Results 1 to 6 of 6

Thread: தமிழ் இடைமுகத்துடன் (Interface) ஹொட்மெயில், லைவ்மெயில்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    தமிழ் இடைமுகத்துடன் (Interface) ஹொட்மெயில், லைவ்மெயில்

    கடந்த முறை பதிப்பில் லைவ் மெசஞ்சர் தமிழில் வந்துள்ளமை பற்றி நான் எழுதியிருந்தேன். இம்முறையும் அதனுடன் தொடர்புபட்ட ஹொட்மெயில், லைவ் மெயில் என்பன தமிழில் வெளிவந்துள்ள விடயம் பற்றி அலசிப் பார்ப்போம்.

    ஹொட்மெயில் ஆரம்பத்தில் ஒரு இந்தியரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தவேளையில் அதனைமைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிக்கொண்டது. பின்னர் ஹொட்மெயில் இணையபயனர்களிடையே பேராதரவுபெற்ற இணைய மின்னஞ்சல்சேவையாகத் திகழ்ந்தது. பின்னர் ஜிமெயில் வந்தவுடன் நிலமைகள் மாறத்தொடங்கியது.

    பல பேர் வேகமாக ஜிமெயிலுக்கு மாறத் தொடங்கினர். ஜிமெயிலின் வெற்றிக்கு காரணம் 1GB சேமிப்பிடம் வழங்குவோம் என்று வாக்களித்தமையுடன் எளிமையான இடைமுகத்தையும் (Interface) வழங்கியமையே ஆகும்.

    இதன்பின்னரும் பல மின்னஞ்சல் சேவைகள் பாவனைக்கு வந்தாலும் ஜி-மெயில் போல எந்த ஒரு மின்னஞ்சல் சேவையும் வெற்றி பெறவில்லை. ஏற்கனவே சந்தையில் இருந்த யாகூ, ஹொட்மெயில் போன்றோரும் சேமிப்பிடத்தை அதிகரித்து தம்மை விட்டு ஓடும் பயனர்களைக் காத்துக்கொண்டனர்.

    முதல் கட்டமாக இவ்வாறு வசதிகளை வழங்கி மக்களைக் கவர்ந்தவர்கள் பின்னர் மெல்ல மெல்ல பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை வழங்கி மக்களைக் கவர முற்பட்டனர். இந்த இலவச மின்னஞ்சல் சேவை வழங்குனர்களிடையே போட்டி அதிகரிக்க அதிகரிக்க பாவனையாளர்கள் அதிகளவு பயனை இலவசமாகப் பெற்றனர்.

    நான் அறிய முதலில் தமிழ் இடைமுகத்தை வழங்கியது வெப்துணியா மெயில். அதன் பின்னர் esrilanka.lk தமிழ், சிங்களம், ஆங்கில இடைமுகத்துடன் இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கியது.

    இந்த சேவைகள் தமிழில் வழங்கப்பட்டாலும் இவற்றினால் ஜிமெயில் போன்ற சேவைகளுடன் போட்டிபோட முடியாது. ஏன் எனில் ஜிமெயிலில் வழங்கப்படும் சேவைகளில் பாதிகூட இங்கு இருக்காது. இந்த தமிழ் இடைமுக சேவைகளில் அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கியிருப்பர்.

    இந்தவேளையில்தான் முதன்முதலாக ஹிந்தி இடைமுகத்தை கூகிள் ஜிமெயிலுக்கு வழங்கியது. இதைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்களும் ஆர்ப்பரித்தனர்காரணம் அடுத்த்தாக வரிசையில் தமிழ்வரக்கூடும் எனும் காரணமே.
    ஆயினும் ஆண்டுகள்மேல் ஆண்டுகள் ஓடியும் ஜிமெயில் தமிழ் இடைமுகத்தை வழங்கவில்லை. இதனால் தமிழ்கணனி ஆர்வலர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சில வருடங்களின் பின்னர் மெல்ல மெல்ல கூகிள் தன் தயாரிப்புகளை ஹிந்தி தவர்ந்த பல இந்திய மொழிகளில் வெளியிடத் தொடங்கியது. இக்காலகட்டத்தில்தான் ஓர்கூட், கூகிள்டாக்ஸ் போன்ற சேவைகள் தமிழில் அறிமுகம் ஆகியது.

    அப்போதுகூட பல தமிழ் ஆர்வரலர்களும் ஜிமெயில் தமிழில் எடுப்பதை விட்டுவிட்டு மற்றதயாரிப்புகளை தமிழுக்கு மாற்றுவது முட்டாள்தனமானவேலை என்று பொரிந்து தள்ளினர். திடீர் என ஒரு நாள் ஜிமெயில் தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டது.

    அன்றய தினத்தில் பலரும் கூகிளைப் பாராட்டி மகிழ்ந்தமையும், கணித்தமிழ் இணைய உலகில் பலம் பெற்றுதிகழ்வதற்கு இது ஒரு உதாரணம் எனவும் மக்கள் ஆர்ப்பரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து யாகூ மெயில் தமிழில்வரும் என்று எதிர் பார்த்தாலும் வழமை போல யாகூ தமிழர்களை ஏமாற்றிவிட்டது. ஆனால் மைக்ரோசாப்ட் தன்னுடைய ஹோட்மெயில், லைவ்மெயில் சேவைகளை தமிழில் வழங்கி தமிழர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.

    தமிழ் இடைமுகத்தை லைவ் மெயிலில் அல்லது ஹோட்மெயிலில் பெற்றுக்கொள்ள முதலில் அவர்களின் மின்னஞ்சல் சேவைக்குள் புகுபதிகை செய்யவும்.

    பின்னர் இங்குள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Options என்பதை சொடுக்கவும்



    பின்னர் English என்பதைசொடுக்கவும்.

    பின்னர் காட்டப்படும் மொழிகளில்தமிழ்என்பதை தெரிவு செய்யவும்.

    இதன் பின்னர் நீங்கள் அருமையான தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய இலத்திரணியல் உலகில் தமிழ்மொழி பல்வேறு துறைகளிலும் கோலோச்சுகின்றது. ஆயினும் மேலும் தமிழ் வியாபிக்க வேண்டிய துறைகள் இடங்கள் இருக்கின்றன.

    இந்த தமிழ் இடைமுகத்துடன் கூடிய வலைமனைகளை வாசித்து அறிய முடியவில்லை என்று குறை கூறம் பல நண்பர்கள் தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதையும் பலர் ஆங்கிலம் தெரியாமல் இருப்பதையும் மறந்து விடுகின்றனர். தமிழ் மட்டுமே தெரிந்த இணையப்பயனர்கள் உருவாகும்போது இவ்வாறான தமிழ் இடைமுகங்கள் பெரும் பங்காற்றும்.

    தமிழரான நாங்களே இவ்வாறான முயற்சிகளில் பங்களிக்காது விட்டால் வேறு யார் இந்த தமிழ் இடைமுகங்களைப்பாவிப்பர்???? நான் ஏற்கனவே ஜிமெயில், ஹொட்மெயிலில் தமிழ் இடைமுகங்களையே பாவிக்கின்றேன். சில நாட்கள்புரியாமல் இருந்தாலும் போகப்போக பழக்கமாகி விடுவதுடன் நன்கு பரீச்சயமாகியும் விடுகின்றது.

    தமிழைத் தமிழாய் இணையத்தில் பயன்படுத்துவோம்!!!!
    Last edited by அமரன்; 03-04-2009 at 08:36 AM. Reason: பக்கச்சீரமைப்பு

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இலவசமாய் பயனை அனுபவிக்கிறோம்.. வாழ்த்துவோம்..

    தகவல்களுக்கு நன்றி மயூ..

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல சேதிக்கு நன்றி மயூ. இப்போது இணையத்தில் தமிழை உபயோகப்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், தமிழர்களைக் கவர அனைத்து மின்னஞ்சல் வழங்குனர்களும் போட்டி போடுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழுக்கும் நமக்கும் இது நல்லதே.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஆமாம் தமிழர் அனைவரும் பெருமையும் இறுமாப்பும் கொள்ளக்ககூடி செய்தி.. நன்றி அறிஞர் மற்றும் பாரதி அண்ணா

  5. #5
    புதியவர் பண்பட்டவர் tkpraj's Avatar
    Join Date
    17 Oct 2007
    Location
    சென்னை
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    1
    Uploads
    0
    மயூ அவர்களுக்கு நன்றி!
    நல்ல தகவல்!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    தமிழரை ஒடுக்க ஆரம்பிக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் தான் இன்று உலகளவில் இணையத்தில் தமிழ் பாவனையாளர்களை கூட்டியுள்ளது என்று நான் கருதுகின்றேன்......

    தீமையால் விளைந்த நன்மை இது!

    அடுத்து மயூ கடைசியில் சொன்ன விடயம் மிக மிகச்சரியானது...... நமக்கு ஆங்கிலம் தெரியும் என்பத்ற்காகாக ஆங்கிலத்தை மட்டும் பாவிப்பதை தவிர்த்து தமிழிலுள்ளவற்றை நாம் தமிழில் பாவிக்க தொடங்குவது மிக்க நல்ல விடயம்!!!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •