PDA

View Full Version : கவிதைக் கலைப்புகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-08-2008, 12:03 PM
எங்கோ விரியும்
கண்களுக்குள் அடங்கா
உள்ளங்களில் நின்று போகும்
ஒற்றைக் காட்சிகள்

மீண்டும் ஒரு முறை
தேடியெடுத்து தூசி தட்டி
இதய நாளங்களுக்கு
அஞ்சலனுப்புகின்றன
எப்பொழுதோ
வேண்டா வெறுப்பாய்
சேமிக்கத் திணிக்கப்பட்டிருந்த
மூளை நரம்புகள்

பெரிய காட்சிகளென்றும்
சிதைந்து போன
தோரணைகளென்றும்
புறக்கணித்தல்களோ
காரணமிடும் ஒத்திப்போடல்களோ அன்றி
அப்படியே இதயமும்
காட்சிகளை தின்று
அதன் சாறை உமிழ்கிறது

சாறைப் பிழிந்து
வார்த்தைகளெடுக்கும்
மற்றொரு வித சுத்திகரிப்புகளில்
அந்தச் சாறுகள்
அலைக்கழிக்கப்படுகின்றன
இதயத்திற்கும் நாவுக்குமாய்.

தோற்றமெடுத்த வார்த்தைகளை
அல்லவைகளை சலித்து
ஏற்றவைகளை குவித்தெடுத்து
துப்புவதற்கு தோதுவாய்
நாவுகள்
தங்கள் நுனிகளில்
சேமித்துக் கொண்டிருக்கும்
அனாயாச சூழல்களில்
ஒலிக்கும் தொலைபேசியும்
அழைக்கும் அலுவல்களும்
கதற கதற
அறுத்துப் போடுகின்றன
முக்கால் வாசி ஜனித்துப் போன
பச்சிளங் கவிதைகளை.

தீபா
12-08-2008, 01:19 PM
கலக்கல் ஜுனைத்...

பழம் நினைவின் படைப்பாக்க தடங்கலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 07:16 AM
அப்டீன்னா இ பணம் ஒரு 500 கொடுங்க

தீபா
13-08-2008, 07:21 AM
500 ஆ!!! அவ்ளோ பணம் எங்கிட்ட இல்லை!! :)

50 ரூவா தந்திருக்கேன். பாருங்க.

shibly591
13-08-2008, 11:33 AM
தொடருங்கள்..
வாழ்த்துக்கள்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 11:59 AM
ஐயோ இத கேக்க யாருமே இல்லையா. இவ்ளோ பணம் வச்சுகிட்டு 500 ரூபாய் இல்லைன்னு சொல்லு இந்த தென்றல் பொண்ணு. இனி யாரும் தென்றலுக்கு பணம் கொடுக்காதீங்கய்யா. சாப்பாட்டுக்கு பணம் கொடுத்தா பரவா இல்லை. சாப்டுட்டு அது கொடுக்குற டிப்ஸ்க்கும் சேர்த்து பணம் புடுங்குது எல்லார் கிட்டயும்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-08-2008, 12:00 PM
மிக்க நன்றி ஷிப்லீ உங்கள் உற்சாகத்திற்கு.

இளசு
24-08-2008, 11:38 PM
நண்பர் நண்பன் சொல்வார் - படுக்கையருகில் ஒரு காகிதமும் பென்சிலும்
எப்போதும் இருக்கவேண்டும் என்று.

கனவில், கனவு போன்ற உறக்கநிலையில் கூட தெறிக்கலாம்.. சில நெருப்பு வரிகள்.

அப்புறம் கோர்க்கலாம் என விட்டால்,
மனமணலில் மறைந்து கண்சிமிட்டக்கூடும்..
கிட்டாமலும் போகும்!

கவிஞனின் மன இருப்புக்கும், வெளிப்படும் கவிதை உற்பத்திக்கும்
உள்ள இடைவெளி....
விரும்பிக் கழிப்பதால் மட்டுமன்று..
அலைக்கழிப்பில் அழிவதாலும்!

அழகாய்ச் சொன்ன ஜூனைத்துக்குப் பாராட்டுகள்!