PDA

View Full Version : இலையுதிர்கால நிலைமை



நாகரா
13-04-2008, 03:43 PM
இலைகள் விலகிய பின்னும்
கிளைகளை விட்டகலவில்லை
வேர்கள்

சாம்பவி
13-04-2008, 04:49 PM
இலைகள் விலகிய பின்னும்
கிளைகளை விட்டகலவில்லை
வேர்கள்

விலகினால் வில்லங்கமன்றோ... :0

வேருக்கும் கிளைகளுக்குமான பந்தம்..
இலைகளை இடைப்படுத்தியதா என்ன*
உதிர்ந்ததும் விலகலை எதிர்ப்பார்க்க... !

தாமரை
13-04-2008, 05:24 PM
இலைகளோ தலைமேல் (வியாபாரியாய்)
வேர்களோ காலின் கீழ் (தொழிலாளியாய்)
கிளைகளில் அரசியல்!

நாகரா
13-04-2008, 06:29 PM
கிளைகளைத் துறந்து
சருகுகளாய்
வேர்களில் விழுந்து
எருவாகி
மீண்டும் துளிர்க்கத் தவமிருக்கும்
இலை முனிகள்

தாமரை
14-04-2008, 04:11 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13843

நாகரா
14-04-2008, 05:31 AM
தாமரை, சாம்பவி உம் பின்னூட்டங்களுக்கு நன்றி, தாமரை நீவிர் அளித்த பூமகளின் கிளைதேடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13843)க் கவிதைச் சுட்டிக்கும் நன்றி. பூமகளின் கவிதை அருமை.

நாகரா
14-04-2008, 11:14 AM
சருகுகள் நடுவே
நிலை பெயராமல் நிற்கிறது
இலையுதிர்கால மரம்

நாகரா
14-04-2008, 04:48 PM
கந்தலான இலையுடைகளைக் களைந்து
நிர்வாணமான மர உடம்பு
மீண்டும் புத்தாடை உடுத்தக் காத்திருக்கிறது
வேர்களோடும் கிளைகளோடும்

ஆதி
14-04-2008, 06:39 PM
வசந்தகளை வேண்டி நேர்ந்து
மொட்டையிட்டுக் கொள்கிறது
இலையுதிர்கால மரங்கள்..

ஆதி
14-04-2008, 06:42 PM
ஆட்சர்யங்கள்தான்
மரங்கள் எனக்கு..

எப்படிக் காற்றடித்தாலும்
கலைவதில்லை
இலைக் கேசங்கள்..

உதிர்ந்தாலும் மீண்டும்
முளைத்துவிடுகின்றன
இலைமயிர்கள்..

சாம்பவி
14-04-2008, 06:49 PM
வசந்தகளை வேண்டி நேர்ந்து
மொட்டியிட்டுக் கொள்கிறது
இலையுதிர்கால மரங்கள்..

மொட்டை... ????

ஆதி
14-04-2008, 06:51 PM
மொட்டை... ????

அதேதான் திருத்திவிட்டேன் சாம்பவி..