PDA

View Full Version : கடவுளும் மனிதனும்.



M.Jagadeesan
23-08-2011, 03:18 AM
ஒரு மனிதன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான். கடவுள் அவன் முன்பு தோன்றி, " மகனே! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் தருகிறேன்" என்று சொன்னார்.

அதற்கு அவன்," ஐயா! மனிதர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் என்பது தங்களுக்கு எவ்வளவு நேரத்திற்குச் சமம்?"

" ஒரு வினாடிக்குச் சமம்" என்று கடவுள் பதில் சொன்னார்.

" ஐயா! மனிதர்களுக்கு கோடி ருபாய் என்பது தங்களுக்கு எவ்வளவு செல்வத்திற்குச் சமம்?"

" ஒரு பைசாவுக்குச் சமம்" என்று கடவுள் பதில் சொன்னார்.

உடனே அவன், " ஐயா! எனக்கு ஒரு பைசா தாருங்கள் " என்று கேட்டான்.

அதற்குக் கடவுள், " மகனே! ஒரு வினாடி காத்திரு!" என்று சொன்னார்.

நன்றி: இந்து நாளிதழ்

innamburan
23-08-2011, 08:25 PM
கடவுளிடம் பேசும்போது கண்டிப்பாக முன்னால் கேட்டு, பின்னால் வாங்கவேண்டும். இல்லாவிட்டால், ஏமாற்றிடுவார்!:confused:

கீதம்
23-08-2011, 09:26 PM
நல்ல நகைச்சுவை. ரசித்தேன். தன்மொழி விட்டு கடவுள் மொழியில் பேசினான். பதிலுக்கு அவரும் தன்மொழியிலேயே பதில் சொல்லிவிட்டார். கடுந்தவத்துக்கு இப்போது பலனில்லாமல் போய்விட்டதே.... ஒழுங்காக ஒரு கோடி ரூபாய் வேண்டுமென்று கேட்டிருந்தாலும் கிடைத்திருக்கக் கூடும்.

பகிர்வுக்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
23-08-2011, 10:51 PM
இன்னம்பூரான், கீதம் ஆகியோருக்கு நன்றி!

சான்வி
24-08-2011, 04:50 AM
:lachen001::lachen001::lachen001:

ரசித்து வாசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

aren
24-08-2011, 04:55 AM
ஐயோ பாவம். கேட்கக்கூடாததைக் கேட்டு இப்படி மாட்டிக்கொண்டானே.

பேசாமல் எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்போது வேண்டும் என்று முதலிலேயே கேட்டிருக்கலாமே.

M.Jagadeesan
24-08-2011, 05:22 AM
சான்வி,ஆரென் ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு நன்றி!

vseenu
20-09-2011, 03:46 PM
நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி

M.Jagadeesan
21-09-2011, 03:15 AM
VSEENU அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

பிரேம்
21-09-2011, 12:05 PM
ஹி ஹி..பாவம்தான் அவரு..ரொம்ப அறிவாளி நெனப்பு போல..(என்ன இருந்தாலும் கடவுளுக்கு இவ்ளோ குசும்பு இருக்க கூடாது..)

redblack
27-09-2011, 06:49 AM
இதுக்குத்தான் கண்ட கண்ட கேள்வி கேட்டு கடவுளை சீண்டகூடாது.

M.Jagadeesan
27-09-2011, 07:42 AM
பிரேம்,REDBLACK ஆகியோருக்கு நன்றி!

sarcharan
27-09-2011, 11:33 AM
மனுஷன் எவ்வளவு பெரிய எத்தன். கடவுளை ஏமாற்ற நினைத்தான்.
கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர், அறிந்தவர் அல்லவா. அதனால் எத்தனுக்கு குடுத்தார் அல்வா..

VISHNU ROCKY77
02-10-2011, 05:01 AM
நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி

M.Jagadeesan
02-10-2011, 05:46 AM
சர்சரண்,விஷ்ணுராக்கி77 ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.