rajeshkrv
New member
முத்திரை பதித்த நடிகைகள் - இரண்டாம் பாகம் 
முத்திரை பதித்த நடிகைகள் - இரண்டாம் பாகம் பகுதி- 1
ஸ்ரீபிரியா
அறிமுகம்: முருகன் காட்டிய வழி (1974)
முருகன் காட்டிய வழி - ஏ.வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம். இதில் அவரின் தங்கையாக அறிமுகம் ஆனார் ஸ்ரீபிரியா.
இயக்கம் பி.மாதவன்
அறிமுக திரைப்படத்திலேயே முழுப்பாடல் பெற்றார் ஆம்
ஜானகியின் குரலில் ஒலிக்கும் முருகா வடிவேலா உனை அறிவேன் தெய்வ பாலா என்ற பாடல், திரு.ஜி.கே வெங்கடேஷின் இசையில் மிகவும் பிரபலமான பாடல்
அதற்கு பின் வந்த அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவின் தங்கை வேடம்
அதுவும் விதவை வேடம் . அதிலும் நன்றாக நடித்திருப்பார் .. தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார்
பாலசந்தரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்களில் இவரும் ஒருவர்
மெதுவாக திரை வானில் மின்ன தொடங்கினார் அட யார் இவர் என எல்லோரும் பார்க்கும் படி அந்த துடுக்குப்பேச்சு இவருக்கு ஒரு பெரிய ப்ளஸ்
இளையராஜாவின் இரண்டாவது படமான பாலூட்டி வளர்த்த கிளியில் இவர் தான் கதாநாயகி
ஜானகியின் கொல கொலயான் முந்திரிக்கா பாடல் பிரபலாமான பாடல்
ஆடு புலி ஆட்டம், பாலாபிஷேகம் என தொடர்ந்தது இவரது வளர்ச்சி
அதுவும் பாலாபிஷேகத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது
வில்லி ராஜசுலோசனாவை இவர் கிண்டல் செய்து பேசுவதாகட்டும், ஜெய்யுடன் சேர்ந்து கொண்டு உண்மையை கண்டுபிடிப்பதாகட்டும் தூள்..
எனக்கு தெரிந்து பானுமதிக்கு பின், ஆண்களை அடக்கி படத்தின் நிஜ கதா நாயகனாக ஜொலித்த
நடிகை ஸ்ரீபிரியா மட்டும் தான்..
ஆடுபுலி ஆட்டத்தில் இரு பெரிய நட்சத்திரங்களும் உண்டு ஆம் ரஜினி - கமல் இதில் நடித்தபோது மூவருக்கும் தெரிந்ததிருக்க வாய்ப்பில்லை .. இவர் இவர்களின் ஆஸ்தான நாயகியாவார் வரும் நாளில் என்று.
நவரத்தினம்(1976) - ஆம் எம்.ஜி.ஆரை வைத்து ஏ.பி. நாகராஜன் இயக்கிய ஒரே படம்.
படத்தில் பல நடிகைகள் நடித்தனர் , ஜெய்சித்ரா, லதா என்ற பெயர்களுடன் ஸ்ரீபிரியாவும் இருந்தார்
இந்த படத்தில் இவருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து
பின்னர் 1978'ல் வெளிவந்த அவள் அப்படித்தான் படத்தில் இவர் நடிப்பு மிகவும் குறிப்பிடதக்கது.
ஆம் அந்த மஞ்சு கதாபாத்திரமாகவே மாறியிருப்பார்..
இதிலும் கமல் - ரஜினி என இருவருடனும் நடிப்பு..
கமலுக்கும் இவருக்கும் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது.
ருத்ரய்யாவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில், அவள் அப்படித்தான் தமிழ் திரையுலகில் ஒரு மைல்க்கல்
யேசுதாஸின் குரலில் உறவுகள் தொடர்கதை, கமலின் குரலில் பன்னீர் புஷ்பங்களே, ஜானகியின் குரலில்
வாழ்கை ஓடம் என எல்லா பாடல்களும் அருமை.
அவள் அப்படித்தான் - ஸ்ரீபிரியாவிற்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தியது
குக நாதனின் மதுரகீதம், மாங்குடி மைனர் என இவரது வளர்ச்சி தொடர்ந்தது.
தேவரின் ஆட்டுக்கார அலமேலு இவருக்கு நடிப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது.
சிவகுமார் - ஸ்ரீபிரியா ஜோடி சேர்ந்து நடித்தனர்.படம் அமோக வெற்றி பெற்றது
சங்கர் கணேஷ் இசையில் பருத்தி எடுக்கையிலே என்ன பல நாளும் பார்த்த மச்சான்
சுசீலா,டி.எம்.எஸ் குரல்களில் மதுரகீதம்
அதை தொடர்ந்து வந்த பைரவியில் மீண்டும் ரஜினியுடன் ஜோடியாக நடித்தார்
இதில் கிராமிய மனம் கமழும் வித்தியாசமான வேடம் மிகவும் நன்றாக செய்திருப்பார்
அவள் ஒரு அதிசயம்,வாழ நினைத்தால் வாழலாம்,இளமை ஊஞ்சல் ஆடுகிறது என தொடர்ந்தது இவர் வளர்ச்சி
குறிப்பாக இளமை ஊஞ்சல் ஆடுகிறது ஸ்ரீதரின் இயக்கத்தில் இவர் நடித்த படம். இதில் மிகவும் கடினமான பாத்திரம் இவருக்கு நன்றாக செய்திருப்பார்
இப்படி தொடர்ந்த இவரது வளர்ச்சியின் உச்சகட்டமாக நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது வெற்றிக்கு ஒருவன் மூலமாக..
இவரை புகழேனிக்கு கொண்டு சென்ற படம் 1979'ல் வெளியான நீயா..
துரையின் இயக்கத்தில் கமல்,ஜெய்கணேஷ்,ரவிச்சந்திரன்,ஸ்ரீகாந்த்,லதா,மஞ்சுளா என பட்டாளமே நடித்த படத்தில் பாம்பாக வந்து எல்லோரையும் கிரங்கடித்த ஸ்ரீபிரியாவை யாரும் மறந்திருக்க முடியாது..
வாணிஜெயராமின் குரலில் ஒலித்த ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்
1979'ல் இவரது மற்ற படங்கள்
ரஜினியுடன் அன்னை ஓர் ஆலயம்,
வேலும் மயிலும் துணை,மங்கல வாத்தியம்,என்னடி மீனாட்சி, யாருக்கு யார் காவல்
1980 இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே சொல்லாம்
ஆம் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது
குறிப்பாக ஸ்ரீதரின் செளந்தர்யமே வருக வருக, அவன் அவள் அது மற்றும் இவரது சொந்த தயாரிப்பான
நட்சத்திரம்
முக்தா ஸ்ரீனிவாசனின் அவன் அவள் அது(கதை சிவசங்கரி) ஒரு மறக்க முடியாத படம். சிவகுமாரின் கருவை சுமக்கும் ஒரு வாடகை பெண்ணாக வந்து பின் சிவகுமாரிடம் தன் மனதை பறிகொடுக்கும் பாத்திரம் மிகவும் நேர்த்தியாக செய்திருப்பார்
80'ல் தொடர்ந்த படங்கள்
கண்ணில் தெரியும் கதைகள், பொல்லாதவன், பில்லா, யமனுக்கு யமன்
1981'ல் சுஜாதாவின் நாவலை படமாக்கினார் ஜி.என்.ரங்கராஜன் ஆம் கரையெல்லாம் செண்பகப்பூ.இதிலும் கிராமிய மனம் கமழும் பாத்திரம் வெளுத்து வாங்கியிருப்பார்
பின் கே.சங்கரின் ஸ்ரீனிவாச கல்யாணம், மாடி வீட்டு ஏழை, லாரி டிரைவர் ராஜா கண்ணு,அமரகாவியம், சவால், ராம் லக்ஷ்மண் என பட்டியல் நீண்டது..
பின் வசந்தத்தில் ஓர் நாள்(சிவாஜியுடன்), தனிக்காட்டு ராஜா, சிம்லா ஸ்பெஷல்,சங்கிலி,பகடை பன்னிரெண்டு,கடமை, சிரஞ்சீவி, நினைவுகள், நட்பு, எனக்குள் ஒருவன்,திரிசூலம், அலாவுதீனும் அற்புத விளக்கும்,ஊருக்கு ஒரு பிள்ளை,இலங்கேஸ்வரன் பின் நீயா- பாகம் இரண்டு ஆம் நானே வருவேன் இவரே இயக்கியது என எல்லாமே மாறுபட்ட பாத்திரங்கள்
குறிப்பாக 1982'ல் வந்த வாழ்வே மாயம் திரைப்படத்தில் தாசி வேடம் இவருக்கு இருந்தாலும் கமல் இவருக்கு தாலி கட்டும் காட்சியிலாகட்டும், கண்களாலேயே நடித்திருப்பார் இவர்.. சபாஷ்
இயக்குனராக இவர் இயக்கிய படங்கள்
சாந்தி முகூர்த்தம் (1984) - மோகன் - ஊர்வசி
எங்க ஊர் ஆட்டுக்காரன் (1990) - இவரது தம்பி சந்திரகாந்தை நாயகனாக அறிமுகப்படுத்தினார்
சந்திரகாந்த் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் சுகாசினியின் கணவராக வருபவர்
நானே வருவேன்(1992) ரகுமான்,சசிகலா, கெளதமி
பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கிவருகிறார்
தமிழ் திரைஉலகில் ஜொலித்த நட்சத்திரங்களில் இவர் மிகவும் முக்கியமானவர்
ரஜினி-கமல் வளர்ச்சியில் இவரது பங்கும் உண்டு
http://www.hindu.com/2007/02/22/stories/2007022218510200.htm

Last edited: