PDA

View Full Version : நிஜமில்லா கனவுகள்



kulirthazhal
28-05-2010, 11:58 AM
என்
தூரகனவுகளை
துரத்திவருகிறாள்
தொலைந்துபோனவள்....

என்
முதுகுப்புற நிழலை
திரும்பிப்பார்பதில்லை...
நெருடலோ,
வருடலோ,
ஏதோ பதிந்தாலும்.....

நிச்சயம்
அங்கொன்றும்
நினைவுகளில்லை...
நிசப்த நிதர்சனமும்
அங்கில்லை...
அது
அமானுஷ்ய ஆவியுமில்லை...

அவள்
என்னை நினைப்பதுமில்லை....

-குளிர்தழல்.

கீதம்
28-05-2010, 10:56 PM
அவள் என்னை நினைப்பதில்லையென்று
அபாண்டமாய் பழிசொல்லாதே...
உன்னை நினையாமலா
உன் தூரக்கனவுகளைத் துரத்திவருகிறேன்?
தொடர்சங்கிலியென நீளும்
அவற்றைப் பற்றியவண்ணம்
தீராத துயரத்துடன் தேடியுன்னை
அடைந்தேன்!
என் சுண்டுவிரல் தீண்டும்
சுகமுணர்ந்தாலும், திரும்பமறுத்து
பிடிவாதம் காட்டிப்புலம்புகிறாய்
அவளென்னை நினைப்பதில்லையென்று!

அபாரம்! பாராட்டுகள், குளிர்தழல்.

சுடர்விழி
29-05-2010, 01:27 AM
அருமையான கவிதை குளிர்தழல்...பாராட்டுக்கள்..கீதம் அவர்களின் பின்னூட்டக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.....

kulirthazhal
29-05-2010, 04:40 AM
அவள் என்னை நினைப்பதில்லையென்று
அபாண்டமாய் பழிசொல்லாதே...
உன்னை நினையாமலா
உன் தூரக்கனவுகளைத் துரத்திவருகிறேன்?
தொடர்சங்கிலியென நீளும்
அவற்றைப் பற்றியவண்ணம்
தீராத துயரத்துடன் தேடியுன்னை
அடைந்தேன்!
என் சுண்டுவிரல் தீண்டும்
சுகமுணர்ந்தாலும், திரும்பமறுத்து
பிடிவாதம் காட்டிப்புலம்புகிறாய்
அவளென்னை நினைப்பதில்லையென்று!

அபாரம்! பாராட்டுகள், குளிர்தழல்.

ஒத்த சிந்தனையோடு எழுதிய வரிகள் வேறு தளத்திலிருந்து வந்ததால் ரசிக்கிறேன்... அது பெண்பால் தளம்... நல்ல தளத்தில் ஒட்டி வந்த வரிகளை சிறப்பானவை....

அவன் திரும்பாமல் இருப்பது பயத்தினால்... அவள் நினைப்பதில்லை என்பது சுய சமாதானம்... காதல் என்றும் மறந்துபோகாது... பயமும் சுய சமாதானமும் பிரிவை வலிமையாக்கி தூர கனவுகளுக்கு கூட்டி செல்கிறது.... இலட்சியங்கள் பிரிவினிற்கு தண்ணீர் ஊற்றும்போது தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் பொய்கள் மருந்துகள்... அது ரசிக்கும்படி இருப்பதில்லை... கவிதை ரசிக்கும்படி இருந்ததாக நம்புகிறேன்..... நன்றி கீதம் அவர்களே......

பாரதி
13-06-2010, 09:08 AM
கனவுகள் என்றாலே உண்மையில்லையே..?
தூரக்கனவுகளை துரத்துபவரிடம் ஒப்படையுங்கள்.
வரிகளில் வலி வழிகிறது.
எழுதுங்கள் நண்பரே.