Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 61

Thread: வயநாட்டில் வெங்காய பாய்ஸ் - நிறைவு

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    வயநாட்டில் வெங்காய பாய்ஸ் - நிறைவு

    அநேகமா உங்களுக்கு இந்நேரம் வெங்காய பாய்ஸ் பத்தி தெரிஞ்சிருக்கும். நான் பெங்களூர் வந்து ஏறக்குறைய மூணு வருஷத்துக்கு மேலானாலும் கல்லூரி நண்பர்களோட எங்கேயும் டூர் போனதில்லை. பார்த்தி அடிக்கடி அவன் ஆபிஸ்ல டூர் போவான். அவந்தான் அடிக்கடி சொல்லுவான். நாம எல்லோரும் சேர்ந்து டூர் போலாம்டா.

    ஏதோ இந்த திட்டம் ரொம்ப நாளா ஒத்துவராமலேயே இருந்துச்சு. ஒரு மாதிரி பேசிப்பேசி எல்லோரும் போலாம்னு முடிவு பண்ணினது புதன்கிழமை. வழக்கம் போல மருது அதாங்க கருத்து கண்ணாயிரம் அக்கா வீட்டுக்கு போகணும் வரலேன்னுட்டான்.

    போக்கிரி வடிவேலு மாதிரி எங்க நெலம. ஒரு ஆளு போச்சே. சரி இந்த வாரமும் ஒன்னும் ஒத்து வராதுன்னு முடிவாச்சு. திடீர்னு வியாழக்கிழமை ஆபிஸ்ல இருக்கும் போது பார்த்தியிடமிருந்து போன்.

    டேய். என் ஆபிஸ் கொலிக் ரெண்டு பேர் வர்றேங்கராங்க. இந்த வாரம் வயநாடு போலாமா?

    ஆபிஸ்ல ஏற்கனவே நிறைய குடைச்சல். எங்கியாவது போகணும்னு தோணினதால உடனே வர்றேன்னுட்டேன்.

    சரி. போலாம். வேற யாரெல்லாம் போறோம். நாளைக்குள்ள ஏற்பாடு பண்ண முடியுமா?

    அதெல்லாம் பாத்துக்கலாம்டா. மருது வரல. அடுத்து பாடிக்கு (கண்ணனை வீட்டில் எல்லோரும் பாடிசோடான்னு தான் கூப்பிடுவோம். ஆள் நம்மூர் ஆர்னால்ட் வையாபுரி மாதிரி இருப்பதால அந்த பேர்) தான் போன் போடணும். விஜய் எப்படியும் வந்துடுவான். உன் தம்பி வேற இருக்கான். ஆறு பேருக்கு ஒரு குவாலிஸ் போதும்டா. நான் பாத்துக்கறேன்

    ஏற்கனவே நிறைய டூர் ஆர்கனைஸ் பண்ணியிருந்ததால பார்த்திக்கு டிராவல்ஸ் எல்லாம் பழக்கம். கண்ணனும் விஜயும் வர்றேனுட்டாங்க. பார்த்தி ஹோசூர்ல தெரிஞ்ச ஒரு டிராவல்ஸ்ல புக் பண்ணிட்டான்.

    வெள்ளிக்கிழமை ராத்திரி. ஆபிஸ்ல இருந்து வந்தவுடன் பத்து மணிவாக்கில் கிளம்பலாம் என்று திட்டம். பார்த்தியும் அவன் நண்பர்களும் ஏற்கனவே ரெண்டு தடவை வயநாடு போய்ட்டு வந்திருக்காங்க. என்னமோ தெரியல கேரளானால எல்லோருக்கும் தனிகுஷி.

    வண்டி வந்து வீட்டு முன்னாடி தயாரா இருந்துச்சு. ரெண்டு நாள் பயணத்துக்கு தேவையான துணியெல்லாம் எடுத்தாச்சு. விஜய்கிட்டேர்ந்து போன்.

    டேய் நான் நாளைக்கு ஆபிஸ் வரணும். அவசர வேலை வந்துடுச்சு. நீங்க போங்க..

    என்னடா இப்படி சொல்ற. சரி.. நாங்க கிளம்பறோம்

    புறப்பட்டாச்சு வயநாடு நோக்கி பயணம். மடிவாலாலேர்ந்து கிளம்பி பனஷங்கரி பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கற கோயிலுக்கு போய் பூட்டியிருந்த கோயிலுக்கு முன்னாடி நின்னு சாமி கும்பிட்டு ( கொஞ்சம் பக்தியும் உண்டுங்கன்னா) வண்டி விடு ஜூட்.

    ஆரம்பிச்சாச்சு எங்க மொக்கை. எல்லா பயலுவலும் தமிழ். மாத்தி மாத்தி அவங்க வேலைய பத்தி ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

    டேய். . ஆமா.. அந்த எக்ஸல் ஷீட்டுல என்னடா பண்ணுவ.. எப்ப பாத்தாலும் எக்ஸல், டாக்குமெண்ட்.. நல்ல பொழப்புடா

    போடா..டேய் எக்ஸல்ல இல்லாத மேட்டரே இல்ல.. உனக்கென்ன அதப்பத்தி தெரியும்.

    ஆமாமா.. எந்த பிளாட்பாரத்துல வேலை பாக்குறன்னு கேட்டா மைக்ரோசாப்ட் ஆபிஸ்னு சொல்ற. ஊரே அதுல தான் வேல பாக்குது.. ஆனாலும் உன்னையும் வச்சுகிட்டு சம்பளம் குடுக்கறாங்க பாரு

    நீ மட்டும் என்னவாம்.. HR ல வேல பாக்குறேன்னு ஒரே சீன்னு.. நீ பயன்படுத்தற டூல் கூட எக்ஸல் மாதிரி தானே பெரிய இவனாட்டம்.

    என்ன பண்றோம்னு அடுத்தவனுக்கு தெரியற வரைக்கும் தான் மதிப்பு. தெரிஞ்சிடுச்சுன்னா மதிக்க மாட்டாங்க. இங்க அவனவன் பாக்குற வேலை எல்லோருக்கும் தெரியும்கறதால இப்படியும் இதவிட ரொம்ப பெருமையாவும் எல்லோருடைய வேலையும் பேசப்படும்.

    அங்க பாரு...சுள்ளான் என்னமோ யோசிச்சிட்டு வர்றான். டேய் ரபட்ட்டிக்ஸ்..என்னடா பண்ற.. வேற ஒன்னுமில்லீங்க அவன் ரோபோடிக்ஸ் இஞ்சினீயர்.

    அதுவா.. அடிக்கடி ரோபோ டெலிவரி.. அது இதுங்கறான். போய் பாத்தா தான் தெரியும். அங்க ஷோகேஸ்ல இருக்குற ரோபோவெல்லாம் தொடைக்கற வேலையாம். இன்னிக்கு நிறைய தூசியாடுச்சாம். அதான் கவலை

    இப்படி மொக்கையாக இரவு போயிட்டிருந்தது. மைசூர் தாண்டி பந்திப்பூர் சாலையில் வண்டி திரும்பியது. குறிஞ்சியும் முல்லையும் அந்தகாரமா இருந்தது. ரோடு வேற மோசமா இருந்ததால கொஞ்சம் மெதுவா போனோம். வழியில ஒரு இடத்துல வண்டிய நிறுத்தி இயற்கைய ஸ்நேகிச்சுட்டு திரும்ப வண்டியிலேறி கொஞ்ச தூரம் தான் போயிருப்போம். திடீர்னு ஒரு சத்தம். வண்டி குலுங்கியது. அது.
    Last edited by மதி; 04-02-2008 at 12:07 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல ஆரம்பம் மதி. இப்படி தனியா இருக்கும்பொழுது இந்த மாதிரி டூர் போனாத்தான் உண்டு. ஜமாய்!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    சத்தியமாகப் பேய் இல்லையே????

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by aren View Post
    நல்ல ஆரம்பம் மதி. இப்படி தனியா இருக்கும்பொழுது இந்த மாதிரி டூர் போனாத்தான் உண்டு. ஜமாய்!!!
    அனுபவமோ?

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வயநாட்டுக்கு போகும்போது கூடவே வெங்காயமும் கொண்டுபோனீர்களா...? அட அதாங்க வெங்காய பாய்ஸ் குருப்பை சொன்னேன்.ஜாலியான பயணம்தான்.அந்த மைசூரிலிருந்து ஊட்டி போகும் சாலை மிக அழகாக இருக்கும்.தொடருங்க.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    போனது வெங்காய பாய்ஸ்ல மூணு பேர்...ஆனா...அங்க வெங்காயமும் இல்ல...பெருங்காயமும் இல்லை...

    போகப்போகத் தெரியும்..

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அடடா...நீங்களும் வயநாடு போயிருக்கீங்களா...எங்க வீட்டயும் ஆன்னா ஊன்னா வயநாடு கிளம்பற பார்ட்டி ஒன்ணு இருக்கு...வயநாடு அழகான இடம்...அப்புறம் என்ன ஆச்சு?
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    அடடா...நீங்களும் வயநாடு போயிருக்கீங்களா...எங்க வீட்டயும் ஆன்னா ஊன்னா வயநாடு கிளம்பற பார்ட்டி ஒன்ணு இருக்கு...வயநாடு அழகான இடம்...அப்புறம் என்ன ஆச்சு?

    இன்னும் எழுதல... பொங்கல் விடுமுறைக்கு வீட்டில்..
    மதியம் மேல எழுதறேன்..

    ஒரு சந்தேகம்... மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சு தான் படிக்கறீங்களா..?

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    இல்லை மதி...நிஜமாவே நல்லாயிருக்கு...தொடருங்க...அதும் டைட்டில் ரொம்பவே நல்லாருக்கு...

    சொல்லப்போனா எங்களுடைய இன்றைய நாட்களை அப்படியே பிரதி பலிக்கிறது. என் மேல் வீட்டில் ஒரு சினேகிதி இருக்கிறாள்.தமிழ் தான். அவளும் நானும் சேர்தால் அதகளம் தான்...ரெண்டு பேருக்குமே பெண்களுக்கே உரித்தான் கீச்சுக் குரல்...சுமாராகத் தான் பாடுவோம்...ஆதனால் என்ன...விம்டோவா கர்ள்ஸ் தான்...மைக்கில் பாட வேண்டியது...அதை ரெக்கார்ட் செய்து, கேட்டு ஒருவரை ஒருவர் கலாய்க்க வேண்டியது...

    இருவருமே மதியம் தான் பணிக்குப் போவோம்.
    காலையில் போன் வரும்...டீ குடிக்கலாம் வா என்று...டீன்னு சொல்லி யார் என்ன போட்டுக் குடுத்தாலும் குடிப்பேன்...எங்க வீட்டுக் காரரை விட சுமாராத்தான் டீ போடுவா...சரின்னு மேல போன...சலங்கை ஒலி பாட்டு ஓடிட்டிருக்கு...ஞான வினோதங்கள்...நடன சந்தோசங்கள்...விடுவமா...பூகம்பம் வர்ற வரை ஆடித்தள்ளிட்டோம். அன்னைக்கு நைட்டு...அய்யோ கால் வலிக்குது புடிச்சு விடுங்கன்னு வீட்டில இவருகிட்ட வேற வாங்கிக் கட்டிக்கிட்டேன்.

    அடுத்த நாள் பிளாண்டில என் பிரண்டோட வீட்டுக்காரர் சொல்லியிருக்கார் இவர்கிட்ட...என்ன சார் நைட்டு கால் பிடிச்சு விட்டீங்களா...அப்படின்னு
    இவரு ஆச்சர்யமா உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு கேட்டிருக்கார்...அவரு சொன்னாராம்...எங்க வீட்லயும் இது தான நடந்ததுன்னு....இது எப்படி இருக்கு?

    தலை தீபாவளி...தலைப் பொங்கல்...புது மோதிரம்...புதுத் துணி..புதுப் மனைவி... கலக்கிற சந்துரு...பொங்கலோ பொங்கல்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0
    பண்டிப்பூர் சாலையிலே குவாலிஸ் நிறுத்தி உச்சா போயிருப்பீங்க.. நீங்க உச்சா போனது ரோட்டோரமா படுத்திருந்த காட்டு யானை மேலையா இருக்கும்.

    எனக்கும் காட்டு யானைகளுக்கும் இருக்குற பந்தம் இருக்கே.. அது சொன்னா புரியாது... என்னை நேரில பார்த்தீங்க, இவனெல்லாம் காட்டு யானை கூட.. அப்படினு சிரிப்பிங்க... ஆனா, அத்தான் எதுக்குமே அசராத (அ எல்லாம் போடப்படாது)சிங்கம்.
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட..யவனி அக்கா..நீங்களும் நம்மள மாதிரி தானா...மாமா தான் பாவம்.. நீங்க ஆடுனதுக்கு அவர கொடுமை படுத்திட்டீங்க....

    ஐயா..ராசா...மாமோவ்.. அதான் உச்சா போய்ட்டு தான் வண்டிய எடுத்தோம்னு சொல்லிருக்கேனே.. என்ன கொஞ்சம் புரியாத வார்த்தையா இருக்கும். நீங்க சொன்ன மேட்டர் பத்தியும் பேசிட்டிருந்தோம். என்ன பண்பட்டவர் பகுதியில கூட போட முடியாதபடி இருக்கு.. ஹிஹி

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வண்டி குலுங்குச்சோ இல்லியோ எங்க நெஞ்சு குலுங்கிட்டுருக்கு ... சீக்கிரம் போடுங்கப்பு.. அடுத்த பாகத்தைத் தான்........
    ஆவலுடன்
    செல்வா... (தல மணியா பதிவுகளோட பாதிப்பு... )
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •