PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 7



ஆதவா
04-07-2008, 04:30 AM
கண்ணீர் மறந்தவர்களால் புதைக்கப்படும்
என் பிணத்தின் நடுவிலிருந்து
எழுந்து சென்றது
அங்கங்கே விரவியிருந்த ரகசியங்களும்
அன்றுவரை பேசப்படாத என் சாதனைகளும்.

mukilan
04-07-2008, 04:49 AM
இறந்த பிறகாவது
அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
மரணம் என்பது மனதிற்கேது?

ஆதவா
05-07-2008, 05:22 AM
இறந்த பிறகாவது
அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
மரணம் என்பது மனதிற்கேது?

இறந்த பிறகு பேசி என்ன பிரயோசனம் அண்ணா? அவன் இருக்கும்போது தூற்றுவதும் இல்லாதபோது போற்றுவதும் கண்ணீர் மறந்தவர்களின் வழக்கம்...

Mano.G.
05-07-2008, 06:07 AM
இதுவும் பகட்டாகவே படுகிறது.

இருக்கும் போது கவனிக்காதவர்கள்
இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.

மனோ.ஜி

இளசு
05-07-2008, 06:43 AM
இறந்தவனை மட்டுமல்ல...
ஓரிடத்தில் இல்லாதவனைப் பற்றியும்.
பொல்லாப்பு சொல்லாதீர்கள் -
அவர் பக்கம் அறிய வாய்ப்பே இல்லை என்பதால்!

----------------------------------------

மாண்ட பிறகு மணிமண்டபம்..
வாழும்போது கூரையும் சிதிலம்..

இது கவிஞன் பாரதி முதல் ஓவியன் வான்கா வரை
உலக வழக்கம்... நினைத்தால் வெட்கம்!

-----------------------------------


பாராட்டுகள் ஆதவா!

ஆதவா
05-07-2008, 01:48 PM
இதுவும் பகட்டாகவே படுகிறது.

இருக்கும் போது கவனிக்காதவர்கள்
இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.

மனோ.ஜி

மிக்க நன்றி மனோ.ஜி அண்ணா. நீங்கள் சொன்னது மிகச் சரியே!