Page 1 of 14 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 158

Thread: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0

    குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..

    குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்கள். குறித்து படங்களோடு விளக்கங்களை இங்கே காண்போம்

    இந்த பதிவிற்கான விபர்ங்களை நான் இணையத்திலிருந்தே எடுக்கிறேன்.
    பூக்களோடு அதன் தாவரவியல் பெயர் மருத்துவ பலன்கள் என தொகுக்கபட இருக்கும் தொகுப்பு இது. சில பூக்களின் படம் விபரம் தேடி அதன் தாவரவியல் பெயரோடு ஆங்கில ஜேர்மன் மொழியிலும் தேடியே இத்தொகுப்பை பதிகிறேன்.

    ஆதலால் இதிலிருந்தே எடுத்தேன் என்றில்லாம எல்லோருக்கும் எனது நன்றிகள்
    Last edited by Hega; 09-11-2012 at 09:26 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கபிலர்


    கபிலர்….தமிழ்ச்சங்கப்புலவர்களில் மிக புகழ் பெற்றவர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இவரால் அதிகமான சங்கபாடல்கள் பாடப்பெற்றுள்ளது. இவர் புலனழுக்கற்ற அந்தனாளன் எனும் பாராட்டைபெற்றவர்.


    இவர் பாடிய 200 க்கும் மேற்பட்ட பாடல்களில் பத்துப்பாட்டு எனும் நூலில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று.

    இப்பாடலில் மூலம் இரே இடத்தில் ஒரே தடவையில் 99 வகையான தாவரத்தின் பெயர்களை பட்டியல் இட்டிருப்பதன் மூலம் கபிலர் காவியங்களின் மட்டுமல்ல தாவரவியலின் அறிஞராகவும் திகழ்ந்தவர்.

    வால்மீகியும், காளி தாசனும் தங்கள் பாடலக்ளில் தாவரங்களைக்குறித்து பாடி இருந்தாலும் இப்படி 99 தாவரங்களின் பெயர்களை ஓரே பாட்டின் மூலம் கூறவில்லை.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    குறிஞ்சிப்பாட்டு 62 முதல் 07 வரை காணப்படும் பாடல் வரிகள்...



    ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
    தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
    செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
    உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
    எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
    வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
    எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
    பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
    பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
    விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
    குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
    குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
    போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
    செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
    கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
    தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
    குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
    வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
    தாழை, தளவம், முள் தாள் தாமரை,
    ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
    சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
    கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
    காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
    பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
    ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
    அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
    பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
    வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
    தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,
    நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
    பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
    ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
    நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
    மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கபிலர் பெயரால் கபிலர்மலை என்ற ஒரு பகுதி இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. அங்கவை, சங்கவை ஆகியோர் வாழ்ந்த பகுதியாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள். வல்வில் ஒரி, பாரி, அதியமான், காரி போன்றோர் வாழ்ந்த இடங்கள் இன்றளவும் இருந்து வருகின்றது

    வல்வில் ஓரி ஆண்ட பகுதி கொல்லிமலை,
    பாரி ஆண்டது நாமக்கல் பகுதிகள் என்று நினைக்கிறேன்..

    காரி ஆண்டது இன்று காரிமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
    அதியமான் நெடுமானஞ்சி ஆண்ட பகுதி தான் தர்மபுரி

    ஏதோ நான் தேடிட்டு இருக்கிறப்ப கிடைச்ச சில தகவல்கள். இன்னமும் தேடிட்டே இருக்கிறேன்......கூறியவர் தமிழ் வணிகம் செல்வமுரளி
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கபிலர் குன்று



    அங்கவை,சங்கவை என்னும் அவலப்பெண்களே அவர்கள்!தமிழகத்து மக்களுக்கு முல்லைக்குத் தேர்தந்த வள்ளலாகவும், இந்த இரண்டு பெண்களின் தந்தையாகவும் விளங்கிய பாரிவள்ளல் இறந்ததும், தாங்கள் அநாதைகளாக இருப்பதை உணர்ந்து,""அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்... இற்றைத்திங்கள்...குன்றும் கொண்டார் எந்தையும் இலமே''(புறம் 112)எனும் பாடலைப் பாடித் தங்களின் கையற்ற நிலையை அங்கவையும், சங்கவையும் பதிவு செய்தனர்.

    மாடமாளிகைகளில் வாழ்ந்த அங்கவை, சங்கவை தம் தந்தையாரின் மறைவிற்குப்பின் "கபிலர்' என்ற புலவரின் பாதுகாவலில் இருந்தனர். கபிலரும், பாரியும் நெருங்கிய நண்பர்கள். தம் நண்பன் பாரியின் மறைவுக்குப் பின் அவன் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைக் கபிலர் வேண்டியதைப் புறநானூறு (200,202) தெரிவிக்கிறது. பாரியைக் கொன்ற வேந்தர்களால் தங்களுக்குத் தொல்லை உண்டாகும் என நினைத்தே மற்ற அரசர்கள் பாரிமகளிரை மணக்க விரும்ப வில்லை போலும்!

    பின்னர்ச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்' எனும் அரசனைப் புகழ்ந்து பாடி கபிலர் பரிசில் பெற்றார் (பதிற். 61-70). சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரியைப் புகழ்ந்து பாடி (புறம் 121-24) பாரியின் இரு ம(க்)களையும் அவன் வழியினர்க்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு (புறம் 236,அடிக்குறிப்பு)உயிர் துறந்தார் என்பது நாம் அறிந்த செய்திகள்.

    அவ்வாறு கபிலர் உயிர்துறந்த இடம் எது?திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று' (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சிகளால் உறுதி செய்துள்ளார் ஆநிரைக் காவலன்என்னும் அறிஞர். இனிக் கபிலர் குன்றை நோக்சிச் செல்வோம்....திருக்கோவிலூர் பேருந்து நிலையத் திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று'உள்ளது.மழைக்காலங்களில் நீரோடினாலும் பெரும்பான்மையான காலங்களில் மணலைக்கடந்து கபிலர் குன்றை அடையலாம். கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்' என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. கபிலர் குன்றை அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று' என்று அழைத்தனர். ஆநிரைக் காவலனின் முயற்சிக்குப் பிறகு தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது.

    இவ்வூரின் அரசுப் பள்ளிகள் அங்கவை, சங்கவை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எனவும்,கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எனவும் அழைக்கப்படுவது பொருத்தமாகும்.கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. குறுகிய படிக்கட்டு வழியாக ஏறிக் கபிலர் குன்றை அடையலாம். கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது.செங்கல்கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. கட்டட அமைப்பை நோக்கும் பொழுது, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகூட்டப்பட்டுள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.திருக்கோயிலூரைப் பார்க்க நினைப்பவர்கள் கபிலர் குன்றின் அழகிய அமைவிடத்தைக் கண்டு களிக்கலாம். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அப்பகுதிக்குச் செல்ல முடியாதபடி அழகிய வண்ண விளக்குகள், பூங்காக்கள் அமைத்துப் பராமரித்தால் திருக்கோயிலூர் நகர மக்களின் அழகிய பொழுதுபோக்கு இடமாக இதனை மாற்ற முடியும்.பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,""செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது'' (தெ.இ.க. தொகுதி 7, 863) எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் இராசராசனின் தாய்வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.பல்வேறு போர்கள் நடைபெற்ற,சங்க காலம்முதல் இடைக்காலம், பிற்காலம் வரை, வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கிய திருக்கோவிலூர் ஊரும், பெண்ணையாற்றின் கபிலர் குன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய- பார்வையிடப்படவேண்டிய முதன்மையான இடங்களாகும்.


    http://muelangovan.blogspot.com/2007/04 ... t_599.html
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அருந்தககவல்கள் திரட்டித் தரும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன், ஹேகா. காந்தள் மலர்தான் தமிழ்நாட்டின் மாநிலமலர் என்பதையே சிலநாட்களுக்கு முன்புதான் அறிந்துகொண்டேன். (நன்றி: காந்தி அவர்களின் உங்களுக்குத் தெரியுமா?)

    அறியா மலர்கள் திரட்டி அழகிய பூங்கொத்து உருவாக்க முனையும் உங்களுக்கு என் பாராட்டுகளும் நன்றியும்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நன்றி கீத்ம அக்கா..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    குறிஞ்சிப்பாட்டு 62 முதல் 07 வரை காணப்படும் மலர்களின் பெயர்பட்டியல்….

    பட்டியல் முழுமையாக்கப்ட்டபின் இங்குள்ள பூக்களின் மேல் கிளிக்கினால் இலகுவாக தேடலாம்.


    செங் காந்தள்
    ஆம்பல்
    அனிச்சம்
    குவளை
    குறிஞ்சி
    வெட்சி
    செங்கொடுவேரி
    மணிச்சிகை
    தேமா
    உந்தூழ்
    கூவிளம்பூ
    எறுழம்
    சுள்ளி
    கூவிரம்
    வடவனம்
    வாகை
    குடசம்
    எருவை
    செருவிளை
    கருவிளம்
    பயினி
    வானி
    குரவம்
    பசும்பிடி
    வகுளம்
    காயா
    ஆவிரை
    வேரல்
    சூரல்
    குறுநறுங்கண்ணி
    குருகிலை
    மருதம்பூ
    கோங்கம்
    போங்கம்
    திலகம்
    பாதிரி
    செருந்தி
    அதிரல்
    சண்பகம்
    கரந்தை
    குளவி
    மா
    தில்லை
    பாலைப்பூ
    முல்லைப்பூ
    குல்லை
    பிடவம்
    செங்கருங்காலி
    வாழைப்பூ
    வள்ளி
    நெய்தல்
    தாழை
    தளவம்
    தாமரை
    ஞாழல்



    மௌவல்
    கொகுடி
    சேடல்
    செம்மல்
    சிறுசெங்குரலி
    கோடல்
    கைதை
    வழை
    காஞ்சி
    நெய்தல்
    பாங்கர்
    மராஅம்
    தணக்கம்
    ஈங்கை
    இலவம்
    கொன்றை
    அடுப்பம்
    ஆத்தி
    அவரைப்
    பகன்றை
    பலாசம்பூ
    பிண்டி
    வஞ்சி
    பித்திகம்
    சிந்துவாரம்
    தும்பை
    துழாய்
    தோன்றி
    நந்தி
    நறவம்
    புன்னாகம்
    பாரம்
    பீரம்
    குருக்கத்திப்பூ
    ஆரம்
    அகில்
    புன்னம்
    நரந்தம்
    நாகப்பூ
    இருள்வாசி
    குருந்தம்பூ
    வேங்கை
    புழகு
    Last edited by கீதம்; 09-11-2012 at 11:20 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    செங் காந்தள்..


    தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily)
    குடும்பம்: Colchicaceae
    பேரினம்: Gloriosa















    செங் காந்தள் கார்த்திகை மலர் எனவும் அழைக்கப்படும்.
    தமிழ் ஈழத்தின் தேசிய மலர்..
    தமிழ் நாட்டின் மாநிலப் பூ
    ]




    காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்

    இக்கொடியின் தண்டு பசுமையானது. வலுவில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலியவற்றைப் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும்.


    மருத்துவப் பயன்கள்



    கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது.

    இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது.

    ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள்.

    தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு

    மேலும் விபரம் அறிய....http://ta.wikipedia.org/wiki/%E0%AE%...AE%B3%E0%AF%8D
    Last edited by Hega; 12-02-2012 at 09:19 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    இலக்கிய மலர்ப் பூங்கொத்திற்கு [ மாலைக்கு ] மிக்க நன்றி !

    மணம் பரப்பட்டும் உங்கள் இலக்கிய தாகமும், சேவையும் !

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    பூக்க்களால் தமிழ்மாலை தொடுக்கும் நண்பருக்கு பாராட்டுகள்!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கருத்திட்ட கௌதமன் , ஜானகி அக்கா ஆகியோருக்கு நன்றி.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

Page 1 of 14 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •