PDA

View Full Version : விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு

Pages : 1 2 [3]

அமரன்
06-01-2011, 08:36 PM
நைஜீரிய வாழ்க்கை இன்றோடு முடிகிறது. இன்னும் சில நாட்களுக்கு தாய்நாட்டு வாசம். பிறகு எந்த நாடோ....

இனி அடிக்கடி வாரேனுங்க. தடையில்லா இணையமிருக்குமே...!!!

உலகம் சுற்றும் வாலிபரே.

தேன் வந்து பாயுது விழியினிலே..

அக்னி
06-01-2011, 08:52 PM
தேன் வந்து பாயுது விழியினிலே..
ரசித்தேன்...

சிவா.ஜி...
அடுத்து எங்க அந்தாட்டிக்காவா... :rolleyes:

கீதம்
06-01-2011, 09:37 PM
நைஜீரிய வாழ்க்கை இன்றோடு முடிகிறது. இன்னும் சில நாட்களுக்கு தாய்நாட்டு வாசம். பிறகு எந்த நாடோ....

இனி அடிக்கடி வாரேனுங்க. தடையில்லா இணையமிருக்குமே...!!!

அன்பான வரவேற்புகள் அண்ணா, தாய்நாட்டுக்கும், தமிழ்மன்றத்துக்கும்.

எங்களுடன் இணையத்தடையாயிருந்த இணையத்தடைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இனிதே துவக்குங்கள் உங்கள் இனிய இணையப் பயணத்தை!

சிவா.ஜி
07-01-2011, 04:14 AM
நன்றி டெல்லாஸ்.

அக்னியைப்போலவே நானும் ரசித்தேன் பாஸ். அதான் நீங்க பாஸ்....அதான் நம்ம அக்னி. இணையம் தராத நிறுவனம் தேவையான்னு யோசிச்சேன்....வேணான்னு மனசு சொல்லுச்சு...முடிவு பண்ணிட்டேன்.

அடுத்த நிறுவனம் போகுமுன்னவே உறுதியா கேட்டுக்கிடனும்....இணையம் தடையில்லாமக் கிடைக்குமான்னு. சம்பளம் இரண்டாவது இடம். சரிங்களா...

ரொம்ப நன்றிம்மா கீதம். ரொம்பவே பொறுமையா இருந்துட்டேன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மனோகரனாய் பொங்கி எழுந்துட்டேன். கண்ணாம்பாவா நம்ம தமிழ்மன்றத்தாய் உசுப்பேத்தி சங்கிலியை உடைக்க வெச்சுட்டா....!!!

இனி தினமும் பார்ப்போம் உறவுகளே.

(இன்னும் எவ்ளோ இருக்கு படிக்க....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா.....இப்பவே கண்ணக்கட்டுதே......)

govindh
07-01-2011, 07:40 AM
சிறப்பான வாழ்த்துக்கள் சிவா.ஜி.அண்ணா.
இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்.
அடுத்து எந்த நாடு என்று விரைவில் அறிவியுங்கள்.

பாரதி
07-01-2011, 10:43 AM
அன்பு சிவா,
உங்கள் தாயகப்பயணமும் விடுமுறைக்காலமும் இனிதாக அமையட்டும்.
எதிர்காலம் இன்னும் சிறப்பானதாக அமையட்டும். தாயகத்தில் உத்தேசமாக எத்தனை நாட்கள் இருப்பீர்கள் சிவா..?

சிவா.ஜி
08-01-2011, 04:37 PM
வாழ்த்துக்களிக்கு நன்றி பாரதி. அநேகமாய் இரண்டு மாதங்கள் இருப்பேனென்று நினைக்கிறேன்.

அமரன்
09-01-2011, 09:21 PM
மிக முக்கியமான நான்கு நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் அடுத்து வரும் இரு வாரங்களுக்கு விடுப்பில் செல்கிறேன். அவசிய, அவசர நிர்வாகப் பணிகளில் மட்டும் ஈடுபடும் வாய்ப்பு மட்டும் உண்டு.

கீதம்
09-01-2011, 09:43 PM
மிக முக்கியமான நான்கு நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் அடுத்து வரும் இரு வாரங்களுக்கு விடுப்பில் செல்கிறேன். அவசிய, அவசர நிர்வாகப் பணிகளில் மட்டும் ஈடுபடும் வாய்ப்பு மட்டும் உண்டு.

நிகழ்வுகள் நல்லவிதமாய் நிகழ்ந்தேறவும் விடுமுறை இனிதே கழியவும் அன்பான வாழ்த்துகள் அமரன்.

பாரதி
10-01-2011, 02:17 PM
உங்கள் விடுப்பும், நிகழ்வுகளும் நல்லமுறையில் அமைய வாழ்த்துகிறேன் அமரன்.

சுடர்விழி
15-01-2011, 10:53 PM
உடல் நலம் பெற்று புத்துணர்வுடன் மீண்டும் வந்து விட்டேன்....வாழ்த்தி அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !!

கீதம்
15-01-2011, 11:06 PM
புத்தம்புது மலரென புத்துணர்வுடன் கவிமணம் வீச வந்திருக்கும் சுடர்விழிக்கு அன்பான வரவேற்புகள்.

சிவா.ஜி
16-01-2011, 01:54 AM
புத்துணர்வோடு திரும்பியிருக்கும் சுடர்விழிக்கு வாழ்த்துக்கள் மற்றும் அன்பான வரவேற்புகள்.

Nivas.T
08-02-2011, 08:03 AM
மீண்டு(ம்) வந்தேன் மன்றத்தில் இணைந்து மகிழ

மன்ற நண்பர்களுக்கு வணக்கம் வணக்கம் வணக்கம்

கீதம்
08-02-2011, 08:57 AM
மீண்டு(ம்) வந்தேன் மன்றத்தில் இணைந்து மகிழ

மன்ற நண்பர்களுக்கு வணக்கம் வணக்கம் வணக்கம்

வாங்க, வாங்க! அடுத்தது என்ன?

உற்சாகமாய்க் களமிறங்கவேண்டியதுதானே?:icon_b:

Nivas.T
08-02-2011, 09:27 AM
வாங்க, வாங்க! அடுத்தது என்ன?

உற்சாகமாய்க் களமிறங்கவேண்டியதுதானே?:icon_b:

நிச்சயமாக! நீண்ட இடைவெளி என்பதால் சிறிது நேரம் ஆகலாம்:D

செல்வா
23-02-2011, 01:36 PM
எல்லாருக்கும் வணக்கம் ...!

நல்லா இருக்கீங்களா மக்களே...?

சூரியன்
23-02-2011, 01:53 PM
எல்லாருக்கும் வணக்கம் ...!

நல்லா இருக்கீங்களா மக்களே...?

அண்ணா நலமா? :)

செல்வா
23-02-2011, 01:57 PM
அண்ணா நலமா? :)

நலமே மக்கா... நீங்கள் நலமா?

சூரியன்
23-02-2011, 02:10 PM
ஏதோ இருக்கின்றேன்..
வீட்டில் அணைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள்.

அமரன்
23-02-2011, 06:01 PM
எல்லாருக்கும் வணக்கம் ...!

நல்லா இருக்கீங்களா மக்களே...?

வணக்கமய்யா..

இன்னுமா பாலை வனத்தில் வசிக்கிறீங்க.

இது அவுங்களுக்குத் தெரியுமா?

கீதம்
23-02-2011, 07:41 PM
எல்லாருக்கும் வணக்கம் ...!

நல்லா இருக்கீங்களா மக்களே...?

நல்வரவு செல்வா.

நாங்க நல்லா இருக்கோம். நீங்க நலம்தானே?

Nivas.T
24-02-2011, 06:41 AM
நலமே மக்கா... நீங்கள் நலமா?

நாங்கள் நலம்

நீங்கள் நலம்தானே?

வருக வருக

சொ.ஞானசம்பந்தன்
26-02-2011, 01:14 AM
மார்ச் மாதம் முழுதும் சென்னையில் என் இளைய மகள் வீட்டில் வசிப்பேன். அப்போது மன்றத்தில் சஞ்சரிப்பது இயலாது.
சொ. ஞானசம்பந்தன்

Nivas.T
26-02-2011, 04:12 AM
நல்லது ஐயா,

பயணம் இனிதாய் அமையட்டும், முடிந்த வரை மன்றம் வர முயற்சி செய்யுங்கள்

அமரன்
26-02-2011, 09:35 AM
நீங்கள் மீண்டும் மன்றம் வரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் அய்யா.

மகிழ்ச்சியுடன் நாட்களைக் கழித்து வாருங்கள்.

அக்னி
26-02-2011, 09:53 AM
சொ.ஞா. ஐயா...
அவங்களையும் மன்றத்துக்குள்ளார இழுத்துவிடுறது...

பொழுது இனிமையாக அமையட்டும்.

aren
26-02-2011, 11:59 AM
மார்ச் மாதம் முழுதும் சென்னையில் என் இளைய மகள் வீட்டில் வசிப்பேன். அப்போது மன்றத்தில் சஞ்சரிப்பது இயலாது.
சொ. ஞானசம்பந்தன்

ஓ சென்னையா, அருமையான ஊர். நன்றாக அனுபவித்துவிட்டு வாருங்கள்.

அன்புரசிகன்
26-02-2011, 12:06 PM
சொ.ஞா. ஐயா...
அவங்களையும் மன்றத்துக்குள்ளார இழுத்துவிடுறது...

பொழுது இனிமையாக அமையட்டும்.

அவர்களும் மன்றத்தில் இருக்காங்க. முடிஞ்சா கண்டுபிடிங்க.:D

சொ.ஞானசம்பந்தன்
27-02-2011, 12:56 AM
நீங்கள் மீண்டும் மன்றம் வரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் அய்யா.

மகிழ்ச்சியுடன் நாட்களைக் கழித்து வாருங்கள்.

வாழ்த்துக்கு அகமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-02-2011, 01:01 AM
சொ.ஞா. ஐயா...
அவங்களையும் மன்றத்துக்குள்ளார இழுத்துவிடுறது...

பொழுது இனிமையாக அமையட்டும்.

மன்ற உறுப்பினர் தான்; ஆனால் வங்கி அலுவலராய் (officer) இருப்பதால் போதிய நேரம் இல்லை.
உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-02-2011, 01:02 AM
ஓ சென்னையா, அருமையான ஊர். நன்றாக அனுபவித்துவிட்டு வாருங்கள்.

வாழ்த்துக்கு அகமார்ந்த நன்றி.

மதி
27-02-2011, 01:14 AM
சென்னையில் தங்களை கண்டிப்பாய் சந்திக்கவேண்டும். நேரமிருக்கும் போது சொல்லுங்கள். வருகிறேன்.

ராஜாராம்
04-03-2011, 01:59 AM
I AM SUFFERING FROM ,FEVER AND HEAD-ACHE,SO I AM UNABLE TO ATTEND THE CLASS,KINDLY GRAND ME LEAVE FOR ONEDAY.....

மன்னிக்கவும்..
சின்னவயசுல அடிக்கடி கிளாஸ் கட் பன்னதால...
இதே லீவு லெட்டரை எழுதிட்டேன்..

நான்,
கேரளாவிற்கு, சோட்டாணிக்கரை பகவதி அம்மன்,கோவிலுக்கு இன்று செல்ல இருப்பதால்.
இன்றிலிருந்து,வரும் திங்கள் வரை மன்றம் வர இயலாது.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

(அதாவது,,..மூன்று நாட்கள்...மன்றத்து மக்களுக்கு...கொண்டாட்டம் :lachen001::lachen001::lachen001:)

அன்புரசிகன்
04-03-2011, 02:02 AM

I ற்கு முன்னால் as போடாததால் லீவ் கான்சல்ட்.... வகுப்புக்கு போங்க... (அப்படித்தான் விவேக் சொல்றவர்):lachen001:

p.suresh
04-03-2011, 02:33 AM
I AM SUFFERING FROM ,FEVER AND HEAD-ACHE,SO I AM UNABLE TO ATTEND THE CLASS,KINDLY GRAND ME LEAVE FOR ONEDAY.....

யப்பா ஸ்கூல்டேஸ்ல எக்ஸாம்ஹால்ல நான் பாஸ் பண்ண பிட் பேப்பர இன்னும் பத்திரமா வச்சிருக்கியா?:lachen001::lachen001::lachen001:

அன்பு நண்பா,

உன் ஆன்மீக பயணம் இனிதே அமையட்டும்.அது இங்கு கட்டுரையாய் மலருமேயாயின் கூடுதல் மகிழ்ச்சி.

ராஜாராம்
04-03-2011, 03:25 AM
I ற்கு முன்னால் as போடாததால் லீவ் கான்சல்ட்.... வகுப்புக்கு போங்க... (அப்படித்தான் விவேக் சொல்றவர்):lachen001:
அப்படியெல்லாம் சொல்லாதிங்க...சார்,...
எனக்கு லீவு வேணும்...இல்லாட்டி அழுதுருவேன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்............. :traurig001:

ராஜாராம்
04-03-2011, 03:30 AM
[QUOTE=p.suresh;515967]யப்பா ஸ்கூல்டேஸ்ல எக்ஸாம்ஹால்ல நான் பாஸ் பண்ண பிட் பேப்பர இன்னும் பத்திரமா வச்சிருக்கியா?:lachen001::lachen001::lachen001:
[/QUOTE

நீ கொடுத்தப் பிட்டைப் பார்த்துதான்,...இதில காப்பிஅடிச்சு எழுதினேன்.
அன்புரசிகன் லீவு தரமாட்டேன்னு சொல்றாரு...
நிஜமா...உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?தெரியாதா?
என்கிட்டமட்டும் சொல்லு...
நான் முராவிடம் சொல்லமாட்டேன்..

அமரன்
04-03-2011, 05:23 AM
ராரா.

பத்திரமாய்ப் போயிட்டு கட்டுரையோடு வாங்க*

ஜானகி
04-03-2011, 05:28 AM
கண்ணாமூச்சி ஆட்டம் - பாகம் - 4 - சோட்டானிக்கரை பகவதி கோவிலிலா...? ஜாக்கிரதை....!

Nivas.T
04-03-2011, 05:28 AM
ராரா,

நல்லபடியா போயிட்டு வாங்க, பயணம் இனிதாய் அமையட்டும். அதுக்கு முன்னாடி ஒரு நிபந்தனை கண்ணாமூச்சி-3 பதிச்சுட்டு போங்க என்ன ?

ஆதன்
04-03-2011, 06:10 AM
பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ராரா

M.Jagadeesan
04-03-2011, 06:47 AM
சென்று வருக!

sarcharan
04-03-2011, 07:34 AM
சரி சரி விடுப்பு தர்றோம்.. கார மோதுனதுல உங்களுக்கு ஏதோ ஆய்டாது போல..
மு ரா இன்னிக்கு உங்களுக்கு ப்ரீடம் கெடச்சாச்சு

முரளிராஜா
05-03-2011, 11:20 AM
ஊருக்கு போயிட்டு சீக்கிரம் வா ராரா.
உன்னை நக்கல் பன்னாம பொழுதே போகவில்லை.:lachen001:

உமாமீனா
05-03-2011, 11:25 AM
சென்று வருக..................

சூரியன்
05-03-2011, 11:42 AM
பயணம் இனிமையாய் அமையட்டும்.

sarcharan
15-03-2011, 11:10 AM
நாளை (16 -மார்ச்- 2011 ) நான் விடுப்பு எடுக்க உள்ளேன்.. மன்றத்திற்கு 17ம் தேதி அன்று வருவேன்...

ஓவியன்
15-03-2011, 11:13 AM
நாளை (16 -மார்ச்- 2011 ) நான் விடுப்பு எடுக்க உள்ளேன்.. மன்றத்திற்கு 17ம் தேதி அன்று வருவேன்...

ஒரு நாள் விடுமுறைக்கு அறிவித்தல் கொடுப்பது கொஞ்சம் ஓவராகத்தானிருக்கு:D, இருந்தாலும் விடுமுறை இனிதே அமைய என் வாழ்த்துகள் ..!!

முரளிராஜா
15-03-2011, 11:15 AM
சாரா, நாளைக்கு ஒரு நாள் நான் மட்டும் அந்த ராரா கிட்ட மாட்டிக்கனுமா?
நம்ம ஜானகி மேடத்துகிட்ட அல்வா வாங்க போறிங்களா?
நல்லபடியா போயிட்டு வாங்க. ஆர்வ கோளாறுல அந்த அல்வாவ சாப்பிடிங்கன்னா
வரும் பின் விளைவுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. :D:D

ராஜாராம்
15-03-2011, 11:43 AM
சாரா ஊருக்குப் போறிங்களா?
நல்லபடியாப் போயிட்டு வாங்க...
போகும்போது முராவையும் கூட்டிக்கிட்டு போங்களேன்...
எனக்கும் ஒரு நாள் நிம்மதியா...ரிலாக்ஸா...இருக்கும்..

Nivas.T
15-03-2011, 11:47 AM
நாளை (16 -மார்ச்- 2011 ) நான் விடுப்பு எடுக்க உள்ளேன்.. மன்றத்திற்கு 17ம் தேதி அன்று வருவேன்...

சாரா, நாளைக்கு ஒரு நாள் நான் மட்டும் அந்த ராரா கிட்ட மாட்டிக்கனுமா?
நம்ம ஜானகி மேடத்துகிட்ட அல்வா வாங்க போறிங்களா?
நல்லபடியா போயிட்டு வாங்க. ஆர்வ கோளாறுல அந்த அல்வாவ சாப்பிடிங்கன்னா
வரும் பின் விளைவுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. :D:D

சாரா ஊருக்குப் போறிங்களா?
நல்லபடியாப் போயிட்டு வாங்க...
போகும்போது முராவையும் கூட்டிக்கிட்டு போங்களேன்...
எனக்கும் ஒரு நாள் நிம்மதியா...ரிலாக்ஸா...இருக்கும்..

என்ன ஒரு வில்லத்தனம் ????:sauer028::sauer028::sauer028:

ராஜாராம்
15-03-2011, 11:52 AM
நிவாஸ் என்னைய நீங்களாவது நம்புங்க,...
நான் பச்சப்புள்ள...அப்பாவி...கள்ளம்கபடம் இல்லாத பிஞ்சு உள்ளம்,,,:redface:

sarcharan
15-03-2011, 11:58 AM
நிவாஸ் என்னைய நீங்களாவது நம்புங்க,...
நான் பச்சப்புள்ள...அப்பாவி...கள்ளம்கபடம் இல்லாத பிஞ்சு உள்ளம்,,,:redface:

அதுக்காக அனுமார் மாதிரி நெஞ்ச எல்லாம் கிழிச்சு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ண வேண்டாம் (நீங்க அடிக்கடி பாக்கேட்ட கிழிப்பதாக தகவல்...)

M.Jagadeesan
16-03-2011, 05:56 AM
இன்று சொந்த ஊருக்குச் செல்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகும்.

Nivas.T
16-03-2011, 06:38 AM
இன்று சொந்த ஊருக்குச் செல்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகும்.

பயணம் இனிதாய் அமையட்டும்

முரளிராஜா
16-03-2011, 07:27 AM
ஜெகதீசன் சார்,
பயணம் இனிதாக அமையட்டும்
சொந்தங்களை பார்த்துவிட்டு சந்தோசமா வாங்க.

M.Jagadeesan
16-03-2011, 07:39 AM
ஜெகதீசன் சார்,
பயணம் இனிதாக அமையட்டும்
சொந்தங்களை பார்த்துவிட்டு சந்தோசமா வாங்க.

நன்றி மு.ரா!

M.Jagadeesan
16-03-2011, 07:40 AM
பயணம் இனிதாய் அமையட்டும்

நன்றி நிவாஸ்!

அக்னி
16-03-2011, 01:46 PM
ஒரு நாள் விடுமுறையிற் சென்ற சரண் அவர்களுக்கும் (ஒரு மணி விடுமுறைக்கு அறிவிப்பீங்களா சரா...),
ஒரு வார விடுமுறியிற் சென்றுகொண்டிருக்கும் ஜெகதீஸன் அவர்களுக்கும்,
விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
16-03-2011, 01:51 PM
ஜெகதீசன் அவர்களின் விடுமுறையும், சொந்த ஊர் பயணமும் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

Nivas.T
16-03-2011, 02:00 PM
ஜெகதீசன் அவர்களின் விடுமுறையும், சொந்த ஊர் பயணமும் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

அது சரி நீங்க சொல்லிக்காம அடிக்கடி விடுப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26547) எடுக்குறீங்களே ஏன்? :D:D:D:D

sarcharan
17-03-2011, 05:24 AM
ஜெகதீசன் சார் அவர்களின் விடுமுறையும், பயணமும் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

ராஜாராம்
23-03-2011, 05:09 AM
நிர்வாக வேலைக் காரணமாக,வெளியூர் செல்ல இருப்பதால்...
வருகிற,
26.03.2011சனிக்கிழமை வரை என்னால் மன்றம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுங்க
23-03-2011, 08:54 AM
அலுவல் காரணமாக வெளியூர் செல்வதால்....

சனிக்கிழமை (26-03-2011) வரை மன்றத்திற்கு விடுப்பு!

Nivas.T
23-03-2011, 10:03 AM
நிர்வாக வேலைக் காரணமாக,வெளியூர் செல்ல இருப்பதால்...
வருகிற,
26.03.2011சனிக்கிழமை வரை என்னால் மன்றம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்லபடியா போயிட்டு வாங்க ராரா :icon_b:

Nivas.T
23-03-2011, 10:04 AM
அலுவல் காரணமாக வெளியூர் செல்வதால்....

சனிக்கிழமை (26-03-2011) வரை மன்றத்திற்கு விடுப்பு!

பயணம் இனிதாய் அமையட்டும் ஆளுங்க

முரளிராஜா
23-03-2011, 11:07 AM
நிர்வாக வேலைக் காரணமாக,வெளியூர் செல்ல இருப்பதால்...
வருகிற,
26.03.2011சனிக்கிழமை வரை என்னால் மன்றம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நல்லபடியா போயிட்டு வா
ஆனா நிர்வாக வேலை காரண்மானு சொல்லி இருக்கியே
ஆமாம் தெரியாமத்தான் கேட்கிறேன்
நிர்வாக வேலைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்:confused::confused:

முரளிராஜா
23-03-2011, 12:45 PM
அலுவல் காரணமாக வெளியூர் செல்வதால்....

சனிக்கிழமை (26-03-2011) வரை மன்றத்திற்கு விடுப்பு!

உங்கள் பயணம் இனிமையாக அமைய எனது வாழ்த்துக்கள் நண்பா

sarcharan
24-03-2011, 04:25 AM
நிர்வாக வேலைக் காரணமாக,வெளியூர் செல்ல இருப்பதால்...
வருகிற,
26.03.2011சனிக்கிழமை வரை என்னால் மன்றம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அலுவல் காரணமாக வெளியூர் செல்வதால்....

சனிக்கிழமை (26-03-2011) வரை மன்றத்திற்கு விடுப்பு!

உங்கள் பயணம் இனிமையாக அமைய எனது வாழ்த்துக்கள் நண்பர்களே...:)

ஆளுங்க
27-03-2011, 09:32 AM
பயணம் சிறக்க வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...
வாழ்த்திய படி சிறப்பாகவே அமைந்தது!!

ராஜாராம்
08-04-2011, 05:05 AM
நண்பர்களுக்கும்,
ஜானகி அக்காவிற்கும்,
எனது அம்மாவிற்கு கடந்தசில நாட்களாக உடல் நிலை சரியில்லை.அதனால் என்னால் மன்றம் வர இயலவில்லை .நாளை மன்றம் வந்துவிடுவேன்,.

அன்புரசிகன்
08-04-2011, 06:10 AM
தாயார் உடல் நலன் தான் முக்கியம். மன்றமல்ல. சீக்கிரம் குணமடைவார் உங்கள் தயவில். சீரோடு கவனியுங்கள்.

Nivas.T
08-04-2011, 12:52 PM
நல்லபடியா அம்மாவை கவனிச்சிட்டு
பொறுமையா வாங்க ஒன்னும் அவசரமில்லா

ஜானகி
09-04-2011, 02:01 PM
உங்கள் தாயர் , உங்களது கவனிப்பிலும், பராமரிப்பிலும் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

M.Jagadeesan
09-04-2011, 02:10 PM
தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை.அன்னை நலம் பெற வேண்டுகிறேன்.

சிவா.ஜி
09-04-2011, 04:01 PM
வாங்க ராஜாராம்....அம்மாவின் உடல்நிலை அனைத்திலும் முக்கியம்....நல்ல சேதியோடு திரும்ப வாருங்கள்.

அமரன்
09-04-2011, 09:53 PM
அன்னையுல் நலம் நன்றாக அமையும்.

நம்பிக்கையுடன் சென்று வாருங்கள் ராரா.

முரளிராஜா
10-04-2011, 12:12 PM
நாளை நிச்சயம் மன்றம் வருவாய் என நம்புகிறேன் ரா ரா.
உன் தாயை நீ தினமும் வேண்டும் பகவதி அம்மன் காத்திடுவாள்
கவலை வேண்டாம்

உமாமீனா
11-04-2011, 10:33 AM
விரைவில் குணம் அடைய பிராத்திக்கிறேன்

அக்னி
11-04-2011, 11:54 AM
இளசு அண்ணா அடிக்கடி சொல்லுவது...
குடும்பம், வேலை..., மன்றம்... என்ற முக்கியத்துவமே இருக்க வேண்டும் என்று...

அம்மாவின் நலன்களில் முழுமையான கவனத்தைச் செலுத்துங்கள்.
நம் அனைவர் அன்பும், வேண்டுதல்களும் பரிபூரண சுகத்தை அவருக்கு விரைந்தளிக்கும்.

சொ.ஞானசம்பந்தன்
11-04-2011, 04:45 PM
மார்ச் மாத இறுதியில் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்துவிட்டேன். இணையம் வேலை செய்யாததால் மன்றம் வர இயலவில்லை.

அமரன்
11-04-2011, 09:14 PM
இறந்த காலத்தில் சொல்லி இருப்பதிலிருந்து இனிப்பான சேதி சொல்லி இருக்கீங்க என்று புரிகிறது.

மகிழ்ச்சி. வாங்க! வாங்க!

M.Jagadeesan
15-04-2011, 11:36 AM
சொந்த அலுவல் காரணமாக வெளியூர் செல்வதால். 7 நாட்களுக்கு மன்றம் வர இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Nivas.T
15-04-2011, 11:52 AM
பயணம் இனிதாய் அமையட்டும் சென்று வாருங்கள் ஐயா

உமாமீனா
24-04-2011, 06:49 AM
இன்னும் இரு தினங்களில், குடும்பத்துடன் இன்ப சுற்றுலா பயணம் கோடை விடுமுறைக்கு பின் சந்திப்போம்.

மடி கணனியுடன் செல்வதால் இடை இடையே வாய்ப்பு கிடைத்தால் எட்டி பார்க்கிறேன்.

Nivas.T
24-04-2011, 08:08 AM
கோடை விடுமுறையை உர்ச்சகமா கொண்டாடிட்டு வாங்க

பயணம் இனிதாய் அமையட்டும்

dellas
20-06-2011, 06:52 AM
இனிய நண்பர்களே,

சொல்லாமல் விடுப்பில் சென்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். மீண்டும் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

Nivas.T
20-06-2011, 04:23 PM
வருக டெல்லாஸ்

மீண்டும் உங்கள் தொடரை தொடருங்கள்

M.Jagadeesan
20-06-2011, 04:27 PM
மீண்டும் தங்களின் படைப்புகளைக் காண ஆவல்.

நாஞ்சில் த.க.ஜெய்
20-06-2011, 04:39 PM
வாருங்கள் நண்பரே சிறிது இடைவெளிக்கு பின் தங்களை சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி..தங்கள் பங்களிப்பினை தொடர்ந்து அளியுங்கள்....

கீதம்
21-06-2011, 12:44 AM
வாங்க டெல்லாஸ்... சரித்திரம் தொடரட்டும்.:)

சிவா.ஜி
21-06-2011, 10:56 AM
வாருங்கள் டெல்லாஸ்....விடுமுறையை இனிதே கழித்து வந்திருக்கிறீர்கள்....மீண்டும் கலக்குங்கள்.

dhineshvaran
05-07-2011, 11:15 AM
to allow me to login:icon_rollout:

dhineshvaran
05-07-2011, 11:16 AM
teach me to type in tamil

நூர்
05-07-2011, 02:31 PM
teach me to type in tamil

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2 இங்கு கிளிக் செய்யுங்கள். தமிழில் எழுதுவதை பற்றி நிறைய பதிவுகள் இருக்கிறது.

அச்சலா
07-07-2011, 03:46 PM
சில வர முடியுது...ஆனால் பல நான் ஊரில் இல்லை...
இப்ப அப்ப அப்ப வருவேன்..
இதுதான் இன்று மகிழ்ச்சியான செய்தி....
டும் டும்.........

நாஞ்சில் த.க.ஜெய்
10-07-2011, 06:00 PM
இப்ப அப்ப எப்ப வந்தாலும் வரவேணும் தரவேணும் பதிவுகள் பல ...

அக்னி
05-08-2011, 05:43 AM
சில நாட்களாக என் மனதில் ஒரு நெருடல்.

ஆரம்பநாட்களின் பதிவு வேகம் இப்போது என்னிடம் இல்லை என்றாலும்,
இடும் பதிவுகள் கூட சிலருக்கே என்றாகிவிடுகின்றது.
அலைபேசியூடாக மன்றம் வருவதுவும், படைப்புக்களை வாசிப்பதுவும் என்னிடம் அதிகரித்துவிட்டதால்,
வரவு பதியப்பெற்றும் பதிவு வருகுதில்லை.
எனது பதிவுகளின் மேற்கோள்களுக்கும் பதிவிட என்னமோ அமையுதில்லை.
எவரேனும் நான் புறக்கணிப்பதாக நினைப்பரோ என்னும் எண்ணம் வலுப்பெற்றுவருகின்றது.
இந்த எண்ணம் எனது பதிவுகளை இன்னமும் மட்டுப்படுத்திவிடுகின்றது.

மீள என்ன செய்யலாம் என சிந்தித்ததால் வந்த முடிவுதான்,
மன்றத்திலிருந்து முழுமையாகச் சற்றுக்காலம் விலத்தியிருப்பது
என்பது...

இம்முடிவின் பின்னணியில், எந்தவித மனக்கசப்புக்களோ, எந்தவிதக் காரணங்களோ நான் மேற்சொன்னதைவிடுத்து இல்லை.

இந்த அஞ்ஞாதவாசக்காலம், நாட்களாகலாம்.., வாரங்களாகலாம்.., ஆனால் மாதங்களாகுமுன் வந்துவிடுவேன்...

இணைந்ததிலிருந்து இதுவரை மன்றத்தை வலுக்கட்டாயமாகப் பிரிந்திருந்ததில்லை.
அதனால் இதன் சாத்தியம் குறித்த சந்தேகத்துடனேயே இப்பதிவை இடுகின்றேன்.

மீண்டும் விரைவில் சந்திப்போம்.., உறவுகளே..!

அன்புரசிகன்
05-08-2011, 05:56 AM
மீள என்ன செய்யலாம் என சிந்தித்ததால் வந்த முடிவுதான்,
மன்றத்திலிருந்து முழுமையாகச் சற்றுக்காலம் விலத்தியிருப்பது
என்பது...

சும்மா கதைவிடாதப்பு... முந்தியெல்லாம் மூஞ்சிப்புத்தகம் தான். இப்ப வேற கூகிள் + ம் வந்துவிட்டது. அதுகள்ல கேம் விளையாடுறத்துக்கும் Like பண்றத்துக்கும் tag பண்றத்துக்கும் நேரம் சரியாகுது என்று சொல்லுங்கோவேன்... :D :D :D:lachen001:

Nivas.T
05-08-2011, 06:19 AM
அக்னி இதுக்க யாராவது வராம இருப்பாங்களா? சரி ஏதோ ஒரு முடிவுல இருக்கீங்க, தயார்ப்டுத்திகிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க.

நாஞ்சில் த.க.ஜெய்
05-08-2011, 11:02 AM
தோழரே !
மனதில் தோன்றும் வலியினை நீக்கும் மருந்து காலத்துக்கு உண்டு அதேநேரத்தில் உறவின் பிரிவினையும் மறக்கடிக்கும் வலிமையும் உண்டு ...ஆகவே எடுத்துகொள்ளுங்கள் சிறிது காலம்..அதை தொடர்ந்து வரவேண்டும் கவி சமர் களத்தில் சந்திக்க ....

அமரன்
06-08-2011, 09:41 AM
அடப்பாவி....

உப்பிடிப் பார்த்தால் நான் நீ.....ண்ட நாட்களுக்கு முன்னரே நீ.....ண்ட விடுப்பில் போயிருக்கனும்..

ஓவியன்
06-08-2011, 10:51 AM
உப்பிடிப் பார்த்தால் நான் நீ.....ண்ட நாட்களுக்கு முன்னரே நீ.....ண்ட விடுப்பில் போயிருக்கனும்..

அட நீங்க விடுப்பில இருக்கிறீங்கணுதான் நான் நினைச்சேன் :D, அப்படி இல்லையா...????!!! :aetsch013:

ஓவியன்
06-08-2011, 10:54 AM
மீள என்ன செய்யலாம் என சிந்தித்ததால் வந்த முடிவுதான்,
மன்றத்திலிருந்து முழுமையாகச் சற்றுக்காலம் விலத்தியிருப்பது
என்பது...

ஏன், ஏன் இந்த கொலை வெறி அக்னியாரே...???? :D:D:D

சிவா.ஜி
06-08-2011, 01:26 PM
ஏன்...ஏன்...இப்பூடீ....நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு.....திறனாய்வுப் புலியார்...மீண்டும்..தனையாய்ந்து....மறு முடிவு எடுக்க வேண்டும்.

பாரதி
06-08-2011, 02:33 PM
அன்பு அக்னி,

உங்கள் ஓய்வு அல்லது அஞ்ஞாத வாசம் நொடித்துளிகளாகவோ, நிமிடத்துளிகளாகவோ, மணித்துளிகளாகவோ மட்டுமே இருக்கட்டும்.

உடனே வாருங்கள் ஐயா. சாரதி மற்றும் பசுமை மாறாப் பயணங்களை தொடர வேண்டாமோ..? கண்டிப்பாக எழுதுவேன் என்ற உங்கள் உறுதியை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

அமரன்
06-08-2011, 09:28 PM
அட நீங்க விடுப்பில இருக்கிறீங்கணுதான் நான் நினைச்சேன் :D, அப்படி இல்லையா...????!!! :aetsch013:

ம்கும்,, நல்லாக் கேக்குறாங்கப்பா விடுப்பு,

Nivas.T
12-08-2011, 07:46 AM
http://lifecoachingsingapore.org/wp-content/uploads/2011/01/too-much-work.jpg

http://www.youminusstress.com/wp-content/uploads/2011/04/too-much-work.jpg

http://www.dreamstime.com/too-much-work-thumb1907891.jpg

:traurig001::traurig001::traurig001::traurig001:

அன்புரசிகன்
13-08-2011, 05:15 AM
http://www.dreamstime.com/too-much-work-thumb1907891.jpg

:traurig001::traurig001::traurig001::traurig001:

ஆணியே புடுங்க வேண்டாம்...

மதுரை மைந்தன்
13-08-2011, 10:54 AM
ஆஸ்திரேலியாவின் வடக்கு கோடியில் இருக்கும் டார்வின் என்ற நகருக்கு ஒரு கருத்தரங்கில் பங்கேற்க செல்லவிருப்பதால் சில நாட்கள் எனது படைப்புகளை தொடர முடியாமல் இருக்கேறேன். மெல்போர்ன் திரும்பியதும் தொடருவேன்.

அமரன்
13-08-2011, 10:56 AM
சென்று வாருங்கள் அய்யா.

நாஞ்சில் த.க.ஜெய்
13-08-2011, 05:24 PM
கருத்தரங்கை வெற்றிகரமாக முடித்து கொண்டு திரும்ப வாழ்த்துகள் ஐயா...

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2011, 05:54 AM
எனக்கு பணிப்பளு அதிகரித்துவிட்டதால் முன் போல் மன்றம் வரமுடியுமா என்று தெரியவில்லை ...மீண்டும் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் தோழர்களே...

M.Jagadeesan
25-08-2011, 06:38 AM
மதுரை மைந்தன் பயணம் வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
25-08-2011, 06:40 AM
தினமும் ஒரு மணி நேரம் வந்துவிட்டுப் போங்கள்! ஜெய் அவர்களே!

அக்னி
10-09-2011, 07:57 PM
சில நாட்களின் பின்னர் வழமைபோல மன்றம் வந்து மகிழ்வேன்.
பல வருடங்களின் பின்னர் எனது பால்ய நண்பன் விடுமுறையில் வந்திருப்பதால், அவனுடன் சின்னதாய் ஒரு சுற்றுப்பயணம்... :)

கீதம்
11-09-2011, 12:49 AM
சில நாட்களின் பின்னர் வழமைபோல மன்றம் வந்து மகிழ்வேன்.
பல வருடங்களின் பின்னர் எனது பால்ய நண்பன் விடுமுறையில் வந்திருப்பதால், அவனுடன் சின்னதாய் ஒரு சுற்றுப்பயணம்... :)

சுற்றுப் பயணம் வெற்றிகரமாய் அமைய வாழ்த்துக்கள்.

அக்னி
12-09-2011, 06:54 PM
சுற்றுப் பயணம் வெற்றிகரமாய் அமைய வாழ்த்துக்கள்.
நன்றி கீதம்+அக்கா...

கி.த. 17 வருடங்களின் பின்னர் அவனைப் பார்க்கின்றேன்.
காற்சட்டையோடு போய், குட்டிச் சுட்டிப் பெண்குழந்தையோடும் மனைவியோடும் வந்திருக்கின்றான்.

பிரேம்
14-09-2011, 09:31 AM
எல்லார்க்கும்..வணக்கம்..
நலமாக உள்ளீர்கள் என்றே நம்புகின்றேன்...
விடுமுறை முடிந்து...மீண்டும் வந்துவிட்டேன்..

Nivas.T
14-09-2011, 01:12 PM
நலமா பிரேம்,

உனது மீள்வரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
தொடர்ந்து மன்றம் வந்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்

சிவா.ஜி
14-09-2011, 04:44 PM
நன்றி கீதம்+அக்கா...

கி.த. 17 வருடங்களின் பின்னர் அவனைப் பார்க்கின்றேன்.
காற்சட்டையோடு போய், குட்டிச் சுட்டிப் பெண்குழந்தையோடும் மனைவியோடும் வந்திருக்கின்றான்.

அக்னி....இதை சாதாரன சொற்றொடராய்க் கருதவில்லை. அந்த உணர்வுகளை எப்படிச்சொல்வது எனத் தெரியவில்லை....ஆனால்....உங்களுக்கு ஏற்பட்ட அந்த நேரத்து உணர்வுகள் மட்டும்....எனக்கும் உள்ளுக்குள்.....உந்துகிறது. மிக மிக அருமையான தருணங்களை அனுபவித்த அன்பான அக்னியை...புது உற்சாகத்தோடு...மீண்டும் மன்றில் பார்ப்பதில் அதே உற்சாகத்துடன் நான் மகிழ்கிறேன்.

சிவா.ஜி
14-09-2011, 04:46 PM
வாங்க பிரேம்....ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை மீண்டும் இங்கே பார்ப்பதில்.....வாங்க வந்து கலக்குங்க....!!!

கீதம்
15-09-2011, 08:46 AM
நன்றி கீதம்+அக்கா...

கி.த. 17 வருடங்களின் பின்னர் அவனைப் பார்க்கின்றேன்.
காற்சட்டையோடு போய், குட்டிச் சுட்டிப் பெண்குழந்தையோடும் மனைவியோடும் வந்திருக்கின்றான்.

உண்மையில் மிகவும் சந்தோஷத்தருணம்தான். இனிதே தொடரட்டும் இனிய நட்பு. :icon_b:

கீதம்
15-09-2011, 08:47 AM
எல்லார்க்கும்..வணக்கம்..
நலமாக உள்ளீர்கள் என்றே நம்புகின்றேன்...
விடுமுறை முடிந்து...மீண்டும் வந்துவிட்டேன்..

மன்ற வருகை மகிழ்வளிக்கிறது பிரேம். தொடர்ந்து வாங்க.

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 10:30 AM
மன்ற தோழர்களுக்கு என் வந்தனம் ..அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் ..சிறியதோர் விடுமுறையை முடித்துவிட்டேன் ...மீண்டும் வருகிறேன் உங்களுடன் இணைய....

மதுரை மைந்தன்
01-11-2011, 07:23 PM
வரும் நவம்பர் 15m தேதி தாயகம் வருகிறேன். வேலூரில் உள்ள கிருத்துவ புற்றுநோய் சிகிச்சை மனையில் நடக்கவிருக்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறேன். அதன் பின்னர் 19m தேதி முதல் 21m தேதி வரை சென்னையில் சகோதரி வீட்டில் தங்குகிறேன். பின்னர் மும்பை, மதுரை, பெங்களூர் சென்று நவம்பர் 30m தேதி இரவு சென்னையிலிருந்து மெல்போர்ன் திரும்புகிறேன். இந்த பயணத்தின் போது மன்றத்து நண்பர்களை சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

கீதம்
02-11-2011, 04:19 AM
மன்ற தோழர்களுக்கு என் வந்தனம் ..அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் ..சிறியதோர் விடுமுறையை முடித்துவிட்டேன் ...மீண்டும் வருகிறேன் உங்களுடன் இணைய....

நல்வரவு ஜெய். விடுமுறை நலமாய்க் கழிந்ததில் மகிழ்ச்சி.

கீதம்
02-11-2011, 04:21 AM
வரும் நவம்பர் 15m தேதி தாயகம் வருகிறேன். வேலூரில் உள்ள கிருத்துவ புற்றுநோய் சிகிச்சை மனையில் நடக்கவிருக்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறேன். அதன் பின்னர் 19m தேதி முதல் 21m தேதி வரை சென்னையில் சகோதரி வீட்டில் தங்குகிறேன். பின்னர் மும்பை, மதுரை, பெங்களூர் சென்று நவம்பர் 30m தேதி இரவு சென்னையிலிருந்து மெல்போர்ன் திரும்புகிறேன். இந்த பயணத்தின் போது மன்றத்து நண்பர்களை சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

கருத்தரங்கு வெற்றிகரமாய் நிகழவும் பயணம் இனிதே அமையவும் என் வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் அண்ணா.

மதி
02-11-2011, 06:22 AM
வாங்க மதுரை சார்.. சந்தர்ப்பம் இருந்தால் சந்திப்போம்.

நாஞ்சில் த.க.ஜெய்
04-11-2011, 12:15 PM
தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி கீதம் அக்கா...

நாஞ்சில் த.க.ஜெய்
04-11-2011, 12:20 PM
தினமும் ஒரு மணி நேரம் வந்துவிட்டுப் போங்கள்! ஜெய் அவர்களே!
தங்கள் நேசமுடனான வரவேற்புக்கு மிக்க நன்றி ஜெகதீசன் ஐயா அவர்களே ...

மதுரை மைந்தன்
04-11-2011, 09:23 PM
கருத்தரங்கு வெற்றிகரமாய் நிகழவும் பயணம் இனிதே அமையவும் என் வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் அண்ணா.

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி கீதம்!

மதுரை மைந்தன்
04-11-2011, 09:27 PM
வாங்க மதுரை சார்.. சந்தர்ப்பம் இருந்தால் சந்திப்போம்.

நிச்சயம் சநதிப்போம். நீங்கள் இருப்பது சென்னையிலா அல்லது பெங்களுரிலா ?

மதி
05-11-2011, 01:47 AM
நிச்சயம் சநதிப்போம். நீங்கள் இருப்பது சென்னையிலா அல்லது பெங்களுரிலா ?
சென்னை

ஆதன்
17-02-2012, 11:59 AM
அன்பு உறவுகளுக்கு வணக்கம்,

அனைவரும், நலம் தானே ?

புது வேலை நிமித்தமாக நிரந்தரமாக பூனே குடி பெயர்ந்துவிட்டேன், புது வேலை புது இடம் என்று பல காரணத்தால் மன்றம் பக்கம் சரியாக வர இயலவில்லை

இனி தொடர்ந்து வருவேன்

பத்தாம ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கும் மன்றத்தில் இணைந்திருக்கும் புது உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

சிவா.ஜி
17-02-2012, 12:24 PM
வாழ்த்துக்கள் ஆதன். செல்வா சொன்னார். போகும் முன் சந்திக்கலாம் என ஆவலுடனிருந்தேன்....ஆனால் முடியாமல் போய்விட்டது. அன்றைக்கு என் வீட்டிற்கு உங்களால் வரமுடியவில்லை.

(நான் நேரிடையாக அழைக்கவில்லை என்றக் கோபமோ என மனதிற்குள் குற்ற உணர்வு....அனைவரும் வருவதாய் சொன்னதால் தனியாய் அழைக்கவில்லை. மன்னிக்கவும்)

ஆதன்
17-02-2012, 01:06 PM

அண்ணா அப்படி ஒரு எண்ணதை உங்களுக்கு உண்டக்கியதற்கு தயவு செய்து என்னை மன்னிக்கவும்...

கடைசி நிமிடத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கி கொண்டேன், உடன் பணி புரிபவர் சர்வரில் மாற்றம் செய்யும் போது சில முக்கியமான கோப்புக்களை பேக்கப் எடுக்காமல் மாற்றிவிட்டார், அதனை பழைய நிலமைக்கு கொண்டு வர போராடி கொண்டிருந்தேன், இல்லை என்றால அவருக்கு வேலை போயிருக்கும்....

அமரன்
17-02-2012, 10:44 PM
உங்கள் சகஜமான மன்ற வருகை மகிழ்ச்சி ஆதன்..

அமரன்
16-04-2012, 07:08 AM
நண்பர்களே..!

ஒருவார காலத்துக்கு மன்றம் வர மாட்டேன். (வந்தாலும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

அடுத்த வாரம் சந்திப்போம்..

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-04-2012, 07:17 AM
அதிக வேலைப்பளுவின் காரணமாக அடிக்கடி மன்றத்துக்கு வர முடியாத நிலை. ஒருவாரம் விடுப்பில் இருக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். அப்படியே வந்தாலும் பின்னுட்டங்கள் இடுவது குறைவாகவே இருக்கும்.:)

கலைவேந்தன்
16-04-2012, 09:18 AM
நல்லது தயாளன். குறள் பட்டறைக்கு மட்டும் லீவு போடாதீங்க. சரியா..?

கலைவேந்தன்
16-04-2012, 09:21 AM
நான் எதிர்வரும் மேமாதம் 15 முதல் ஜூன் 25 வரை தமிழகம் வருகை தருவேன் இன்ஷா அல்லாஹ்.. எவரையும் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன். விழைவோர் எனக்கு தனிமடல் இடுக..