வஹீதா ரெஹ்மான்
தென்னகத்திலிருந்து ஹிந்திக்கு சென்று பிராகசித்தவர்கள் பற்றி பேசும்பொழுது நாம் பேசுவது ஸ்ரீதேவி, ஹேமாமாலினி மற்றும் ஜெயப்பிரதா
பற்றித்தான். இவர்களுக்கு முன்னரே முன்னோடிகளாக விளங்கியவர்கள் இருவர்.
ஒருவர் வைஜெயந்திமாலா மற்றொருவர் வஹீதா ரெஹ்மான்.
மற்றவர்களுக்கும் இவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். மற்றவர்கள் தென்னக மொழிகளில் நடித்து புகழ்பெற்று ஹிந்திக்கு சென்றனர். இவர் தென்னக மொழியில் அறிமுகமாகி உடனேயே ஹிந்தியில் நடித்து புகழ்பெற்றவர்.
அழகு, நடனம், நடிப்பு இவை இருந்தாலே போதும் கூடவே இவருக்கு உயரமும் .. கேட்கவும் வேண்டுமா.. எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருக்கிறார் இன்றும். அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்.
பிறந்த இடம்: ஹைதராபாத்
முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர் மருத்துவராக நினைத்து பின் சினிமாவில் நுழைந்தார்.
ஜெயசிம்மா என்ற தெலுங்கு படத்தில் தான் இவர் அறிமுகமானார்
முதல் திரையிலேயே என்.டி.ஆருடன் அறிமுகம்
[media]http://www.youtube.com/watch?v=GMn-rfEzofA[/media]
அதை தொடர்ந்து ரோஜுலு மாராயி என்ற திரையிலும் தோன்றினார்
தமிழில் ஒலித்த ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்ண்ணே(குரல் ஜிக்கி)
இதை தெலுங்கில் ஆடிப்பாடியவர் வஹீதா
இதோ
[media]http://www.youtube.com/watch?v=l_Kj7zKpT10[/media]
இளம் வஹீதா எவ்வளவு அழகு பாருங்கள்
இப்படிப்பட்ட நேரத்தில் தான் ஹிந்தி நடிகர் குருதத் இவரைக்கண்டு தனது படமான சி.ஐ.டி(1956)ல் இவரை ஹிந்தியில் அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தானே
(over night star) என்று சொல்வார்களே அதுபோல் உடனே ஹிந்தியில் பிரபலாமானர்.
படங்கள் குவிந்தன. தன் ஆசானான குருதத் படங்களில் நிறைய நடித்தார்
ஃப்யாஸாவில்(1957) நாயகியாக நடித்தார் . அப்படியே இவருக்கும் குருதத்திற்கும் காதல் மலர்ந்தது. குருதத் திருமணமானவர்(மனைவி கீததத்). இதனால் இந்த உறவில் விரிசல் விழுந்தது. இந்த சூழலிலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். பின்னர் பிரிந்துவிட்டனர்.
இந்த சமயத்தில் தான் சத்யஜித்ரேயின் அபிஜான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
பின்னர் தேவானந்துடன் இவர் நடித்த கைட்(1965)'ல் இவருக்கு பெரும் பெயர் தேடித்தந்தது. இதில் இவரது நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதற்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது
கைட் (Guide)
[media]http://www.youtube.com/watch?v=2KEbAecACzc[/media]
[media]http://www.youtube.com/watch?v=3koQIDoNGMU[/media]
பின்னர் ராம் ஒவுர் ஷ்யாம் ( எங்கவீட்டுப்பிள்ளை) திலீப்குமாருடன், நீல்கமல் ராஜ்குமாருடன் என அவரது வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம்
(neel kamal)
[media]http://www.youtube.com/watch?v=GoeQAddx_sE[/media]
[media]http://www.youtube.com/watch?v=TNH0K16htWc[/media]
பின்னர் வந்த ரேஷ்மா அவுர் ஷேரா(1971)வில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்
[media]http://www.youtube.com/watch?v=Tvw9RSdwbLk[/media]
நடனம்
[media]http://www.youtube.com/watch?v=b6FcQwfdFUw[/media]
நடுவில் அமிதாப்பச்சனுக்கு அம்மாவாக நடித்தார்
சமீபத்தில் வந்த ரங்தே பசந்தியிலும் தன் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
[media]http://www.youtube.com/watch?v=IWGrZKFc8lM[/media]
gr8 award
http://ishare.rediff.com/filevideo-Waheeda-Rahman-getting-GR8-Award-id-124805.php
தென்னகத்திலிருந்து சென்று அங்கே பெரும் புகழ் பெற்றவர்களில் முன்னோடி இவர்.
சமூகவேவையிலும் ஈடுபடுத்திக்கொண்டார். நல்ல காரியங்கள் பல செய்து வருகிறார்
http://www.screenindia.com/old/fullstory.php?content_id=7160