Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: இரவு தோறும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    இரவு தோறும்


    தனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது.

    ம்ஹூம்.... நித்திரையோடு ஓடக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி சாலை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தினான்.

    ஜன்னலை மூடிவிட்டு, தானியக்க பாதுகாப்பு கருவியையும் உயிர்ப்பூட்டிவிட்டு குகன் சிற்றுண்டிசாலையை நோக்கி நடக்கத்தொடங்கினான். சிற்றுண்டி சாலை என்று சொல்வதைவிட அதை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்றும் சொல்லலாம். வாசலில் ஒரு பழைய எரிபொருள் நிரப்பும் இயந்திரம் இருந்தது. அந்தப் பழைய உணவகத்தின் கதவை அனாயசமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் குகன்.

    வாங்க ஐயா, பெற்றோல் போடோனுமா இல்லை சாப்பிட ஏதாவது வேணுமோ? கேள்வி கேட்டான் உணவு விடுதிக்காரன்.

    பெற்றோல் இருக்கு, எனக்கு ஒரு கோப்பி தாங்கோ

    ஐயா எங்கயிருந்து வாரியள், இந்த நேரத்தில தனியாப் போறியள் போல இருக்கு

    ஹா.. நான் கொழும்பில இருந்து வாறன். ஒரு தனியார் கொம்பனியில வேலை செய்யிறன். நாளைக்கு வருசப்பிறப்புதானே. அதுதான் வீட்ட போயிடோனும் என்ற நினைப்பில இரவோட இரவாக் கிளம்பிட்டன்

    எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான் என்று கூறியவாறு அந்தக் கடை ஊழியன் ஒரு கோப்பை கோப்பியை எடுத்துக்கொடுத்தான்.

    கடுங்குளிருக்கு அந்த கோப்பி இதமாக இருந்தது. தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். சரியாக இரவு 12.05 ஆகிவிட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் மிக மிக அரிதாக ஒளியைப் பாய்சிக் கண்சிமிட்டிக்கொண்டு வீதியில் சென்றுகொண்டிருந்தன.

    தனது பையிலுந்து பணத்தை எடுத்து ஊழியனிடம் கொடுத்துவிட்டு குகன் தனது காரை நோக்கி நடக்கத் தொடங்கினான். உள்ளே ஏறி உட்கார்ந்ததும் ரேடியோவைப் போட்டுத் திருப்பி திருப்பு என்று திருப்பினான். ம்ஹூம் ஒரு அலைவரிசை கூட இழுக்குதில்லை. செல்லிடத் தொலைபேசி பயனற்றுக் கிடந்தது. ஆ... என்று ஒரு பெரு மூச்சு விட்டவாறு தன் காரின் இயந்திரத்தை உயிர்ப்பூட்டினான் குகன். அந்த சொகுசு வாகசனம் மீண்டும் அதிக இரைச்சல் போடாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு பயனிக்கத் தொடங்கியது.

    அரைமணி நேரத்தில் மீண்டும் குகனுக்குக் கண்ணைக் கட்டத் தொடங்கியது. அரைக்கலக்கத்தில் யாரோ வாகனத்தை மறைப்பது தெரிகின்றது. நன்கு அருகில் வந்ததும் குகன், திடுக்கிட்டு கார் பிரேக்கைப் போடுகின்றான். வெளியே நின்ற பெண் போட்ட கீ என்ற சத்தம் குகனின் வாகனக் கண்ணாடியூடு கேட்டது.

    கூ ட ஹெல் இஸ் திஸ்? கடுப்புடன் கூறியவாறே குகன் தனது வாகனக் கண்ணாடியை கீழிறக்கினான்.

    என்ன தங்கச்சி என்ன விசயம்

    இண்டைக்கு இரவு வேலை முடிய லேட்டாகிட்டுது. 20 மைல் தள்ளித்தான் எங்கட வீடு இருக்குது. அங்க கொண்டுபோய் இறக்கிவிடுவியளோ?

    என்ன கரைச்சலடா இது?. முன்னப்பின்னத் தெரியாத பொம்பிள தன்னைக் காரில ஏத்தச் சொல்லுறாள். இவளை ஏத்திப் பின்னால இங்கிலீசுப் படங்களில வர்றமாதிரி என்னைக் கொலை செய்திடுவாங்களோ?? என்று பலவாறும் குளம்பியவாறே தன் காரின் கதவைத் திறந்தான்.

    நான் காரில பின்னால ஏறுறன் என்கிறாள் அவள்.

    அப்ப நான் என்ன உங்களிட ட்ரைவரோ?, முன்னால ஏறுங்கோப்பா. உம்மை என்ன நான் பிடித்துச் சாப்பிடப்போறனோ?

    அவள் ஏறி குகனுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்துவிடுகின்றாள். இப்போதுதான் குகன் அருகில் பக்கத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் இதயம் பட படவென அடித்துக்கொண்டது. கொழும்பில இருக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் இவள் கால் தூசிக்குத் தேறமாட்டாளுகளே. கடைக்கண்ணாலும் தன் முன்னால் இருந்த கண்ணாடியிலும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    றோட்டப் பார்த்து ஓடுங்கோ... நமட்டுப் புன்னகையுடன் கூறினாள் அந்தப் பெண்.

    ஆ.... நக்கலு. சரி சரி உங்கட பெயர் என்னண்டு சொல்லேலயே? மெதூவகக் கதையைத் தொடங்கினான் குகன்.
    ஏன் பெயர்?

    உங்களை ஏத்திக்கொண்டு போய் இறக்கிவிடுறன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டியளோ?, பெரிய வில்லாதி வில்லியாக இருப்பியள் போல இருக்குது

    இப்படியே கதை தொடர்ந்தது. குகனை அறியாமலே அவன் வாகனம் ஓட்டும் வேகத்தைக் குறைத்துவிட்டிருந்தான். அவளை விட்டுப் பிரிய அவ்வளவு மனமில்லை. இப்போது இருவரும் நல்ல சகவாசமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஒரே சிரிப்பொலி அங்கு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

    ஒரு மணி நேரத்தில் குகன் அந்தப் பெண் இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டான். நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாவாறே அந்தப்பெண் நகரத் தொடங்கினாள்

    ஹல்லோ.. இந்தாங்கோ என்னுடைய விசிட்டிங் கார்ட். கொழும்புப் பக்கம் வந்தால் சந்தியுங்கோ. அதுதானே உங்கட வீடு? தூரத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டைக் காட்டிக்கேட்டான் குகன். அவளும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். குகன் அந்த இடத்தின் அடையாளங்களை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டான். குறிப்பாக அந்த மைல்கல்லும். அதற்கு அருகில் இருந்த மாமரமும் இந்த இடத்தை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க உதவும்.

    அக்சிலரேட்டரை மனமில்லாமல் அழுத்தியவாறே அங்கிருந்து நகர்ந்தான் குகன்.

    வீடு சென்றாகிவிட்டபோதும் குகனின் மனம் முழுவதும் நேற்றய நிகழ்வில்தான் இருந்தது. அவளை மறக்க இவனால் முடியவில்லை. தான் தன் நண்பன் வீட்டிற்குச் செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு தனது ப்ராடோவில் ஏறி மீண்டும் அந்தக் கனவுக் கன்னி வீடு நோக்கிப் பயனமானான்.

    ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை குகன் வந்தடைந்துவிட்டான். அப்போது பெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. அங்கே நேற்றிரவு கண்ட வீடு இப்போது இல்லை. அதே மைல் கல்லு அதே மாமரம் ஆனால் வீடு மட்டும் இல்லை. அவன் முள்ளந்தண்ணூடாக ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்று ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அந்நேரம் அப் பாதையினூடாக ஒரு முதியவர் வரவே அவரிடம் குகன் மெல்லப் பேச்சுக்கொடுத்தான்.

    ஐயா! இந்தப் பக்கம் வீடு ஒன்று இருந்ததில்லோ?


    என்ன தம்பி நக்கலா? இங்க நான் 50 வருசமா இருக்கிறன். இந்த இடத்தில வீடு ஒன்றும் இருக்கேல. தண்ணி கிண்ணி போட்டியளோ? ஒரு சங்கேதப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தார் அந்த முதியவர்.

    குகன் மீது 1000 மின்னல்கள் ஒரேயடியாக விழுந்தது போல உணர்ந்தான். மெல்ல தனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவன் மனதினுள் நினைத்துக்கொண்டான்.
    இனிமேல் இரவில் தனியாகப் பிரயாணம் செய்வதில்லை

    குகனின் வாகனம் மெல்ல மெல்ல தன்பாதையில் செல்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. அன்றிரவு அப்பாதையால் ஒரு டோயோட்டா கொரால்லா வருகின்றது. அதில் இருந்து நன்றி சொல்லியவாறே அதே அழகிய நங்கை இறங்குகின்றாள்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட...மயூரா பேய் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா..?முதல்ல ஒன்று சொல்லணும்..
    கதை உன் வழக்கமான தமிழ் நடையில் செல்கிறது. ஆயினும் கதையும் அதன் முடிவும்.. சுவாரஸ்யமானதாய் இல்லை. வார்த்தைகளில் தான் திடுக் இருக்கிறதே தவிர நம் மனதினில் இல்லை. மேலும் எளிதில் கிரஹிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. சிறுகதையானாலும் வலுவான சம்பவங்களோ நம்மை நிமிர்ந்து உட்கார செய்யும் முடிவோ இல்லாதது வருத்தமே. வழக்கமான உன் கதைகளில் வரும் நகைச்சுவையும்.. மனதை கனத்துப் போகும் சம்பவங்களும் இதில் மிஸ்ஸிங்..

    மன்னிக்கவும் மயூ.. உன் கதைகளில் ரசிகன் என்ற வகையில் இக்கதை சுமார் தான்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வணக்கம் மயூர்.

    குகனை உருவகமாய் மயூரேசனை மனதில் வைத்துக் கொண்டேன். கொழும்பு வீதிகளில் செல்லும் கொரொல்லாவைப் போல நானும் பயணித்துக் கொண்டேன்.

    கதையின் ஆரம்பம் முதலே எனக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. வசனங்களில் ஈழவாசம் அடிப்பதை தவிர்க்க இயலாது,. அது கதைப்படி. நல்ல தேர்ந்த கதாசிரியருக்குரிய தொடக்கம், மற்றும் முடிவு. இதை என் பாஷையில் கானல் நிழல்கள் என்று சொல்வேன். நம் நினைவுகள் ஒரு உருவத்தை அடக்கி நினைத்துக் கொள்ளும். இரவு நேரப் பயணங்களில் இம்மாதிரி நிகழ்வது கனவா இல்லை நிசமா என்பதைவிட இரண்டும் கலந்ததே என்பதை ஒப்புக் கொள்ளலாம். திடீரென விழித்துப் பார்த்தால், அட இதை நாம் நிசமென்று நினைத்தோமே என்ற உணர்வு ஏற்படலாம். அதிலும் குகனுக்கு கல்யாணம் ஏற்படவில்லை. (குகன்=மயூ) ஆதலால் அந்த காரணம் இருக்கலாம். இரவு தோறும் மிரட்டும் இந்தக் கானல் உருவங்கள் அவரவர் எண்ணங்களின் வடிகால். சீக்கிரமெ திருமணம் புரிந்துகொள்வது நலம். இல்லையெனில் அவளைத் திருமணமே செய்துகொண்டு குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றுக் கொள்வான்..

    நினைவுகளைத் தவிர்த்து வேறு ஏதும் வைத்து எழுதியிருப்பாயோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. (ஆவி, பேய் இந்த மாதிரி) அப்படி இருந்தால் சொல்லிவிடு,

    நல்ல அருமையான சிறுகதை எழுத்தாளராகிய மயூவுக்கு இந்தக் கதையும் கூட்டற்புள்ளிகளே ஆயினும், கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

    வாழ்த்துகள் மயூர்
    Last edited by ஆதவா; 23-11-2007 at 06:36 AM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நல்ல துவக்கம்....
    சரி கதையை சொல்லு....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்த்துகள் மயூ..

    உன் தரத்துக்கு இது கம்மி என மதி, பென்ஸ் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..
    எனக்கென்னவோ கதை பிடித்துத்தான் இருக்கு..

    அதிலும் வர்ணனைகள், வசனங்கள் - !
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஐயோ மயூ யாரந்த பென் பேயா இல்ல பிசாசா. இல்ல ஆதவா சொன்ன மாதிரி ஏக்கத்தினால் ஏற்பட்ட மனபிராந்தியா. முடிவ மட்டும கொஞ்ச விளக்குங்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒரு சம்பவம்,சில கதாபாத்திரங்கள்...சொன்னவிதம் அருமை.ஆனால் புதிது என்றோ, இதில் ஏதோ இருக்கிறது என்றோ நினைக்கமுடியாத பழகிய கரு.
    உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இதனையே வித்தியாசமாக இன்னும் தொடருங்கள்.சுவைக்க காத்திருக்கிறோம்.வாழ்த்துகள் மயூ.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாழ்த்துக்கள் மயூ! நல்ல தொடக்கம். நல்ல நடை. நல்ல முடிவு.

