Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

    மின்னஞ்சலில் வந்தது
    நன்றி மன்மதன்...

    (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?



    1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)
    திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
    பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

    2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
    கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா
    காட்டவும்.

    3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
    உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

    4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
    நகத்தையும் கடித்து வையுங்கள்.

    5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்
    நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

    6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள்
    எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை
    எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

    7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான
    விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

    8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.
    அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

    9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
    பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
    நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

    10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
    நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்
    செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

    11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு
    பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று
    சொல்லிக்கொள்ளலாம்.

    12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
    நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
    போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

    13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து
    வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,
    மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

    14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது
    போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும்
    நெடுக்கும் நடங்கள்.

    15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
    இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.
    போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

    16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
    மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி
    குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

    17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி
    கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால
    நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

    18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை
    மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்
    நமக்காக யார் பேசுவார்கள்?

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    ஹா ஹா...

    எல்லாம் சர்தான்...

    என்னைப்போல ஆசிரியர்கள் எப்படி பிசியாக காட்டிக்கொள்வதாம்...?

    -யோசனையுடன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஆசிரிய பணி தான்... அதிக விடுமுறை நாட்கள் கிடைக்கும் பணி.

    பையன்களை ஏதாவது படிக்க சொல்லிவிட்டு தூங்கலாமே.
    P.Ed வகுப்பாக மாற்றிவிட்டு அவர்களை விளையாட சொல்லலாம்.
    Moral Instruction எனச் சொல்லிவிட்டு மாணவர்களை ஒரு தலைப்பின் கீழ் பேசச்சொல்லி... நீங்க ஓய்வு எடுக்கலாம்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஹ்ஹ்ஹ்ஹா!

    மணிமணியான யோசனைகள்...

    நீங்கள் எப்படி அறிஞரே?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அறிஞர் இவ்வாறு செய்ய இயலாது...
    அவர் செய்யக்கூடியது...

    செத்தபாம்பு தவளை ஓணான் போன்றவற்றை ஒரு பெரிய பொல்லாங்கட்டையால் அடித்துக்கொண்டே இருக்கலாம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஹா, ஹா..!!

    எப்படி இப்படி க்ரீட்டாக எல்லா டெக்னிக்ஸையும் பிடிச்சாங்களோ...??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    ஹா ஹா...

    எல்லாம் சர்தான்...

    என்னைப்போல ஆசிரியர்கள் எப்படி பிசியாக காட்டிக்கொள்வதாம்...?

    -யோசனையுடன்
    ஆசிரியர்களுக்கு இது ரொம்ப சுலபமாச்சே கலை, உதாரணத்துக்கு;

    1. நான் பிசியாக இருக்கேன், மாணவர்களெல்லாம் சமர்த்தா உங்களுக்கு பிடிச்ச எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிங்கனு சொல்லிட்டு, நீங்க மேசை, நாற்காலியில் அமர்ந்து பாவ்லா காட்டலாம் (பிசியாக இருப்பது போலத்தான் )
    2. அடிக்கடி மாணவர்களிடம் ஹெட் மாஸ்டர் ஆபிஸுக்கு போய் வரேன், சமர்தா இருங்கனு சொல்லிட்டு பள்ளி வளாகத்தை வேகமாக ரவுண்ட் அடிக்கலாம்
    3. பாடம் நடாத்திக் கொண்டிருந்து விட்டு, இடையில் மன்னியுங்க பிள்ளைகளா எக்சாமுக்கு கேள்விகள் தயாரிக்கணும் இன்னிக்கு படிச்சது போதும்னு சொல்லிட்டு நீங்க ஒரு புத்தகத்தைத் தூக்கிட்டு ஓய்வறைக்குப் போயிடலாம்.
    4. பாடம் நடாத்திக் கொண்டிருக்கையில் இடையே எதோ யோசனையுடன் எங்காவது போய் வருவது போல கேண்டீனுக்குப் போய் வரலாம். (வழியில் யாரும் பார்த்தால் அதிகாலையில் ஸ்பெசல் கிளாஸ் வைச்சதனால் ஒழுங்காக டிபன் சாப்பிடலைனு கவலைப்பட்டுக் கொள்ளலாம்.
    5. வார விடுமுறை நாட்களில் ஸ்பெசல் கிளாஸ் வைக்கப் போறேனு ஹெட் மாஸ்டர் கிட்டே அனுமதி எடுத்திட்டு, வார விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பசங்களோடு ஒரு அரைமணி நேரம் ஜாலியாகப் பேசிட்டு, அவங்களோடயே இன்னும் ஒரு அரைமணிநேரம் ஜாலியாக விளையாடிட்டு எல்லாரும் ஒண்ணாகவே வீடு திரும்பலாம்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    கலை அண்ணன் தயவில் நமக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே... நன்றி கலை அண்ணா (ஆனா என்னோட மானவிகளை ஏமாற்றுவது ரொம்ப சிரமமாச்சே)



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  9. #9
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    கலை உனக்காக ஓவியன் கொடுத்திருக்கும் யோசனைகள் பார்த்தியா??

    திங்கட் கிழமையில் இருந்து இதை செயல்படுத்துப்பா...

    ஓவியன் உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா..
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  10. #10
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    கலை அண்ணன் தயவில் நமக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே... நன்றி கலை அண்ணா (ஆனா என்னோட மானவிகளை ஏமாற்றுவது ரொம்ப சிரமமாச்சே)
    கவலை வேண்டாம் மகாபிரபு.. உங்களுக்கு யோசனைகளை கலை தருவார்
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    தொழில் ரகசியமெல்லாம் வெளி வந்து விட்டதா.... இங்கே பகிர்ந்து கொண்டது முலம் பல டிப்ஸ் உறவுகள் முலம் வர வைத்த அறிஞருக்கு நன்றி

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஆஹா.. இதில அரைவாசிய நாங்க இப்ப செய்துகொண்டுதான் இருக்கமாக்கும்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •