நான் சொன்ன ஒருவார்த்தைக்கு கட்டுபட்டு! _ Helpline

அன்புள்ள மன்ற சொந்தகளே!

சாலையோரங்களில் (சென்னையில்) யாருமற்ற ஏழைகள் குறிப்பாக மனநிலை பாதிப்புக்கு உள்ளான வயதானவர்கள் துன்பப்படுவதை பார்க்க நேர்கையில் நம்மால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போது மனது மிகவும் கனக்கிறது.

அந்த வேளைகளில் ஏதாவது தொண்டு நிறுவனங்களின் அல்லது அரசு உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் ஏதேனும் நமக்கு தெரிந்தால் உடனே அவர்களுக்கு தெரியப்படுத்தி நம்மால் ஆன உதவியை அந்த ஆதரவற்றவர்களுக்கு செய்யலாமே?

நேற்று (18-09-2010) நான் சாலையோரத்தில் ஒரு பாட்டியை சந்திக்க நேர்ந்தது... அவருக்கு என்ன தேவையோ தெரியவில்லை, (தும்பிக்கொன்டிருந்தார்) அடிக்கடி நான் அமர்ந்திருந்த ஒரு தனியார் மருத்துவ கிளீனிக் அருகில் வந்து வந்து ஏதோ கேட்பது போல செய்தார். பாவம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.. அவரை அந்த கிளினிக் உதவியாளர் விரட்டி அடித்தார்.... மேலும் அந்த உதவியாளர் எங்களிடம் அது ஒரு பைத்தியம் சார்!! இப்படி தான் அடிக்கடி வந்து போகும்.... இரண்டு போட்டா போதும் ஓடிரும் என்று ரொம்பவே சாதாரணமாக சொன்னார்..

சிறுது நேரம் கழித்து அந்த பாட்டியை சாலையில் செல்லும் வேறு ஒருவர் கொம்பால் நைய புடைத்துக்கொண்டிருந்தார்.... பதறியடித்து ஓடி அருகில் சென்று நான் அவரிடம் இருந்த கொம்பை பிடுங்கி தூரம் போட்டுவிட்டு, ஏய்யா அடிக்கிறீங்க, அவங்களே பாவம் இப்படி இருக்காங்களேன்னு கேட்டேன்... அதற்கு அவர்(ன்) இந்த நாய்யீ என்னோட தங்கையோட துணிகளை புடிச்சி இழுத்திருச்சி... அப்படின்னு சொல்லிட்டு என்னை ஏளன பார்வை பார்த்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

என் முறை வரவே நான் மருத்துவரிடம் சென்றுவிட்டேன். பிறகு வெளியில் வந்து பார்த்தேன். அந்த பாட்டி அந்த மருத்துவமணையின் வெளியில் செல்லும் வழியில் யாரும் போக முடியாதபடி படுத்துக்கொன்டு சிரித்து கொன்டு உருண்டுகொன்டிருந்தார். பாவம் உடைகள் (ஒரேஒரு அழுக்கு கிழிஞ்சி சேலை போன்ற ஒரு துணி) சரியாக இல்லை.. ஆனால் முன்பு யாரோ ஒரு புண்ணியவான் அவங்க போட்டுக்க ஒரு shorts கொடுத்திருந்திருக்கிறார்... அதை உள்ளார போட்டிருந்தார்...

பாவம் பசிக்குதோ என்னவோ என்று எண்ணி அருகில் சென்று "பாட்டி பசிக்குதா?" என்று கேட்டேன்.. படுத்திருந்த பாட்டி எழுந்து வந்து என் அருகில் நின்று சிரித்தாள்... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. உடலெல்லாம் அடிவாங்கிய தழும்புகள்....

அந்த பாட்டி என்னை பார்த்த பார்வை என்னை என்வோ செய்தது.. இன்னமும் என்னால் அந்த காட்சியை மனதில் இருந்தது அழிக்க முடியவில்லை... மனதளவில் நான் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன்... என்னால் அந்த பாட்டிக்கு உதவ முடியவில்லையே என்று மனது மிகவும் வருத்தப்பட்டது.

நான் கொடுத்த அந்த பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.... சாப்பிட பன் பிஸ்கட் வாங்கிகொடுத்ததையும் தூற எறிங்சிடுச்சி... ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுபட்டு அந்த மருத்துவமனையை விட்டு தூர போய் ஒரு ஓரமா உட்கார்ந்துகொன்டதை பார்த்த என் மனது ரொம்பவே சந்தோசமடைந்தது.. இனி யாரும் அடிக்க மாட்டார்கள் என்று...

அதனால் தான் கேட்கிறேன். நண்பர்களே ஏதேனும் உதவி தொலைபேசி எண்கள் (Helpline) இருந்தால் என்னை போல மற்ற நண்பர்கள் இதுபோன்ற காட்சிகளை பார்க்க நேர்ந்தால் உடனடி உதவி எண்ணை அழைத்து நம்மால் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால் நிரந்தர உதவி செய்ய இந்த எண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவும் அல்லவா?

இது நடந்தது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை அருகில்...
இதுபோல நிறைய மனநலம் பாதிக்கபட்ட பெண்கள் வெளியில் சுற்றிக்கொன்டிப்பதாக அந்த உதவியாளர் சொன்னார்.. அதை அந்த மருத்துவமணை நிர்வாகம் கவனிப்பதில்லை என்றும் சொன்னார்...
 
மனதை உருக்கி விடும் எழுத்துகளில் வேதனையான சம்பவத்தை விவரித்துள்ளீர்கள் மகாபிரபு!

உதவும் கரங்களைத் தொடர்பு கொண்டால் ஆவன செய்வார்கள். தொலைபேசி எண்கள் 2621 6321, 2621 6421, 2622 2161.

நல்ல நோக்கத்துக்கான பதிவுக்கு 5 நட்சத்திரங்கள் நண்பர் மகாபிரபு அவர்களே!
 
உதவும் கரங்களைத் தொடர்பு கொண்டால் ஆவன செய்வார்கள். தொலைபேசி எண்கள் 2621 6321, 2621 6421, 2622 2161.

மனநலம் பாதித்தவர்களை உதவும் கரங்கள் ஏற்பார்களா? என்ற ஐயம் எனக்கு அப்போது இருந்தது.
 
மனநலம் பாதித்தவர்களை உதவும் கரங்கள் ஏற்பார்களா? என்ற ஐயம் எனக்கு அப்போது இருந்தது.

ஏற்பார்கள் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் மதுரவாயல் முகாம் இதற்காகவே இருப்பதாகத் தகவல். ஒரு சமயம் வெள்ளநீரால் அது பாதிக்கப்பட்டதைத் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.
 
ஏற்பார்கள் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் மதுரவாயல் முகாம் இதற்காகவே இருப்பதாகத் தகவல். ஒரு சமயம் வெள்ளநீரால் அது பாதிக்கப்பட்டதைத் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.

நல்ல தகவல் தந்த கண்ணனுக்கு மிக்க நன்றி.! நான் எண்களை குறித்துக்கொள்கிறேன்.
 
மகா பிரபுவின் மனித நேயத்திற்கு மனந்திறந்த பாராட்டுக்கள்....

ஒரு சாதனைத்தமிழர் இருக்கிறார் அவரைப்பற்றி விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது இரு ஆண்டுகளுக்கு முன் பெயர் நினைவில் இல்லை. முகம் மட்டும் நினைவிருக்கிறது. அவர் ஒரு உயர்ரக உணவுத் தொழில் வல்லுநர் இம்மாதிரி மக்களை பார்த்ததினால் தனக்கு கிடைத்த வெளிநாட்டு ஐந்து நட்சத்திர விடுதி பணி வாய்ப்பையும் உதரித்தள்ளி இன்னும் மனித நேயத்துடன் இம்மாதிரி மக்களுக்காக தன் தாயுடன் சேர்ந்து உதவி புரிந்து வருகிறார். அவருக்கு ''சாதனைத்தமிழர்'' என்ற பட்டமளித்து விஜய் தொலைக்காட்சியினால் கவுரவிக்கப்பட்டார்.

இம்மாதிரி இயலாதவர்களுக்காக தொண்டு நிறுவனமும் ஏற்படுத்தி உதவி புரிந்து வருகிறார். இதற்கான முதலீடும் அவருடையதே. இடம் திருச்சி என்று நினைக்கிறேன். அவர் பயின்ற உணவுத்தொழில் கலையையும் இவர்களுக்காக அர்பணித்து கொண்டார். அவரின் முகவரித் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன்.

நன்றி!
 
நான் குறிப்பிட்ட நபர் இவர்தான்...
krishnan.voting.page.cuts.jpg

.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் சாதனைத்தமிழராக தேர்வு செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர்....இவருக்கும் தெரிவிக்கலாம்..........ஒளிபரப்பட்ட நாள் மறந்து விட்டதால் அவரைப்பற்றிய ஒளிஒலிக்காட்சியை பதிவிடவியலவில்லை....அவரைப்பற்றிய சிறப்பு செய்திகளுடன் நண்பர் பதிவிட்டு உள்ள திரியை.........

இங்கு காணலாம் (சாதனைத்தமிழர்)
 
பெயருக்கேற்ப தங்கள் இரங்கும் குணம் கண்டு வியக்கிறேன் மகாபிரபு.

உயிருக்குயிராய் பழகிய உறவுகளே யார், எப்படி, எங்கே போனால் எனக்கென்ன என விலகிசெல்லும் இந்நாளில் உங்களைபோன்றவர்களை காண்பது அரிது.

தொடரட்டும் உங்கள் பணி.
 
சாலையோரங்களில் ஒரு வேளை உணவுக்காக
காத்திருக்கும் ஏழைமக்கள்,வீட்டில் இருந்து ஒதுக்கப்பட்டோர்
உனமுற்றோர் இவர்கள் ஒருவேளை உணவை உன்னும்
பாத்திரத்தை பார்க்கின்ற போது கல்நெஞ்சம் உள்ளோர்க்கு
கூட மனம் இரங்கும் இப்படி அல்லல் படுகிறார்கள்
இவர்களுக்கு வாழ்கை சீராக சிரப்பாக அமைய வேண்டுமானால் நம்மை போன்ற
இளைஞர்களால் மட்டும் தான் முடியும் ...

தொடரட்டும் உங்கள் பயணம் ,,இனிதாய் அமைய என்னுடய
வாழ்த்துக்கள் .........
 
மகாபிரபுவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது.இந்த மனித நேயம் எல்லோரிடமும் வரவேண்டும்.
 
இப்பவெல்லாம் நான் தினமும் அந்த இடத்தில் அந்த பாட்டியை தேடுகிறேன். ஆனால் என் கண்களுக்கு தான் அவர் அகப்படவில்லை
 
Back
Top