சாம்சங் TAB ஸ்டூடண்ட் எடிஷன்

நண்பர்களே..

சாம்சங் tab 2 (7.0) ஸ்டூடண்ட் எடிஷன் $249 க்கு யு.எஸ்ஸில் மட்டும் ஆஃபர் அறிவித்திருக்கிறார்கள். (இதன் உண்மையான விலை $350 சென்னையில் ரூ.19990), அமேஷான்.காமில் இவர்கள் இந்த ஆஃபர் அறிவித்திருக்கிறார்கள். இந்த தளத்தில் கிரெடிட் கார்டு மூலம வாங்கினால் சென்னையில் டெலிவரி செய்யப்படுமா? இந்த ஆஃபர் யு.எஸ்ஸில் மட்டும் அறிவித்திருப்பதால் மற்றவர்கள் இந்த ஆன்லைன் தளத்தின் மூலம் வாங்க முடியுமா? இந்த ஆஃபர் 19 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 1 வரை மட்டுமே அறிவித்திருக்கிறார்கள்..

இந்த Tab FEATURES

ANDROID 4 ICS
1GHZ PROCESSER
1GB RAM
CAMERA FRONT - 0.3 MP
CAMERA REAR - 2MP
SIM FUNCTION 2G AND 3G
BLUETOOTH
GOOGLE PLAY SUPPORT

இதை பெற என்ன வழி?
 
Last edited:
எனது நண்பர்கள் சிலர் பெற்றிருக்கிறார்கள். 1000 டொலருக்கு அதிகமாக வாங்கும் போது கவனம் அவசியம். காரணம் (இது அவுஸ்திரேலிய நிலை) இங்கு அந்த தொகைக்கு மேற்பட்டவை சீரற்ற சுங்கப்பரிசோதனைக்கு செல்லும். தகுந்தவரி செலுத்தாதபோது அதை நாம் தான் செலுத்தவேண்டும். காரணம் இது நாடுகடந்த வியாபாரம்...

இந்தியாவின் தொகை எவ்வளவு என்பதை முதலில் அறியுங்கள்.

அமேசனின் இணையத்தில் ஒரு கணக்கு ஆரம்பியுங்கள். வாங்கும் முன் அவர்களது பல்வேறு நாட்டிற்கான இணையங்களை பாருங்கள். (uk, it, de போன்றவை)

பொதுவாக அவர்களது விலை குறைப்பு நேரத்தில் அவுஸின் ஒரு முகவர் இணையத்தில் இது பகிரப்படும். (http://www.ozbargain.com.au/) தற்போது கூட ஒன்று உள்ளது.

நீங்கள் வாங்கும் போது உங்களது விலாசத்தை பொறுத்து அந்த அனுப்பும் பெறுமதி மாறுபடும்....

உங்களது கடனட்டையின் விளக்கங்களை முதலில் அறியுங்கள். பொதுவாக visa Amex என்றால் நீங்கள் வாங்கும் போது கூறியவாறு நீங்கள் அப்பொருளை பெறும் போது இல்லாது விட்டாலோ (specification difference or faulty item) அல்லது நீங்கள் அந்த பொருளை பெறாது விட்டாலோ உங்களது வங்கிமூலம் நீங்கள் எதிர்முறையீடு செய்து பணத்தை மீளப்பெறலாம். (ஆனால் உங்கள் வங்கியுடன் முதலில் பேசிவையுங்கள்.) paypal மூலம் எனில் இங்கு AU$20,000.00 வரை அவர்கள் காப்பாற்றுவார்கள்.

இந்தியாவின் வங்கி மற்றும் paypal இன் terms and conditions ஐ பார்த்து செயலில் இறங்குங்கள்.

<<<<<<>>>>>>>>

இன்னும் 2 மாத காலத்தில் அப்பிளின் mini ipad வரவுள்ளதாக வதந்தி ஒன்று உள்ளது. பார்த்து செயற்படலாமே... (தங்களது பயன்பாடு பொறுத்து..... )

சில SLR கள் அப்பிளுடன் compatible இல்லை. ஆனால் samsung tab உடன் நேரடியாக இணைத்து படங்கள் எடுக்க வசதி செய்யும் என பேச கேள்விப்பட்டிருக்கிறேன்...
 
Back
Top