Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: Google Wave ஒரு அறிமுகம்

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    Google Wave ஒரு அறிமுகம்

    இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.

    அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது ஒரு மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புகின்றேன். நான் அனுப்பியதன் ஒரு பிரதி எனது அஞ்சல் பெட்டியில் தங்கி விடுபதுடன் உங்கள் அஞ்சல் பெட்டிக்கு ஒரு பிரதி வந்து சேர்ந்து விடுகின்றது. நீங்கள் எனக்கு ஒரு பதில் போட்டால் மீள அதில் ஒரு பிரதி எனக்கு வந்துவிடுபதுடன் உங்கள் வழங்கியிலும் ஒரு பிரதி சேமிப்பாகிவிடும்.

    கூகிள் வேவில் இப்படியாக இரண்டு பிரதிகள் இருக்காது. ஒரு மைய வழங்கியில் இருவரது மின்னஞ்சல் விபரங்களும் சேமிக்கப்படும். இருவரும் ஒன்லைனில் இருந்தால் மின்னஞ்சல் அரட்டை போல Real Time இல் நடைபெறும். உதாரணமாக நீங்கள் “அடே நண்பா” என்று தட்டச்சு செய்யும் போது அது எழுத்துக்கு எழுத்து அப்படியே உங்கள் நண்பணின் திரையிலும் தெரியும். சாதாரணமான அரட்டையில் நீங்கள் தட்டச்சிட்டு அனுப்பு எனும் பட்டனை அமுக்கும் வரை அரட்டையில் நீங்கள் என்ன தட்டச்சிட்டீர்கள் என்பதை பார்க்க முடியாது என்பதையும் இங்கு ஞாபகப் படுத்துகின்றேன்.

    அட இம்புட்டுதானா? இதைத்தான் பெரிய பீலாவிட்டு பெரிய பில்ட்டப்பு கொடுத்து பெரிய சத்தம் போட்டார்கள் என்று நீங்கள் கேட்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்க சேர்!

    Robots, Gadgets என இரண்டு விடயங்களை கூகிள் வேவில் சேர்த்திருக்கின்றார்கள். அதன் படி றோபாட்டுக்கள் எனப்படுபவை நீங்களும் உங்கள் நண்பனும் உரையாடும் போது இடையில் வந்து உதவும் ஒரு தானியக்க தொடர்பு. உதாரணத்திற்கு உங்கள் நண்பனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். உங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். இந்த நேரத்தில் றோசி எனும் தானியக்க தொடர்பை உங்கள் உரையாடலில் சேர்த்து மொழிமாற்ற தெரிவுகளை உங்கள் தானியக்க தொடர்பிற்கு சொல்ல வெண்டும். அவ்வளவுதான் உங்கள் நண்பன் ஹிந்தியில் தட்டச்சிட தட்டச்சிட றோசி உங்களுக்கு ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் காட்டுவா. அப்படியே றோசிக்கு நீங்கள் ஒரு முத்தம் வைக்கலாம்.

    கூகிள் வேவ் இடைமுகம்

    இதை விட பலர் ஒன்று சேர்ந்து ஒரு ஆவணத்தை தொகுப்பது எவ்வளவு கடினமான காரணம் என்று சொல்லத்தெரிய வேண்டியதில்லை. இங்கே கூகிள் வேவ் மூலம் பலரும் ஒரே நேரத்தில் ஆவணங்களை தொகுக்கலாம். ஒருத்தர் ஆவணத்தை தொகுத்துக் கொண்டு இருக்கும் போதே மற்ற பயனரும் இவர் என்னதை தொகுக்கின்றார் என்பதை தனது திரையில் பார்க்கலாம். எல்லாம் ஒரு வீடியோ போல ஓடிக்கொண்டிருக்கும்.

    இவ்வாறான பல வசதிகள் கூகிள் வேவில் உள்ளமைந்துள்ளது. எடுத்துக் காட்டிற்கு சில உதாரணங்களை உங்களுக்கு நான் எடுத்து வீசினேன்.
    சில Gadgetகள்

    கூகிள் மப்ஸ் செய்த சகோதரர்களே கூகிள் வேவையும் அறிமுகம் செய்துள்ளனர். கூகிள் மப்சின் வெற்றிக்க்கு காரணம் அதன் Extendability, அதாவது நீட்சிகளை அமைக்க கூடிய தன்மை. அதே மாதிரி இங்கும் API க்களை வழங்கியுள்ளனர். இதனால் நீங்களும் Robots, Gadgets போன்றவற்றை அமைத்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து நீங்கள் அவர்களுடன் அரட்டை அடிக்கும் விதங்களை மாற்றிவிடலாம்.
    உதாரணத்திற்கு இன்று வெள்ளவத்தை லிட்டில் ஏசியா ஹோல்ட்டுக்கு வாடா மச்சான் என்று சொன்னால் என்னைப் போல கொட்டாஞ்சேனையில் இருக்கும் நண்பர்களுக்கு அது என்னவென்று புரியாது. இந் நேரத்தில் ஒரு Google Maps Gadget ஐ எங்கள் அரட்டைக்குள் இழுத்து அந்த வரைபடத்தில் எங்கே லிட்டில் ஏசியா ஹோல்ட் இருக்கு என்று காட்டிவிடலாம். அதாவது நீங்கள் கூகிள் வரைபடத்தை அசைக்கும் போது நண்பனின் கணனியிலும் அது அசைந்தாடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    அடேங்கப்பா… நான் இப்பவே போயி கூகிள் வேவ் என்ன என்று பார்த்துவிட்டு வருகின்றேன் என்று நீங்கள் புறப்படுவது எனக்கு தெரிகின்றது. பொறுமை கண்ணா.. பொறுமை….! கூகிள் இப்போது குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30ம் திகதி சுமார் 100,000 பேரை மட்டும் கூகிள் வேவினுள் கூகிள் அனுமதித்துள்ளது. இதில் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 8 பேரை அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100,000 பேர் 8 பேர் வீதம் 800,000 பேரை கூகிள் வேவிற்கு அழைக்க முடியும். மற்றவர்கள் எல்லாரும் கூகிளிடம் ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.

    புளோரிடாவில் இருக்கும் எனது நண்பன் ஒருவனும் அதிஷ்ட வசமாக கூகிள் அழைத்த 100,000 பேரினுள் ஒருவனாக நுழைந்துவிட்டான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அழுது இரந்து ஒரு அழைப்பிதழை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப செய்துவிட்டேன் ஆனாலும் பாருங்க கூகிள் காரணுக்கு ரொம்பவுமே குசும்பு. அழைப்பு அனுப்பினாலும் அதை உடனே எங்களுக்கு கூகிள் தருவதில்லை. தனது வழங்கிகளின் நிலைமை போன்றவற்றைப் பார்த்து கைமுறையாக ஒன்றோண்றாக அனுப்புகின்றார்களாம். நண்பன் அழைப்பை அனுப்பி இன்றுடன் 3 நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் அழைப்பு வந்து சேரவில்லை. கூகிளில் தேடிப் பார்த்தில் சிலருக்கு அழைப்புகள் 7 நாட்களின் பின்னரும் வந்து கிடைத்திருக்கின்றது.

    அடே மயூரேசா..! எனக்கு புளோரிடாவில் நண்பன் இல்லையடா…! நான் என்ன செய்யவேணும்?? அப்படி கேட்கின்றீர்களா?? அப்படியானால் கூகிள் வேவைப் பயன்படுத்த விரும்பினால் கூகிளிடம் வேண்டுகோள் வைக்கலாம். மற்றய பயனர்களுக்க திறக்க முதல் உங்களை அழைப்பார்கள் என்று நம்பலாம். அல்லது உங்களிடம் நிறைய பணம் இருந்தால் EBay இல் விற்கும் அழைப்புகளை வாங்கலாம். ஆனால் இவ்வாறு அழைப்புகளை ஈபேயில் விற்பது கூகிள் கொள்கைகளுக்கு எதிரானது.

    சரி நீங்கள் கூகிளிடம் வேண்டுகோளை வைத்துவிட்டீர்கள். கூகிள் உங்களை அழைக்கும் வரை கூகிள் வேவ் மாதிரி எதையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கின்றீர்களா?? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் http://pygowave.net. கூகிள் வேவ் அடிப்படை திறந்த மூலமாக கிடைப்பதனால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்து உங்கள் விருப்பத்திற்கேற்ற இடைமுகம் தயாரித்து உங்கள் வேலைத்தளத்திலோ நண்பர்களுடனேயோ பயன்படுத்தலாம். இந்த பைகோவேவ் காரங்களும் அதையேதான் செய்துள்ளார்கள். பைகோவேவ் இன்னமும் அல்பா பதிப்பில் உள்ளதால் பல பிழைகள் உள்ளன அத்துடன் கூகிள் வேவ் போன்று பல வசதிகளும் இங்கு இல்லை. பைகோவேவில் நீங்கள் இணைந்தால் ஒரு புதிய வேவை உருவாக்கி அதில் “Mayooresan” எனும் பயனரையும் இணைத்தால் நான் வந்து டான் என்று நிற்பேன்

    சந்தேகம் இருந்தால் மறுமொழி பகுதியில் கேளுங்கள்.

    1. கூகிள் வேவ் பற்றிய என் ஆங்கிலப் பதிவுகள்.
    2. கூகிள் வேவ் அறிமுகம் – காணோளி (ஆங்கிலம்)
    3. கூகிள் வேவ் API

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கூகிள் அலை குறித்த விமர்சன வீச்சு மிகவும் நன்று மயூ.
    மின்னஞ்சல் அரட்டையில் நாம் தட்டச்சுவது நேரடியாக நண்பரின் கணினியில் தெரியும் என்பது வியப்பாக இருக்கிறது. இது நன்றாக இருந்தாலும் பிழையாக தட்டச்சினால் அதுவும் நண்பரின் கணினியில் தெரியுமே..?

    கூகிள் மின்னஞ்சலை அனுப்புவதில் எந்த உத்தியை அந்த நிறுவனம் கடை பிடித்ததோ அதே உத்தியை இதற்கும் பயன்படுத்துகிறதா..!!ம்ம்.. உங்களுக்கு கூகிள் வேவ் அழைப்பிதழ் அனுப்பும் வாய்ப்பு வந்தால் உடனே எங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்புவீர்கள்தானே..?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஹாட்மெயிலை கொண்டுவந்து சுதீர் பாட்டியா இதுமாதிரி ஒரு மென்பொருளை சில வருடங்களுக்கு முன்பாக பேட்டா வர்ஷனாக கொண்டு வந்தார். நம் மன்றத்தில்கூட இது பற்றி பேசப்பட்டது. நானும் அந்த பேட்டா வர்ஷனை இறக்குமதி செய்து உபயோகித்தேன்.

    சுதீர் பாட்டியாவிடமிருந்து கூகுள் இந்த டெக்னாலெஜியை வாங்கியிருக்கலாம்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அனைவருக்கும் புரியும் வகையில் விரிவாக விளக்கமாக கொடுத்ததற்கு நன்றி மயூ.

    இது ப்ராட்பேண்ட் கனெக்சன் வைத்திருந்தால்தான் சாத்தியமா? இல்லை சாதாரண இணைய வேகத்திலேயே உபயோகிக்கலாமா?

    கூகிள் நல்லா R&D பண்றாங்க.. நல்லா மார்க்கெட்டிங் பண்றாங்க.

    APPLE products மாதிரி ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கி, மக்களுக்கு சீக்கிரம் கிடைக்காவண்ணம் காத்திருக்க வைத்து கொடுப்பது ஒரு நல்ல டெக்னிக்தான் (scarcity என்று சொல்வார்கள்)

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்ல செய்தியைத் தெளிவாக தந்தமைக்கு மிக்க நன்றி மயூ , அத்துடன் நின்று விடாமல் தங்களுக்கு கிடைக்கும் 8 அழைப்பில் ஒன்றை எனக்கு அனுப்பி வைக்கவும்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2009
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    1
    Uploads
    0
    ரொம்ப நன்ராக எழுதியிருக்கிரீர்கள். புரியும்படி இருக்கிரது

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நன்றி நண்பா நானும் அனுமதிகேட்டிருக்கின்றேன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நானும் கேட்டிருக்கிறேன். எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியாது. உங்களுக்கு யாரிடமாவது எக்ஸ்டிரா இன்வைட் இருந்தால் எனக்கும் கொடுத்து உதவுங்கள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by பாரதி View Post
    கூகிள் அலை குறித்த விமர்சன வீச்சு மிகவும் நன்று மயூ.
    மின்னஞ்சல் அரட்டையில் நாம் தட்டச்சுவது நேரடியாக நண்பரின் கணினியில் தெரியும் என்பது வியப்பாக இருக்கிறது. இது நன்றாக இருந்தாலும் பிழையாக தட்டச்சினால் அதுவும் நண்பரின் கணினியில் தெரியுமே..?

    கூகிள் மின்னஞ்சலை அனுப்புவதில் எந்த உத்தியை அந்த நிறுவனம் கடை பிடித்ததோ அதே உத்தியை இதற்கும் பயன்படுத்துகிறதா..!!ம்ம்.. உங்களுக்கு கூகிள் வேவ் அழைப்பிதழ் அனுப்பும் வாய்ப்பு வந்தால் உடனே எங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்புவீர்கள்தானே..?
    எனக்கு அழைப்பிதள் அனுப்பும் தகமையை கூகிள் தந்தவுடன் அனைவருக்கும் அழைப்பு அனுப்புகின்றேன்.

    Quote Originally Posted by aren View Post
    ஹாட்மெயிலை கொண்டுவந்து சுதீர் பாட்டியா இதுமாதிரி ஒரு மென்பொருளை சில வருடங்களுக்கு முன்பாக பேட்டா வர்ஷனாக கொண்டு வந்தார். நம் மன்றத்தில்கூட இது பற்றி பேசப்பட்டது. நானும் அந்த பேட்டா வர்ஷனை இறக்குமதி செய்து உபயோகித்தேன்.

    சுதீர் பாட்டியாவிடமிருந்து கூகுள் இந்த டெக்னாலெஜியை வாங்கியிருக்கலாம்.
    இதை கூகிள் தானே தயாரித்திருக்கின்றார்கள். இந்த செயற்றிட்டம் 2007ல் இருந்து கூகிளில் இரகசியமாக நடந்து 2009ல் வெளியிட்டுள்ளார்கள்.

    Quote Originally Posted by மன்மதன் View Post
    அனைவருக்கும் புரியும் வகையில் விரிவாக விளக்கமாக கொடுத்ததற்கு நன்றி மயூ.

    இது ப்ராட்பேண்ட் கனெக்சன் வைத்திருந்தால்தான் சாத்தியமா? இல்லை சாதாரண இணைய வேகத்திலேயே உபயோகிக்கலாமா?

    கூகிள் நல்லா R&D பண்றாங்க.. நல்லா மார்க்கெட்டிங் பண்றாங்க.

    APPLE products மாதிரி ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கி, மக்களுக்கு சீக்கிரம் கிடைக்காவண்ணம் காத்திருக்க வைத்து கொடுப்பது ஒரு நல்ல டெக்னிக்தான் (scarcity என்று சொல்வார்கள்)
    ஆமாம்.. இப்போதைக்கு இதை மற்றய பயனர்களுக்கும் திறப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஏனெனில் பல பாகங்கள் இன்னும் தயாரிப்பிலேயே உள்ளது.

    இணைய புரோட்பான்ட் இருந்தால்தான் இது சிறப்பாக வேலைசெய்யும்.

    Quote Originally Posted by ஓவியன் View Post
    நல்ல செய்தியைத் தெளிவாக தந்தமைக்கு மிக்க நன்றி மயூ , அத்துடன் நின்று விடாமல் தங்களுக்கு கிடைக்கும் 8 அழைப்பில் ஒன்றை எனக்கு அனுப்பி வைக்கவும்..!!
    அனுப்பும் தகமை கிடைத்தவுடன் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    Quote Originally Posted by rajarajacholan View Post
    ரொம்ப நன்ராக எழுதியிருக்கிரீர்கள். புரியும்படி இருக்கிரது
    நன்றி நண்பரே

    Quote Originally Posted by வியாசன் View Post
    நன்றி நண்பா நானும் அனுமதிகேட்டிருக்கின்றேன்.
    கூகிள் கருணை காட்டவும்.

    Quote Originally Posted by aren View Post
    நானும் கேட்டிருக்கிறேன். எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியாது. உங்களுக்கு யாரிடமாவது எக்ஸ்டிரா இன்வைட் இருந்தால் எனக்கும் கொடுத்து உதவுங்கள்.
    என்னிடம் இன்வைட் பண்ணும் வசதி இப்போது இல்லை. வந்தவுடன் உங்களுக்கு இன்வைட் பண்ணுகின்றேன்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மயூ View Post
    .

    என்னிடம் இன்வைட் பண்ணும் வசதி இப்போது இல்லை. வந்தவுடன் உங்களுக்கு இன்வைட் பண்ணுகின்றேன்.
    நான் இப்பொழுதே ரிசர்வ் செய்துவிட்டேன். எனக்கு கொடுத்துவிட்டுதான் மற்றவர்களுக்கு.

    இப்பொழுதே சொல்லிவிட்டேன். அம்புட்டுதான்!!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தெளிவான தகவல்.. நன்றி மயூ....
    ----------
    அந்த காலத்தில் 1998ல்.. நான் ICQ போன்றவற்றை உபயோகித்தேன்.. அதில் இரு விண்டோக்களில் டைப் பண்ணுவது தெரியும்....

    அது அவர்கள் டைப் பண்ணும்பொழுது பதில் டைப் பண்ண வசதியாக இருக்கும்.

    இவ்வளவு லேட்டாக கூகுள் அறிமுகப்படுத்துவது.... ஏன் எனத்தெரியவில்லை...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by aren View Post
    நான் இப்பொழுதே ரிசர்வ் செய்துவிட்டேன். எனக்கு கொடுத்துவிட்டுதான் மற்றவர்களுக்கு.

    இப்பொழுதே சொல்லிவிட்டேன். அம்புட்டுதான்!!!!
    நிச்சயமாக ஆரன் அண்ணா..

    Quote Originally Posted by அறிஞர் View Post
    தெளிவான தகவல்.. நன்றி மயூ....
    ----------
    அந்த காலத்தில் 1998ல்.. நான் ICQ போன்றவற்றை உபயோகித்தேன்.. அதில் இரு விண்டோக்களில் டைப் பண்ணுவது தெரியும்....

    அது அவர்கள் டைப் பண்ணும்பொழுது பதில் டைப் பண்ண வசதியாக இருக்கும்.

    இவ்வளவு லேட்டாக கூகுள் அறிமுகப்படுத்துவது.... ஏன் எனத்தெரியவில்லை...
    இது நமக்குப் புது தகவல்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •