கவிச்சமர்

Status
Not open for further replies.
மன்றத்தில் எதற்க்கும் பஞ்சம் இருக்கும் ஆனால் கவிஞர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை, இதோ உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறு வேலை அதுதான் கவிச்சமர்

ஒருவர் முதலில் ஒரு கவிதை எழுதுவார் அவர் முடிக்கும் கடைசி சொல்லில் அல்லது கடைசி வரியில் அடுத்தவர் கவிதை வடிக்க வேண்டும் முதலாதவரின் கவிதைக்கு எதிராகவோ இல்லை அதை சம்பந்தப் படுத்தியோ. அது சம்பந்தப் படாமலோ இருக்கலாம்

குறைந்தது 4 வரிகளாவது இருக்க வேண்டும்

இதோ முதல் கவிதையை எங்கள் மன்றத்து ஆஸ்தான கவிஞன் ஆதவன் ஆரம்பிப்பார்
 
Last edited by a moderator:
எங்கே ஆதவன் இன்னும் உதிக்கவில்லை..?

தலை பார்வையிட்டுக் கொண்டிருக்கிண்றார் வெகுவிரைவில் கவிதை வரும் அதன் பின்னர் உங்கள் விளையாட்டுக்களை காட்டுங்கள்
 
Last edited by a moderator:
முதலில் வாழ்த்துக்கள் சுட்டி. முன்பு எனக்கு மடல் இட்டதும் நீர்தானே!! வெகு நாட்களாகிவிட்டது இந்த சமர் தொடங்க....
தீடீரெனக் கேட்பதால் ஏதோ எழுதுகிறேன்... நன்றாக இல்லையென்றால் மன்னிக்க....

கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..
 
Last edited by a moderator:
பாவி அவள் கூறினால்
உள்ளத்தில் உள்ளவைகள்
உருக்கி வைத்தால்
உருகிடும் கவிஞர்கள்
வடிபப்து நிஞமே
உண்மையை கூறினேன்
ரசிகன் நானே
 
Last edited by a moderator:
மனோஜ்.. நான் முடித்தது பாவி என்ற வார்த்தையில் கவிதையை வேறு இடத்தில் உபயோகிக்கவும்.. தற்சமயம் மாற்றவும்..
 
Last edited by a moderator:
கவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..

பாவி யாகிப் போனேன் - நீ
பாராது போனதாலே
காவி யாகிப் போகும் - ஆடை
கந்தலான மனமே
ஆவி யிருகி அழுது - கண்ணீர்
ஆறாகி வருமே
தேவி எந்தன் ராகம் - உனைத்
தேடித்தேடி அழுமே!
 
Last edited by a moderator:
அடடே!! செல்வன் அண்ணா முந்திக்கொண்டார்... சரி அடுத்தடுத்து வருவோம்... தற்சமயம் அண்ணாவின் அடியைப் பின்பற்றி வருவோம்.
 
Last edited by a moderator:
பாவியடி நான்! - உன்
அழகை ரசிக்காமல் இருந்ததால்!
உன் முகம் உரசியதில்
சிராய்ப்புகள் என் இதயத்துக்கு!
இருந்தும் மருந்து போடவில்லை.
காரணம் என் மனதில்
ஆறாமல் இருக்கும்
உன் நினைப்புக்காக!
 
Last edited by a moderator:
அழுமே எந்தன் கவிதைகள்
நீ நின்று சுவாசிக்காததால்
தொழுமே எந்தன் காதல்
நீ நின்று நேசிக்காததால்
விழுமே என் வியர்வைகள்
நீ நின்று ஆசிக் காததால்
உழுமோ காதற் பயிற்
நீ நின்றுஇதை வாசிக்காததால்?
 
Last edited by a moderator:
அழுமே எனதுள்ளம் உன்னைத்தேடி
அதுவறிந்தும் உன்மனம் கசியவில்லை
என் காதல் உனக்கு செல்லாக் காசு
உன் மௌனம் எனது மரணம்
அதை புரிந்து கொள்வாயா
என் மனதறியா காதலியே........?
 
Last edited by a moderator:
மூர்த்தி....தாமசமாகிவிட்டது......

இப்போது தொடங்கவேண்டிய வரிகள் "வாசிக்காததால்"

சுட்டியும் லேட்... நான் முந்திக் கொண்டேன்...

தொடங்கவேண்டிய வார்த்தை வாசிக்காததால்
 
Last edited by a moderator:
ஆஹா கவி சமர் ஆரம்பமே வெகு ஜோரக இருக்கிண்ரது எல்லோருக்கும் வாழ்த்துகக்ள்

முதல் கவி பாடிய ஆதவனுக்கு 500 இபணம்
அதன் பின்னர் 3கவிகளுக்கு தலா 100
 
Last edited by a moderator:
வாசித்துவிட்டால் என்னை
தன் இமையாலும்
உபதேசித்து விட்டால்
தன் வார்த்தையால்
நான் தான் கல்நோஞ்சன்
நீ கூறிய வார்த்தைகளை
மனதினில் பூட்டியதால்
 
Last edited by a moderator:
மனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..
 
Last edited by a moderator:
பூட்டியதால் நெஞ்சம்
சொன்ன சொல்லை மறுக்கிறது.
வாட்டியதால் கண்கள்
குருதி அடித்து ஓடுகிறது
மாட்டியதால் இதயம்
அலறியடிக்க மறுக்கிறது
சூட்டினால் ஒருவேளை
உண்டோ என் காதல் உயிர்?
 
Last edited by a moderator:
பூட்டியதால் உன்னை இதயத்தில்
பூத்ததே ஒரு காதல் பூ
இருட்டிலும் மலரும்
இனிமையாய் மணக்கும்
உன் நினைவுகள்
கண்கள் மூடி
இதயம் திறந்து
சிந்திக்கிறேன்
பூட்டிய மனதில்
முட்டிப் போராடிய நீ
திறந்த இதயத்தில்
அமர்ந்துவிட்டாய்
 
Last edited by a moderator:
இருவரும் ஒரே நேரத்தில்.... எந்த வார்த்தை வைத்து ஆரம்பிக்க?
 
Last edited by a moderator:
உயிரே!
ஏன் உயரே போகிறாய்
என்னவள் இன்னும் வரவில்லை
அவள் முகம் காண
உனக்குமா துணிவில்லை?
 
Last edited by a moderator:
மனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..


வார்த்தையில் என்ன தவறு இருக்கிறது. புரிய வையுங்களேன் ஆதவா.
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Back
Top