Results 1 to 8 of 8

Thread: போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை

                  
   
   
  1. #1
    Banned
    Join Date
    14 Apr 2007
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    Lightbulb போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை

    இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.
    இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
    அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட காலத்தில் இருந்தே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.
    யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதற்கும் அது தொடர்வதற்கும் அதில் சம்பந்தப்பட்ட தரப்புகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுத் தரப்புக்கும் இடையில் இருக்கும் இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்தும் மாறாமல் பேணப்படுவது அவசியம் என யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவரும், நோர்வே அனுசரணைத் தரப்பும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தமை நினைவுகொள்ளத் தக்கது.
    அந்த இராணுவ வலுச் சமநிலை குழம்பிப் போனதே இன்றைய அவல நிலைக்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் தூக்கிக் கடாசப்படும் நிலைமை ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் என்பது தெட்டத் தெளிவு.
    இன்றுடன் செல்லாக்காசாகும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டவர்கள் இருவர். இலங்கை அரசு சார்பில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஒருவர். மற்றவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்.
    இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் தற்போதைய அரசின் முடிவு, உத்தியோகபூர்வமாக அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு அறிவிக்கப்பட்டபோது, மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருவர் சார்பிலும் ரணில் விக்கிரமசிங்க சார்பில் அவரது கட்சியான ஐ.தே.கட்சியினாலும், வே. பிரபாகரன் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினாலும் வெளியிடப்பட்ட இரு வேறு அறிக்கைகளில் ஒரு விடயம் பொதுவாக அமைந்திருந்ததை நாம் அவதானிக்க முடியும்.
    அரசுப் படைகள் இராணுவப் பின்னடைவுகளைச் சந்தித்து, புலிகளை போரியல் ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்தபோதே இந்த யுத்த நிறுத்தத்துக்கு அப்போது அரசு இணங்கி வந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது தெரிவித்திருக்கிறார்கள்.
    அதேபோல
    வடக்கில் பல முக்கிய படை நிலைகளைப் புலிகள் கைப்பற்றி, கட்டுநாயக்கா விமான நிலையம் போன்ற பொருளாதார இலக்குகளைத் தாக்கி, பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திய நிலையிலேயே இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, பேச்சு மூலமான ஒரு தீர்வைக் காணும் நோக்கோடு இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அப்போதைய ஐ.தே. கட்சி அரசு ஒப்பமிட்டது என அக்கட்சி இப்போது கூறுகின்றது.
    ஆக, பல இராணுவப் பின்னடைவுகளை இலங்கை அரசுப் படைகள் சந்தித்து, பெரும் இக்கட்டு நிலையில் அரசுத் தரப்பு இருந்தபோதே வேறு வழியின்றி அப்போதைய அரசு யுத்த நிறுத்தம் என்ற அமைதி வழித் தீர்வை நாடியது.
    அத்தகைய நிலையுடன் அமைதி முயற்சிகள் குழம்பாமல் தொடர்ந்திருக்க வேண்டுமாயின் அன்றைய இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்தும் அதே மாதிரிப் பேணப்பட்டிருக்க வேண்டும்.
    ஆனால் அரசும், புலிகளும் சம தரப்பு அந்தஸ்தோடு செய்துகொண்ட யுத்த நிறுத்தம், அந்த சமதரப்பு அந்தஸ்தில் தொடரும் சமயத்தில் பல்வேறு மேற்கு நாடுகள் புலிகள் இயக்கம் மீது தடை விதித்து, அதன் தர நிலையைத் தாழ்த்தி, அதன் மூலம் அரசு புலிகள் இடையேயான சம அந்தஸ்து நிலைப்பாட்டைப் பங்கப்படுத்தித் தவறிழைத்தன.
    அதேசமயம், யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு அரசு தனது இராணுவ போரியல் திறமைகளை வளர்த்து விருத்தி செய்யக் கூடியதாக நேரடியாகவும், பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமாகவும், சில நாடுகள் அளவுக்கு அதிக மாகவும் உதவியமை, நிலைமையைக் குழப்பக் காரணமாகின.
    இதனால் யுத்த நிறுத்த காலத்தின் ஆரம்பத்தில் அரசு புலிகள் இடையே சமனாக இருந்த இராணுவ வலு நிலைமை இப்போது தனக்கு சாதகமாக முற்றிலும் சாய்ந்துவிட்டது எனக் கொழும்பு அரசு நம்பிக்கையுடன் கருதும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் அது போரியல் வெறி பிடித்து, யுத்த சந்நதம் கொண்டு, போர்முரசு அறைகின்றது.
    ஆகவே, இவ்வாறு யுத்த நிறுத்தத்தை தூக்கிக் கடாசி, போரியல் போக்கில் முனைப்போடு கொழும்பு தீவிரம் கொண்டு அலைவதற்கு கொழும்பு அரசை வைவதில் அர்த்தமில்லை. அந்த வழியில் கொழும்பு செல்வதற்கான சூழலை விளைவுகளைச் சிந்திக்காமல் புலிகள் மீது கண்மூடித்தனமாகத் தடை விதித்தும், கொழும்பின் இராணுவச் செயல் போக்குத் திட்டத்துக்கு பின்னூட்டல் ஒத்தாசை வழங்கும் விதத்தில் பல்வேறு உதவிகளைச் செய்தும் விவகாரத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய நாடுகளைத்தான் முதலில் வையவேண்டும். அவையே இந்தப் போரியல் சமவலு நிலையைக் குழப்பி, யுத்த நிறுத்தத்தை அர்த்தமற்றதாக்கின என்பது கண்கூடு.


