PDA

View Full Version : இன்னும் ஓர் இரவு...



சசிதரன்
19-12-2008, 04:14 AM
சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...

சிவா.ஜி
19-12-2008, 04:20 AM
உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
.

மிக அருமையான வரிகள். தனிமையின் கொடுமையை, சொல்லும் வரிகள்...வலியை உணர்த்துகின்றன. மன்றத்தில் உங்கள் முதல் கவிதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இனி உங்களுக்குத் தனிமையில்லை. நிறைய உறவுகள் உள்ள ஒரு குடும்பமே உங்களுடன் உள்ளது. மேலும் பல படைப்புகளை பதித்து எங்களை மகிழ்வியுங்கள்.

aren
19-12-2008, 04:39 AM
வாவ்!!! வந்தவுடனேயே அருமையான ஒரு கவிதை. பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

Narathar
19-12-2008, 05:41 AM
மிக அருமையான வரிகள். தனிமையின் கொடுமையை, சொல்லும் வரிகள்...வலியை உணர்த்துகின்றன. மன்றத்தில் உங்கள் முதல் கவிதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இனி உங்களுக்குத் தனிமையில்லை. நிறைய உறவுகள் உள்ள ஒரு குடும்பமே உங்களுடன் உள்ளது. மேலும் பல படைப்புகளை பதித்து எங்களை மகிழ்வியுங்கள்.

நான் செய்ய quote நினைத்த வரிகளையே quote செய்துள்ளார் சிவா.ஜி அவர்களும்.......

தனிமையின் வலியை உணர்த்தும் மிக அற்புதமான வரிகள்.

வாழ்த்துக்கள் தொடரவேண்டும் மன்றத்தில் உங்கள் கவி மழை!

Keelai Naadaan
19-12-2008, 10:06 AM
தனிமையின் வலியை சொல்லும் அழகிய வரிகள்.

சுஜா
19-12-2008, 10:14 AM
அருமையான....அருமையான....
அருமையான....
அருமையான....
அருமையான....
அருமையான....
அருமையான....
அருமையான....
அருமையான....
அருமையான....கவிதை;வாழ்த்துகள் .

நிரன்
19-12-2008, 10:51 AM
உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

..

உறங்கிப்போகின்றன என் கண்கள்
அதில் இறங்கிச் செல்கிறது...உன் கனவும் என் கண்ணீரும்

நன்றாக உள்ளது கவி வரிகள் சசிதரன் அவா்களே....
உங்கள் முதல் பதிவே முத்துப்போல் இருக்கிறது.
மன்றத்திற்கு ஒரு புதிய கவிஞா் வந்ததையொட்டி என் மனம் ஆனந்தக்கடலில் மூழ்கிறது.... தொடா்ந்தும் படையுங்கள் காத்திருக்கிறோம் காதல் காவியங்களுக்காக.......

அக்னி
19-12-2008, 11:10 AM
தனிமையைக் கரைக்கச்
சக்தியற்ற கண்ணீர்,
வெளியேறி,
மூழ்க வைக்கும் கொடுமை...

வலி சொல்லும் வரிகள்.

மற்றோர் மேற்கோளிட்ட வரிகள், என்னையும் வெகுவாகக் கவர்ந்தது.

5 நட்சத்திரக் கௌரவிப்பும், 250 இ-பண அன்பளிப்பும் வழங்கி மகிழ்கின்றேன்.

மிகுந்த பாராட்டுக்கள் சசிதரன் அவர்களே...

சசிதரன்
19-12-2008, 04:14 PM
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே...உங்கள் வாழ்த்துக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன்...:)

அமரன்
02-01-2009, 07:51 AM
தனிமைக்கும் ஏகாந்தத்துக்கும் என்வரையில் வித்தியாசம்- தனிமை எதுவுமற்ற நிலை.. ஏகாந்தம் நினைவாலயத்தின் பிரகாரம்.

அங்கே கனவுகளின் நகைப்பொலி மணியோசையாய் தோன்றும். இயற்கையின் பேச்சு மந்திர உச்சாடனமாய் தோன்றும். நினைவுகளின் தழுவல் அரசமர தென்றலாய் ஆகும்.. அப்போதும் கண்கள் கசியும் ஆனந்தமாக.

தனிமையை ஏகாந்தமாக மாற்றுவது நம்கையில், நம்பிக்கையில்.
சொல்வது எளிது. செய்வது கடிது. ஆனாலும் முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

சொற்தடங்களின் வழியாகப் பாயும் வலிகளும் கரையோர நாணல்களும் கண்ணுக்குத் தெரிவது கவிதையின் சிறப்பு. பாராட்டுகள் சசிதரன்.

v.pitchumani
02-01-2009, 07:57 AM
தனிமை பற்றிய அருமையான கவிதை
பிச்சுமணி

shibly591
02-01-2009, 08:02 AM
உங்களது இந்தக்கவிதையை படிக்கும்போது மனசில் Nடீதா ஒரு இனம்புரியாத வலி கூடவே உட்கார்ந்து விடுகிறது...

அதுதான் உங்கள் கவிதையின் வெற்றி

வாழ்த்துக்கள் சசிதரன்..