    ஏ~9 வீதி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துகும் இடையிலான ஒரே ஒரு தரைவழிப்பாதை. கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் நீளமுடையது. கொழும்பிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ 2/3 மணித்துளிகளின் பின்னர் தொடர்ச்சியான காட்டை ஊடறுத்துச்செல்லும் சாலை. ஊருடன் சேர்ந்து வாகனங்களும் உறங்கிவிட நிலவு, குளிர்காற்று, நிர்ச்சலனம் விரட்டும் சில சத்தங்கள் போன்றவற்றின் துணையுடன் பயணம் தொடரும்..
    தொடரும் பயணத்தில் கும்பலாக ஒரு வேனில் போனாலென்ன, தனிமகிழுந்தில் போனால் என்ன ஆபத்து இருக்கு.

    வாகனக்கொள்ளையர் ஒருபக்கம், திருடர்கள் இன்னொரு பக்கமுமாக அடிக்கடி மண்சரிவு நிகழும் இரண்டு செங்குத்து மலைகளுக்கு இடையில் செல்வதுபோல இருக்கும்.. அந்தப்பெண் கைகளை குரொல்லாவுக்கு குறுக்காக நீட்டும்போது அந்தகூட்டத்தினரோ என்ற திடுக் ஏற்படுகின்றது.. ஆனால் பேய் என்னும்போது நம்பமுடியாத உணர்வு. அப்படியான விடயங்கள் அங்கே நிகழ்ந்ததாக புதினக்குற்றிப்புகள் காதில் தேக்கியிருந்தால் திடுக்செறிவு அதிகரித்து இருக்கும்..
    Last edited by அமரன்; 23-11-2007 at 09:37 AM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    டங் டங் டங்.... என்று எல்லாரும் ஆளாளாக்கு கொட்டிய குட்டில் மண்டை விறைத்து விட்டது போங்க. வழமையான சோகமான முடிவு கொண்ட கதைகளை எழுதுவதை விடுத்து புதிதாக ஏதாவது எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் எழுதியதுதான் இந்தக் கதை. எவ்வளவு நாளைக்கு ஒரே மாதிரியான டொப்பிக்கில் தொடர்ந்து எழுதுவது????.

    நண்பர்கள் பலரிடம் இதைக் காட்டியபோது... ஓ...மச்சான் இப்பிடிக் கதையெல்லாம் உனக்கு எழுதத் தெரியுமா என்று கதையை படித்தார்கள். கதை மோசமில்லை ஆனால் மயூரேசன் இப்படியொரு கதை எழுதியிருக்கவேண்டாம் என்று ஃபீல் பண்ணுவது புரிகின்றது.

    புரிகின்றது.. புரிகின்றது... என்னவானாலும் இவ்வாறான சோதனை முயற்சிகள் அவ்வப்போது தொரும்.. சரி இனி ஒவ்வாருத்தருக்குமான தனித் தனிப் பதில்கள்....

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இலங்கையில் ஒருவன் ப்ராடோ வைத்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவன் கோடீஸ்வரன் தான்.... கதை நன்றாக இருக்கிறது...

    அனுபவம் ஏதுமில்லையே.... (கொரெல்லா... ஹொன்டா சிட்டி அதை அப்படியே ப்ராடோவாக மாற்றலியே)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    எனக்கு கதை புடிச்சிருக்குப்பா...

    மயூவோட வித்தியாசமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்...

    ஆனா அந்த பொண்ணு பேய்ங்கிற தான் நம்ப முடியலை...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நல்லதொரு வர்ண்னை...விவரிப்பு..!
    கதையின் கரு ஏற்கனவே பல கதைகளை நினைவூட்டியது. ஆனால், இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி வித்தியாசமான முறையில் முடித்திருக்கலாம் என்பது எனது கருத்து.
    ஆனாலும், முயற்சி பாராட்டுதலுக்குரியதே..! வாழ்த்துகள் மயூ...!!
    Last edited by பூமகள்; 25-11-2007 at 09:10 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •