PDA

View Full Version : விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு



Pages : [1] 2 3

அறிஞர்
14-08-2008, 09:29 PM
அன்பு உறவுகளே...

நீண்ட விடுப்பில் செல்வதென்றால் இங்கு தெரிவியுங்கள்.

சிவா.ஜி
27-08-2008, 09:57 AM
பணி மாறுதலுக்காக..சவுதியிலிருந்து அமீரகம்(துபாய்) செல்கிறேன். செப்டம்பர் 15 ஆம் தேதிவரை மன்றம் வருவது சிரமமாக இருக்கும். பணியேற்றுக்கொண்டவுடன் மீண்டும் வருவேன்.

அமரன்
27-08-2008, 10:50 AM
இந்தப் பதிவேட்டில் முதலானது போல வேலைத்தளத்திலும் முதல்வனாக வாழ்த்துகள். நல்லபடியாக மன்றம் திரும்பிவரவும் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
27-08-2008, 10:56 AM
உங்கள் முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி அமரன். நிச்சயம் வருவேன். வராம.........???

பாரதி
27-08-2008, 01:16 PM
வாருங்கள் சிவா. இனிய வாழ்த்து.

நேசம்
27-08-2008, 03:12 PM
சிவா அண்ணா பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

ஓவியன்
27-08-2008, 04:25 PM
அமீரகமா, அப்படியே பக்கத்தில் நம்ம நாட்டுக்கும் வந்திட்டு போறது...!! :)

பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும்......

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-08-2008, 04:28 PM
பயணம் இனிதே நிறைவேறி வெற்றிகரமாய் மன்றம் திரும்பிட வாழ்த்துக்கள்.

இளசு
27-08-2008, 04:57 PM
புதுப்பணியில் இன்னும் சிறக்க வாழ்த்துகள் சிவா!

ஆதி
27-08-2008, 05:02 PM
நற்பயணமாய் அமைந்து.. சேரும் வேலை செம்மையாய் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா..

அறிஞர்
27-08-2008, 07:42 PM
பயணம், வேலை சிறப்பாக அமையட்டும் சிவா.ஜி.

ஓவியா
27-08-2008, 07:44 PM
புதிய வேலைக்கு என் வாழ்த்துக்கள் சிவா.ஜி அண்ணா,

முதல் மாசம் சம்பளம் எடுத்ததும் முழுவதையும் மறவாமல் எனக்கு அனுப்பி வைத்து விடுங்கள்.......:p

செல்வா
27-08-2008, 11:11 PM
வாழ்த்துக்கள் அண்ணா..... :)

:traurig001::traurig001::traurig001::traurig001:

சிவா.ஜி
28-08-2008, 04:26 AM
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனம்நிறைந்த நன்றி. புது வேலையைவிட பாரதி, அன்பு, சுபி இவர்களையெல்லாம் சந்திக்க முடியுமே என நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சுகந்தப்ரீதன்
28-08-2008, 04:45 AM
அண்ணா... சொல்லவே இல்லியே.. இங்க வரேன்னு இதுவரை என்கிட்டக்கூட..!!

சரி..சரி.. இப்பவே சண்டை வேணாம்... வாங்க நீங்க... அப்புறமா மத்ததையெல்லாம் பேசிக்கலாம்..!!

சிவா.ஜி
28-08-2008, 05:47 AM
உறுதியான பிறகு சொல்லிக்கொள்ளலாமென்றிருந்தேன் சுபி. இப்ப என்ன? அங்க வந்து பஞ்சாயத்து வெச்சுக்கலாம்.

அமரன்
28-08-2008, 07:57 AM
உறுதியான பிறகு சொல்லிக்கொள்ளலாமென்றிருந்தேன் சுபி. இப்ப என்ன? அங்க வந்து பஞ்சாயத்து வெச்சுக்கலாம்.

இப்படியா..
:ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004:

சுகந்தப்ரீதன்
28-08-2008, 08:08 AM
இப்படியா..
:ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004::ernaehrung004:அண்ணே.. உங்களை நாட்டாமைன்னு சொன்னதுக்கு இப்படியா.. அவையில வச்சி எங்களை விசாரிக்கறது..??:icon_p::icon_p::icon_p:

அக்னி
28-08-2008, 06:56 PM
புதிய இடத்தில்,
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்... :080402gudl_prv:

அங்கையாச்சும்,
தமிழ்மன்றத்தை (ஆபீஸ்ல),
பிளாக் பண்ணாம வச்சிருப்பாங்களா...
அங்கையாச்சும்,
யாராச்சும்,
வலர்லெஸ்ஸத் திறந்து வச்சிருப்பாங்களா...
:icon_hmm:
யோசிப்பது சிவா.ஜி... வாசிப்பது நீங்கள்...

மதுரை மைந்தன்
28-08-2008, 07:14 PM
மன்ற நண்பர்களே,

புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன். வரும் செப்டம்பர் 6ம் தேதி வாஷிங்டனிலிருந்து கிளம்பி வழியில் பீனிக்ஸ் நகரத்தில் எனது மகளைப் பார்த்து விட்டு சான் பிரானசிஸ்கோ வழியாக மெலபோர்ன் நகருக்கு செல்கிறேன். மன்றத்தில் இடையிடையே நேரம் கிடைக்கும் போது வருவேன்.

அக்னி
28-08-2008, 07:28 PM
பயணம், வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்...

மன்றம் வர ஏதுவான சாத்தியப்பாடுகள், விரைவில் உங்களுக்கு அமையட்டும்...
மதுரை வீரன் அவர்களே... விரைந்து மன்றம் வாருங்கள்...

அமரன்
28-08-2008, 07:43 PM
நேரம் கிடைக்கும் போது மன்றம் வாருங்கள் மதுரை வீரன். புதிய தங்கிடம், புதிய பணியிடம்.. எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

ஓவியன்
29-08-2008, 05:36 AM
பயணம் இனிதே அமையட்டும் மதுரை வீரன்..!!

அன்பு உறவுகளுடன் இருக்கப் போகும் தருணங்கள் சந்தோசமாக அமைய என் வாழ்த்துக்களும்...!! :)

மதி
29-08-2008, 06:32 AM
பயணம் நல்லபடி அமையட்டும். பீனிக்ஸ்..எனக்கு கொஞ்சம் நெருக்கமான ஊர் வேற.. :)

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு சேர்ந்தபின் மன்றம் தொடர்ந்து வாருங்கள். உங்கள் தொடர் பாதியில் நிற்கிறது.. :)

தாமரை
29-08-2008, 07:10 AM
புதிய இடங்களில் கூடுகட்டும் பறவைகளுக்கு வாழ்த்துக்கள்..

வேடந்தாங்களுக்கு வரும் பறவைகள் கூடுகட்ட சரியான இடம் தேர்ந்தெடுத்து, கவன்ம் செலுத்து கூடுகட்டி தங்கள் இருப்பை கவனமாய் செய்துகொள்வது போல, நீங்களும் கவனம் செலுத்தி உங்கள் இருப்பை ஸ்திரப்படுட்திக் கொள்ளுங்கள். உங்கள் மீள்வரவிற்காய் காத்திருப்போம்.

நம்பிகோபாலன்
29-08-2008, 09:57 AM
உங்களின் பயணம் இனிதே அமையட்டும் மதுரை வீரன்..!!! வாழ்த்துக்கள்..

pgk53
31-08-2008, 09:13 AM
அன்பு நண்பர்களே......மூன்று வாரங்கள் விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
அடுத்த மாத இறுதியில் சந்திப்போம்.
அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துக்கள்.

ஓவியன்
31-08-2008, 10:00 AM
சென்று வாருங்கள் அண்ணா..!!
தாயகப் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும்....

இளசு
31-08-2008, 11:52 AM
நல்லமுறையில் விடுப்பைக் கழித்து வாருங்கள் பிஜிகே அவர்களே!

அறிஞர்
02-09-2008, 02:17 PM
பி.ஜி.கே பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஓவியா
02-09-2008, 05:43 PM
அன்பு நண்பர்களே......மூன்று வாரங்கள் விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
அடுத்த மாத இறுதியில் சந்திப்போம்.
அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துக்கள்.

அண்ணா,
எல்லோரும் போல நான் வாழ்த்த போவதில்லை, மாறாக திட்ட வந்தேன். ஐயா வருவெதே ஆடிக்கும் அம்மாவாசைக்கும் இதிலே லீவுவேற.. :cool::cool::cool:.

ஓ ரமலான் விடுப்பா, சரி சரி சந்தோஷமா போய் வாருங்கள்.
விட்டில் அனைவரிடமும் தமிழ் மன்ற மக்களில் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

இனிய ரமலான் வாழ்த்துக்கள் அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-09-2008, 06:04 PM
எனது அலுவலகப் பணி மாற்றப்பட்டிருப்பதால் சிறிது நாள் மன்றத்திற்கு வர இயலாது. எனவே இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி எனது மொக்கைகளை படிக்கும் துன்பமின்றி மகிழ்சசியாக சிறிது நாள் இருந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அமரன்
02-09-2008, 08:04 PM
அடுத்து சில நாட்களுக்கு புதிரோ புதிரும் நல்ல கவிதைகள் சிலவும் காணக்கிடைக்காதா என்ற ஏக்கம் குடி வந்துவிட்டது. இருவருக்கும் இனிமையான மன்ற விடுப்புக் காலம் அமைய வாழ்த்துக்கள்.

ஓவியன்
03-09-2008, 05:02 AM
அன்பின் ஜூனைத், நீங்கள் மீள மன்றம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.....

அக்னி
03-09-2008, 03:19 PM
pgk அவர்களின் விடுமுறை சிறப்பாக அமையவும்,
ஹஸனீ அவர்களின் பணிமாற்றம் நல்லபடியாக அமையவும்,
வாழ்த்துகள்...

தீபா
16-09-2008, 04:22 PM
பெரும்பான்மையான நேரங்களில் தேடலே பெரும்பான்மையாக இருப்பதால் எழுத முடிவதில்லை. அப்படியே அவசரமாக எழுத நமக்கும் வாய்க்கவில்லை. அப்படியே எழுதாமல் நட்டமுமில்லை. கூடி கும்மியடிக்க சில காலம் ஆனாலும் கும்மியடிப்பதை வேடிக்கை பார்க்கவேனும் வருகிறேன்... :D

நேரம் ஒதுக்க முடிந்தால் அவ்வப்போது எழுதுகிறேன். :icon_b:

அன்புடன்
தென்றல்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-09-2008, 06:16 PM
என் உயிரினும் மேலான எனது அன்புச் சகோதரரர்களுக்கு. சற்று பணி நிமித்தம் காரணமாக என்னால் அதிகம் மன்றத்திற்கு வர இயல்வதில்லை. மனங்க கவர் பதிப்பாளர் பட்டயமெல்லாம் வழங்கி உள்ளீர்கள். எனது திறமையை மெருகேற்றிக் கொள்ள் நீங்கள் அனைவரும் எனது ஒவ்வொரு உறுப்பாய் செயல்பட்டு உள்ளீர்கள் . இன்னும் சிறிது நாட்களுக்டகு முழுமையாக என்னால் மன்றம் வர இயலாது. இடை இடையே வந்து அவ்வப்போது கவிதை வழங்குகிறேன். இதற்காக தயவ கூர்ந்து என்னை மன்னிக்கவும். இந்த அன்புச் சகோதரனை எப்பொழுதும் போல் வழி நடத்தித் தாருங்கள். நன்றி.

அக்னி
18-09-2008, 08:16 PM
தேடல்களினாலேயே, நிறைவான படைப்புக்களை நிரம்பத் தர முடியும்.
சுமந்து வரப்போகும் தென்றலுக்காகக் காத்திருப்போம்.

பணி சிறக்க வாழ்த்துகள்...

*****

எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களே...
தங்களது தொடர்ச்சியான மன்ற வருகைக்குக், காலம் அனுமதிக்கட்டும்.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

ஓவியா
18-09-2008, 08:53 PM
கவலை வேண்டாம் நண்பரே.

நேரம் கிடைக்கும் பொழுது வாருங்கள். படியுங்கள், படையுங்கள்.

என்றும் வெற்றித்திருமகணாக திகழ வாழ்த்துக்கள்.

***********************************************************************************************************************************

ஆமாம் ஏன் சுனிதின் பெயருக்கு மனக்கவர் பதிவாளர் வர்ணம் (ஆரஞ்சு) பூசப்படவில்லை?

தீபன்
19-09-2008, 12:52 AM
நல்லது நண்பரே. உங்கள் பணி சிறக்க வழ்த்துக்கள்.

மதுரகன்
21-09-2008, 02:13 AM
மன்னிக்கவும் அவசரமாக கொழும்பு வந்துவிட்டேன் பரீட்சை ஒன்றுக்காக..
25 அக்டோபர் வரை ஒரு நீண்ண்டடட விடுப்பு...

சூரியன்
21-09-2008, 02:35 PM
அதிக பணிப்பழு காரணமாக 15 நாள் விடுப்பில் செல்கின்றென்.
முடிந்தவரை விரைவில் மன்றம் வர முயற்சி செய்கிறேன்.

தீபன்
22-09-2008, 03:01 AM
சூரியனே போகிறதா... இப்ப மன்றம் இருட்டில்தானா... சரி சரி, விரைவில் திரும்புங்கள். (ம்ம்ம், இப்ப மன்றில் ஆதவனுமில்லை... சூரியனுமில்லை...)

அக்னி
22-09-2008, 03:08 AM
சூரியனே போகிறதா... இப்ப மன்றம் இருட்டில்தானா... சரி சரி, விரைவில் திரும்புங்கள். (ம்ம்ம், இப்ப மன்றில் ஆதவனுமில்லை... சூரியனுமில்லை...)
அதான் தீபமாய் நீங்க இருக்கீகளே...

*****

பரீட்சையை நன்றாக எழுந்துங்கள் மதுரகன்.
வாழ்த்துகள்...

*****

பணிச்சுமை சீக்கிரமே குறையட்டும்.
சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள் சூரியன்...

ஓவியன்
22-09-2008, 04:31 AM
சூரியன், மதுரகன் உங்கள் இருவரது விடுமுறைகளும் பயன் மிக்கதாக அமைய என் வாழ்த்துகளும்.......


அதான் தீபமாய் நீங்க இருக்கீகளே...
:icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b:

shibly591
26-09-2008, 10:11 AM
கொழும்பில் இருந்து ஊருக்கு கொஞ்ச நாட்கள் எங்கள் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் தொடர்ந்து இணைய முடியாமல் போகலாம்..ஆயினும் 2-3 நாட்களுக்கு ஒரு தடவை மன்றத்துடன் இணைவேன்..

தடங்கல்களுக்கு மன்னிக்கவெண்டும்..

மன்றமே எனது சுவாசம் ஆதலால் முடியுமானபோது இணைய தயாராகவுள்ளேன்..

மற்றபடி இது நீண்ட பிரிவு இல்லை..

நன்றிகள்..

ஓவியன்
26-09-2008, 11:58 AM
சென்று வாருங்கள் ஷிப்லி..!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்..!! :)

அமரன்
26-09-2008, 05:10 PM
ஷிப்லி...
மன்றத்தின் பெருநாள் வாழ்த்தை உங்கள் குடும்பத்தாருங்கு சொல்ங்கள். களிப்புடன் திரும்பிவாருங்கள்.

பாண்டியன்
23-10-2008, 08:46 AM
பயணம் இனிதே நிறைவேறி வெற்றிகரமாய் மன்றம் திரும்பிட வாழ்த்

ஓவியா
23-10-2008, 07:41 PM
கொழும்பில் இருந்து ஊருக்கு கொஞ்ச நாட்கள் எங்கள் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் தொடர்ந்து இணைய முடியாமல் போகலாம்..ஆயினும் 2-3 நாட்களுக்கு ஒரு தடவை மன்றத்துடன் இணைவேன்..

தடங்கல்களுக்கு மன்னிக்கவெண்டும்..

மன்றமே எனது சுவாசம் ஆதலால் முடியுமானபோது இணைய தயாராகவுள்ளேன்..

மற்றபடி இது நீண்ட பிரிவு இல்லை..

நன்றிகள்..

மன்றத்தை நேசித்த அனைவரும் இந்த மந்திரத்தைதான் ஜபிப்பார்கள்..
இந்த வார்த்தையை மனதில் வைத்துதான் '''சுவாசம்=காற்று=ஆவி''' இங்கு பல மாறுவேட ஆவிகளும் உலாவருகின்றன,
:D:D எல்லாம் மன்றத்தின் மேல் வைத்துள்ள காதல்தான். :redface::redface:

ஷிப்லிக்கு ரமடன் முடிந்து இன்னும் 2நாளில் தீபாவளி கொண்டாட போராறே :D

சூரியன்
24-10-2008, 01:03 PM
பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா.

ரங்கராஜன்
24-10-2008, 03:50 PM
அனைவருக்கும் வணக்கம்,

நண்பர்களே, என்னுடைய ANIMATION தேர்வு வருவதினால், நான் நாளை (25/10/08) முதல் (11/11/08) வரை விடுப்பில் செல்கிறேன், அதனால் என்னால் நம் மன்றத்திற்க்கு படைப்புகளை சமர்ப்பிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், யாரும் இதை பாட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம் (அப்பாடா இனிமே எழுத்து பிழையுடன் தப்பு தப்பா சிறுகதை வாராது என்று) , ஹா ஹாஹா.
நான் மன்றத்தில் சேர்ந்து இன்றுடன் மூன்று நாட்கள் தான் ஆகிறது, இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து விடுப்பு கொடுங்கள்.

அமரன்
24-10-2008, 04:03 PM
மூர்த்தியின் தீபாவளி விருந்து எமக்குக் கிடையாதா?
பரவாயில்லை மூர்த்தி. சென்று வென்று இன்னும் பல படைப்புகளுடன் திரும்பி வாருங்கள்.

shibly591
24-10-2008, 04:44 PM
நெருங்கிப்பழகிய நண்பரை பிரியம் வருத்தத்தை மூன்று நாட்களே பழகிய நீங்கள் தந்திருப்பதில் புரிகிறது..உங்கள் நட்பு மனப்பான்மை..

பரீட்சை வெற்றியடைய வாழ்த்துக்கள்

இளசு
14-11-2008, 09:55 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்,

மூன்று வார விடுப்பில் தாயகம் செல்கிறேன்..

டிசம்பர் 7 திரும்புகிறேன்..

அதன்பின் மன்றவருகை வழமைபோல் இருக்கும் என நம்புகிறேன்..

பாரதி
15-11-2008, 12:40 AM
அன்புள்ள அண்ணா,
உங்கள் பயணமும் விடுமுறையும் இனிதே அமைய வாழ்த்துகிறேன்.

ஓவியன்
15-11-2008, 01:45 AM
அன்பின் அண்ணா, தாயகப் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்....

அமரன்
16-11-2008, 09:01 PM
அன்புள்ள அண்ணா!
பயணம் இனிதே அமைக.

நீங்கள் விடுப்பு முடிந்து வந்து
வழக்கம் போல் மன்றம் வளமாகும்
நாளுக்காக ஆவலுடன் காத்திருகிறேன்.

ஓவியா
16-11-2008, 10:22 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்,

மூன்று வார விடுப்பில் தாயகம் செல்கிறேன்..

டிசம்பர் 7 திரும்புகிறேன்..

அதன்பின் மன்றவருகை வழமைபோல் இருக்கும் என நம்புகிறேன்..

என்னது டிசம்பர் 7 ஆ, :eek::eek::eek:

சரி ஆனந்தமாக கழித்து வாருங்கள்.

(மக்கா, டிசம்பரில் மன்றத்தில் யாருக்கோ கல்யாணம்னு பேச்சு அடிபடுதே, வதந்தி உண்மையா இருக்குமோ :D:D:D)

சூரியன்
17-11-2008, 10:30 AM
வேலை விசயமாக ஒரு வார விடுப்பில் செல்கின்றேன்.
விரைவில் மன்றம் வருவேன்.

Narathar
17-11-2008, 10:38 AM
இளசு மற்றும் சூரியனது
விடுமுறை இனிதே கழிய
வாழ்த்துகின்றேன்

சிவா.ஜி
17-11-2008, 11:23 AM
இளசு நாட்டிலிருக்கும் நேரத்திலும், மன்ற மணிகள் கூடும் நாளிலும் அங்கிருக்க முடியாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது.

இளசு தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.

சூரியனின் விடுப்பும் பயனுள்ளதாய் அமைய வாழ்த்துகள்.

mukilan
28-11-2008, 09:06 PM
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?

ஓவியா
28-11-2008, 10:01 PM
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?

சென்று வாருங்கள் கலத்தில் வென்று வாருங்கள்...... :icon_b:

வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த உண்ணத உணர்வுகளை அப்படியே சேமித்து, அகமகிழ்ந்து, இன்பமாய் மீண்டும் எங்களுடன் வந்து இணைய என் வாழ்த்துக்கள்.

என்னது ஊரில் இணைப்பு இல்லையா....... (லைன் ;) கொடுத்தாச்சுனு நினைச்சேன்) .... யோசித்து வாய் விட்டே சிரித்து விட்டேன்.... :lachen001::lachen001:

தீபா
29-11-2008, 03:01 AM
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?

உண்மையாவா? என்னால நம்பமுடியலை!!!!! :aetsch013:

தென்றல் : தவளை!! தவளை!!
ஓவி : ஆவ்வ்வ்வ்வ்

மதி
29-11-2008, 03:05 AM
சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் முகில். :)

சிவா.ஜி
29-11-2008, 03:20 AM
முகிலின் தாயக பயணம் இனிதே நடைபெற வாழ்த்துகள். கூடிய விரைவில் இணைப்பு கிடைக்க வாழ்த்துகள்(இணைய இணைப்புதானுங்கோ....)

செல்வா
04-12-2008, 12:57 PM
நானும் ஊருக்குப்போறேனுங்க... ஒரு மாதம் விடுமுறை.
எங்கள் ஊர் இணைய வசதி எந்தளவிற்கு இருக்கிறதென்றுத் தெரியவில்லை... அதைப்பொறுத்தே எனது மன்ற வருகை இருக்கும்.
எல்லாருக்கும் முன்கூட்டியே கிறிஸ்துபிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.

அமரன்
04-12-2008, 01:26 PM
சென்று வாங்க பொறுப்பாளர்களே!

அக்னி
04-12-2008, 02:21 PM
அனைவருக்கும் விடுமுறை இனிதாக, இன்பமாக அமைய வாழ்த்துகள்.

மதி
04-12-2008, 03:42 PM
வாங்க செல்வா... சந்திக்க காத்திருக்கிறோம்.

ரங்கராஜன்
04-12-2008, 04:07 PM
பொறுப்பாளரே பொறுப்பா போய்டு திரும்பி வாங்க

ஓவியா
04-12-2008, 04:40 PM
நானும் ஊருக்குப்போறேனுங்க... ஒரு மாதம் விடுமுறை.
எங்கள் ஊர் இணைய வசதி எந்தளவிற்கு இருக்கிறதென்றுத் தெரியவில்லை... அதைப்பொறுத்தே எனது மன்ற வருகை இருக்கும்.
எல்லாருக்கும் முன்கூட்டியே கிறிஸ்துபிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.

போய்ட்டு சந்தோசமா வாங்க.

வந்ததும், ஊரிலே என்னென்ன செய்சீங்கனு விவரமா எழுதுங்க... அதான் அந்த 'மெட்ராஸ் மீட்டீங்' அததான் சொன்னேன்.

உங்கள் ரகசியமா கவனிக்க ஆள் அனுப்பியிருக்கேன், கொஞ்சம் கவனமா இருங்க. ம்ம் சும்மா சும்மா.

மன்றத்த மறந்துட்டு குடும்பத்தாருன் ஆனதமாக குதுகளிக்க என் வாழ்த்துக்கள்.

பை டா டா.

அமரன்
04-12-2008, 08:12 PM
பை டாடா.
இதென்னது டாடா சுமோ ன்னு பயமுறுத்திட்டு..

அவரு கமெராவோட போறாராரம் எல்லாத்தையும் சுட்டுத் தள்ள

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-12-2008, 04:19 PM
என் உயிரினும் மேலான அன்பு மன்ற உள்ளங்களுக்கு. மிக நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தொடர்பு விட்டுப் போனதற்காக தங்களிடம் மன்னிப்பும் கோருகிறேன். இப்பொழுதும் மிகச் சரியாக மன்ற வருகை புரியும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் ஓரிரு நாட்களுக்கு ஒரு முறையாவது வர முயற்சி செய்கிறேன

அமரன்
05-12-2008, 04:56 PM
வாங்க சுனைத்!
வாய்ப்பு அமையும் போதெல்லாம் வருகை புரியுங்கள்.

சிவா.ஜி
06-12-2008, 05:04 AM
போய்ட்டு நல்ல நிழற்படங்களோட திரும்பி வாங்க செல்வா. வந்ததும் ஒரு பதிவு போடுங்க எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படுத்துற மாதிரி....

விக்ரம்
06-12-2008, 12:21 PM
போய்ட்டு நல்ல நிழற்படங்களோட திரும்பி வாங்க செல்வா. வந்ததும் ஒரு பதிவு போடுங்க எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படுத்துற மாதிரி....
செல்வா எடுக்கற நிழற்படமா? அல்லது செல்வாவின் திருவிளையாடல்களை மற்றவங்க எடுக்கற நிழற்படமா?

ஜாக்கிரதை செல்வா!

இராஜேஷ்
08-12-2008, 02:14 AM
நன்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டேன், விடுப்பு பதிவேட்டில் பதியாமல் சென்றதற்கு மண்ணிக்கவும்.

இதொ வந்துவிட்டேன் பலபுதிய படைப்புக்கலோடு. என்னை எற்றுக்கோள்ளுங்கள் நன்பர்களே!!!!!!!!

pgk53
12-12-2008, 01:15 AM
அன்பு நண்பர்களே....அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் விடுமுறையில் தாயகம் புறப்பட உள்ளேன்.
ஒரு மாதம் கழித்து புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம்.
அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வணக்கம்.

ஓவியா
14-12-2008, 01:25 PM
அன்புள்ளங்களே, பாசமிகு சான்றோர்களே, என் நேசமிகு சகோதர உறவுகளே, அன்பி இனிய மகளீரணி சகோதரிகளே,

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

உங்கள் அனைவரையும் மிகவும் 'மிஸ்' பண்ணுவேன். இப்பவே கொஞ்சம் அழுகை வருகிறது. :traurig001:

நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக, கல்வி, செல்வம், வீரம், அழகு, பண்பு, ஆன்மீகம் மிகுந்து வாழ எனது வாழ்த்துக்கள்....

அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்களும் இனிய 2009 புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.

அன்புடன்
- ஓவியா.

Narathar
14-12-2008, 04:38 PM
Dear Ooviyah! your leave application is not granted. http://content.sweetim.com/sim/cpie/emoticons/000202C8.gif

ரங்கராஜன்
15-12-2008, 02:31 AM
அன்புள்ளங்களே, பாசமிகு சான்றோர்களே, என் நேசமிகு சகோதர உறவுகளே, அன்பி இனிய மகளீரணி சகோதரிகளே,

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

உங்கள் அனைவரையும் மிகவும் 'மிஸ்' பண்ணுவேன். இப்பவே கொஞ்சம் அழுகை வருகிறது. :traurig001:

அன்புடன்
- ஓவியா.

தப்பாக நினைக்காதீங்க ஒவியா சீஸ்டர்

மன்றத்தில் சேர்ந்த எல்லாரும், மன்றத்தை தங்களில் ஒன்றாக தான் நினைக்கிறார்கள், ஏன் இங்கு இருக்கும் பல பெரிய மனிதர்கள், கை நிறைய வேலை வைத்திருப்பவர்கள், எல்லோரும் தினமுன் ஒரு முறையாவது மன்றம் வந்து போகிறார்கள். என்னுடையது இன்னும் சுத்தம், மன்றம் என்பது எனக்கு ஒரு எக்ஸ்டஸி மாதிரி ஆயிடுச்சி, இதை நான் மிகையாக சொல்லவில்லை. தினமும் ஒருமுறையாவது வந்துவிடனும் தோணும், சேர்ந்த இரண்டு மாதத்தில் இருந்து இந்த கதை தான் எனக்கு. இன்னும் பல பேரின் நிலைமை இது தான், ஆனால் மன்றத்தின் சுடர் ஆகிய நீங்கள்

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

சும்மாவா????????????????, சரி சீனியர் ஆகிய நீங்கள் இந்த முடிவு சும்மா எடுத்து இருக்கமாட்டீங்கனு நல்லா தெரியுது, அப்ப நீங்க எழுதிய இரண்டாம் பத்தி உண்மை என்றால், நீங்க பதித்த முதல் பத்தியும், மூன்றாம் பத்தியும் பொய் என்று அர்த்தம். என்னுடைய வார்த்தைகள் கொஞ்சம் அளவு மீறுவதாக கூட இருக்கலாம். ஏனென்றால் மன்றத்திற்க்கு வருவதும் வராததும் அவர் அவர் விருப்பம். அதே போல வராதவரை தரதர வென இழுத்து வந்து மன்றத்தில் சேர்ப்பது எங்களின் விருப்பம். நீங்கள் தம்பீ தம்பீ, என்று கூப்பிடுவதின் உரிமையில் பதித்தேன் நன்றி. (இத நீங்க எப்ப படிச்சி, எப்ப வந்து, அய்யோ அய்யோ)

சூரியன்
15-12-2008, 05:28 AM
அக்கா என்ன இப்படி சொல்றீங்க ?
சீக்கிரம் மன்றத்துடன் இனையுங்கள்.
நீண்ட விடுப்பை, சிறிய விடுப்பாக மாற்றுங்கள்.

அன்புடன்
தம்பி சூரியன்.

நாட்டாமை
15-12-2008, 07:01 AM
நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்...
அக்கா....
நீண்ட நாட்கள்... நீண்டு விடாமல்
சீக்கிரம் மன்றம் வர என் விண்ணப்பங்கள்...

ஓவியா
15-12-2008, 08:05 AM
நாரதர் அண்ணா, மூர்த்தி, சூரியன், நாட்டாமை உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் அன்பு கண்டு மனம் மகிழ்ந்தேன். நன்றிகள்.

சரி, அப்பப்ப வரேன், ஆனால் எப்பப்ப வருவேன் என்று சொல்லமுடியாது.

அப்படி வரவில்லையென்றால் கோவிக்கக்கூடாது மக்கா.

(விடுப்பு சொன்னாலும் அடிக்கடி மன்றம் வரும் ஒரே ஆளு ஓவியானு நினைப்பவர்களும் உண்டு)

ஆதவா
15-12-2008, 09:16 AM
அன்புள்ளங்களே, பாசமிகு சான்றோர்களே, என் நேசமிகு சகோதர உறவுகளே, அன்பி இனிய மகளீரணி சகோதரிகளே,

நான், அனேகமாக நாளையிலிருந்து (காரணம் ஒன்றுமில்லை, சும்மாதான் மறத்துக்கு வர வேண்டாம் என்று) நீண்ட விடுப்பில் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன்.......

உங்கள் அனைவரையும் மிகவும் 'மிஸ்' பண்ணுவேன். இப்பவே கொஞ்சம் அழுகை வருகிறது. :traurig001:

நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக, கல்வி, செல்வம், வீரம், அழகு, பண்பு, ஆன்மீகம் மிகுந்து வாழ எனது வாழ்த்துக்கள்....

அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்களும் இனிய 2009 புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகுக.

அன்புடன்
- ஓவியா.

தாராளமாகப் போய்வாருங்கள்...

சந்தோஷமாக அனுப்பும்
ஆதவன்..

ஓவியா
15-12-2008, 09:31 AM
தாராளமாகப் போய்வாருங்கள்...

சந்தோஷமாக அனுப்பும்
ஆதவன்..

:):):):)

சூரியன்
15-12-2008, 10:07 AM
ஒரு ஆர்டரை இந்த வாரத்திற்குள் அனுப்பியாக வேண்டும் அதுவரை மன்றத்திற்கு வர சிறிய தடங்கள்,முடிந்தவரை விரைவில் வருகின்றேன்.

Narathar
15-12-2008, 11:10 AM
ஒரு ஆர்டரை இந்த வாரத்திற்குள் அனுப்பியாக வேண்டும் அதுவரை மன்றத்திற்கு வர சிறிய தடங்கள்,முடிந்தவரை விரைவில் வருகின்றேன்.

பணியும் முக்கியம்.........
எனவே அதிலும் கவனம் செழுத்துஙள், ஆனால் முடிந்தவரை மன்றம் வாருங்கள்.

அது சரி அந்த ஓடரை இன்டெர்நெட் ஊடாக அனுப்ப முடியாதா???? :aetsch013:

சூரியன்
15-12-2008, 11:17 AM
பணியும் முக்கியம்.........
எனவே அதிலும் கவனம் செழுத்துஙள், ஆனால் முடிந்தவரை மன்றம் வாருங்கள்.

அது சரி அந்த ஓடரை இன்டெர்நெட் ஊடாக அனுப்ப முடியாதா???? :aetsch013:

அந்த ஆர்டர் சம்பந்தமான கோப்புகளை மட்டுமே இன்டநெட் வழியாக அனுப்ப முடியும்.
ஆர்டரை கப்பலில்தான் அனுப்ப முடியும்.:icon_rollout:

சிவா.ஜி
02-01-2009, 03:05 PM
அன்பு நன்பர்களே, மிக அதிகமாக மன்றத்துடன் கலந்துவிட்டேன். சிறிது நாட்களுக்கு விலகியிருக்கலாமென எண்ணியுள்ளேன். மீண்டும் எப்போதாவது சந்திப்போம். அதுவரை அனைவரிடமும் விடைபெறுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.

நிரன்
02-01-2009, 03:36 PM
அன்பு நன்பர்களே, மிக அதிகமாக மன்றத்துடன் கலந்துவிட்டேன். சிறிது நாட்களுக்கு விலகியிருக்கலாமென எண்ணியுள்ளேன். மீண்டும் எப்போதாவது சந்திப்போம். அதுவரை அனைவரிடமும் விடைபெறுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.


ஏன் சிவா அண்ணா திடீர் என்று இப்படி முடிவு:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:

தமிழ்தாசன்
02-01-2009, 03:58 PM
ஏன் சிவா.ஜி திடீர் என்று இப்படி முடிவு?????
:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:


நன்றி நிரஞ்சன்

anna
02-01-2009, 04:16 PM
என்ன சிவா சார்? சரி சரி கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு சீக்கிரம் வாங்க.

இளசு
02-01-2009, 07:55 PM
அன்பு சிவா
மன்றத்தில் உங்கள் பங்கு இன்றியமையாதது..

இடைவெளி அதிகமின்றி இவ்வுறவு தொடரும் என்றே நம்புகிறேன்..

படைப்புச் சுரக்கும் உங்களுக்கு நெறிகட்டாமல் அருந்தும் எங்களுக்காக...

ரங்கராஜன்
03-01-2009, 02:01 AM
சிவா அண்ணா நீங்கள் இல்லை என்றால் புதியவர்களை யார் ஊக்கவிப்பது, எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வாங்க.

Narathar
03-01-2009, 02:28 AM
ஏன் சிவா இப்படியொரு முடிவு?
தாங்கள் சீக்கிரம் மன்றம் திரும்ப வேண்டி நிற்கின்றேன்.....

தீபா
03-01-2009, 02:52 AM
அன்பு நன்பர்களே, மிக அதிகமாக மன்றத்துடன் கலந்துவிட்டேன். சிறிது நாட்களுக்கு விலகியிருக்கலாமென எண்ணியுள்ளேன். மீண்டும் எப்போதாவது சந்திப்போம். அதுவரை அனைவரிடமும் விடைபெறுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.

எதிர்பாராதது..

வேலை அதிகம் இருந்தால் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு.... மீண்டும் வாருங்கள்... (நாளைக்கே வாருங்கள்)

நேரமின்மையால் உங்கள் படைப்புகள் பல படிக்காமல் விட்டாலும் என்றாவது ருசிக்கும் ஆசையுண்டு...

சீக்கிரமே எதிர்பார்க்கும்..
தென்றல்.

ஓவியன்
03-01-2009, 03:00 AM
அன்பு சிவா, சீக்கிரமே வாருங்கள்...

இல்லையென்றால் வருவோம்...!!

சசிதரன்
03-01-2009, 03:43 AM
சீக்கிரம் திரும்பி வாங்க சிவா அண்ணா...:)

தமிழ்தாசன்
03-01-2009, 01:11 PM
வணக்கம் அன்புள்ளங்களே!

சில நாட்கள் இப்பக்கம் இணையமுடியாதிருக்கும்.

உங்கள் அன்புள்ளத்துக்கும் ஊக்கத்துக்கும்.
மிக்க மகிழ்ச்சி!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
தொடர்வோம்.

நிரன்
03-01-2009, 01:47 PM
சிவா அண்ணாவும் சென்ற இவ்வேளையில்
தாங்களும் செல்கிறீர்கள்.... மிக முக்கியமாக
விடயமாகத்தான் இருக்கும்.
அவை இனிதே நடைபெறவேண்டும்.

ஆனால் வெகுநாட்கள் எடுக்காமல்
வெகு விரைவாகவே வந்திடுங்கள்

பலர் உங்கள் பணிக்காக காத்திருப்போம்....

=============================================
கவலையுடன்
நிரஞ்சன்.......

=============================================

ரங்கராஜன்
03-01-2009, 02:23 PM
சீக்கிரம் வாங்க தமிழ்தாசன்

சசிதரன்
04-01-2009, 04:59 AM
சீக்கிரம் வாங்க தமிழ்தாசன்... காத்திருக்கிறோம்..:)

தமிழ்தாசன்
20-01-2009, 11:17 AM
மிக்க மகிழ்ச்சி அன்பர்களே!
மீண்டும் இணைந்தேன் மன மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மகிழ்ச்சி.

ஆதவா
20-01-2009, 11:35 AM
மிக்க மகிழ்ச்சி அன்பரர்களே!
மீண்டும் இணைந்தேன் மன மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மகிழ்ச்சி.

ஆஹா.அ!!!... வாருங்கள்.....

தமிழ்தாசன்
20-01-2009, 12:19 PM
ஆஹா.அ!!!... வாருங்கள்.....


ஆஆஹா.அ!!!... ஆஹா.அ!!!... ஆதவா!
வரவேற்புக்கு மகிழ்ச்சி.

சூரியன்
20-01-2009, 02:03 PM
என்னால் சிறிய காலம் வர இயலாது.
காரணம் எனது பணியில் சிறு மாற்றமும்,உடல்நிலையும்.
விரைவில் திரும்ப முயல்கின்றேன்.

என்றும் சூரியன்.

நிரன்
20-01-2009, 02:33 PM
மிக்க மகிழ்ச்சி அன்பரர்களே!
மீண்டும் இணைந்தேன் மன மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மகிழ்ச்சி.

வந்துட்டீங்களா வாங்க வாங்க!!!!!!:mini023:

நிரன்
20-01-2009, 02:34 PM
என்னால் சிறிய காலம் வர இயலாது.
காரணம் எனது பணியில் சிறு மாற்றமும்,உடல்நிலையும்.
விரைவில் திரும்ப முயல்கின்றேன்.

என்றும் சூரியன்.


பணியையும் நன்றாகக் கவனியுங்கள் உடல்நிலையையும்
கவனியுங்கள். விரைவில் திரும்பி வாருங்கள்

சிவா.ஜி
20-01-2009, 03:09 PM
உங்கள் மீள் வருகைக்கு வாழ்த்துகள் தமிழ்தாசன். வாருங்கள்.

சசிதரன்
20-01-2009, 04:06 PM
வருக வருக தமிழ்தாசன் அவர்களே...:)

தமிழ்தாசன்
20-01-2009, 06:57 PM
மிக்க மகிழ்ச்சி அன்பர்களே!
மீண்டும் இணைந்தேன் மன மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மகிழ்ச்சி.

நிரன் அவர்களே!, சிவா.ஜி அவர்களே!, சசிதரன் அவர்களே!

சூரியன் அவர்களே!
உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

விரைவில் வாருங்கள்.

Narathar
21-01-2009, 09:53 AM
அன்பின் மன்ற சொந்தங்களே........

தவிர்க்க முடியாத சில காரணங்களால் சில நாட்கள் விடுப்பிலிருக்க வேண்டியுள்ளது. சீக்கிரம் திரும்ப முயற்சிக்கின்றேன்............

யுனிக்கொடாக்கம் பகுதியில் பங்களிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.......
சீக்கிரமே வந்து இரவுபகலாக உழைக்கின்றேன்

வருத்தத்துடன்

நாரதர்

சிவா.ஜி
21-01-2009, 02:39 PM
வருத்தப்பட என்ன இருக்கிறது நாரதரே....பணி முடிந்து புத்துணர்ச்சியுடன் திரும்பி வாருங்கள். உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.

தமிழ்தாசன்
21-01-2009, 06:53 PM
நாரதர் அவர்களே!
உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

விரைவில் வாருங்கள்.

ஓவியன்
22-01-2009, 04:22 AM
அன்பு நாரதரே..!!

சொந்தப் பணிகளை முதலில் கவனியுங்கள் அவற்றை சிறப்புற நிறைவேற்றி பின் மன்றப் பணிகளைக் கவனிக்கலாம்..

உங்கள் பயணமும் பணியும் இனிதே நடக்க என் வாழ்த்துக்கள்..!! :)

நிரன்
22-01-2009, 01:20 PM
சீக்கிறமே வாருங்கள் நாரா!

உங்கள் பணியை வெற்றியுடன் முடித்துக்கொண்டு வெற்றிநடை
போடுங்கள் மன்றத்திற்கு..

உங்கள் பணியுடன் கூடிய பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்

அக்னி
23-01-2009, 01:11 PM
அனைத்தும் சிறப்புடனே நடந்தேற வாழ்த்துகின்றேன் நாரதரே...
சூழ்நிலைச் சிக்கல்களைத் தீர்ந்து, புத்துணர்ச்சி பெற்று வாருங்கள்...

அமரன்
24-01-2009, 06:36 PM
அன்பு நண்பர்களே!

டிசம்பரிலேயே சொல்ல வேண்டியது. தவறிவிட்டேன்.

மார்ச் இறுதி வரை மன்ற வருகை தடைப்படும். மன்றம் வராமலும் இருக்க முடியாது. அவ்வப்போது வாய்ப்பு அமைத்து வந்தாலும் உள்வாங்கிப் படிக்கும் சூழல் அமையாது. ஒருகுறியாக்கத்தில் ஈடுபடக்கூடும்.

கடமை முடித்து கூடியவரை விரைவில் வர முயல்கிறேன்.

நிரன்
24-01-2009, 06:44 PM
சரிங்கண்ணோவ் விரைவில் திரும்பிவாருங்கள்:)

உங்கள் பணிகள் வெற்றியில் முடிய என் வாழ்த்துக்கள்:icon_b:
நேரம் கிடைத்தால் கொஞ்சம் எட்டிப்பாருங்க

நீங்க வந்ததும் நானும் போகணுமல்ல:)

சிவா.ஜி
24-01-2009, 09:36 PM
போய்விட்டு நல்லபடியாக அனைத்து பணிகளும் இனிதே முடித்துவிட்டு சட்டு புட்டுன்னு மன்றம் வாங்க பாஸ். வாழ்த்துகள்.

அக்னி
24-01-2009, 09:48 PM
அனைத்தும் நலமே அமைய வாழ்த்துகள் அமரா...

தமிழ்தாசன்
25-01-2009, 07:18 PM
உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

விரைவில் வாருங்கள்.
__________________

நிரன்
30-01-2009, 12:31 PM
அன்பான நண்பர்களே!

ஒரு வாரகாலம் விடுமுறையைடுத்து. இன்று மாலை வேறு ஒரு இடத்திற்கு செல்லவிருப்பதால். மன்றத்தில் ஒரு வாரகாலத்திற்கு இணைந்திருக்க முடியாதிருக்கும். நேரம் கிடைப்பின் வந்து செல்கிறேன். ஆனால் படிக்கவோ எழுதுவதற்கோ போதுமான நேரமும் சூழலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

விரைவில் திரும்புகிறேன். மற்றும் யுனிக்கோட் மாற்றப் பணி இந்த வாரம் ஆமை வேகமாக செல்லப்போகிறதே என்று வருந்துகிறேன். வந்தவுடன் முயல் வேகத்தில் முடித்துவிடுகிறேன்.

அக்னி
02-02-2009, 01:12 PM
நிரனின் பயணம் இனிதாக நிகழ வாழ்த்துகள்.

*****
நண்பர்களே,
ஒரு வார விடுப்பில் நெதர்லாந்து செல்லவுள்ளேன்.
திரும்பிவரும்போது, நிரனைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்றுதான் இதைப்பற்றி தூதுவனிற் பேசிக்கொண்டோம்.

மன்ற உறவுகளில் முதலாவதாக ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளமை,
மிக மகிழ்வாக உள்ளது.

சசிதரன்
03-02-2009, 02:55 PM
இன்னும் சில நாட்கள் மன்றம் வர முடியாத சூழல் நண்பர்களே... பணிகள் முடிந்ததும் விரைவில் வந்து இணைந்து கொள்கிறேன் மன்றத்தின் மடியில்...:)

நிரன்
04-02-2009, 10:59 AM
விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் மன்றம்:)

இனி அக்னி பாஸ் வரும் வெள்ளி ஒரு அப்பான்மன்ட்:D:D

மன்றத்திலிருந்து முதன் முதலாக ஒருவரைச் சந்திப்பதையடுத்து மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்..

அக்னியின் நெதர்லாந்து பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
பிரிமனில் உங்களைச் சந்திக்கும் அவாவில் உள்ளேன்:D

நண்பர் சசியின் பணிகள் இனி்தே அமையட்டும் விரைவில் திரும்புங்கள்:)

சசிதரன்
14-02-2009, 03:06 PM
பணிகளின் காரணமாக சிறிது நாட்கள் மன்றம் வர இயலவில்லை. அலுவலகத்திலும் இணைய சிக்கல். இப்பொழுது நிலைமை பரவாயில்லை. மீண்டும் வந்துவிட்டேன் நண்பர்களே...:)

ஓவியன்
15-02-2009, 12:18 PM
மீண்டு வந்த சசிதரனுக்கு வாழ்த்துகளும் வரவேற்புக்களும்...

தொடர்ந்து அசத்துங்கப்பு..!!

ரங்கராஜன்
16-02-2009, 03:10 PM
வணக்கம் உறவுகளே
என்னுடைய சொந்த வேலைகளால், பிரச்சனைகளால் சில காலம் மன்றம் வர இயலாது, அப்படி வந்தாலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியாது. நான் சேர்ந்ததில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து மன்றம் வந்து கொண்டு இருக்கிறேன், மன்றம் என்னில், என்னூல் கலந்த ஒன்று.
கடந்த மூன்று மாதங்களாக மன்றத்தில் நான் நிறைய கற்றேன் பெற்றேன். மன்ற உறவுகள் என்னை சேர்ந்த கொஞ்ச நாளிலே மகுடத்தில் வைத்து அழகு பார்த்தீர்கள்
என்றும் உங்களின் அன்பை மறக்க மாட்டேன், மன்றத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் கண்ணீருடன் விடைப் பெறுகிறேன்,

நன்றி வணக்கம்.

அமரன்
16-02-2009, 05:36 PM
ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெற்று புதிய கதைகளுடன் வாருங்கள் தக்ஸ்.

உங்கள் விழிகளில் வழியும் நீரைத் துடைக்க இங்கே பல விரல்கள் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

நிரன்
16-02-2009, 06:09 PM
மூர்த்தி அண்ணா!

உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற என் பிரார்த்தனைகள்.

மன்றத்தில் கடந்த மாதங்களில் உங்கள் பணி மிகையானது!
விரைவில் வாருங்கள் உங்களைச் சுற்றி ஒரு உறவு வட்டம் உள்ளது.

நாட்டாமை
18-02-2009, 01:38 PM
வணக்கம் உறவுகளே
என்றும் உங்களின் அன்பை மறக்க மாட்டேன், மன்றத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் கண்ணீருடன் விடைப் பெறுகிறேன்,
நன்றி வணக்கம்.

என்னது இது...
சின்னபுள்ளை தனமா.. அழுதுகிட்டு... எல்லாம்...ம்ம்ம்.....
இதை பார்த்தா....
எங்களுக்கும் அழுக்கச்சியா இருக்குமில்ல ...!!!
தக்ஸ்....
மன்றத்தின் மீதான உங்கள் ஈர்ப்பை பார்க்கும் போது நான் அவ்ளோ ஆச்சரியப்பட்டேன்.....
அதற்க்குள் லீவா......???

விடுமுறை முடிந்து
புத்துணச்சியோடு ..
சீக்கிரம் மன்றம்...
வந்திடுங்கோ.... :):)

ஓவியன்
18-02-2009, 01:55 PM
எல்லாவற்றிலிருந்தும்
மீண்டு வாருங்கள் தக்ஸ்,
விரைவில்
மீண்டும் வாருங்கள்...!!

சிவா.ஜி
22-02-2009, 06:19 AM
என்னா தக்ஸு நாட்டாமை சொன்ன மாதிரி இதென்ன சின்னப்புள்ளத்தனமா...நீ இல்லாம எப்படிப்பா? சரி..சரி...சீக்கிரமா புத்துணர்ச்சியோட வா.

Khadalan
22-02-2009, 02:35 PM
சில காலம்தானே நண்பரே!! உங்கள் வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். விரைவில் உங்கள் வரவு நல்வரவாகும். சென்று வாருங்கள்.

samuthraselvam
23-02-2009, 08:51 AM
அண்ணா உங்களின் பிரச்சினைகளும் பணிகளும் இனிதாக முடித்து மீண்டும் மன்றம் வர வாழ்த்துக்கள்

இளசு
18-04-2009, 02:11 PM
சொந்தக் காரணங்களுக்காக என்னால் இன்னும் 6 வாரங்களுக்கு
வழமையாய் மன்றம் வர இயலாது சொந்தங்களே!

நேரம் அமைந்தால் வந்துபோவேன்.
விட்டதைப் (ப)பிடிக்க விடுப்பு முடிந்து முயல்வேன்..

பாரதி
18-04-2009, 03:24 PM
உங்கள் காரியங்கள் நல்ல முறையில் நடக்கவும், வாய்ப்பிருக்கும் நேரத்தில் மன்றம் வந்து செல்லவும் வேண்டுகிறேன் அண்ணா.

பரஞ்சோதி
19-04-2009, 09:10 AM
அண்ணா, நேரம் கிடைக்கும் போது எட்டி பாருங்கள்.

உங்கள் வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிய வாழ்த்துகள்.

mania
04-05-2009, 05:42 AM
சொந்தக் காரணங்களுக்காக என்னால் இன்னும் 6 வாரங்களுக்குவழமையாய் மன்றம் வர இயலாது சொந்தங்களே!

நேரம் அமைந்தால் வந்துபோவேன்.
விட்டதைப் (ப)பிடிக்க விடுப்பு முடிந்து முயல்வேன்..

இதற்கு முன்னேயும் ஆறு வாரம் வரலையே????:rolleyes: அதுக்கு என்ன கணக்கு....???
தான் வராவிட்டாலும் அடுத்தவரை கண்காணிக்கும்
மணியா:D:D:D

நேசம்
04-05-2009, 07:31 AM
உங்கள் வேலையை சிறப்பாக முடிந்து மிண்டும் மன்றத்தில் சந்திப்போம் இளசு அண்ணா.

இளசு
30-09-2009, 07:35 PM
மீண்டும் விடுப்பு சொல்ல வந்திருக்கிறேன் இந்தத் திரிக்கு..

(கடைசியாச் சொன்னதும் நான்தான்...ஹிஹி..)


அக். 21 வரை விடுப்பில் செல்கிறேன்..

அறிஞர்
30-09-2009, 07:38 PM
இளசுவின் விடுமுறை காலங்கள் இனிதாக செல்ல வாழ்த்துக்கள்.

அமரன்
30-09-2009, 07:45 PM
அண்ணா..

தாயகத்தில் விடுமுறையைக் களிப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

உங்கள் வண்ணத்திலும் சந்திப்புகளைக் காண ஆவல்.

ஏமாற மாட்டேந்தானே.

பாரதி
01-10-2009, 01:41 AM
மீண்டும் விடுப்பு சொல்ல வந்திருக்கிறேன் இந்தத் திரிக்கு..

(கடைசியாச் சொன்னதும் நான்தான்...ஹிஹி..)

அக். 21 வரை விடுப்பில் செல்கிறேன்..

அண்ணா.... இதில் இருந்து மன்றத்தில் இருந்து அடிக்கடி விடுப்பு எடுப்பது நீங்கள்தான் என்று தெரிகிறது... ஹஹஹா.

உங்கள் விடுமுறை இனிதாக அமையட்டும் அண்ணா.

நேசம்
01-10-2009, 04:54 AM
விடுமுறை சிறப்பாக அமையட்டும் அண்ணா

மஞ்சுபாஷிணி
01-10-2009, 05:20 AM
மீண்டும் விடுப்பு சொல்ல வந்திருக்கிறேன் இந்தத் திரிக்கு..

(கடைசியாச் சொன்னதும் நான்தான்...ஹிஹி..)


அக். 21 வரை விடுப்பில் செல்கிறேன்..

தாயக பயணம் நல்லமுறையில் அமைய என் வாழ்த்துக்கள் இளசு....

வியாசன்
01-10-2009, 06:45 AM
நண்பர் இளசுவின் விடுமறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
02-10-2009, 04:30 PM
என்னுடைய மடிக்கணினி பழுதாகிவிட்டதால்.....இனி மன்றம் வருவது சில நாட்களுக்கு முடியாது. அதுவரை விடுப்புதான்.

(ஸ்டார்ட் செய்தால் திரை வெறுமையாகவே உள்ளது)

aren
02-10-2009, 04:44 PM
என்னுடைய மடிக்கணினி பழுதாகிவிட்டதால்.....இனி மன்றம் வருவது சில நாட்களுக்கு முடியாது. அதுவரை விடுப்புதான்.

(ஸ்டார்ட் செய்தால் திரை வெறுமையாகவே உள்ளது)

ஹார்டு டிஸ்க் போய்விட்டதோ என்னவோ? அல்லது கணினியின் மதர்போர்டில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்.

எனக்கும் சில சமயங்களில் அப்படித்தான் ஆகிறது, என் நண்பர் ஒருவர் சொன்னார், கணினி எந்நேரத்திலும் உயிர்விட்டுவிடும் என்று சொன்னார். எப்படியோ, மெதுவாக இருப்பதை வைத்தே காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறேன்.

பா.ராஜேஷ்
03-10-2009, 11:31 AM
சமீபத்தில் ஏதேனும் மென்பொருள் அல்லது வன்பொருள் இன்ஸ்டால் செய்தீர்களா? சில சமயம் அவ்வாறு தோன்றும்... ஆனால் O. S. மீண்டும் ரிப்பேர் முறையில் பூட் செய்தீர்களானால் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

சிவா.ஜி
03-10-2009, 06:26 PM
பிரச்சனை கிராஃபிக்ஸ் கார்டில் உள்ளது என நினைக்கிறேன். பூட் ஆகிறது, சத்தம் வருகிறது...ஆனால் திரையில் மட்டும் வெட்டவெளி.

ஊருக்குப் போனதும் சரியாக்க வேண்டும். யோசனைகளுக்கு நன்றி ஆரென் மற்றும் ராஜேஷ்.

அக்னி
03-10-2009, 08:03 PM
மட்டும் வெட்டவெளி.

சிவா.ஜி அண்ணாக்கு இந்தப் பிரச்சினை பெரும்பிரச்சினையாத்தான் கிடக்குது... :rolleyes:
ஆமா... இத ஊருக்குப் போயி எப்பிடிச் சரி பண்ணுவீங்க... :confused:
சொல்லித்தந்தா நமக்கும் பிரயோசனமாயிருக்குமில்ல... ;)

ஓவியன்
04-10-2009, 06:13 AM
ஆமா... இத ஊருக்குப் போயி எப்பிடிச் சரி பண்ணுவீங்க... :confused:
சொல்லித்தந்தா நமக்கும் பிரயோசனமாயிருக்குமில்ல... ;)

வெட்ட வெளினா ஊரில போய் நாற்று நடலாம், இது கூட புரியாம...!! :aetsch013:

ஓவியன்
04-10-2009, 06:14 AM
மீண்டும் விடுப்பு சொல்ல வந்திருக்கிறேன் இந்தத் திரிக்கு..

(கடைசியாச் சொன்னதும் நான்தான்...ஹிஹி..)


அக். 21 வரை விடுப்பில் செல்கிறேன்..

விடுப்புக்கு விடுப்புக் கொடுத்து விரைவில் வாங்க அண்ணா, அது வரை விடுமுறை இனிதே அமைய மனதார்ந்த வாழ்த்துகள்..!! :)

aren
04-10-2009, 06:32 AM
மீண்டும் விடுப்பு சொல்ல வந்திருக்கிறேன் இந்தத் திரிக்கு..

(கடைசியாச் சொன்னதும் நான்தான்...ஹிஹி..)


அக். 21 வரை விடுப்பில் செல்கிறேன்..

விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

aren
04-10-2009, 06:34 AM
வெட்டவெளி.

.

எல்லோருக்கும் இதே பிரச்சனைதான்.

aren
28-10-2009, 02:05 AM
மீண்டும் விடுப்பு சொல்ல வந்திருக்கிறேன் இந்தத் திரிக்கு..

(கடைசியாச் சொன்னதும் நான்தான்...ஹிஹி..)


அக். 21 வரை விடுப்பில் செல்கிறேன்..

இன்று அக்டோபர் 28. இளசு அவர்களை இன்னும் காணவில்லையே?

அவர் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
ஆரென்

aren
31-10-2009, 12:31 AM
இளசு அவர்களை இன்னும் காணவில்லையே

பாரதி
31-10-2009, 12:43 AM
ஒரு வேளை வேலைப்பளுவினால் இளசு அண்ணா உடனே வராமல் இருக்கக்கூடும். விரைவில் மன்றம் வருவார் என்று நம்புவோம்.

அமரன்
03-11-2009, 05:19 PM
இளசு அவர்களை இன்னும் காணவில்லையேவந்துட்டாரில்ல..

வாங்கண்ணோவ்..

இளசு
03-11-2009, 05:25 PM
வந்துவிட்டேன் அமரா..

அன்பின் ஆரெனின் ஆவலான விசாரிப்புக்கும்
அன்பு பாரதியின் ஆதரவான பதிலுக்கும்

நன்றி!

aren
04-11-2009, 02:42 PM
நன்றி இளசு அவர்களே. நீங்கள் மன்றத்தில் இல்லாமல் ஏதோ வெறிச்சோடி இருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.

நீங்கள் வந்துவிட்டது குறித்து சந்தோஷம்.

உங்கள் பயணம் எப்படியிருந்தது.

இளசு
04-11-2009, 05:50 PM
பயணம் சுகமாய் அமைந்தது அன்பின் ஆரென்..

ஆனாலும் தலையாய சிலரைச் சந்திக்க இயலா வருத்தம்..


பணியிடத்தில் குவிந்துவிட்ட வேலைப்பளு...


சுகமான சுமைகள்....

சிவா.ஜி
05-11-2009, 01:33 PM
ஆஹா....இளசு வந்துட்டார்.....வாங்க வாங்க.....!!!

கலகலப்பான மன்றத்தை இனி பார்க்க முடியும்.

அக்னி
07-11-2009, 11:52 AM
ஆஹா....இளசு வந்துட்டார்.....வாங்க வாங்க.....!!!
சிவா.ஜி...
எனக்கொரு சந்தேகம்.
அது ஏன் வந்ததுக்கப்புறம் ‘வாங்க’ என்று சொல்லுறது... :confused:

சிவா.ஜி
07-11-2009, 12:25 PM
ஆஹா....வாங்க அக்னியாரே......இந்த குசும்பைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். “வாங்க”

(உங்ககிட்ட வாங்கத்தான் அந்த ’வாங்க’வா?)

பாரதி
07-11-2009, 12:45 PM
சிவா.ஜி...
எனக்கொரு சந்தேகம்.
அது ஏன் வந்ததுக்கப்புறம் ‘வாங்க’ என்று சொல்லுறது... :confused:

அவர் வராமலே, அவர் இருக்குமிடத்தில் இருந்து ’வாங்க’ ன்னு யாரிடத்தில் சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும் கூட அது யாருக்கும் கேட்காதே! அதனால்தான் அவர் வந்ததுக்கப்புறம் ‘வாங்க’ன்னு சொல்கிறார்.:mini023::lachen001:

சிவா.ஜி
07-11-2009, 12:50 PM
இப்ப நான் கரைக்கு வந்துட்டேன் பாரதி. கடல்வாழ்க்கை முடிந்தது. இனி கரை வாழ்க்கைதான். அதனாலத்தான் இளசுவைப் பார்த்ததும் வாங்கன்னு சொன்னேன்.

(ஆனாலும் இந்த அக்னிக்கு இவ்ளோ குசும்பு ஆகாது....)

பாரதி
07-11-2009, 01:03 PM
இப்ப நான் கரைக்கு வந்துட்டேன் பாரதி. கடல்வாழ்க்கை முடிந்தது. இனி கரை வாழ்க்கைதான். அதனாலத்தான் இளசுவைப் பார்த்ததும் வாங்கன்னு சொன்னேன்.

(ஆனாலும் இந்த அக்னிக்கு இவ்ளோ குசும்பு ஆகாது....)

ஆஹா... எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி சிவா.

அக்னி.... ஹஹஹா.... பாவம்... விடுங்க சிவா. வீட்ல இனிமே எதுவும் பேச முடியாது என்பதால் சந்தேகம்னு இங்க கேட்டிருக்கார்.

விடுங்க.... விடுங்க.... இதெல்லாம் சகஜம்தானே!:)

இளசு
09-11-2009, 05:56 PM
கலகலப்பான மன்றத்தை இனி பார்க்க முடியும்.


நிச்சயம் சிவா...
நீங்க கரைக்கு வந்த காரணத்தால்...:icon_b:


ஹ்ஹ்ஹ்ஹா!

அக்னியின் குசும்பும் பாரதியின் வக்காலத்தும்
குறும்பு தாளிப்பின் மணம் கும்மென...


கலக்குங்க மக்கா!

சாலைஜெயராமன்
10-11-2009, 04:18 PM
வருக

தங்கள் மீள் வருகைக்கு மிக்க நன்றி. ஆனாலும் ஒரு வருத்தம். சென்னை வந்துவிட்டு ஒரு தகவல் கூட தரவில்லையே. தங்களை சென்னையில் சந்திக்கும் வாய்ப்பை தவற விட்டது மிகவும் வருத்தமே.

உங்கள் அனுபவப் பதிப்புகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

இளசு
10-11-2009, 06:53 PM
என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சாலையாருக்கு


என் தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்..


தலை மணியா தொடங்கி, அன்பின் ஆரென், முன்னோடி மனோஜி, நீங்கள், சிவா, தக்ஸ், மன்மி, குரு ராஜேஷ், ஆதவன், தாமரை, மதி இப்படி பலரைச் சந்திக்க
பலநாள் ஆவல்...

நல்லதொரு வாய்ப்பு வரும் விரைவில் என்ற நம்பிக்கை மனதில்..

மதுரை மைந்தன்
28-11-2009, 10:46 AM
வரும் டிசம்பர் மாதம் 11 தேதி முதல் 17 தேதி வரை கோலாலம்பூருக்கு அலுவலக வேலை நிமித்தம் செல்கிறேன். பிறகு டிசம்பர் 23 முதல் 30 தேதி வரை இந்தியா வருக்றேன். இந்தியாவில் மும்பை பெங்களுர் சென்னை மதுரை ஆகிய இடங்களுக்கு செல்கிறேன். டிசம்பர் 30 க்கு அமெரிக்கா சென்று விட்டு ஜனவரி 18 மெல்போர்ன் திரும்புகிறேன்.

கோலாலம்பூரிலும் இந்தியாவிலும் மன்றத்து நண்பர்களை சந்திக்க ஆவலாயுள்ளேன்.

அமரன்
28-11-2009, 04:47 PM
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள் மதுரண்ணா.

மதி
29-11-2009, 02:41 AM
வாங்க மதுரையண்ணே...! கண்டிப்பாய் சந்திக்கலாம்.!

aren
29-11-2009, 11:53 AM
வரும் டிசம்பர் மாதம் 11 தேதி முதல் 17 தேதி வரை கோலாலம்பூருக்கு அலுவலக வேலை நிமித்தம் செல்கிறேன். பிறகு டிசம்பர் 23 முதல் 30 தேதி வரை இந்தியா வருக்றேன். இந்தியாவில் மும்பை பெங்களுர் சென்னை மதுரை ஆகிய இடங்களுக்கு செல்கிறேன். டிசம்பர் 30 க்கு அமெரிக்கா சென்று விட்டு ஜனவரி 18 மெல்போர்ன் திரும்புகிறேன்.

கோலாலம்பூரிலும் இந்தியாவிலும் மன்றத்து நண்பர்களை சந்திக்க ஆவலாயுள்ளேன்.

இவ்வளவு ஊர்களுக்குச் செல்லும் நீங்கள் சிங்கப்பூருக்கும் ஒரு நாள் வந்துவிட்டுபோகலாமே?

கோலாலம்பூரில் நம் மன்ற நண்பர் மனோ அவர்கள் இருக்கிறார்கள்.

உங்களால் சிங்கப்பூர் வரமுடிந்தால் வாருங்கள், இல்லையென்றால் என்னால் கோலாலம்பூர் வரமுடிந்தால் நான் வந்து உங்களை அங்கே சந்திக்கிறேன்.

உங்கள் தங்கும் இடம் அல்லது உங்கள் கைபேசி எண் இருந்தால் எனக்கு தனி மடலில் தெரியப்படுத்துங்கள், சந்தர்பம் இருந்தால் நிச்சயம் சந்திப்போம்.

குணமதி
30-12-2009, 07:24 AM
புத்தாண்டில் ஒரு மாதம் விடுப்பில் செல்கிறேன்.

பிப்ருவரி தொடக்கத்தில் வரக்கூடும்.

சிவா.ஜி
30-12-2009, 08:28 AM
சென்று வாருங்கள் குணமதி. விடுப்பை குதூகலத்துடன் கொண்டாடிவிட்டு, மகிழ்வோடு வாருங்கள்.

ஓவியன்
30-12-2009, 08:38 AM
விடுமுறை இனிதே அமைய வாழ்த்துகள் குணமதி...

விடுமுறை உங்கள் மனதுக்கும், உடலுக்கும் புதுப் பொலிவினைத் தரட்டும்...

ஜனகன்
30-12-2009, 09:37 PM
ஒய்வெடுத்து புத்துணர்ச்சி பெற்று,புதிய ஆக்கங்களுடன் விரைவில் வாருங்கள் குணமதி

பாரதி
30-12-2009, 11:15 PM
சென்று வாருங்கள் நண்பரே. உங்கள் விடுமுறை இனிதாக அமையட்டும்.
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து.

aren
31-12-2009, 02:00 AM
உங்கள் விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் குணமதி.

அமரன்
31-12-2009, 05:13 AM
விடுமுறை இனிதே அமையட்டும் தோழரே

சசிதரன்
05-01-2010, 01:56 PM
நீண்ட நாட்களுக்கு பின் இப்பொழுதுதான் மன்றம் வருகிறேன்...மன்ற சொந்தங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.. சில சொந்த காரணங்களால் இதனை நாள் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இனி நேரம் கிடைக்கும் பொழுதுகளில் அவ்வப்போது நிச்சயம் வருகிறேன்...:)

ஓவியன்
05-01-2010, 02:02 PM
வாங்க சசி, உங்கள் கவிச்சாரலில் மீண்டும் மன்ற பூங்கா நனையட்டும்...

சசிதரன்
05-01-2010, 02:04 PM
நன்றி ஓவியன்...:)

அமரன்
05-01-2010, 08:02 PM
வாங்க சசி..

இனி கிடைக்கும் சசியின் கவிதை ருசி..

சிவா.ஜி
07-01-2010, 12:16 PM
மூன்று நாட்கள் வீட்டுச் சிறைவாசத்துக்குப் பிறகு ஒரு மணிநேர பரோலில் அலுவலகம் வந்து மன்றத்தைப் பார்வையிடுகிறேன்.

நான் பணி செய்யும் இடத்தில் திங்களன்று மாலையில், இங்குள்ள நைஜீரியத் தொழிலாளர்களில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் விளைவாய் ஏற்பட்ட கலவரத்தில் எங்கள் அறைகள் அனைத்தும் நொறுக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டன. உடனடியாக ராணுவம் அழைக்கப்பட்டு, எங்களைப் பாதுகாப்பான பகுதியில் வைத்திருந்தனர். இன்றுதான் நிலவரம் சற்று கட்டுக்குள் வந்ததும், எங்கள் தனி மின்னஞ்சல்களைப் பார்வையிட அனுமதியளித்து, செக்யூரிட்டிகளின் துணையுடன் ஒரு மணிநேரம் அலுவலகம் வந்து போக அனுமதித்தார்கள்.


நிலைமை சீரடைய இன்னும் ஒரு வாரம் ஆனாலும் ஆகலாம். அதுவரை மன்ற வரவு தடைபடும். மீண்டும் சந்திப்போம்.

கலையரசி
07-01-2010, 12:24 PM
மன்ற வரவு தடைபட்டாலும் பாதுகாப்பு தான் முக்கியம். எனவே நிலைமை சீரடையும் வரை பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிவா.ஜி
07-01-2010, 12:26 PM
நன்றி கலையரசி. நிச்சயம் பாதுகாப்புடன் இருந்துகொள்கிறேன்.

ஆதி
07-01-2010, 12:36 PM
மனம் மிக கனமாக இருக்கிறது அண்ணா..

உங்கள் சுகத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லைதானே அண்ணா ?

பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருங்கள் அண்ணா.. நிலமை சீக்கிரம் சரியாக இறைவனை பிராத்திக்கிறேன்.....

அமரன்
07-01-2010, 04:44 PM
பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள் சிவா.

பாரதி
07-01-2010, 06:34 PM
நைஜீரியாவில் நடைபெறுபவை குறித்து முன்னமே கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் நீங்கள் இருக்குமிடத்தில் நிகழ்ந்ததைக்குறித்து கவலையாக இருக்கிறது சிவா. கவனமாக இருங்கள். நிலைமை சீரடைந்த பின்னர் நேரம் கிடைக்கும் போது மன்றம் வாருங்கள்.

சிவா.ஜி
08-01-2010, 07:39 AM
அக்கறையான விசாரிப்புக்கு நன்றி ஆதன், அமரன், பாரதி.

இன்று நிலைமை சற்றே சீரடைந்திருப்பதால் அலுவலகம் வர அனுமதித்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் முழு அளவில் பணிகள் தொடங்கவில்லை. நெட்வொர்க் மிகவும் மெதுவாக இருப்பதால், மன்றத்தைத் திறக்க தாமதமாகிறது.

சரி செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் பழைய வேகம் கிடைக்கும் என நம்புகிறோம்.

பிறகு வழக்கம்போல வரமுடியும்.

அன்புரசிகன்
08-01-2010, 08:36 AM
உங்கள் பதிவு பார்த்த பின் அயன் பட காட்சி தான் கண்முன் வந்தது...

கவனம் அண்ணா... இனியும் கவனங்களுடன் இருங்கள். எமது உறவினர் சிலர் அங்கு உள்ளனர். அவர்கள் பணங்களை எப்போதும் வங்கியில் தான் வைத்திருப்பார்களாம். காரணம் அவர்கள் செழிப்பானவர்களை காண்பதே நம்மை போன்றோரை தானாம். :D

சிவா.ஜி
08-01-2010, 11:36 AM
சரி அன்பு. உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் இருந்துகொள்கிறேன்.

விரைவில் அந்த நிகழ்வை பதிவாக்குகிறேன். ஆங்கிலப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வில் இருந்தோம்.

ஓவியன்
09-01-2010, 02:54 PM
நலம் தானே அண்ணா, முன்னரே உங்கள் பதிவினைப் பார்த்திருந்தாலும் பின்னூட்ட முடியவில்லை (அலுவலகத்திலிருந்து பின்னூட்ட முடியாதிருக்கின்றேன்), பதிவிடுவதெல்லாம் பின்னர், இப்போதைக்கு பாதுகாப்பில் உச்ச கவனம் செலுத்துங்கள்...

சிவா.ஜி
09-01-2010, 03:03 PM
நாங்கள் பாதுகாப்பாய் இருக்கிறோம் ஓவியன். தற்சமயம் பிரச்சனைகள் இல்லை. எங்கள் நிறுவனம் நல்லவிதமாய் பாதுகாப்பளிக்கிறது.

நான் அலுவலகம் வந்தால்தான் பதிவிட முடிகிறது....உங்களுக்கு நேரெதிர்...ஹி...ஹி...

நன்றி ஓவியன்.

jayashankar
09-01-2010, 03:07 PM
நலம் தானே அண்ணா, முன்னரே உங்கள் பதிவினைப் பார்த்திருந்தாலும் பின்னூட்ட முடியவில்லை (அலுவலகத்திலிருந்து பின்னூட்ட முடியாதிருக்கின்றேன்), பதிவிடுவதெல்லாம் பின்னர், இப்போதைக்கு பாதுகாப்பில் உச்ச கவனம் செலுத்துங்கள்...

கவலப்படாதீங்க தல.

ஏதாவது ஒன்னுன்னா, சிவாவை நாங்க போய் ஒரு தினுசா வூடு கட்டி அவர பத்திரமா கொண்டாந்துறுவோமில்ல....

- பிளேடு பக்கிரி....

சிவா.ஜி
09-01-2010, 03:21 PM
அதானே பக்கிரி....பக்காவா...நம்ம பக்கமா இருக்கும்போது....இன்னாத்துக்கு வொர்ரி நைனா....?

ஓவியன்
09-01-2010, 03:26 PM
சிவாவை நாங்க போய் ஒரு தினுசா வூடு கட்டி அவர பத்திரமா கொண்டாந்துறுவோமில்ல....


சரி, சரி எனக்கு கராத்தே தெரியும், குங்பூ தெரியும்னு பீலா (:D:D) விட்டு கிட்டே அங்கே இருந்திடுவார், கொஞ்சம் கவனிங்க...!! :)

aren
09-01-2010, 03:43 PM
முதலில் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் சிவா. மன்றம் வரவேண்டும் என்பதற்காக வெளியே எங்கும் செல்லவேண்டாம்.

உங்கள் வேலை உண்டு, வீடு உண்டு என்று கொஞ்சம் நாட்கள் இருங்கள், அதற்குள் நிலமை சரியாகிவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த நிகழ்வுகளை வைத்தே ஒரு கதை எழுதலாமே.

jayashankar
09-01-2010, 05:42 PM
உங்கள் பதிவு பார்த்த பின் அயன் பட காட்சி தான் கண்முன் வந்தது...

கவனம் அண்ணா... இனியும் கவனங்களுடன் இருங்கள். எமது உறவினர் சிலர் அங்கு உள்ளனர். அவர்கள் பணங்களை எப்போதும் வங்கியில் தான் வைத்திருப்பார்களாம். காரணம் அவர்கள் செழிப்பானவர்களை காண்பதே நம்மை போன்றோரை தானாம். :D

அட அப்படிங்களா?

யாருன்னு சொன்னீங்கன்னா. முடிஞ்சா நாங்களும் போய் பாப்போமுங்களே அன்பு. முடிந்தால் அவர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

நன்றி

மதி
10-01-2010, 03:52 AM
நல்ல வேளை. நல்ல.... வேலை.
பத்திரமா இருங்க சிவாண்ணா....

சிவா.ஜி
10-01-2010, 06:58 AM
நல்ல வேளை. நல்ல.... வேலை.
பத்திரமா இருங்க சிவாண்ணா....

ஹா....ஹா...ஹா... சூப்பரு மதி. நல்ல............வேலை......

பத்திரமாய் இருக்கிறேன் மதி.

சிவா.ஜி
10-01-2010, 07:00 AM
முதலில் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் சிவா. மன்றம் வரவேண்டும் என்பதற்காக வெளியே எங்கும் செல்லவேண்டாம்.

உங்கள் வேலை உண்டு, வீடு உண்டு என்று கொஞ்சம் நாட்கள் இருங்கள், அதற்குள் நிலமை சரியாகிவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த நிகழ்வுகளை வைத்தே ஒரு கதை எழுதலாமே.

ஆமாம் ஆரென். நான் இப்போது அப்படித்தான் இருக்கிறேன். வேலை உண்டு...அறை உண்டு என்று.


நிச்சயமா கதையே எழுதலாம். ஆனால் உண்மைச் சம்பவமாக அதை விரைவில் பதிக்கிறேன்.


நன்றி ஆரென்.

pgk53
31-01-2010, 01:22 AM
அன்பு நண்பர்களே,
நான் விடுமுறையில் தாயகம் செல்வதால் அடுத்து 30 நாட்களுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதைப் பதிவு செய்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.

ஓவியன்
31-01-2010, 02:42 AM
சென்று வாருங்கள் அண்ணா, உங்கள் விடுமுறை இனிதே அமைய என் வாழ்த்துகளும்....

சிவா.ஜி
31-01-2010, 04:29 AM
சென்று வாருங்கள் நண்பரே. எல்லாம் நல்லவிதமாய் அமைய வாழ்த்துகள்.

aren
01-02-2010, 07:10 AM
அன்பு நண்பர்களே,
நான் விடுமுறையில் தாயகம் செல்வதால் அடுத்து 30 நாட்களுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதைப் பதிவு செய்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

குணமதி
03-02-2010, 04:46 AM
ஒருமாத விடுப்பின்பின் திரும்பியிருக்கின்றேன்.

வாழ்த்துக் கூறியிருந்த அன்புள்ளங்கள் சிவா, ஓவியன், ஜனகன், பாரதி, ஆரென், அமரன் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி.

பணிச் சுமையைப் பொறுத்து இடுகைகளிடவும் பிறவற்றிலும் ஈடுபடுவேன்.

அனைவர்க்கும் நன்றி.

அமரன்
03-02-2010, 05:25 AM
வாங்க குணமதி

விடுமுறைக்காலத்தைப் பகிர்ந்துக்கலாமே

சிவா.ஜி
03-02-2010, 06:01 AM
வாங்க குணமதி. அனைத்தும் நலம்தானே...!! மீண்டும் உங்கள் பங்களிப்பை ஜோராய் தொடங்குங்கள்.

ஜனகன்
03-02-2010, 11:55 AM
வாங்க நண்பரே, திரும்பவும் உங்களை மன்றத்தில் காண்பது மட்டற்ற மகிழ்ச்சி.

சிவா.ஜி
06-04-2010, 08:31 AM
மக்களே...இன்றிலிருந்து 23 நாட்களுக்கு விடுமுறையில் செல்வதால்...மன்ற வரவு தடைபடும். மீண்டும் உங்களுடன் இணையும்வரை....சென்று வருகிறேன்.

கீதம்
06-04-2010, 08:36 AM
விடுமுறை இனிதாய் அமைய என் வாழ்த்துகள்.

govindh
06-04-2010, 08:37 AM
சென்று வாருங்கள்...
எல்லாம் நலமாய் அமைய வாழ்த்துக்கள்...
விரைவில் வாருங்கள்...

சிவா.ஜி
06-04-2010, 08:44 AM
நன்றி கோவிந்த்.

Akila.R.D
06-04-2010, 09:54 AM
தாயகம் வருகிறீர்களா?..
மிகவும் மகிழ்ச்சி...

அனைத்தும் நினைத்தபடி அமைய வாழ்த்துக்கள்...

அக்னி
06-04-2010, 09:59 AM
விடுமுறை இனிதாக அமையட்டும்...

அப்போ அடுத்த ஆயிரத்துக்குக் கொஞ்சக் காலம் எடுக்கும் என்று சொல்லுறீங்க...

(நம்மாளுங்களுக்கு விடுமுறை என்றாற்தான் நேரமே கிடைப்பதில்லை...)

ஜனகன்
06-04-2010, 11:34 AM
சென்று வாருங்கள் சிவா. விடுப்பை குதூகலத்துடன் கொண்டாடிவிட்டு, மகிழ்வோடு வாருங்கள்.

சரோசா
06-04-2010, 12:21 PM
சென்று வாருங்கள் சிவா
குதிரையும் கொஞ்சம் ஒய்வு எடுக்கட்டுமே

மதி
06-04-2010, 01:00 PM
அண்ணே.. எப்போ பெங்களூர் வர்றீங்க..?

கலையரசி
06-04-2010, 01:50 PM
தாயகம் திரும்பும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன். விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.

இளசு
06-04-2010, 06:47 PM
மக்களே...இன்றிலிருந்து 23 நாட்களுக்கு விடுமுறையில் செல்வதால்...மன்ற வரவு தடைபடும். மீண்டும் உங்களுடன் இணையும்வரை....சென்று வருகிறேன்.

நல்லபடியாகப் போய்வாருங்கள் சிவா..

ஒரு ( வலுவான) கை குறைந்த ஆட்டம் போல் மன்றம் களை குறையும்..

பரவாயில்லை..

உங்கள் மகிழ்வான விடுப்பை எண்ணி அதைப் பொறுத்துக்கொள்வோம்..

அமரன்
06-04-2010, 08:23 PM
சென்றுவாங்க பாஸ்.

jayashankar
06-04-2010, 10:40 PM
அண்ணே.. எப்போ பெங்களூர் வர்றீங்க..?

07/04/2010 மாலை 6 மணிக்கு பெங்களூருவின் காற்றை சு(சி)வாசிப்பாருங்க மதி....

jayashankar
06-04-2010, 10:43 PM
மக்களே...இன்றிலிருந்து 23 நாட்களுக்கு விடுமுறையில் செல்வதால்...மன்ற வரவு தடைபடும். மீண்டும் உங்களுடன் இணையும்வரை....சென்று வருகிறேன்.

அப்படி இப்படி என்று எப்படியோ அடித்துப் பிடித்து உங்களை விமான நிலையத்திலாவது வந்து சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சிவா...

நல்லபடி போய் வாருங்கள்.

வரும்போது எங்கள் வீட்டில் தங்கி விட்டுத்தான் நீங்கள் உங்கள் கம்பெனிக்கு செல்ல வேண்டும்.

இதுவும் ஒரு செல்லமான உத்தரவுதான்.

மதி
07-04-2010, 05:18 AM
07/04/2010 மாலை 6 மணிக்கு பெங்களூருவின் காற்றை சு(சி)வாசிப்பாருங்க மதி....
மிக்க நன்றி... ஜெயஷங்கர்.. சார்..:icon_b:

சிவா.ஜி
07-04-2010, 05:58 AM
ஆமாம் அகிலா....உங்க ஊருலதான் முதல்ல அடியெடுத்து வெக்கப்போறேன்....அடுத்து...தாமரை, மதி, ஆதன்....எல்லாரையும் பாக்கனும். நீங்களும் விருப்பப்பட்டா.....ஒரு சந்திப்பை வெச்சுக்கலாம்.

சிவா.ஜி
07-04-2010, 06:00 AM
ரொம்பச் சரி அக்னி....அடுத்த ஆயிரத்துக்கு இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும். ஆனால்....அதிகமில்லை ஜெண்டில்மேன்.....கொஞ்சம்தான்.....ஹா...ஹா...ஹா....

(உங்களை விடறதா இல்ல)

சிவா.ஜி
07-04-2010, 06:02 AM
நன்றி ஜனகன்.

நன்றி சரோசா (என் குதிரை மேல என்ன அக்கறை......ரொம்ப சந்தோஷங்க சரோசா)

சிவா.ஜி
07-04-2010, 06:05 AM
வந்ததுக்கப்புறம்....பேசி முடிவு பண்ணிக்கலாம் மதி.

ரொம்ப நன்றிங்க கலையரசி....உங்கப் புதுச்சேரிக்குத்தான் இன்னும் வரலை. ஃபிரான்ஸுக்குத்தான் போக முடியல...நம்ம இந்தியாவின் ஃபிரான்ஸ் புதுச்சேரிக்காவது போய் பாக்கனுன்னு இருக்கு. பார்ப்போம்.

சிவா.ஜி
07-04-2010, 06:10 AM
ஆஹா.....ஒரு மிக வலுவான கை குறைவை நாங்க பல நாளா அனுபவிச்சுக்கிட்டிருக்கொம் இளசு.....(உங்களைதான் சொல்றேன்னு உங்களுக்குத் தெரியும்)

உங்களுடைய பரவலான பங்களிப்பு இருக்கும் மன்றம்தான் ஜொலிக்கும் மன்றம். அந்த நாளை ஆவலா எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்.

Akila.R.D
07-04-2010, 06:11 AM
ஆமாம் அகிலா....உங்க ஊருலதான் முதல்ல அடியெடுத்து வெக்கப்போறேன்....அடுத்து...தாமரை, மதி, ஆதன்....எல்லாரையும் பாக்கனும். நீங்களும் விருப்பப்பட்டா.....ஒரு சந்திப்பை வெச்சுக்கலாம்.

அட அப்படியா வாங்க வாங்க...சந்திப்பு எதாவது இருந்தா தகவல் குடுங்க...

சிவா.ஜி
07-04-2010, 06:12 AM
ரொம்ப நன்றி பாஸ்.

வழியனுப்ப வந்து, அந்த நைஜீரியா...ஏர்போர்ட்டில்....சமய சஞ்சீவியாய் உதவினதை என்னால் மறக்கவே முடியாது ஜெய். ரொம்ப ரொம்ப நன்றி.

பா.சங்கீதா
07-04-2010, 06:31 AM
சிவா அண்ணா நீங்க இல்லாம போர் அடிக்க போகுது...
நல்லபடியா போய்ட்டு சீக்ரம் வந்துடுங்க...:)

கலையரசி
19-04-2010, 01:31 PM
வந்ததுக்கப்புறம்....பேசி முடிவு பண்ணிக்கலாம் மதி.

ரொம்ப நன்றிங்க கலையரசி....உங்கப் புதுச்சேரிக்குத்தான் இன்னும் வரலை. ஃபிரான்ஸுக்குத்தான் போக முடியல...நம்ம இந்தியாவின் ஃபிரான்ஸ் புதுச்சேரிக்காவது போய் பாக்கனுன்னு இருக்கு. பார்ப்போம்.

கண்டிப்பாக நீங்கள் குடும்பத்துடன் புதுவை வந்து எங்கள் வீட்டில் தங்கிச் சுற்றிப் பார்த்துச் செல்ல வேண்டும். வருக, வருக!

Ravee
21-04-2010, 01:51 AM
http://www.qatargas.com/uploadedImages/QatarGas/Job_Opportunities/Reducing_Smog.jpg


அன்பு மன்ற உறவுகளே , நான் பணி நிமித்தம் கத்தார் செல்வதால் உங்கள் அனைவரையும் ஒரு மாத காலம் பிரிய வேண்டியுள்ளது. முடிந்த வரை மன்றம் வர முயற்சிக்கிறேன் . சில வெற்றிகள் கிட்டும் போது சில இழப்புக்கள் இருக்கும் என்பார்கள் அது இது தானோ .

அன்புரசிகன்
21-04-2010, 05:39 AM
நம் மன்ற உறவு விராடன் அங்கு தான் இருக்கிறார். கொசுறு: பெரிய காரும் வைச்சிருக்கிறார் கத்தாரை சுற்றிக்காட்ட சிறந்த ஆள்... :D

பயணம் இனிதே அமையட்டும்.

அக்னி
21-04-2010, 06:52 AM
உங்கள் பணி சிறந்தே நிறைவேற வாழ்த்துக்கள்.

இளசு அண்ணா அடிக்கடி சொல்வது...
“குடும்பம், பணி, மன்றம்...”

பணி நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் விராடரோடு சேர்ந்து (சந்தர்ப்பம் கிட்டினாற்) சுற்றிப் பார்த்து மகிழ்வனுபவங்களைப் பகிர்ந்திடுங்கள்...

govindh
21-04-2010, 08:31 AM
உங்கள் பயணம்....பணி...இனிதே அமைய வாழ்த்துக்கள்...

மதி
21-04-2010, 09:12 AM
பயணம் இனிதே அமையட்டும் ரவீ.. முடிந்தபோது மன்றம் வாருங்கள்.

ஆதி
21-04-2010, 09:15 AM
உங்களின் பணி நிமித்தமான பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் ரவீ.. இயலும் எனும் போதெலாம் மன்றம் வாங்க..

கீதம்
21-04-2010, 12:05 PM
பணி சிறக்கவும் பயணம் இனிதாய் அமையவும் என் வாழ்த்துகள்.

கலையரசி
21-04-2010, 12:59 PM
நல்லவிதமாய்ப் பயணம் முடிந்து தாயகம் திரும்பிய பின் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.