Results 1 to 10 of 10

Thread: விண்டோஸில் ஒருங்குறித்தமிழ்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up விண்டோஸில் ஒருங்குறித்தமிழ்

    விண்டோஸில் ஒருங்குறித்தமிழ்

    அன்பு நண்பர்களே,

    நாம் அனைவரும் பொதுவாக தமிழில் தட்டச்ச எ-கலப்பை, முரசு அஞ்சல், ரைட்டர் போன்ற பல மென்பொருட்களை உபயோகித்துதான் தட்டச்சுகிறோம் அல்லவா..? சில நண்பர்களுக்கு அவர்களது பணி செய்யும் இடத்தில் இத்தகைய மென்பொருட்களை நிறுவுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்கக்கூடும்.

    புதிய மென்பொருட்கள் எதையும் நிறுவாமலேயே விண்டோஸிலேயே ஒருங்குறி(unicode)-த் தமிழில் தட்டச்ச வழி இருக்கிறது என்பதை ஒரு சிலர் அறியாமல் இருக்கக்கூடும். அவர்களுக்காகவும் புதிய யுனிகோட் ஒருங்குறி முறையில் தமிழைத் தட்டச்சி மன்ற உறவுகள் பழக வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே இப்பதிவு.


    1. ஸ்டார்ட் (Start) பொத்தானை அழுத்துங்கள்.


    2. கண்ட்ரோல் பேனலுக்கு (Control Panel) செல்லுங்கள்.


    3. "ரீஜனல் அண்ட் லாங்குவேஜ் ஆப்ஷன்ஸ்" (Regional and Languages Options) ஐகானை சொடுக்குங்கள்.


    4. அதில் "லாங்குவேஜஸ்"(Languages)- ஐ தேர்ந்தெடுங்கள்.


    5. "சப்ளிமெண்டல் லாங்குவேஜ் சப்போர்ட்" (Supplemental Language support) பகுதியில் "இன்ஸ்டால் காம்ப்ளெக்ஸ் ஸ்கிரிப்ட் அண்ட் ரைட்-டூ-லெஃப்ட் லாங்குவேஜஸ் (இன்க்ளூடிங் தாய்)" - (Install files for comples script and right-to-left-languages (including Thai) என்பதை தேர்வு செய்யவும்.


    6. "அப்ளை" (Apply) பொத்தானை அழுத்துங்கள்.


    7. தேவையான எழுத்துருக்கள் தானாக நிறுவப்படும் (சில கணினிகளுக்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் சி.டி.(Windows Installation CD) தேவைப்படலாம். ஆகவே அருகில் வைத்திருங்கள்).


    8. எழுத்துருக்கள் நிறுவப்பட்ட பின்னர் "கணினியை நிறுத்தி, இயக்கவா" என்ற அறிவிப்பு புதிய பெட்டிச்செய்தியில் வரும். அதில் "நோ" (NO) என்ற பொத்தானை அழுத்துங்கள்.


    9. இப்போது டெக்ஸ்ட் செர்வீசஸ் அண்ட் இன்புட் லாங்குவேஜில் (Text Services and input languages) இருக்கும் "டீடெய்ல்ஸ்" (Details) பொத்தானை அழுத்துங்கள்.


    10. "இன்ஸ்டால்டு டிவைசஸ்" (Installed devices) பகுதியில் "ஆட்" (Add) பொத்தானை அழுத்துங்கள்.


    11. "இன்புட் லாங்குவேஜ்" (Input language) என்பதில் "தமிழ்" (Tamil) என்பதை தேர்ந்தெடுங்கள்.


    12. "கீ போர்ட் லே அவுட் / ஐ.எம்.ஈ" (Keyboard layout/IME) என்பதை தேர்வு செய்து அதிலும் "தமிழ்" (Tamil) என்பதை தேர்வு செய்யுங்கள்.


    13. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.


    14. இப்போது புதிய தமிழ் விசைப்பலகை நிறுவப்பட்டிருப்பதை உங்களால் காண இயலும்.


    15. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.


    16. "அப்ளை" (Apply) மற்றும் "ஓக்கே" (OK) பொத்தான்களை அழுத்துங்கள்.


    17. கணினியின் இயக்கத்தை நிறுத்தி (Restart Computer) மீண்டும் இயக்குங்கள்.


    18. டாஸ்க் பாரில் (Task bar) "EN" என்ற எழுத்து இருப்பதைக் காணுங்கள்.


    19. லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துவதன் மூலம் தமிழ் விசைப்பலகைக்கு மாற முடியும். தமிழ் விசைப்பலகைக்கு மாறியுள்ளது எனில் டாஸ்க் பாரில் (Task bar) "TA" என்று எழுத்துக்கள் மாறி இருப்பதைக் காணலாம். மீண்டும் ஆங்கில விசைப்பலகைக்கு மாற வேண்டுமெனில் மீண்டும் லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துங்கள்.


    19. தற்போது நம்மால் ஒருங்குறி தமிழில் (Unicode Tamil) தட்டச்ச இயலும். (இந்த வகை தமிழ் ஒருங்குறி ஃபோனடிக் தட்டச்சு முறையில் இல்லை என்பதை கவனிக்கவும்)


    20. எந்த விசைக்கு என்ன எழுத்து என்பதை காண வேண்டுமெனில் ஸ்டார்ட் ( Start ) - ரன் (Run)-க்கு செல்லுங்கள்.


    21. பெட்டியில் ஓஎஸ்கே (osk)-என்பதை அடைப்புக்குறிகள் இல்லாமல் தட்டச்சி, "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள். (On Screen Keyboard என்பதின் சுருக்கம்தான் osk).


    22. இப்போது திரையில் விசைப்பலகையை காண இயலும். நாம் தேர்வு செய்திருக்கும் விசைப்பலகைக்கேற்ப இந்த திரை விசைப்பலகையில் எழுத்துருக்கள் காணப்படும்.


    23. திரை விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களையும் அவ்விதம் காண இயலும். ஷிஃப்ட் விசையை அழுத்தினால் தமிழ் எழுத்துருக்கள் மாறுவதையும் காண முடியும்.


    24. முதலில் இவ்விதம் புதிய முறையில் தட்டச்சி பழகுவது சிரமமான காரியம் என்றாலும் நாளடைவில் இது மிகவும் எளிதானது என்பதைக் கண்டு கொள்ள முடியும்.

    இவ்வகையில் தட்டச்சுவதில் பல நன்மைகளும் இருக்கின்றன.

    எவ்விதம் தமிழ் ஒருங்குறிக்கு மாற்றுவது என்பதை இங்கே தட்டச்சி விளக்கி இருப்பதை யூடியூப்-(YouTube)பில் அசை படமாக (Flash video) நேரே காணலாம்.


    சுட்டி: [media]http://www.youtube.com/watch?v=vOx5qz9S6W8[/media]


    இங்கு தரப்பட்டிருக்கும் விடயங்களில் மேலும் சேர்க்க வேண்டும் என விரும்பும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.

    நன்றி:
    நண்பர் லியோ மோகனின் மன்றப்பதிவுகள்:
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10137
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9708
    Last edited by பாரதி; 28-04-2008 at 09:01 AM. Reason: படங்கள் இணைப்பு.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி பாரதி மற்றும் சாம்பவி அவர்களே!!
    நல்ல தகவல் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
    எனக்கும் மற்றவருக்கும் பயன்படக்கூட செய்தி..
    தொடர்ந்து எழுதுங்கள்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நல்லதொரு பதிவு.... புதியவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அடடே அப்படியா....

    நல்ல பகிர்வு அண்ணா, நிறைய நண்பர்களுக்கு பயன்படும்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இது மிகவும் நல்ல தகவல் அண்ணா.
    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு பாரதி

    தொடரும் உன் சேவைப்பதிவுகளால் மிகவும் மகிழ்கிறேன்..

    வாழ்த்துகள் பாரதி..

    சேகரித்துச் சேவையாற்றுவது தொடரட்டும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    விஸ்டா விண்டோஸ் பதிப்பில் இ-கலப்பை நிறுவுவதில் கொஞ்சம் பிரச்னை வருகிறதே.. இ-கலப்பையில் ஏதும் மேம்பட்ட பதிவுகள் இருக்கிறதா.. கொஞ்சம் விளக்குங்களேன்..

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    NHM writer இலவச மென்பொருள் உங்களுக்கு உதவக்கூடும் பூர்ணிமா. இ-கலப்பையை விடவும் இது சிறந்தது. பாரதி அவர்கள் மேலே கூறியுள்ளபடியும் முயற்சித்து பார்க்கலாம்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அருமையான பதிவு. இவ்வாறு தமிழை கணனியில் உயிர்ப்பூட்டுவதன் மூலம் கோப்புகளுக்கு தமிழில் பெயரிட முடிவதுட Firefox உலாவியில் தமிழ் சரியாகத் தெரிய வழிவகுக்கும்.

    இந்த தட்டச்சு முறையில் பயின்றால் ஏனைய இந்திய மொழிகளிலும் இலகுவாகத் தட்டச்சிடலாம் என்று லியோ மேகன் அவர்களிடம் இருந்து அறிந்திருக்கின்றேன். ஆனாலும் மக்கள் இந்த தட்டச்சு முறையை விட தமிழ் 99 (http://tamil99.org)போன்ற அரசினால் பரிந்துரைக்கப்பட்ட முறைகளையும் முயற்சிக்க வேண்டும் என்பது என் விருப்பு.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    நன்றி தகவலுக்கு........
    முயற்சித்துப்பார்க்கின்றேன்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •