Results 1 to 11 of 11

Thread: படங்கள் ஏற்றும் வசதி (Gallery) - விதிமுறைகள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31

    படங்கள் ஏற்றும் வசதி (Gallery) - விதிமுறைகள்.

    நண்பர்களே...

    நமது மன்றத்தின் சமீபத்திய தோற்ற மாற்றங்கள் உங்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்குமென்று நம்புகிறேன், குறிப்பாக Thumbs படங்களுடனான படங்கள் பகிர்ந்து கொள்ளும் PhotoGallery வசதி.

    இந்த படங்கள் பகுதியில் பிரவேசிக்க நமது மன்றத்தின் மேல் பாகத்தில் உள்ள மெனுவில் PhotoGallery என்பதை சொடுக்குவதன் மூலம் செல்லலாம்.

    அல்லது இந்த சுட்டியிலும் செல்லலாம்: http://www.tamilmantram.com/photogal/

    நமது மன்றத்து உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்கள் தான், இருந்தாலும் புதியவர்கள் யாராவது இந்த வசதியை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில விதிமுறைகள் அவசியம், அவை சுறுக்கமாக பின் வருமாறு:

    1) பண்பட்டவர் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே படங்களை ஏற்ற அனுமதி உண்டு.

    2) அருவறுப்பு, ஆபாசம், அவமதிப்பு இல்லாத எந்த படங்களை வேண்டுமென்றால் இங்கே ஏற்றலாம்.

    3) மன்றத்தை அலங்கரிக்க தரமான, அரிய, இனிய, மனமகிழ்ச்சி தரக்கூடிய படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.

    4) பிற மத, இன, கலாச்சாரத்தை கொச்சை படுத்தும் படங்களுக்கு அனுமதி கிடையாது.

    5) நமக்கு தமிழன் என்ற ஒரு மதம் போதும். அதனால், மற்ற மத சம்மந்தமான படங்களை தவிர்த்தல் நல்லது.

    6) தரமற்ற, பிரச்சனை வரக்கூடிய படங்கள் என கருதப் படுபவை, முன்னறிவிப்பு இன்று நீக்கப் படும்.

    7) அநாகரீகமாக பதிக்கப் படும் கருத்துக்கள் முன்னறிவிப்பு இன்றி நீக்கப் படும்.

    8) ஒருவர் ஒரு நாளைக்கு 10 படங்களுக்கு மேல் ஏற்றாமல் இருந்தல் நல்லது.



    புதிய உறை அல்லது பகுப்பு உருவாக்க, மற்றும் ஆலோசனைகள் வழங்க எனக்கு தனிமடல் அனுப்ப தயங்க வேண்டாம்.

    படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அது பற்றி உங்கள் கருத்துக்களை கூறவும் வசதி உள்ளது, அதனால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறிச் செல்லவும்.

    உங்கள் கருத்துக்கள் படம் ஏற்றியவர்களை இன்னும் சிறந்த படங்கள் ஏற்ற நிச்சயம் ஊக்கமளிக்கும், அதனால் நல்லதை பாராட்ட தயங்காதீர்கள்.

    உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..

    இராசகுமாரன்.

    .
    Last edited by இராசகுமாரன்; 28-04-2007 at 09:55 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்லது... படங்கள்.. மன்றத்தை அலங்கரிக்கிறது...

    குழந்தைகள், பூக்கள், இயற்கை காட்சிகள், அழகான கட்டிடங்கள், இரவு காட்சிகள், சிரிக்க வைப்பவை, சிந்திக்கக்கூடியவை... என தனி தனி பிரிவுகளை உருவாக்கலாம்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    என்னிடம் இருந்த சில படங்களை நான் பதிவேற்றி உள்ளேன்.
    கிடைக் கிடைக்க புதிதாக பதிவேற்றும் எண்ணம் உண்டு.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    என்னிடம் சில படங்கள் இருக்கின்றன.விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
    இணையத்தில் ஒரு தோழன்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    இராசகுமாரனுக்கு நன்றி.
    விரைவில் புதிய படங்களை பதிப்பிக்கிறோம்...


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    புதியவர்கள்.. படமேற்றுபவர்கள்.. விதிமுறைகளை கவனியுங்கள்...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மன்னிக்கவும் இன்றுதான் இந்தத்திரியை கண்டேன், விதிகளை பின்பற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

    நன்றி சார்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மன்றத்தில் வரும் படங்களுக்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    அதனால்... பல மதத்தினர் இங்கு வருவதால், ஒரு மதத்தை சார்ந்த படங்களை நீக்கலாம் என எண்ணுகிறோம். மேலும் மற்றவர் மனதை பாதிக்கூடிய வகையில் உள்ள படங்களையும் நீக்கலாம் என எண்ணுகிறோம்.

    தங்களின் கருத்துக்களை கொடுங்கள்...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    • மற்றவர் மனதை பாதிக்கவல்ல படங்களை அகற்றலாம். அப்படியானவை மன்றத்திற்கு தேவையற்றவையே.
    • ஆன்மீகப் படங்களுக்காக ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தலாம். விரும்புபவர்கள் உள்ளே சென்று பார்வையிடலாம். விரும்பாதவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.
    என்பது என் கருத்து.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Jul 2007
    Posts
    308
    Post Thanks / Like
    iCash Credits
    22,159
    Downloads
    192
    Uploads
    0
    என்னிடம் நல்ல அரிதான படங்கள் உள்ளது
    ஆனால் 1000 kb அதிகமாக உள்ளதால் மேல் ஏற்ற இயல வில்லை என்ன செய்யலாம்?

  11. #11
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அவற்றை கலரியில் தான் ஏற்றவேண்டுமா.... picoodle போன்றவற்றில் ஏற்றி நமது மன்றத்திலுள்ள புகைப்படக் களஞ்சியம் ல் நம்முடன் பகிரலாமே.... படங்களுடன் உங்களது குறிப்புகளையும் தந்தால் இன்னும் சிறப்பு..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •