் செல்லுமா?
    பயனி : மதியம் 12.30 க்குச் செல்லும்
    சாதார் ஜீ : அப்போ பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்குச் செல்லும்?
    பயனி : 10.30
    சர்தார் ஜீ : சரி! சரி! அப்பிடியானால் மும்பாய் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு?
    இவ்வாறு தொடர்ந்து கேள்வி கேட்டதால் மிகவும் கோபமடைந்த பயனி கேட்டார்
    பயனி : நீங்க பஞ்சாப்புக்குத்தானே போகவேண்டும்?
    சர்தார் ஜீ : இல்லை இந்த இரயில் தடத்தை (Track) கடக்கவேண்டும்


    சர்தார் ஜீ வீட்டு தொலைபேசி ஒலித்தது
    ஹலோ! இது இரண்டு இரண்டு இரண்டு இரண்டா? குரல் கேட்டது
    சர்தார் ஜீ : இல்லை இது இருபத்தி இரண்டு இருபத்தி இரண்டு
    குரல் : இந்த இரவிலே உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும்
    சர்தார் ஜீ : பரவாயில்லை எப்படியும் இந்த நேரம் என் நண்பன் ஒருவன் அழைப்பு எடுப்பதாக கூறினார்


    சர்தார் ஜீ இரு காதுகளிலும் நெருப்புக் காயங்கள்ளுடன் ஒரு வைத்தியரிடம் வந்து சேர்ந்தார்.
    வைத்தியர் : என்ன இது! எப்படி ஏற்பட்டது இந்தக் காயம்?
    சர்தார் ஜீ : நான் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தபோது என் நண்பன் ஒருவன் தொலைபேசி அழைப்பை எடுத்தான். நான் மாறி தொலைபேசி என்று இஸ்திரிப் பெட்டியை காதில் வைத்து விட்டேன்
    வைத்தியர் : அப்போ மற்றக்காதில் எப்படி?
    சர்தார் ஜீ : அந்த முட்டாள் மீண்டும் தொலைபேசி அழைப்பை எடுத்தான்.


    சர்தார் ஜீ ஒரு நாள் தன் உறவினரின மரணச் சடங்கிற்கு தொலைநோக்கியுடன் சென்றார். ஏனெனில் இறந்தவர் சர்தார் ஜீ யின் தூரத்து உறவினன் ஆவார்.


    சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்
    சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்
    நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?
    சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது


    ஒரு தடவை உலகின் பிரபலமான நிவ் யார்க் காவல் துறை, ஸ்கொட்லண்ட் காவல் துறை மற்றும் சர்தார் ஜீ தலைமையில் பஞ்சாபிய காவல் துறை ஆகியன தம்மில் சிறந்த காவல் துறை அமைப்பைக் கண்டறிய ஒரு போட்டி வைத்தனர். போட்டியின் படி அருகிலிருந்த காட்டினுள் சென்று ஒரு சிங்கத்தைக் கட்டி யிழுத்து வரவேண்டு்ம். முதலில் நுழைந்தது ஸ்கொட்லாண்ட் காவல் துறை. சரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு திடகாத்திரமான ஆண் சிங்கத்தைக் கட்டியிழுத்து வந்தனர். அடுத்து நுழைந்தது நிவ்யார்க் பொலீஸ் டிபார்ட்மென்ட் (NYPD) சுமார் 15 நிமிடத்தில் ஒரு சிங்கத்தைப் பிடித்து வந்தனர். இறுதியில் நம்ம சர்தார் ஜீ தலைமையிலான பஞ்சாப் அணி களமிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கடந்தும் பஞ்சாப் அணி வராததால் கவலையுற்ற ஏனைய அணிகள் பஞ்சாப் அணியைத் தேடி காட்டினுள் நுழைந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் சர்தார் ஜீ சத்தம் போட்டுப் பேசுவது கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது. சர்தார் ஜீ குழுவினர் ஒரு கரடியை மரத்தில் கட்டிவைத்திருந்தனர். சந்தர் ஜீ சத்தமிட்டார் ம்....! ஒத்துக்கொள் நீ ஒரு சிங்கம்! சரியா?.


    ஒரு தடவை சர்தரர் ஜீ தற்கொலை செய்ய முடிவு செய்தார். கையிலே சிறிது வைன் மற்றும் பாண் என்பவற்றுடன் சென்றார். இவரை மறித்த ஒரு நபா கேட்டார். எதுக்கு தற்கொலை செய்யும் உங்களுக்கு உணவு வகை?
    இந்திய இரயில்களை நம்ப முடியாது. நேரத்திற்கு வராவிட்டால் நான் பட்டினியால் இறக்க நேரிடும்.


    ஒரு தடவை சர்தார் ஜீ கடுமையான பண நெருக்கடிக்கு உள்ளானார். இதிலிருந்து மீள ஆலயத்திற்குச் சென்று பகவானை வேண்டிக் கொண்டார். இறைவா எனக்கு இன்று அதிஷ்டலாப சீட்டில் பணம் கிடைக்க வேண்டும். ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை. சற்றும் சளைக்காத சாதார் ஜீ மீண்டும் மீண்டும் பகவானிடம் இப்படியே வேண்டினார். ஒரு நாள் வழமை போல சர்தார் ஜீ பகவானை வேண்டிக்கொண்டிருக்கும்போது கண்களை குருடாக்கும் ஒளிக் கீற்று ஒன்று தோன்றிக் கூறியது முதலில் அந்த சீட்டை வாங்குப்பா!.


    துப்பறிவாளர் வேலைக்காக ஒரு யூதன், இத்தாலிக்காரன், சர்தார் ஜீ ஆகியோர் சென்றனர். நேர்காணல் ஆரம்பமாகியது. முதலில் யூதனிடம் கேட்கப்பட்ட கேள்வி யார் யேசுவை கொலை செய்தனர்?. தயக்கத்தின் பின்பு யூதன் கூறினான் அது ரோமர்கள்.
    அதே கேள்வி இத்தாலிக்காரனிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவன் இது யூதர்களின் வேலை என்று கூறினான்.
    அடுத்து சர்தார் ஜீயிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. பதிலை தான் மறு நாள் கூறுவதாக வாக்களித்தார் சர்தார் ஜீ. வீடு திரும்பிய சர்தார் ஜீ யின் மனைவி கேட்டார் எப்படி இன்டாவியூ?.
    ம்...! எனக்கு உடனெயே வேலை கிடைத்து விட்டது. நான் இப்பொது ஒரு கொலைபற்றி துப்பறிந்துகொண்டு இருக்கின்றேன்.


    சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார் அப்போது அவன் வவ்! வவ்! எனச் சத்தம் இட்டான். அடுத்து குஜராத்தி மியாவ்! மியாவ! எனச் சத்தமிட்டார். இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர். இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது உருளைக் கிழங்கு என ஒரு சத்தம் வந்தது.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    சும்மா சொல்லக்கூடாதப்பு
    அத்தனையும் நகை(ச்) சுவை,


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    அருமையான சுவையான தொகுப்பு....
    அன்புடன்
    மணியா....

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan
    சந்தர் ஜீ பகிடிகள்...........
    சந்தர் ஜீ ஒரு தடவை தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
    பெண் : எனக்கு உங்களயும் விட 1 வயது கூடவே?
    சந்தர் ஜீ : அதனால் என்ன அடுத்த வருடம் உன்ன நான் கட்டிக்கிறேன்
    ....
    இது எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்னு நம்புறேன்...



    மயூரன் நகைச்சுவை துள் மக்கா........
    Last edited by ஓவியா; 19-06-2006 at 04:48 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்
    சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்
    நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?
    சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது




    நன்றி மயூ சார்
    நகைச்சுவைகள் படிக்க ரொம்ப நல்ல இருக்கு
    இன்னும் அதிகமா படைக்க வாழ்த்துக்கள்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    மயூரேசா.
    கலக்குறப்பா...
    ஆமா, இதில சர்தார்ஜீக்குப் பேரு மயூர்சிங்கா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by pradeepkt
    மயூரேசா.
    கலக்குறப்பா...
    ஆமா, இதில சர்தார்ஜீக்குப் பேரு மயூர்சிங்கா?
    ஆகா! வேணாமுங்க!
    பாவம் மயூரேசன்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by றெனிநிமல்
    ஹி ஹி ஹி.........

    இதிலே பல பதில்களை ஆழமாக பார்த்தால் நகைச்சுவை போய் அல்லது தத்துவம் போல் தெரிகின்றது எனக்கு
    வயது போக போக அப்படித்தான் உலக உண்மைகளெல்லாம் தத்துவமாகப் புரியும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •