TN-04 T 6024

காலை மணி 8.30, குழந்தைக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டதே என்று வேகமாக படியில் இறங்கி கீழே இறங்கியதும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டேன். இங்குதானே நிறுத்தியிருந்தேன் பைக்கை.. எங்கு போய்விட்டது என்று யோசித்துக்கொண்டே அருகே சென்று வேறு எங்காவது நிறுத்தியிருந்தேனா என்று பார்த்தேன். திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாளே இப்படி டென்ஷனா ஆரம்பிக்குதே என்று நினைத்தபடி அருகே இருந்த எங்கள் வீட்டு ஓனரின் கார் டிரைவரிடம் கேட்டேன். இங்கேதானே இருக்கும் என்று அவரும் பார்த்துவிட்டு மேலே தலைவர்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னார்.. தலைவர் தான் வீட்டு ஓனர். தலைவர் கட்சியில் கொஞ்சம் செல்வாக்கானவர். சரி அவரை போய் பார்த்து சொல்லலாம் என்று போனால் கதவு சாத்தியிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டி காலிங் பெல்லை அழுத்தினால் உள்ளிருந்து அவரின் மனைவி எட்டி பார்த்து சங்கதிகளை கேட்டுக்கொண்டு அண்ணன் தூங்குகிறார். எழுந்ததும் சொல்கிறேன்னு சொல்லி அனுப்பிட்டாங்க... கொஞ்ச நேரம் பொறுத்து அவர் உதவியாளர் வந்து ஆஃபீஸ் ரூம் போய் பாருங்கன்னு தகவல் சொன்னார். ஆபீஸ் ரூம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். உள்ளே நுழைந்து சிறிது நேரம் காத்திருந்தபின் அவரை சந்தித்தேன். உட்கார சொன்னவர் என்ன ஆச்சுன்னு கேட்டார்.. வண்டி காணவில்லைன்னு... ஆரம்பிக்கும்போதே அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து ஸ்டேஷனுக்கு போங்க... ஃபோன் பன்றேன். கம்ப்ளெயின்ட் கொடுங்க என்று சொல்லி அனுப்பினார். வண்டி இல்லை. ஸ்டேஷன் தூரம்... வண்டி இல்லாமையின் வருத்தம் அசைவாட ஆரம்பித்தது. பேருந்துக்காக காத்திருந்து பின்னர் ஸ்டேஷனை அடைந்தேன். அதற்குள் என் மனைவி போன் செய்து தனியா போகாதீங்க உங்க நண்பர் யாரையாவது அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாள். ஸ்டேஷனில் இருந்து 1 கி,மீ தூரத்தில்தான் என் அலுவலகம். சரி என்று நண்பனுக்கு போன் செய்து வர சொன்னேன். கொஞ்ச நேரத்தில் நண்பன் வந்தான். ஸ்டேஷனில் புகார் கொடுப்பதற்கு முன்பாக அலுவலகத்தின் செக்யூரிட்டி ஹெட் ரிட்டையர்டு டி.எஸ்.பி. அவரை சந்தித்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்து நண்பனோடு அலுவலகம் சென்றேன். அவரை சந்தித்து தகவல்கள் பரிமாறியபின் அவர் அங்கிருந்து ஸ்டேஷனுக்கு போன் செய்து இன்னார் வருவார். அவரிடம் புகாரை பெற்று அவருக்கு உதவுங்கள் என்று சொன்னார். ஒருவரின் பெயரை சொல்லி அவரை போய் பாருங்கள் என்றார். நன்றி தெரிவித்துவிட்டு பிறகு நண்பனும் நானும் அவ்வளவாய் பரிச்சயமில்லாத ஸ்டேஷனுக்குள் நுழைந்து அங்கிருந்த அந்த நண்பரிடம் அறிமுகம் செய்துகொண்டோம். பின்னர் அவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அழைத்து சென்றார். அவரிடம் தகவல் சொன்னோம். அவர் தகவல்களை கேட்டு இன்ஸ்யூரன்ஸ் உள்ளதா என்று கேட்டார். இல்ல சார் நடுவுல் பிரேக் ஆகிடுச்சி இரண்டு வருஷம். பிறகு இன்ஸ்யூரன்ஸ் போடலாம்னு விசாரிச்சப்போ பிரேக் ஆனதால் 3வது பார்ட்டி இன்ஸ்யூரன்ஸ்தான் போட முடியும்னு சொன்னாங்க... ஏதாவது விபத்து ஏற்பட்டால் எதிர் பார்ட்டிக்கு மட்டும்தான் விபத்து காப்பீடு கவர் ஆகும், வண்டி திருடு போனாலோ, சேதம் ஆனாலோ இழப்பீடு கேட்க முடியாதுன்னு சொன்னதால நான் போடலைன்னு சொன்னேன்.

இன்ஸ்யூரன்ஸ் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்னு சொன்னார். அவர்கிட்ட புகார் வாங்கிட்டு C.S.R போட்டு கொடுங்க அப்படின்னு சொன்னார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் அசைத்துக்கொண்டேன்.

பின்னர் சிறிது நேரம் காத்திருந்தபின் C.S.R காப்பி சைன் செய்துவிட்டு வெளியில் வந்தபோது அலுவலக நண்பர் ஒருவர் ஃபோனில் வந்தார். என்ன ஆச்சு என்றார். இதுபோல நடந்தது என்றேன். சரி அருகிலிருக்கும் சைக்கிள் ஸ்டேண்டுகளில் உள்ளே போய் பார்த்துவிட்டு வா என்றார். இதுவும் மனதில் சரியென்றே பட்டது. சரி என்று நண்பனை அழைத்துக்கொண்டு 3 சைக்கிள் ஸ்டாண்டையும் அலசிவிட்டு வெளியில் வந்தோம் பலன் இல்லை. 3 உரிமையாளர்களிடமும் வண்டி எண் மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு அலுவலகம் வந்தோம்.. சென்னை நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வண்டி எண் கொடுத்து புதுப்பேட்டை பக்கம் பார்க்க சொல்லியிருக்கேன். எல்லாம் கடவுளின் செயல் என்று நினைத்து அமைதியாக இருக்கிறேன்.

நீங்களும் உங்கள் கண்ணில் சிக்கினால் தகவல் தெரிவியுங்கள் நண்பர்களே.. புது வண்டி உடனடியாக வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.

வண்டி எண் : TN-04 T 6024
மாடல் : TVS VICTOR GLX 125
நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை

TN-04T60241.jpg


TN-04T6024.jpg



தகவல் ஏதேனும் தெரிந்தால் தெரிவிக்கவும்
9841087870
arpudam79@gmail.com

அன்புடன்
ஷீ-நிசி
 
படிக்க கஷ்டமாக இருக்கிறது. இது உற்ற சமயமில்லை. இருந்தும் சொல்கிறேன். இன்ஷூரன்ஸ் நழுவ விடக்கூடாது. திருடுபவர்கள் அந்த விஷயம் விஜாரித்து வைத்து இருக்கலாம். போலீஸிடம் இந்த ஐயத்தையும் சொல்லிப் பாருங்கள்.
 
மதியின் பர்ஸ் காணாமற்போய் திரும்பக் கிடைத்ததுபோல் உங்களுடைய வண்டியும் திரும்பக் கிடைத்த மகிழ்வுடன் முடித்திருப்பீர்கள் என்று நினைத்துப் படித்தேன். ஆனால் இன்னும் கிடைக்கவில்லையென்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கவலைப்படாதீர்கள். இன்னும் வாழும் நல்லவர்களின் உதவியால் எந்த வகையிலாவது உங்கள் வண்டி மீண்டும் உங்களைச் சேரும். மனம் தளராமல் முயற்சியைத் தொடருங்கள். விரைவில் வண்டி கிடைத்த விவரத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
 
உங்களின் அன்பிற்கு நன்றி நண்பர்களே!

நெட்ல பைக் செக்யூரிட்டி சிஸ்டம்னு எதாச்சும் இருக்குதான்னு தேடினேன்...

அப்படி ஒன்று இருப்பது தெரியவந்தது.. கொஞ்சம் செலவு செய்யவேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்.


இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இதை கட்டாயம் செயல்படுத்தமுடியும்... செயல்படுத்துங்கள்


http://powerplusindia.com/bike_safety_system.html
 
இதன் விலை கொஞ்சம் அதிகமா இருக்கு.
ஆனா கோயமுத்தூர் கடைகளில் 1000முதல் இது கிடைக்குது..
 
விரைவில் உங்கள் வண்டி எந்த சேதாரமும் இல்லாமல் கிடைக்க எனது பிராத்தனைகள்.
 
அருகில் இருக்கும் மெக்கானிக் ஷெட்டில்போய் பேசிப் பாருங்கள். அவர்கள் ஏதாவது க்ளு கொடுப்பார்கள்.
 
ஷி நிசி உங்கள் வண்டி நல்லபடியாக கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

என் நண்பருக்கு ஏற்ப்பட்ட அனுபவம். பல்சர் வண்டி வீட்டு வாசலில் நிறுத்தி வைத்தது காணவில்லை. நண்பருக்கு போலிஸ் நிலையத்திலும் நல்ல செல்வாக்கு உண்டு. இருந்தும் அவரிடமே போக்கு காட்டினார்கள். இறுதியாக மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்க ..... அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன தகவல் இதுதான் ... மதுரையின் பிரபலத்தின் பினாமி ஒருவரின் தம்பிதான் இது போல செயல்களில் ஈடுபடுவதாகவும் சேகரிக்கும் வண்டிகளை வெளி மாநிலங்களுக்கு கடத்தி விடுவதாகவும் தகவல் சொன்னார்... அதை விட கொடுமை ஒரு பதினைந்தாயிரம் கொடுத்தால் ஒரு நல்ல வண்டியை பெற்று தர முடியும் என்று சொன்னார் ..... நண்பர் வெறுத்து போய் கோவில் உண்டியலில் காசு போட்டதா நினச்சுகிறேன் என்று வந்து விட்டார்....​
 
மிக வருத்தமாக உணர்கிறேன் ஷீ-நிஷி, வண்டி தொலைந்துபோனால் ஏற்ப்படும் வலி என்னவென்று எனக்கு நன்கு தெரியும். அந்த கசப்பான அனுபவம் எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக்கொடுத்தன. என்றும் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் அது. உங்களுக்கும் அதுபோல் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. எனக்கு நடந்ததுபோல் எதுவும் நடவாமல் உங்களுக்கு உங்கள் வண்டி திரும்ப கிடைக்க பிராத்திக்கிறேன் கிடைக்கும்
 
எனக்கு இது புதிய தகவல்.
இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்யுதுன்னு யாருக்காவது தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
 
ஷி நிசி உங்கள் வண்டி நல்லபடியாக கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

என் நண்பருக்கு ஏற்ப்பட்ட அனுபவம். பல்சர் வண்டி வீட்டு வாசலில் நிறுத்தி வைத்தது காணவில்லை. நண்பருக்கு போலிஸ் நிலையத்திலும் நல்ல செல்வாக்கு உண்டு. இருந்தும் அவரிடமே போக்கு காட்டினார்கள். இறுதியாக மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்க ..... அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன தகவல் இதுதான் ... மதுரையின் பிரபலத்தின் பினாமி ஒருவரின் தம்பிதான் இது போல செயல்களில் ஈடுபடுவதாகவும் சேகரிக்கும் வண்டிகளை வெளி மாநிலங்களுக்கு கடத்தி விடுவதாகவும் தகவல் சொன்னார்... அதை விட கொடுமை ஒரு பதினைந்தாயிரம் கொடுத்தால் ஒரு நல்ல வண்டியை பெற்று தர முடியும் என்று சொன்னார் ..... நண்பர் வெறுத்து போய் கோவில் உண்டியலில் காசு போட்டதா நினச்சுகிறேன் என்று வந்து விட்டார்....​

போலீஸ்ல செல்வாக்கு இருந்துமா?!!!

உண்மைதான்... இது முதலை வாய்க்குள்ள போனது போலதான். நாம்தான் நம் பொருளை அதிகபட்சம் கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்பது இதன் மூலம் கற்ற பாடம்...
 
மிக வருத்தமாக உணர்கிறேன் ஷீ-நிஷி, வண்டி தொலைந்துபோனால் ஏற்ப்படும் வலி என்னவென்று எனக்கு நன்கு தெரியும். அந்த கசப்பான அனுபவம் எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக்கொடுத்தன. என்றும் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் அது. உங்களுக்கும் அதுபோல் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. எனக்கு நடந்ததுபோல் எதுவும் நடவாமல் உங்களுக்கு உங்கள் வண்டி திரும்ப கிடைக்க பிராத்திக்கிறேன் கிடைக்கும்

உண்மைதான்..... அவ்வபோது மனதை அழுத்திக்கொண்டேயிருக்கிறது... திருமணத்தின்போது வாங்கியது.
 
எனக்கு இது புதிய தகவல்.
இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்யுதுன்னு யாருக்காவது தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இணையத்தில் உலாவினால் கிடைக்கும்.. என் நண்பர்களிடம் இதுபற்றி சொன்னபோது ஆமாம்.. இது ஏற்கெனவே உள்ளதுதானே... ரிச்சி ஸ்ட்ரீட் போனால் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என்றான்.
 
போலீஸை விடாமல் தொந்தரவு செய்யவும்.

நம்பிக்கையில்லைங்க.... புகார் கொடுத்தது என்னுடைய ஒரு சேஃப்டிக்காக மட்டும்தான்.. பார்க்கலாம். கிடைத்தால் நல்லதுதான்.
 
வாசிக்கவே கஷ்டமாக இருக்கின்றது.....
உங்களுக்கு நல்லது நடக்க எல்லோர்க்கும் பொதுவான வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!!!!
 
Back
Top