Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 29

Thread: இமெயிலில் ஒரு உதவி தேவை

                  
   
   
  1. #13
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aravindhraju View Post
    எனது கணினியில் ஒரு DVD இல் தகவல்களை சேமிக்க குறைந்தது 45 நிமிடத்திற்கு மேல் ஆகிறது .மற்றவர்களை போல் குறுகிய காலத்தில் சேமிக்க நான் என்ன செய்ய வேண்டும்.
    அது உங்கள் கணினி வேகம் அந்த தகவல் உள்ள தட்டின் சுழற்சி வேகம் உங்கள் DVD writer இன் எழுதும் வேகம் என்பவற்றில் தங்கியுள்ளது நண்பரே... உங்கள் கணினியின் மற்றும் தொடர்புபட்ட வன்பொருட்களின் விபரம் தாருங்கள். வேறு காரணி உள்ளதா என்று யோசிக்கலாம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by aravindhraju View Post
    எனது கணினியில் ஒரு DVD இல் தகவல்களை சேமிக்க குறைந்தது 45 நிமிடத்திற்கு மேல் ஆகிறது .மற்றவர்களை போல் குறுகிய காலத்தில் சேமிக்க நான் என்ன செய்ய வேண்டும்.
    நீங்கள் கீழே அன்பு சொன்னபடி

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அது உங்கள் கணினி வேகம் அந்த தகவல் உள்ள தட்டின் சுழற்சி வேகம் உங்கள் DVD writer இன் எழுதும் வேகம் என்பவற்றில் தங்கியுள்ளது நண்பரே... உங்கள் கணினியின் மற்றும் தொடர்புபட்ட வன்பொருட்களின் விபரம் தாருங்கள்.
    இல்லாவிட்டால், மற்றவர் கனினி (வன்பொருள் தகவல்) அடிப்படையில் உங்களுடையதையும் மேம்படுத்துங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #15
    புதியவர்
    Join Date
    15 Jan 2009
    Posts
    19
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    தமிழனுக்கு எதிரி தமிழனே !
    என் உங்க M.D அனைவரிடமும் எச்சரிக்கை செய்யலாமே ? அதை தவிர்த்து நீங்கள்
    உங்க M.D நல்ல பெயரை தட்டி செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் , இது சூழ்ச்சி , சதி ,
    இப்படி செய்யும் நீங்கள் தவறானபாதையில் போகிறீர்கள் . இது கம்பனிக்கே உலையாக
    அமையலாம் . நீங்கள் உங்கள் கம்பனி M.D யை உங்கள் சதி வழியில் வீழ்த்த பார்க்கிறீர்கள் .

  4. #16
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அலுவலக சம்பந்நமான பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை கண்காணிக்கலாம் அறிவிப்பு செய்துவிட்டே செய்யலாம். அந்த கணக்கை அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஏற்படுத்தி கொடுப்பார். அவர் கட்டுப்பாட்டில் முகவரிகள் குறியீடுகள் (மறைக்கப்பட்டு இருக்கும்) இருக்கும். ஆனால் தனிநபர் மின்னஞ்சலை (அவரால் ஏற்படுத்தி கொண்ட முகவரி, ஜிமெயில், யாஹூ...) அலுவலக கணிணியில் பயன்படுத்தினாலும் கண்காணிக்க முடியாது. அலுவலக கணிணிகளை சொந்த பயன்பாட்டுக்கு ஈடுபடுத்த கூடாது என்ற வரைமுறையை ஏற்படுத்தலாம். எனது அலுவலக நலனுக்காக நான் கண்காணித்தேன் என்றாலும் குற்றம் தான். எனது அலுவலக தகவல்களை, குறிப்புகளை பாதுகாக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்றாலும் தவறுதான், குற்றம் தான். ஒருவரை கண்காணிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. பிளைளகளை கண்காணிக்கும் உரிமை பெற்றவருக்கு மட்டுமே உண்டு. அதுவும் சில எல்லைகளுக்குள்தான்.

    இதுவும் தொலைபேசி ஒட்டு கேட்டல் என்பது போலத்தான். அரசாங்கத்துக்கு அந்த அதிகாரம் நாட்டின் பாதுகாப்பிற்காக எடுத்துகொள்ளப்படுகிறது. (கவனிக்கவும் பொது நலன் கருதி எடுத்துகொள்ளப்படுகிறது) தொழிலதிபருக்கு அந்த அதிகாரம் இல்லை. அவரும் அரசாங்க சட்டதிட்டத்தின் கீழ்வரும் தனிநபர் தான். தெரியாமல் (உள்குத்து வேலை) செய்து கொண்டிருப்பார். இதெல்லாம் பலருக்கும் தெரிந்தது தான்.

    அலுவலக மின்னஞ்சலாக இருந்தால் இதை ஒரே இடத்திற்கு தொழிலதிபர் முகவரிக்கு மாற்றலாம். மற்றவற்றை மாற்றினால் அரசாங்கத்தின் குற்ற நடிவடிக்கைக்கு அதன் மின்னஞ்சல் உரிமையாளர் புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலகத்தை கூட நாம் சாப்பிடுவதற்கு, வீட்டிற்கு தொடர்பு கொள்ள பயன்படுத்துகிறோம் அதற்காக அனைத்தையும் கண்காணிக்க முடியுமா? அந்த 8 மணிநேரம் அங்கே பணிபுரிகிறார் அவ்வளவு தான். மற்ற எல்லா உரிமையும் அவருக்குண்டு, அவருக்கென்று குடும்பம் உண்டு, பின்னணிகள் உண்டு, அவரின் உரிமைகள் அவர் சார்ந்த குடும்பத்திற்கு சம்பந்தபட்டவை. அதில் தலையிட இன்னொருவருக்கு உரிமை கிடையாது. அவர் எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் உரிமை கிடையாது.

  5. #17
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by nambi View Post
    அலுவலக சம்பந்நமான பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை கண்காணிக்கலாம் அறிவிப்பு செய்துவிட்டே செய்யலாம். அந்த கணக்கை அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஏற்படுத்தி கொடுப்பார். அவர் கட்டுப்பாட்டில் முகவரிகள் குறியீடுகள் (மறைக்கப்பட்டு இருக்கும்) இருக்கும். ஆனால் தனிநபர் மின்னஞ்சலை (அவரால் ஏற்படுத்தி கொண்ட முகவரி, ஜிமெயில், யாஹூ...) அலுவலக கணிணியில் பயன்படுத்தினாலும் கண்காணிக்க முடியாது. அலுவலக கணிணிகளை சொந்த பயன்பாட்டுக்கு ஈடுபடுத்த கூடாது என்ற வரைமுறையை ஏற்படுத்தலாம். எனது அலுவலக நலனுக்காக நான் கண்காணித்தேன் என்றாலும் குற்றம் தான். எனது அலுவலக தகவல்களை, குறிப்புகளை பாதுகாக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்றாலும் தவறுதான், குற்றம் தான். ஒருவரை கண்காணிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. பிளைளகளை கண்காணிக்கும் உரிமை பெற்றவருக்கு மட்டுமே உண்டு. அதுவும் சில எல்லைகளுக்குள்தான்.
    நம்பி.. ஒரு விடையம் உங்கள் நியாயத்தில் புரியவில்லை. உங்கள் சொந்த வேலைகளை கோப்புக்களை எதற்காக அலுவலகம் கொண்டு செல்லவேண்டும். அல்லது பேணவேண்டும். அல்லது அலுவலகம் சாராதோருடன் பேசவேண்டும்? ஒவ்வொரு உத்தியோக ஒப்பந்தம் கைசாத்திடும் போது இணைய மின்னஞ்சல் பாவனை கட்டுப்பாடு பற்றி சொல்லியிருப்பார்கள். கண்காணிக்கிறோம் என்று சொல்லியே செய்வார்கள். அவர்கள் திருடவேண்டாம் என்கிறார்களே தவிர மறைந்திருந்து பிடிப்பதில்லை. தவறு செய்யவேண்டாம் என்று சொன்னபின் செய்வது தவறு செய்தால் அது தவறே அல்ல. அது தப்பு....

    காதலியுடன் - காதலன் கணவன் - மனைவி - நண்பர் உடன் அரட்டை அடிக்க அலுவலக கணினி-இணையம் - மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று விளக்குங்கள்....

    தவிர அவர்கள் பிள்ளைகளை கண்காணிக்கவில்லை. சகோதரர்களை கண்காணிக்கவில்லை. தத்தமது அலுவலக பணியாளர்களை அலுவலக பாதுகாப்பு மற்றும் சட்டக்காப்பு காரணங்களுக்காக கண்காணிப்பது தவறே அல்ல...

    கணினிகளில் உங்கள் மின்னஞ்சல் சிடி போன்றவற்னால் வைரஸ் பிரச்சனை வந்தால் யார் பொறுப்பார்கள்??? உங்கள் நியாயப்படி பணியாளர் தான் பொறுப்பெடுப்பாரோ???


    Quote Originally Posted by nambi View Post
    இதுவும் தொலைபேசி ஒட்டு கேட்டல் என்பது போலத்தான். அரசாங்கத்துக்கு அந்த அதிகாரம் நாட்டின் பாதுகாப்பிற்காக எடுத்துகொள்ளப்படுகிறது. (கவனிக்கவும் பொது நலன் கருதி எடுத்துகொள்ளப்படுகிறது) தொழிலதிபருக்கு அந்த அதிகாரம் இல்லை. அவரும் அரசாங்க சட்டதிட்டத்தின் கீழ்வரும் தனிநபர் தான். தெரியாமல் (உள்குத்து வேலை) செய்து கொண்டிருப்பார். இதெல்லாம் பலருக்கும் தெரிந்தது தான்.

    அலுவலக மின்னஞ்சலாக இருந்தால் இதை ஒரே இடத்திற்கு தொழிலதிபர் முகவரிக்கு மாற்றலாம். மற்றவற்றை மாற்றினால் அரசாங்கத்தின் குற்ற நடிவடிக்கைக்கு அதன் மின்னஞ்சல் உரிமையாளர் புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலகத்தை கூட நாம் சாப்பிடுவதற்கு, வீட்டிற்கு தொடர்பு கொள்ள பயன்படுத்துகிறோம் அதற்காக அனைத்தையும் கண்காணிக்க முடியுமா? அந்த 8 மணிநேரம் அங்கே பணிபுரிகிறார் அவ்வளவு தான். மற்ற எல்லா உரிமையும் அவருக்குண்டு, அவருக்கென்று குடும்பம் உண்டு, பின்னணிகள் உண்டு, அவரின் உரிமைகள் அவர் சார்ந்த குடும்பத்திற்கு சம்பந்தபட்டவை. அதில் தலையிட இன்னொருவருக்கு உரிமை கிடையாது. அவர் எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் உரிமை கிடையாது.

    முதலில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் என்பது பணியாளருக்கும் அவருக்கும் ஆன உறவல்ல. அது அந்த அலுவலகம் மற்றும் அரச நிதியமைச்சு மற்றும் சட்ட அமுலாக்கல் அமைச்சுக்கும் இடையான பெயர். அந்த அலுவலகத்தை பொறுத்தவரை அவர் அதிகபட்சமாக அவர் முகாமையாளர். அவ்வளவே. அதாவது அவரும் அங்கு வேலைசெய்பவரை போன்றவர்.

    சாப்பாடு சம்பந்தமாக பேசுவதை அவர்கள் குற்றம் சுமத்தியிருக்கமாட்டார்கள். அதற்காக அரை மணிநேரம் அலட்டினால் அவருக்கு அவார்டா கொடுக்க முடியும்???

    பொதுநலம் என்பதை வரையறுங்கள். அலுவலகத்திற்காக ஒருவர் பணிபுரிவது சுயநலமா பொதுநலமா??? அரசு தன் நாட்டு பாதுகாப்பிற்காக (உங்கள் மொழியில் பொதுநலத்திற்காக) ஒட்டுக்கேட்க்கலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் அந்த அலுவலக பாதுகாப்பு பொருட்டு நடவெடிக்கை எடுப்பது எந்த விதத்தில் சுயநலமாகிறது???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #18
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நம்பி.. ஒரு விடையம் உங்கள் நியாயத்தில் புரியவில்லை. உங்கள் சொந்த வேலைகளை கோப்புக்களை எதற்காக அலுவலகம் கொண்டு செல்லவேண்டும். அல்லது பேணவேண்டும். அல்லது அலுவலகம் சாராதோருடன் பேசவேண்டும்? ஒவ்வொரு உத்தியோக ஒப்பந்தம் கைசாத்திடும் போது இணைய மின்னஞ்சல் பாவனை கட்டுப்பாடு பற்றி சொல்லியிருப்பார்கள். கண்காணிக்கிறோம் என்று சொல்லியே செய்வார்கள். அவர்கள் திருடவேண்டாம் என்கிறார்களே தவிர மறைந்திருந்து பிடிப்பதில்லை. தவறு செய்யவேண்டாம் என்று சொன்னபின் செய்வது தவறு செய்தால் அது தவறே அல்ல. அது தப்பு....

    காதலியுடன் - காதலன் கணவன் - மனைவி - நண்பர் உடன் அரட்டை அடிக்க அலுவலக கணினி-இணையம் - மின்னஞ்சல் பாவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று விளக்குங்கள்....

    தவிர அவர்கள் பிள்ளைகளை கண்காணிக்கவில்லை. சகோதரர்களை கண்காணிக்கவில்லை. தத்தமது அலுவலக பணியாளர்களை அலுவலக பாதுகாப்பு மற்றும் சட்டக்காப்பு காரணங்களுக்காக கண்காணிப்பது தவறே அல்ல...

    கணினிகளில் உங்கள் மின்னஞ்சல் சிடி போன்றவற்னால் வைரஸ் பிரச்சனை வந்தால் யார் பொறுப்பார்கள்??? உங்கள் நியாயப்படி பணியாளர் தான் பொறுப்பெடுப்பாரோ???





    முதலில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் என்பது பணியாளருக்கும் அவருக்கும் ஆன உறவல்ல. அது அந்த அலுவலகம் மற்றும் அரச நிதியமைச்சு மற்றும் சட்ட அமுலாக்கல் அமைச்சுக்கும் இடையான பெயர். அந்த அலுவலகத்தை பொறுத்தவரை அவர் அதிகபட்சமாக அவர் முகாமையாளர். அவ்வளவே. அதாவது அவரும் அங்கு வேலைசெய்பவரை போன்றவர்.

    சாப்பாடு சம்பந்தமாக பேசுவதை அவர்கள் குற்றம் சுமத்தியிருக்கமாட்டார்கள். அதற்காக அரை மணிநேரம் அலட்டினால் அவருக்கு அவார்டா கொடுக்க முடியும்???

    பொதுநலம் என்பதை வரையறுங்கள். அலுவலகத்திற்காக ஒருவர் பணிபுரிவது சுயநலமா பொதுநலமா??? அரசு தன் நாட்டு பாதுகாப்பிற்காக (உங்கள் மொழியில் பொதுநலத்திற்காக) ஒட்டுக்கேட்க்கலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் அந்த அலுவலக பாதுகாப்பு பொருட்டு நடவெடிக்கை எடுப்பது எந்த விதத்தில் சுயநலமாகிறது???
    இல்லை தவறுதலான புரிதல் இருக்கிறது. தொழிலாளர் நலன் தான் சட்டம். தொழிலாளர் பாதுகாப்பு உரிமை தான் முதல். அரசு செய்கின்றவைகள் எல்லாம் தனிநபர் செய்யமுடியாது. அரசு காவல்படையை கொண்டு ஒரு கலவரத்தை ஒடுக்குகிறது. அதே போன்று ஒரு தனிநபர் சட்டத்தை கையிலெடுத்துக் கொள்ள முடியாது. தொழிற்சாலையில் சர்ச்சை என்றாலும் அரசைத்தான் நாடவேண்டும். காவல்துறையைத்தான் நாடவேண்டும். அப்படி நாடாமல் நீங்களே தொழிலதிபரே சிலவேலைகள் செய்திருப்பாரேயானால் அதுவே அவருக்கு எதிராக மாறிவிடும். குற்றமே நடந்திருந்தாலும் அதைபற்றி வெளியில் கூறமுடியாது.

    நீங்கள் கால் சென்டருக்கு இணையத் தொடர்பு சம்பந்தமாக தொலைபேசி மூலம் புகார் கொடுக்கிறீர்கள். (மின்னஞ்சல் மூலம் புகார் கொடுப்பதே நல்லது) அப்பொழுது ஒரு தகவல் உங்களுக்குத் தரப்படும். நிர்வாக காரணங்களுக்காக உங்கள் குரல் பதிவு செய்யப்படும் தகவல் முன்னெச்சரிக்கையாக கொடுக்கப்படும். (அந்த குரலை வைத்து ஒன்று செயயமுடியாது...ஒரு ஆதாரத்திற்காக அவர்கள் நிறுவன குழுவில் இது பற்றி விவாதிப்பதற்காக பதிவு செய்கிறார்கள்...நீதிமன்றத்தில் இதை நிருபிக்க முடியாது)

    அதேபோன்று அனைத்திற்கும் முன்னெச்சரிக்கைத் தரவேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அரசு ஒட்டு கேட்பும் இதுமாதிரி பின்பற்றல் வேண்டும் என நீதிமன்றம் கூறுகின்றது. இது மாதிரி தமிழகத்தில் ஒரு அமைச்சர் சம்பந்தபட்ட ஒட்டுகேட்பு நீதிமன்றத்தில் வந்தபோது ஒரு மிரட்டல் முன்ன்றிவிப்பு செய்து பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதை பத்திரிகைக்கு வெளியிட்டது தவறு என்றே அந்த அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சரும் பதவி விலகினார் நினைவிருக்கலாம் மீண்டும் பதவியில் உள்ளார்.

    (அரசாங்கம் உட்பட...அதை மீறுகிறார்கள் அது விமர்சிக்கப்படுகிறது...அது அந்த குற்றப்பின்னணியை முன்னிட்டு சில நேரங்களில் மறக்கவும் படுகிறது...தீவிரவாதிகளுடன் தொடர்பு அதற்காக ஒட்டுகேட்டோம்...என்றால் பொதுமக்கள் அதை பெரிய குற்றமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை..இது ஒரு சிறு உதாரணம்)

    எது பொது நலம்? வரையறுக்க சொல்கிறீர்கள்? ஊழியர்கள் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து லாபத்துடன் விற்பது சுயநலமா? பொதுநலமா? அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஏன் ஊழியரே தொழிலதிபராகவும் ஆகலாம். யார்? வேண்டுமானாலும் உடனடியாக அரசாக ஆகிவிடமுடியாது. சட்டத்தையும் இயற்றிவிடமுடியாது. இது ஒரு வியாபாரம். ஒரு கடை முதலாளி பொருட்களை விற்பனை செய்கிறார்...உடனே பொதுநலம் என்று எதை வேண்டுமானாலும் செய்துவிடமுடியாது. அப்புறம் ஆளாளுக்கு சட்டத்தை கையெலெடுத்துக் கொள்வார்கள்.

    நீங்கள் தொழிற்சாலை என்று வந்துவிட்டாலே அது சம்பந்தமான துறையை சந்தித்து அனுமதி பெற்றுத்தான், தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சரிதான் (அப்படி எந்த இடத்திலும் வரையறுக்கப்படவேயில்லை) என்று ஆயவாளர் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் தான் நடவடிக்கை எடுக்க முடியும். இதெல்லாம் தொழிலாளர் நல சட்டத்தில் பல பிரிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளதை காணாலாம். அப்படி சொல்லாமல் செய்கின்ற காரியம் அனைத்துமே சட்டவிரோதம் தான்.

    அவர் திருடினார் ஆகையால் நான் திருடினேன். என்பது சட்டமல்ல. ஜனநாயகமுமல்ல. (குற்றத்தின் காரணமாக கைது செய்யப்பட்டவர் குற்றம் நிருபிக்கப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவர் தான். குற்றவாளி அல்ல, அப்படி அழைப்பதுமில்லை...இது சட்டம், இது ஜனநாயகம், அவர் குற்றம் செய்வார்....ஆகையால் அவரை கண்காணித்தேன் என்பது எந்த வகையில் வரும்?....பதிலுக்கு அவரும் (தொழிலாளரும்) முதலாளியை கண்ணிகாணித்தேன் வரி ஒழுங்காக கட்டுவதில்லை, 1000 ஊழியர்கள் என்று கணக்கு காண்பித்துவிட்டு 750 ஊழியரை வைத்து வேலை வாங்குகிறார்...என்று காண்காணித்து அரசுக்கு தெரிவித்தால்...அரசு இதை ஊக்குவிக்கிறது. கடமையும் கூட. ஆகையால் அரசுக்கு தெரிவிக்க கண்காணித்தேன் நாட்டு நலன் தானே செய்யலாமா? செய்யலாம் அரசு பாராட்டத்தான் செய்யும், தொழிலதிபர் பாராட்டமாட்டார்..என்பதை பார்த்துகொள்ளுங்கள்...சட்டத்தில் உள்ளது தான்)


    அவர் திருடுவார் ஆகையால் நான் கண்காணித்தேன் என்பதை வெளியில் சொல்லமுடியாது. நீதிமன்றத்திலும் சொல்ல முடியாது. இப்போது பாக்கெட் சைசில் எல்லாம் வந்து விட்டது. அதையும் வாங்கி பூட்டி சாவியை மட்டுமே எடுத்து தொழிலாளர் கையில் கொடுக்கப்படுகிறது. அதுவரை மாற்றாக அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்காக ஒரு தொலைபேசியும் ஒதுக்கப்படுகிறது. இதுவும் சட்டத்தில் வரையறுக்குப்பட்டுள்ளபடி. அதே போன்று அறிவிப்பு செய்து விடவேண்டும்.

    (மின்னஞ்சல் செய்வது தொலைபேசியை விட வசதியானது. பிறருக்கு தொந்தரவு தராதது. அதை பயன்படுத்தி வீட்டிற்கு அவசரமாக தகவல் கொடுக்கிறார். இது தொழிலாளர் நல வசதியில், சட்டத்தில் உள்ளவைகள் தான். அவசர தொடர்புகள் அவர் கொள்ளலாம் அதை நிறுவனம் மறுக்க முடியாது. இதை பல நிறுவனங்கள் அனுமதிக்கிறது.)

    அப்படி வேண்டாம் என்றால் அறிவிப்பு செய்துவிடுங்கள். அதற்கு பின் அவர் ஏன்? செய்யப்போகிறார். கண்காணிக்கப்படுகிறது என்றவுடன் அவர் செய்வரா? எவ்வளவு பெரிய தொழிற்சாலையாக இருந்தாலும் சட்டத்திட்டங்களை வகுத்து தொழிலாளர் நல ஆய்வாளரிடம் கொடுத்து ஒப்புதல் பெற்ற விஷயங்களே தொழிலாளருக்கு அறிவிப்பு செய்து பின்பற்றப்படல் வேண்டும். தன்னிச்சையாக சட்டத்தை வகுத்து சர்வாதிகாரம் நடத்தமுடியாது. கண்ணிகாணிக்கவும் கூடாது. இதை தொழிலாளர் நலவாரியத்திடம் கேட்டால் அதிக பயனளிக்கும்.

    தொழிற்சாலை குறிப்பிட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுவிடுதி வசதி, கழிவறை வசதி, காற்றோட்ட வசதி, தொழிலாளர் ஒய்வெடுக்கும் வசதி, அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள தொலைபேசி (அழைப்புகள் வந்து தொழிலாளரை தொடர்புகொள்ள) ( இப்போது கைப்பேசி வைத்திருக்கிறார்கள்) வசதி, வெளியே அவசரத்தகவல்கள் தர அதாவது அவரது, குழந்தை, குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள காசு கொடுத்து அழைக்கும் தொலைபேசி வசதி....போன்றவைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். அனைத்தும் தொழிற்சாலை நிறுவனர் தான் ஏற்படாடு செய்யப்பட வேண்டும். இது எந்த தொழிற்சாலையும் முறையாக பின்பற்றுவதில்லை. அதிகபட்சமாகவே பின்பற்றுவதில்லை.

    ஊழிய நேரம், 24 மணிநேரம் வேலை வாங்கப்பட்டால் ஒரு நாள் முழு ஒய்வு...கூடுதல் நேரத்திற்கு இரட்டை சம்பளம் அப்போது சிற்றுண்டி ஏற்பாடு செய்தல் என்று தொழிலாளர் நலன் சார்ந்தவைகளை தொழில் நிறுவனங்கள் முழுமையாக பின்பற்றுவதில்லை. மாறாக அவர்களுக்கு கையூட்டு கொடுத்து சரிசெய்யப்படுகிறது.

    (தொழிலாளர் அலுவலர் (பர்சனல் டிபார்ட்மென்ட்) தற்பொழுது மனிதவளம் என் நினைக்கிறேன்....இவர்களை மண்டல் தொழிலாளர் நல ஆய்வாளர் இரண்டு மாதித்திற்கு ஒருமுறை...காலவரை நினைவில்லை...அரசு தளத்தில் உள்ளது..சந்தித்து அனைத்து நலன்களையும், வசதிகளையும் பார்வையிடவேண்டும், தொழிலாளர்களையும் கேட்க வேண்டும் இது அமலில் உள்ளது. நாமும் இதுபற்றி எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கலாம். அவர் வந்தவுடன் பணம் மட்டுமே அவருக்கு கொடுக்கப்படும்..முறையாக நடந்து கொள்ளும் நிறுவனம் எதற்கு பணம் அதுவும் மாதா மாதம் தரவேண்டும். இது எல்லா நிறுவனங்களும் பின்பற்றுவது..சிறு நிறுவனங்கள் சொல்லவே வேண்டாம்.இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே பலருக்கு தெரியாது...இதற்கு மேலும் அதிகாரிகள் இருக்கிறார்கள்...இவர் சரிவரவில்லை என்றால் அவரிடம் புகார் தெரிவிக்கலாம்..மின்னஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம், நகல் மாநில மத்திய, தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு சேர்த்து அனுப்பலாம்) . இதெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இன்றைய தலைமுறையினருக்கு இந்த தகவல்கள் தெரியாமலிருக்கும்.

    (ஒரு வராத்திற்கு 52 மணிநேரம்...ஒரு நாளைக்கு 8 மணிநேரம்...எல்லாம் தொழிலாளர் சட்டத்தில் உள்ளது. வழக்கு தொடர்ந்தால் நிறுவனர் தான் மாட்டுவார். அந்த வழக்கு முடியும் வரை ஊதியமும் தரப்படல் வேண்டும். யாரும் முன்வருவதில்லை. தொழிலாளருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அதிகம்.)

    ஒருவர் தொழிற்சாலை நடத்துவது என்பது ஒட்டுமொத்த பொதுநலனாக ஆகிவிடாது. தொழிற்சாலை யார்வேண்டுமானாலும் துவங்கலாம். அரசு குறிப்பிட்ட வழிமுறைகளுடன், விதிமுறைகளுடன். தொழிற்சாலைகளை பொறுத்தவரை தொழிலாளர் நலன்தான் முக்கியம் அதற்காகத்தான் அவர்களுக்கென்று தனி நீதிமன்றமே இயங்குகின்றது. தவிர தொழிலாளர் தான் செய்த வேலைக்கு ஒருமாதம் கழித்துதான் ஊதியமே வங்குகிறார். எந்தவொரு ஊதியமும் முன்னாடி பெறாமல் செய்த ஊழியத்திற்கு அடுத்த மாதமே அவர் ஊதியத்தை பெறுகிறார். (இது நாள் குறையக் குறைய நாட்கணக்கு குறையும்). இதில் தொழிலாளரின் பங்கே முதன்மையானது. இதை எல்லா தொழிற்சங்கமும் ஏற்றுக்கொண்டுள்ள ஒன்றுதான்.

    ஒருவர் வீடு வாடகைக்கு விடுகிறார்...நான் தான் வீட்டின் உரிமையாளர் ஆகையால் உன்வீட்டை எட்டி எட்டி பார்த்து கொண்டிருப்பேன் என்று எவரும் கூறுவாரேயானால். அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர். தண்டிக்கப்படவேண்டியவர். இங்கும் வாடகைதாரருக்கே சட்டம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது. ஆனால் யாரும் (வாடகைதாரர்) இதுபோன்றதொரு சட்டவிஷயங்களில் நேரமின்மை காரணமாக இதை சட்டத்தின் முன் எடுத்து செல்வதில்லை.

    அதை போன்று தொழிலாளர் நலனும் எந்த வொரு தொழிலாளியும் சட்டத்தின் முன் பிரச்சினைகளை எடுத்து செல்வதில்லை. செலவு குறைவு தான் என்றாலும். அதுவரை அவரை அந்த நிறுவனத்தில் வைக்கமாட்டார்கள். வெறும் வயிற்றுடன் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறமாட்டார் என்ற தைரியத்தில் தொழிலதிபர்கள் இம்மாதிரி ஏதேச்சதிகார போக்கில் செயல்படுவர். ஆனால் தொழிற்சங்கம் இருந்தால் இது மாதிரி நிறுவனர் செயல்படமாட்டார், அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். செலவையும் சங்கத்தின் நிதி கொண்டு வழக்குத் தொடுப்பார்கள். அதற்காக தொழிலாளி நீதிமன்றம் செல்லக்கூடாது என்பதல்ல. எப்போது வேண்டுமானாலும் ஒரேயொரு தொழிலாளியும் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

    தொழிலாளர் நல ஆய்வாளரை கேட்டால் இதற்கான பதிலைணைத்தும் கிடைக்கும். தொழிலாளர் நீதிமன்றத்தின் வழக்குரைஞரை அல்லது ஏதாவதொரு தொழிற்சங்கத்தை அணுகினால் இதற்கான முழுத்தகவலும் கிடைக்கும்.

    யாருக்காக? தொழிற்சாலை செல்கிறார்..அவர் குடும்பத்திற்காக..அது தான் முதன்மை....எந்த காரணத்தை கொண்டும் தொழிற்சாலையின் நஷ்டத்தை தொழிலாளர் சுமக்க வேண்டியதில்லை. லாக் அப் செய்தாலும் தொழிலாளருக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை நிறுவனத்தை விற்றாவது கொடுக்க வேண்டிய கடமை நிறுவனருக்கு உண்டு. லாபம் வரும்பொழுது பங்கிட்டு கொடுத்துவிட்டு தொழிலாளரைப்போல் நடந்து சொல்கிறாரா? என்ன? இல்லையே. இதெல்லாம் பல வழக்குகள் நடந்திருக்கிறது. கடந்த காலங்களில் பல தொழிலாளர் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. பல பிரபல வழக்குரைஞர்கள் வாதாடியும் தொழிலாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்திருக்கிறது. ஏற்ற இறக்கும் இருக்கும் தீர்ப்பு பொரும்பான்மை தொழிலாளருக்கு சாதகமாகவே இருக்கும். நீங்கள் பழைய வரலாற்றை எடுத்து பார்க்கலாம்.
    Last edited by nambi; 14-05-2010 at 05:13 AM.

  7. #19
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நான் முந்தய பதிவிலேயே கூறியிருக்கிறேன். தொழிலாளர் ஒப்பந்தத்தில் இணைய தொலைபேசி பாவனை பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் என்று. தவிர உங்களை ஒழிந்திருந்து அமுக்குவதில்லை. செய்யாதே என்று சொல்லிவிட்டு விதி மீறுபவர்களையே நடவெடிக்கை எடுக்கிறார்கள்.


    இதுக்கு ஏதோ கிரிமினல் கேஸ் போல சொல்கிறீர்கள்..யாரும் சட்டத்தை கையிலெடுக்கவில்லை. எனக்கு இந்தியா பற்றி தெரியாது. பொதுவாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் ஒப்பந்தத்தினை பார்த்தால் எந்தவித காரணமும் இன்றி 1 மாத (மாறு படலாம்) முன்னறிவிற்புடன் உங்களை வேலையிலிருந்து நீக்கலாம். தவறு உங்கள் பக்கமென்றால் உடனடி வேலை நீக்கம் செய்யப்படலாம். அதற்கு அந்த அலுவலக நிர்வாகத்தினருக்கு அல்லது முதலாளிக்கு அங்கீகாரம் உள்ளது. இது சட்ட பூர்வமானதே... காரணம் ஒப்பந்தத்தில் தொழிலாளி முகாமையாளர் ஒப்பமிட்ட ஒரு நகல் அந்நாட்டு தொழில் துறை அமைச்சு (labour ministry) க்கும் அனுப்பப்படும்.

    எப்பவாவது அலுவலக வசதிகளை சொந்த பாவனைக்கு பாவிப்பவர்களை யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். ஆனால் பாவிப்பது குற்றம்.
    நான் முன்பே கூறியது தான். உங்கள் காதலி காதலன் மனைவியுடன் அரட்டை அடிப்பதற்கு எதற்கு அலுவலக வசதிகளை பாவிக்க வேண்டும்.??? அதற்கான காரணம் சொல்லுங்கள். பிறகு மற்றதை பற்றி பேசலாம்.

    இப்போது வசதிகள் முன்னேறிவிட்டது. IP தொலைபேசிகளால் நீங்கள் பேசியவற்றை wav ஒலிக்கோப்பாக உங்கள் வலையமைப்பு வழங்கிக்கு சேமித்து உங்கள் அலுவலக மின்னஞ்சலுக்கு ஒரு நகலும் வந்து சேரும். அப்படி பார்த்தால் இந்த IP தொலைபேசிகள் சட்டவிரோதமானவையா??? உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை...

    எந்த அலுவலகமும் (நானறிந்த வகையில்... இந்திய அலுவலகங்கள் பற்றி யாம் அறியோம்) முன்னறிவிப்பின்றி நடவெடிக்கை எடுப்பதில்லை.

    தவிர நான் கூறவந்தது பொதுநலம் சுயநலம் பற்றி.. சாதாரண பெட்டிக்கடையுடன் பெரிய அலுவலகங்கள் நிர்வாகங்களை ஒப்பிடாதீர்கள். பார்த்தால் அப்படி இருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல..

    ஒரு அலுவலகத்தினை எடுத்தால் அந்த அலுவலகத்தை பொறுத்தவரை அனைவரும் தொழிலாளர்களே... அங்கு எவர் குற்றம் செய்தாலும் (முதலாளி உட்பட) மற்றவர்களுக்கு தட்டி கேட்க்கவும் சட்டபூர்வ நடவெடிக்கை எடுக்கவும் அங்கீகாரம் உள்ளது. எந்த நிர்வாக கட்டமைப்பிலும் முதலாளி என்ற ஒரு பதம் (BOSS) இல்லை. அவர் அநேகமாக நிர்வாக முகாமையாளர் (MD) என்ற பெயருடன் இருப்பார். அந்த அலுவலக வரவு செலவுக்கணக்கில் அவரது சம்பளமும் அடங்கும். மீதியிலேயே இலாப நட்டம் கணிக்கப்படும். அதை வைத்தே அரசுக்கு வரி செலுத்தப்படும். அலுவலகம் நட்டத்தில் போனாலும் அந்த முகாமையாளர் வருமான வரி கட்டியே ஆகவேண்டும்.

    அந்த முதலாளியை பொறுத்தவரை சுயநலம் இருக்கலாம். ஆனால் முகாமையாளர் சட்டத்தில் சுயநலம் இருக்கவே இருக்காது.... காரணம் அலுவலக சட்டத்தில் முகாமையாளரும் ஒன்று தான். அங்கு இருக்கும் எழுதுவினைஞரும் ஒன்று தான். நீங்கள் அலுவலகத்திற்காக வேலைசெய்கிறீர்களே தவிர அந்த முதலாளிக்காக அல்ல...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #20
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    இது கொஞ்சம் சிக்கலான விஷயம் இது பற்றி தொழிலாளர் நலச்சட்டம் அறிந்தால் மட்டுமே இது பற்றி அணுகமுடியும். எல்லா தொழிலாளர்களும் ஒன்று தான் என்று நாம் ஒருவர் கூறுவது பிரச்சினை இல்லை. நிறுவனர் நினைக்கமாட்டார். தவிர இது பொதுவான ஒன்று. ஒருவர் சார்ந்த நிறுவனத்தை மட்டும் குறித்து வாதிடுவது அல்ல. ஒப்பீடே தவறானதுதான்.

    எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் தொழிலாளர் அல்லது தனிநபர் விஷயங்களுக்கு விரோதமாக இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் அரசுக்கு கீழ் இயங்குபவர்தான் நிறுவனர் மற்றும் நிறுவனங்கள். அத்தியாவசப் பணி, சிறு, குறுந் தொழில் என ஒவ்வொன்றிற்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது அனைத்துமே தொழிலாளருடையை உரிமையை குறைப்பதாக இருக்காது.

    பெரிய நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் உண்டு. அங்கு எப்படியோ? இங்கு இது மாதிரி விஷயங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் செயலை மறைமுகமாக கண்காணிக்கிறீர்கள் என்றாலே அவர் மீது சந்தேகம் எழுகிறது? அப்புறம் எப்படி அவரை வைத்து வேலை வாங்க முடியும்? அப்படி கண்ணாகாணிக்கின்ற அளவுக்கு மிக அதி நவீன பொருட்கள், பேராயுதங்கள் இருப்பதாக இருந்தால் தொழிலாளர் நல ஆய்வாளரின் அனுமதி பெற்றுத்தான் கண்காணிக்க முடியும்.

    ஒருவரின் அனுமதி இல்லாமல் எந்த ஒருவரின் அந்தரங்கத்தை ஆராய எவருக்கும் அனுமதி இல்லை. அப்படி சந்தேகம் இருப்பின் பணியிலிருந்து நீக்கிவிடலாமே என்று தான் அரசு கூறும். அதைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். இங்கு அது போல் ஆராய்வதில்லை. ஒருவரின் பெயருக்கு வந்த கடிதத்தை எப்படி இன்னொருவர் பிரிக்க உரிமை அல்லையோ அதுபோலத்தான். இதுவும்,

    அவர் மட்டுமே அங்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்கிறார். அந்த எட்டு மணிநேரம் அனைத்தையும் துறந்துவிட்டு வந்துவிடுங்கள் என்று எந்த நிறுவனமும் கூற முடியாது. அவர் ஒருவருக்காக எதற்காக உழைக்கவேண்டும். இந்த பணி இல்லை என்றால் இன்னொரு பணி குடும்பம், குழந்தைகள் நிரந்தரமானது. அதை எப்படி மாற்றிக்கொள்ள முடியும்.

    அலுவலக கணிணியை பயன்படுத்த இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்று நிர்வாகமே ஒருவிதியை உருவாக்கி விட்டால் முடிந்தது. (அதற்காக சட்டத்தை கையிலெடுக்க கூடாது. வேண்டுமானால் பணிநீக்கம் செய்யுங்கள். அவ்வளவு பெரிய குற்றம் என நினைக்கும் பொழுது அது தான் சரி. இப்படி செய்வது சரியல்ல. நித்யானந்தர் விடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதையே அந்தரங்கம் என்ற விமர்சனம் எழுகிறது. இது ஒருவரின் ரகசியங்கள் அடங்கியது. இதை எப்படி பார்க்கமுடியும். இது அந்தரங்கம் இல்லையென்றால் அலுவலகத்தில் உள்ளவற்றை வெளியில் தருவதும் தவறில்லை. குற்றத்திற்கு குற்றம் சரி என்றாகிவிடும்.

    சொல்லி சொல்லி பார்த்தேன் கேட்கவில்லை ஆகையால் நானே இரண்டு அடி அடித்துவிட்டேன் என்று சொன்னால் காவல்துறை விட்டுவடுமா? அவரை விட்டு விட்டு சட்டத்தை கையில் எடுத்தவரின் மேல்தான் நடவடிக்கை எடுக்கும்) அதை விட்டு அவர் மனைவிக்கு, குழந்தைக்கு, காதலிக்கு எழுதும் மின்னஞ்சல்களை எல்லாம் பார்ப்பதை எந்த சட்டமும் அனுமதிக்காது. இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் குறிப்பிட்டவை அனைத்துமே இந்திய தொழிலாளர் நலச்சட்டம் மற்றவை பற்றித் தெரியாது. இங்கு அனுமதிப்பது கிடையாது.

    இது வாதமல்ல இங்கு சட்டத்தின்படி இது தவறாகத்தான் பார்க்கப்படும். அதை முழுவதும் படித்தால் மட்டுமே இதை புரிந்து கொள்ளமுடியும். நாம் சட்டத்தை மாற்றமுடியாது.

    இது இங்கு குற்றம். அங்கு எப்படியோ தெரியாது. அலுவலக மின்னஞ்சலையே இன்னொருவர் பார்ப்பது கூடாது. தனிநபர் அஞ்சலை பார்ப்பது இன்னும் தவறு தான்.

    //செய்யாதே என்று சொல்லிவிட்டு விதி மீறுபவர்களை//

    அதுதான் இங்கே இணையக்குற்றமாக மாறிவிடும். அங்கே எப்படியோ தெரியாது. ஒருவர் அந்தரங்கத்தை பார்ப்பது. அவர் கிரிடிட் கார்ட் விஷயங்களை அனுப்புவார், பணவிஷயங்களை தன்மின்னஞ்சலில் அனுப்புவார், எவ்வளவோ இருக்கும்.... இது தவறு, குற்றம், காவல்துறையினர் பிடித்திருக்கிறார்களே. சிலவற்றை பொதுவில் வைத்து ஞாயபடுத்த முடியாது. மறைமுகமாக நிறுவனர் செய்தால் யாருக்கும் தெரியப்போவதில்லை. அவர் நாளைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நிறுவனர் மேல்தான் குற்றம் சுமத்தப்படும். அதற்கு உடந்தையாக இருந்தவரும் பாதிக்கப்படுவார். இங்கு அப்படி. அங்கு தெரியவில்லை.

    நிதி நிறுவனம் நடத்துபவர் யாரோ? அவர் தலைமறைவாகிவிட்டார், மாட்டுவது யார்? அங்கு பணிபுரிபவர்கள் தான்....நான் வேலை பார்த்தேன் முதலாளி தான் காரணம் என்றாலும் இப்போதைக்கு உள்ளேயிருங்கள் என்று அவருடைய தகவல்களை இவர்களின் மூலம் தான் திரட்டுவார்கள்.

    பொதுவாக இங்குள்ளதின் படி குறிப்பிட்டது. இங்கு பிறிரின் மின்னஞ்சலை எல்லாம் அனுமதியில்லாமல் பார்க்கமுடியாது. குற்றம். அப்படி யாராவது பார்த்தார்களேயேனால் புகார் செய்யலாம். அந்த நிறுவனத்தின் மீதும், நிறுவனர் மீதும் சேர்த்து.

    கண்காணிப்பு, சோதனை, இதெல்லாம் காவல்துறைக்கு, புலனாய்வுக்குட்பட்டவைகள் இதையும் முறையாக நீதிமன்ற ஆணையைக்கொண்டே ஒருவருடைய அந்தரங்கத்தை சோதனை செய்ய முடியும் இது அத்தனையும் தொலைக்காட்சியிலும் வங்கி முகவர்களுக்கே அறிவுறுத்தப்பட்டது. அரசு, அரசு சாரா வங்கியாளர்கள் ஒத்து கொண்டனர். மற்றவர் எவருக்கும் இந்த அதிகாரங்கள் இல்லை என்பது தான் இங்குள்ள சட்டம். மற்ற இடங்களில் எப்படியோ?
    Last edited by nambi; 14-05-2010 at 01:02 PM.

  9. #21
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by nambi View Post
    ஒருவரின் அனுமதி இல்லாமல் எந்த ஒருவரின் அந்தரங்கத்தை ஆராய எவருக்கும் அனுமதி இல்லை. அப்படி சந்தேகம் இருப்பின் பணியிலிருந்து நீக்கிவிடலாமே என்று தான் அரசு கூறும். அதைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். இங்கு அது போல் ஆராய்வதில்லை. ஒருவரின் பெயருக்கு வந்த கடிதத்தை எப்படி இன்னொருவர் பிரிக்க உரிமை அல்லையோ அதுபோலத்தான். இதுவும்..................
    முதலில் ஒருவிடையத்தினை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட அல்லது சொந்த மின்னஞ்சலையோ உங்கள் அலைபேசியையோ உங்கள் வீட்டு தொலைபேசியையோ எவரும் ஆரையவில்லை. அவ்வாறு ஆரையவும் முடியாது. உங்கள் மின்னஞ்சல் என்றால் எவராலும் அது முடியாது. (அரசாலும்...)

    உங்களின் அந்தரங்கம் ஏன் அலுவலக மின்னஞ்சலில் அல்லது தொலைபேசியில் வரவேண்டும்??? அதற்கு காரணம் என்ன??? உங்கள் அந்தரங்கத்தினை அலுவலக ரீதியில் கொண்டு சென்றது அலுவலகத்தின் தவறா?? இல்லை உங்களின் தப்பா??? அலுவலகத்திற்கு உங்கள் சொந்த கடிதத்தினை ஏன் வரவைக்கிறீர்கள்.


    Quote Originally Posted by nambi View Post
    அலுவலக கணிணியை பயன்படுத்த இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்று நிர்வாகமே ஒருவிதியை உருவாக்கி விட்டால் முடிந்தது.

    (அதற்காக சட்டத்தை கையிலெடுக்க கூடாது. வேண்டுமானால் பணிநீக்கம் செய்யுங்கள்.

    நீங்கள் எனது முந்திய பதிவுகளை முழுமையாக படித்தீர்களா... உங்கள் தொழிலாளர் ஒப்பந்தத்தில் இதுபற்றி கூறியிருப்பார்கள் என்று கூறினேனே.... (Employee Job contract )

    அவரை வேலையிலிருந்து நீக்கினால் மட்டும் போதுமா இல்லையா என்பது அவர் செய்த குற்றத்தினை பொறுத்தது. ஒரு ரெண்டர் இன் தொகையை எதிராளி கம்பனிக்கு வழங்கினால் மாலை போட்டு போனஸா வழகுவீர்கள் போல இருக்கே...

    அதுக்காக சட்டத்தை கையில் எடுப்பதென்று யாரும் சொல்லவில்லை. அதிகபட்சம் காவல்துறைக்கு புகாரளிப்பார்கள். உங்கள் கதையை கேட்டால் லைட் போஸ்டில் கட்டிவைத்து பச்சை மட்டையால் அடிப்பது போன்றும் குற்றம் செய்த தொழிலாளி வடிவேலு போல் அழுவார் என்பது போல் உள்ளது.

    ----------------

    அடிப்படையில் நீங்கள் இந்த திரியில் திரியை ஆரம்பித்தவர் கேட்ட கேள்விக்கான காரணம் உங்களுக்கு புரியவில்லை. அவர் உங்களது தனிப்பட்ட மின்னஞ்சலை ஆராய விரும்பவில்லை.

    தண்டனை என்பது நீங்கள் நினைப்பது போல் சொல்லி பார்த்து போதா கட்டத்தில் கன்னத்தில் அறைவது போல் அல்ல. தண்டனை வேறு பட்ட வகையில் இருக்கலாம். தற்காலிக பணிநீக்கம். நிரந்தர பணிநீக்கம். பணிநீக்கத்துடன் கூடிய காவல் துறை புகார். இவ்வாறு எப்படியும் இருக்கலாம்.

    இன்றும் கூட அவுஸ்திரேலியாவில் பெரிய கசமுசா...

    மிக பிரபலமான வங்கியான ANZ வங்கியில் கீழ்மட்டத்தில் வேலைசெய்யும் 14 ஊழியர்கள் (சீன தேச) போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு ANZ வங்கியின் மின்னஞ்சலை உபயோகித்திருக்கிறார்கள். அதை கண்டுபிடித்ததே இணைய சேவையை கண்காணிக்கும் பிரிவு தான். (அலுவலக) தற்போது அந்த 14 பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்....

    காலையில் ABC melbourne வானொலியில் அறிவிப்பாளர் அந்த முகாமையாளர் கேட்ட கேள்விகள் இது தான். எவ்வளவு காலமாக இது நடைபெற்றுள்ளது என்று. அவர் நீண்டகாலம் என்றதும் அடுத்த கேள்வி இவ்வளவு காலமும் உங்கள் இணைய மின்னஞசல் சேவையை கண்காணிக்கும் பிரிவு என்ன செய்தது என்பது தான். அடுத்த கேள்வி இவர்கள் அலுவலக தொலைபேசியையும் இவ்வாறான துஷ்பிரயோகம் செய்துள்ளார்களா என்று விசாரித்தீர்களா என்பதற்கு அது தான் இப்போது நடைபெறுகிறது என்றார்...

    செய்தது சட்டவிரோதமோ இல்லையோ... அலுவலக பாவனைகளையும் அலுவலக நேரத்தினையும் உங்கள் சொந்த பாவனைக்கு பாவிப்பது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது சட்டப்படி குற்றம்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #22
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    //அடிப்படையில் நீங்கள் இந்த திரியில் திரியை ஆரம்பித்தவர் கேட்ட கேள்விக்கான காரணம் உங்களுக்கு புரியவில்லை. அவர் உங்களது தனிப்பட்ட மின்னஞ்சலை ஆராய விரும்பவில்லை.//



    தவறான புரிதலுக்கு போகிறது. இங்கு சர்வேதசத்தில் உள்ள சட்ட அமைப்புகளோடு ஒப்புமைபடுத்தியோ அதை விவாதிப்பதோ அல்ல. அவர் கேட்ட கேள்விக்கு விடை கூறப்பட்டு விட்டது. தனிப்பட்ட மின்னஞ்சலை ஆராய முடியாது. அலுலவலகத்திற்காக ஏற்படுத்தியிருக்கும் மின்னஞ்சலை ஒருவர் ஏற்படுத்தி கொடுப்பார் அது ஆராய்வுக்குட்பட்டது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். அதை படிக்கவில்லையா?

    இங்கு தனிநபரின் மின்னஞ்சலை பார்ப்பது தவறா? தவறில்லையா? என்பது மட்டும் தான். அது குற்றமா? குற்றமில்லையா? அதை மட்டுமே கருத்தில் எடுத்து கொள்ளவேண்டும். ஒருவரின் மின்னஞ்சலை அவர் அனுமதியில்லாமல் பார்ப்பது தவறு. இதற்கு அந்த மின்னஞ்சலின் உரிமையாளர் நடவடிக்கை எடுக்க முடியும். இது இங்கு சட்டவிரோதம்.


    இது இங்கு பொதுவாக இங்குள்ள நடவடிக்கைக்கு ஏற்ப வைக்கப்பட்ட கருத்து. இது மேலும் திசை மாறிசெல்கிறது. இதை தாங்கள் ஏற்கவேண்டும் என்பதில்லை. இங்கு இது புகாருக்கு, நடவடிக்கைக்குட்பட்ட விஷயம். திரியை அந்தந்த அலுவலில் சம்பந்தபட்டவர் எழுதியிருப்பார். அதை யூகித்து இங்குள்ளவற்றோடு பொறுத்திதான் எழுத முடியும். இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    தவிற திரியாளர் அவர் அனுபவத்தில் எழுதியிருப்பார், நான் இங்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களோடு பொறுத்தி எழுதுகிறேன் தவறல்ல. அப்படி எழுதவில்லை என்றால் அனைத்து நிறுவனங்களிலும் பார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுவிடும். அதற்காக வைக்கப்பட்ட கருத்து. என்கருத்தில் தவறில்லை. இது இங்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. அதுமாதிரி சம்பவங்களை சந்தித்திருக்கிறேன்.

    நன்றி!

  11. #23
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by nambi View Post
    இங்கு தனிநபரின் மின்னஞ்சலை பார்ப்பது தவறா? தவறில்லையா? என்பது மட்டும் தான். அது குற்றமா? குற்றமில்லையா? அதை மட்டுமே கருத்தில் எடுத்து கொள்ளவேண்டும். ஒருவரின் மின்னஞ்சலை அவர் அனுமதியில்லாமல் பார்ப்பது தவறு. இதற்கு அந்த மின்னஞ்சலின் உரிமையாளர் நடவடிக்கை எடுக்க முடியும். இது இங்கு சட்டவிரோதம்.
    தனிப்பட்ட மின்னஞ்சலை உங்களின் கடவுச்சொல் இன்றி பார்வையிடமுடியாதே... பிறகு ஏன் குற்றம் அல்லது குற்றமில்லை என்ற வாதம் தேவையற்றது....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #24
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    தனிப்பட்ட மின்னஞ்சலை உங்களின் கடவுச்சொல் இன்றி பார்வையிடமுடியாதே... பிறகு ஏன் குற்றம் அல்லது குற்றமில்லை என்ற வாதம் தேவையற்றது....
    கடவுச்சொல்லை பிரவுசரில் சேமிப்பாகியிருந்தால் பார்க்கமுடியும். இன்னும் சில வழிகளில் கடவுச்சொல்லை இணையத்திருட்டின் மூலம் கண்டுபிடித்து பார்வையிடுகிறார்கள். இதையும் படித்திருப்பீர்கள். அதனால் தான் குற்றம். தொழில்நுட்பத்தை நல்லதிற்கும் பயன்படுத்தலாம் இது போன்ற திருடுவதற்கும் பயன்படுத்தலாம்.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •