எம் டிவி அன்ப்ளக்டு (MTV Unplugged)

pk_muthukumaran

New member
தோழர்களே,

இன்று எம் டிவி அன்ப்ளக்டு சீசன் 2 (MTV Unplugged season 2) எனும் எம் டிவி இசை நிகழ்ச்சியில் நான் கரைந்து போனேன். நான் கரைந்ததற்கு காரணம் இசைப்புயல் A.R.ரஹ்மான் தான். இந்நிகழ்ச்சியில் ரஹ்மான் இசையமைத்த இந்தி பாடல்களை, அருமையாக அவரே பாடி அசத்தினார். இசைக்குழுவும் அருமையாக வாசித்தனர். முதல் பாடலான இந்த தேசத்தின் குரல் பாடலை இந்தியில் பாடும் போது ஒரு வரியை தமிழிலும் பாடினார்.
எந்த மேடையிலும் தமிழை மறவாத மேதை, ரஹ்மான். :music-smiley-008:

இந்நிகழ்ச்சியில் இன்னும் வெளியிடாத மணிரத்னம் அவர்களின் "கடல்" திரைப்படத்தின் பாடல் ஒன்று பாடப்பட்டது. பாடல் அருமை. ஆவலுடன் அப்படத்தையும், பாடல்களையும் எதிர்பார்க்கிறேன். நான் ரஹ்மானின் மிக தீவிர விசிறி என்பதால் விளம்பரங்களையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்து ரசித்தேன்.
இன்று ஆரம்பித்த இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும். இசையை கொண்டாடுங்கள். :medium-smiley-111:
 
தகவலுக்கு நன்றி முத்துக்குமரன். நான் பார்க்க முயற்சிக்கறேன்.
 
Back
Top