Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: தமிழும் என்னிரு தோழியும் − சுகந்தப்ரீதன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    தமிழும் என்னிரு தோழியும் − சுகந்தப்ரீதன்

    இலக்கணங்கள் கற்கவில்லை: இலக்கியங்கள் இயற்றவில்லை!
    காவியங்கள் படைக்கவில்லை: கவிஞனாக நினைக்கவில்லை!

    இதயம் கரும்பாய் இனிக்கும் போதும் இரும்பாய் கனக்கும் போதும் ஏற்படும் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்களே இங்கே சுவடுகளாகவும் சுவடிகளாகவும் சுற்றித் திரிகின்றன! அவற்றை தாலாட்டுவதையும் தலையில் கொட்டுவதையும் தங்களின் தனிபட்ட விருப்பத்திற்க்கே விட்டுவிட்டேன்?!

    சுவடிகள்:

    நான் மட்டும்
    மௌனயுத்தம்
    மறுபக்கம்
    துளிகள்
    என்ன(அ)வளோ?!
    நானும் உன் நினைவும்
    முன்பும் பின்பும்
    பாவையும் பார்வையும்
    காந்தவிழிகள்
    எண்ணங்கள்
    பூவும் பொட்டும்
    தகிப்பு
    துயில்கொண்ட துறவி
    கலாச்சாரம்
    மதில்மேல் பூனை
    அந்தநாள் ஞாபகம்
    காலச்சமுத்திரம்
    சம்மதிப்பேன்
    நெஞ்சுகுள்ள காதல்
    அன்பின் வலி
    இறுதி கணக்கு
    நடிப்பும் நாடித்துடிப்பும்
    ஏ(ன்)மாற்றம்
    உன்னுடனிருந்த நான்
    குறைபாடு
    நேசிப்பின் நினைவு
    கண்ணீர்
    சூழ்நிலை கைதி
    முகத்துவாரம்
    துறவிமனம்
    நிழல் நண்பன்
    அழகான யுத்தம்
    தவிப்பு
    தொல்லைகள்
    அடைமழைக் காலம்
    புரியாமலும் புன்னகைக்காமலும்
    நீ யாரோ..?!
    கோர யுத்தம்
    நிறம் மாறும் நிஜங்கள்
    நாய்க்குட்டி
    கண்ணீர் கனவுகள்
    காதல் தீ....
    ஒற்றை நம்பிக்கை
    இருண்ட உலகம்
    பாவி நான்
    எதார்த்த உலகம்
    வாழ்வியல்
    பூனை குட்டியானது

    சுவடுகள்:
    நானேந்திய கேள்விச்சுடர்
    கலையாத கவிதை-காஜல்
    பெண்மனசு ஆழமென்று...
    கொடுத்து வச்சிருக்கனும்டா
    திருமணமும் நட்பும்
    இது மன்றமல்ல குடும்பம்
    நெனச்சிக்கிட்டுதான் கழுதை
    விவசாயமும் தொழிலும்
    எடக்கு நாட்டான்
    உறவுகளை பற்றி...
    ஆளில்லாத அநாதைகள்
    பெருங்குடி மக்கள்
    கற்றலும் நிற்றலும்
    அவனும் ஆடியும் அத்துடன் அமாவாசையும்


    **************************************************************************
    தமிழும் என்னிரு தோழியும் − சுகந்தப்ரீதன்
    என் இயற்பெயர் ஜெ.பெ.சீனிவாசன். தமிழ்மீது கொண்ட தாகத்தாலும் என்னிரு தோழிகள்மீது கொண்ட பாசத்தாலும் எனக்கு நானே இட்டுக்கொண்ட பெயர் சுகந்தப்ரீதன். நான் சோழநாட்டையும் தென்னாற்காட்டையும் இணைக்கும் பெரியாற்றங்கரை பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். சோழநாட்டில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு தமிழ்மீது தீராத காதலுண்டு இருந்தும் கவிபுனையும் அளவுக்கு என்னிடம் கவிப்புலமையெல்லாம் கிடையாது. என் பள்ளிப் பருவத்திலிருந்து இன்றுவரை என்னை இன்னும் இன்னும் மேலேப்போ என்று உந்தும் ஆனால் ஒருமுறைக்கூட என்னிடம் உரையாடாத இன்று எங்கிருக்கிறாள் என்ற தடமறியாத என்தோழியின் நினைவாக முதன்முதலில் நான் கிறுக்கிய கிறுக்கல் இதோ:

    மாற்றங்கள் யாவும் காலத்தின்
    கட்டாயமாம் - ஏன் தோழி
    பருவங்கள் பல கடந்தும்
    பசுமை மாறா உன்
    நினைவுகளுடன் - நான் மட்டும்?

    அதன்பிறகு கல்லூரிவாழ்வில் காதல்தேவதையின் ஒருதலைபட்சமான ஆசிர்வதிப்பால் என் உணர்வுகளை நான் மௌனயுத்தமாய் வடிக்க, அதை கவிதையாக கருதி என் நண்பனொருவன் கல்லூரியாண்டு மலருக்கு கொடுக்க, அதில் அது வெளிப்பட, அதை ரசித்த சிலர் என்னை பாராட்ட பற்றிக்கொண்டது கவித்"தீ" எனக்கும். இருந்தும் நான் எழுதியவை சில கவிதைகள்தான், அதுவும் என்னைப்பற்றியும் என் உணர்வுகளைப்பற்றியும் மட்டுமே − என்றும் நட்பன்புடன் சுகந்தப்ரீதன்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 12-02-2014 at 01:20 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    வந்து கலக்குங்கள் சுகந்தப்ரீதன்..
    உங்கள் கவிதைகளைப் போலவே அறிமுகமும் அற்புதம்.
    கவிதைகளை எதிர்நோக்கி வாழ்த்துகளுடன்..........

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக அழகிய அறிமுகம் ப்ரீதன்.. வாழ்த்துக்கள் உங்களின் கவிப்பயணத்திற்கு.....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாருங்கள் சுகந்தப்ரீதன்.
    உங்கள் கவி அறிமுகத்திலேயே தெரிகின்றது நீங்கள் ஒரு கவிப்ரியன்.
    ப்ரியாமாக இல்லாத மைந்தனையே தாலாட்டு தட்டிக்கொடுப்பவள் அன்னை.
    பிரியமான இந்த மைந்தனை கைவிடுவாளா.
    தமிழும் அன்னையே. தமிழ் மன்றமும் அன்னையே.
    அணைபோடமாட்டோம் உங்கள் கவிவெள்ளத்துக்கு.
    அணைத்துச்செல்வர் பலர் உங்களை அண்ணையாய்.
    Last edited by அமரன்; 03-07-2007 at 12:47 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மலர், ஷீ-நிசி மற்றும் அமரன் ஆகிய அனைவருகும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!
    Last edited by சுகந்தப்ரீதன்; 23-01-2008 at 01:32 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல அறிமுகம் சுகந்தப்ரிதன்..தொடர்ந்து உங்கள் திறமையை வெளியிடுங்கள்...
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சுகந்த ப்ரீதா!

    அழகான அறிமுகம்!

    தொடர்ந்து மன்றத்திலே கவிதைகளில் கலக்க என் வாழ்த்துக்கள்!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உங்கள் அறிமுகத்திலேயே உங்கள் பெயர் பற்றி சொன்னவர்களில் நானும் ஒருவன்...
    ஆனால், அதற்குள் ஒரு கவித்துவமான கதை இருக்கும் என்று எண்ணவில்லை...
    எம்மைப்போன்ற தாயகம் தாண்டியவர்களுக்காக, இணையம் தந்த பெரும் உறவு மன்றம்... தமிழ்மன்றம்...
    அதில், கவித்துவமாய் இணைந்து கொண்ட உங்கள் கவிகள் என்றும் இணைந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,
    வாழ்த்துகின்றேன்... மென்மேலும் வளர...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நல்ல விரிவான அறிமுகம் சுவைக்க கூடிய கவிதை வரிகளுடன்
    வாழ்த்துக்கள் தொடர்ந்து மன்றத்தில் பல கவிதைகளை தாருங்கள்
    வருக வளர்க
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சுவையான அறிமுகம் சுகந்தப்ரீதன்..

    கவிதையோடு நல்ல உரைநடையும் உங்கள் வசம் உண்டு !

    மாற்றம் ஒன்றே மாறாதது..
    மாற்றம் ஒன்றே மானிடத்தத்துவம்..

    இந்த கோட்பாட்டை தவறு என்று நிரூபணம் செய்து
    ஒரு கணம் வாசகனை மயங்க வைத்த விதமே
    உங்கள் கவித்திறமைக்கு சான்றிதழ்!

    நிறைய.. நிறைய தாருங்கள்..
    மன்றம் உங்களைத் தரவைக்கும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    சுகந்த பீரித்தனே
    நான் கவிதை பகுதிக்கு அதிகமாக வருவது இல்லை
    என்றாவது வருவேன். இதுவரை உங்கள் கவிதை படித்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் உங்கள் அறிமுகமே நீங்கள் சிறந்த கவிஞர் என்று பரைசாற்றுகிறது.
    நிச்சயம் உங்கள் கவிதைகளை படிப்பேன்
    தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கும் இந்த அறிமுகத்தில் சுட்டி தந்து விடுங்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கள் கவிதைகளை படித்து சுவைத்திருக்கிறேன்.தமிழன்னையின் ஆசியும் தமிழ் மன்றத்தின் ஆதரவும் என்றும் உங்களுடன் உண்டு.இன்னும் நிறைய நிறைய கவித்தேன் படைத்து அளித்திட வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •