PDA

View Full Version : வழியைச் சொல்லிவிடு



கேசுவர்
22-11-2010, 11:01 PM
நகர மறக்கும் இரவுகளின் தனிமை
உன் காதோர கூந்தலின் ஸ்பரித்தை
எதிர்ப்பார்த்துக்கொண்டியிருக்கின்றன.

உன் எச்சிலை மட்டும் சுவைத்த
இதழுக்கு தண்ணீரின்
தரம் போதவில்லை

வெளிச்சத்துடன் எரிந்துக்கொண்டிருக்கும் என்
இரவுகளில்
உருக்கிக்கொண்டிருக்கும் என்னைத்
தீண்டிவிட்டாவது போயேன்,

முழுவதுமாக எரிந்துபோகிறேன் உன்னுள்
முடிவில்லாமல்...

பிரேம்
23-11-2010, 03:10 AM
கவிதை அருமை..
"வழியைச் சொல்லிவிடு" - நேரா போய்..லெப்ட் கட் பண்ணுங்க..ஹி..ஹி..:cool:

கேசுவர்
23-11-2010, 09:44 AM
நன்றி பிரேம்,

நான் ரைட்டா போகலாமுனு ஆசைப்படுறேன் :)

அமரன்
23-11-2010, 05:47 PM
துண்டு துண்டாய் வந்து விழுந்த மேகம் போலக் கவிதை!

காற்றுடன் காதல் வயப்பட்டு
எரியும் மெழுகுவர்த்தி
புகையாய்க் கலந்து விடுகிறது..

அது போலத்தான்
தனிமையும் காதல் நினைவுகளும்..

பாராட்டுகள்.

இன்னும் எழுதுங்கள்.

ஜனகன்
23-11-2010, 10:35 PM
சுமக்கவும் முடியாமல்!
சுகப்படுத்தவும்!
முடியாமல்...
ஒவ்வொருத்தர் வாழ்விலும் இருக்கிறது
நிறைய்ய வலிகள்.

தொடர்ந்து எழுதுங்கள்

கேசுவர்
24-11-2010, 04:54 PM
//தனிமையும் காதல் நினைவுகளும்..//

//ஒவ்வொருத்தர் வாழ்விலும் இருக்கிறது
நிறைய்ய வலிகள்.//

நன்றி அமரன் ஜனகன்,

காதலின் வலி தனிமைகளில் அதிகம் ஆதிகம் செய்கிறது.

ஆதவா
30-11-2010, 10:18 AM
ஒரு திருப்தியான காதல் கவிதை.
அதை அழகாக ஆரம்பித்தவிதம் பிடித்திருந்தது.

நகர மறுக்கும் இரவின் தனிமை
வெளிச்சத்தோடு எரியும் இரவு

போன்றவை ரசிக்கவைத்த வரிகள்.
பாராட்டுக்கள் கேசுவர்.

ஒரே ஒரு ஆலோசனை : எழுத்துப் பிழைகளை கவிதைகளில் சரிபார்த்துவிடுங்கள். இல்லையெனில் அர்த்தமே மாறிவிடும்.