PDA

View Full Version : அறிவு



குணமதி
14-02-2010, 03:52 PM
அறிவு


எளிமையா யிருப்பது சிறப்பு!...

என்றாலும் அது மடமை என்கிறது அகராதி!

போர்க்குணம் பெரியது!...

என்றாலும் பொறுமை நன்று என்கிறது அறநூல்!

எங்கு...

எப்போது...

எப்படி...

தீர்மானி அறிவே!

ஆர்.ஈஸ்வரன்
15-02-2010, 08:53 AM
அறிவு


எளிமையா யிருப்பது சிறப்பு!...

என்றாலும் அது மடமை என்கிறது அகராதி!

போர்க்குணம் பெரியது!...

என்றாலும் பொறுமை நன்று என்கிறது அறநூல்!

எங்கு...

எப்போது...

எப்படி...

தீர்மானி அறிவே!

அங்கு
அப்போது
அப்படி

வாழ்த்துக்கள்

ஜனகன்
15-02-2010, 10:04 AM
சிந்திக்க வைக்கும் கவிதைதான்.சிந்திப்போம்..........
சிந்திப்போம்.............

குணமதி
15-02-2010, 12:07 PM
அங்கு
அப்போது
அப்படி

வாழ்த்துக்கள்

நன்றி.

குணமதி
15-02-2010, 12:08 PM
சிந்திக்க வைக்கும் கவிதைதான்.சிந்திப்போம்..........
சிந்திப்போம்.............

நன்றி நண்பரே.

இன்பக்கவி
15-02-2010, 01:28 PM
நன்றாக இருக்கிறது
நிறைய விசயங்கள நம்மை குழப்பவதாக தான் இருக்கிறது

சிவா.ஜி
15-02-2010, 01:59 PM
உண்மைதான் எங்கு, எப்போது, எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவு தரும் அறிவு இருந்தால் நலமுடன் வாழலாம்.

நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள் குணமதி.

குணமதி
15-02-2010, 03:45 PM
நன்றாக இருக்கிறது
நிறைய விசயங்கள நம்மை குழப்பவதாக தான் இருக்கிறது


அறிவால்தான் தெளிவுபெற வேண்டும்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
15-02-2010, 03:45 PM
உண்மைதான் எங்கு, எப்போது, எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவு தரும் அறிவு இருந்தால் நலமுடன் வாழலாம்.

நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள் குணமதி.

மிக்க நன்றி.

அக்னி
12-03-2010, 06:56 AM
முள் தைத்த கால் ‘விருட்’ என்று தூக்கியபோது
அடுப்புச் சூடுபட்ட கை ‘சட்’ என்று நகர்ந்தபோது
தானியங்குகின்றது அறிவு...

முள் நிறைந்த பாதையில் காலை வைக்கலாமா
பற்றியெரியும் தீச் சுவாலைக்குள் கையை விடலாமா
அறிந்துதான் இயங்கவேண்டும்...

தருணத்திற்கேற்ப இயங்கட்டும் அறிவு...

பாராட்டு...

குணமதி
12-03-2010, 11:30 AM
நன்றி அக்னி.

கலையரசி
12-03-2010, 12:24 PM
இடத்திற்கேற்றாற் போல் காலத்திற்கேற்றாற் போல் சிந்தித்துச் செயல்படுவதே அறிவு.
சிந்திக்க வைக்கும் கவிதை. நன்று.

குணமதி
13-03-2010, 01:29 AM
*** இடத்திற்கேற்றாற் போல் காலத்திற்கேற்றாற் போல் சிந்தித்துச் செயல்படுவதே அறிவு.***

சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி.

கீதம்
13-03-2010, 08:43 PM
அறிவின் வேலை அதுதானே? நல்லது இது, கெட்டது இது என்று பகுத்தறிவதைப்போல் இந்த நேரத்தில், இந்த இடத்தில், இந்த சூழ்நிலையில் எது நல்லது என்பதையும் அறிந்து நடந்தால் வாழ்வில் பெரும் இடர்களைத் தவிர்க்கலாமே!

நல்லதொரு சிந்தனைக்குப் பாராட்டுகள், குணமதி அவர்களே.

அமரன்
13-03-2010, 09:30 PM
அறிந்து கொள்ளல்தானே அறிவு.

இராணுவவீரன்.. கொலைகாரன்...

செயல் ஒன்று.. முகாந்திரம் வேறு.

பாராட்டு.

குணமதி
14-03-2010, 11:52 AM
நன்றி கீதம் அவர்களே.

குணமதி
14-03-2010, 11:52 AM
நன்றி அமரன்.