    நன்றி

    சுடரொளி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இலங்கை பிரச்சினையின் உண்மையான ஆழமறிந்தவர்களுக்கு தெளிவாகப் புரியும் இந்த கட்டுரையின் யாதார்த்த தன்மை...

    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இன்னொரு போரை காண நாம் தயாராக இல்லை.
    இது ஒரு நிரந்தர தீர்வு எப்பொழுது ஏற்படுமோ...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இன்னொரு போரை எதிர்கொள்ள இலங்கையிலுள்ள தமிழர்களும் விரும்பவில்லை தான் அண்ணா, ஆனால் சிறிலங்கா அரசு கடந்த கால பாடங்களை மறந்து திணிக்க முயலும் போர்ப் பாதையை எதிர்கொள்வதுதான் இப்போது அவர்களுக்கு ஒரே வழியாக தெரிகிறது...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகி இரு வாரங்கள் முடிவடைகின்றன. இன்றுமுதல் அதிகார பூர்வமாக ஒப்பந்தம் செல்லாக்காசாகின்றது. இந்நிலையில் இன்று பிரான்சில் போர் வேண்டாம். சமாதானமே வேண்டும் என்று தமிழ் மக்களால் ஒன்றுகூடல் நடாத்தப்பட்டு மகசர் ஒப்படைக்கபட்டது.. இதர ஐரோப்பிய தேசங்களிலும் இது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது..
    Last edited by அமரன்; 16-01-2008 at 07:03 PM.

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    போர்மூலம் சமாதானம். இதுதான் மகிந்த ஜிந்தன. (மகிந்த ராஜபக்ஷவின் சிந்தனை) எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிந்தவின் குடும்பம் கொள்ளையடிக்கிறது. இதற்கு அமெரிக்கா பிரித்தானியா சீனா ஜப்பான் இந்தியா பாக்கிஸ்தான் என ஆதரவு வழங்கும் நாடுகள்.

    நினைக்கும் போது காமடியாக இல்லை???
    கேட்டால் பயங்கரவாதத்தினை கூண்டோடு ஒழிப்போம் என்று 5 சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத சூழுரைகள். ஒழித்தார்களா? இதற்கு மிகப்பாரிய உதாரணம் ஈராக் மீதான நடவெடிக்கை. எதற்காக ஈராக் மீது படையெடுத்தார்கள். இறுதியாக நடைமுறைப்படுத்தியது எது.? ஆதிக்கும் அந்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு அடுத்த மிகப்பாரிய உதாரணமாக இலங்கை வரவிருக்கிறது. மேற்கூறிய நாடுகளின் மிகப்பெரிய பங்களிப்புடன். அரச பயங்கரவாதங்கள் ஒழிக்கப்படும் வரை எந்தநாட்டிலும் சுதந்திரம் மீளாது. இதற்கு பல உதாரணங்கள் நம் கண்கூடு.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    சிங்களவர்கள் புலிகள் விரைவில் ஒழிக்கப் பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளனர்!!!
    காலம் பதில் சொல்லும்!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மயூ View Post
    சிங்களவர்கள் புலிகள் விரைவில் ஒழிக்கப் பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளனர்!!!
    காலம் பதில் சொல்லும்!!

    இலங்கைப் படத்தில் வன்னிப் பகுதியை மட்டும் நிழற்றிக் காட்டி இதனையும் பிடித்தால் ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடுமென கடந்த காலங்களையும் மறந்து மின்னஞ்சல், மின்னஞ்சலாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •