மீண்டும் முத்திரை பதித்த நடிகைகள்.

rajeshkrv

New member
மீண்டும் முத்திரை பதித்த நடிகைகள்

முன்பு நான் ஆரம்பித்த முத்திரை பதித்த நடிகைகளை மீண்டும் புதுப்பொலிவுடன் கொடுக்கலாம் என நினைக்கிறேன்

இந்த முறை நாம் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் முத்திரை பதித்த நடிகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைத்துள்ளேன்..
முதல் பகுதிக்கு தந்தது போல் இந்த பகுதிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்..

புதிய தொடரின் முதல் பகுதி .. இன்னும் சில நாட்களில்

நாம் கடைசியாக அலசியது ஜெயசித்ராவை பற்றி

அடுத்து நாம் பார்க்கவிருக்கும் நடிகை யார் என்பதற்கு ஒரு க்ளூ தருகிறேன்.. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

நான்கு பெரும் நடிகர்களுடனும் நடித்த பெருமை இவருக்கு உண்டு (ஜோடியாக)
அதாவது எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி

எந்த பாத்திரமானாலும் அற்புதமாக நடிக்க கூடிய நடிகை 70'களில் இவர் நடிக்காத படங்களும் இல்லை பாத்திரங்களும் இல்லை
யார் இவர் ??

.
 
நடத்துங்க ராஜேஷ்...
எனக்கு முதல்ல ஸ்ரீதேவிதான் நினைவுக்கு வந்தாரு. ஆனா எம்ஜியாருடன் ஜோடியாக நடித்த நினைவில்லை...
குழப்பமா இருக்கே... நமக்கு 70ன்னாலே குழப்பந்தேன்...
வளர்க உங்கள் ராஜ்ஜியம்... :)
 
ஆமா அவரைக் கேக்குறதுக்கு நீ எதுக்கு ராஜா கமிட் பண்றே???
எனக்கும் ஸ்ரீபிரியா நடிச்ச படம் தெரியாததுனால சொல்லலை.. ஹிஹி
 
ஆம் ஸ்ரீபிரியா தான்
எம்.ஜி.ஆர் - ஸ்ரீபிரியா படம் நவரத்தினம்
 
ஆ.... அது!!!!
தொடருங்க ஸ்ரீபிரியாவின் முத்திரையை...
இப்பக் கூட சன் டிவியில் தன் முத்திரையை இன்னும் பதித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஸ்ரீபிரியா
 
அவள் அப்படிதான் பார்த்தேன், ஸ்ரீபிரியாவின் முத்திரையை...ம்ம்ம் சூப்பர், வசனம் பேசும் பொழுதும் ம்ம்ம்ம் நல்ல நடிப்பு.
 
நீங்கள் நான்கு ஹீரோக்களுடனும் நடித்த நடிகை என்றவுடனேயே என்னுடைய கணிப்பு ஸ்ரீப்ரியாவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதுமாதிரியே ஸ்ரீப்ரியாதான்.

மிகவும் அருமையான நடிகை. எந்த பாத்திரத்தையும் எளிதாக ஏற்று நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்
 
சூப்பர் நடிகை. பெண்மையில் சுதந்திரம் கலந்த கம்பீர நடிப்பு. மனங்கவர்ந்த நடிகை.
 
கம்பீர நடிப்பு. அந்த சீரியல் சின்ன பாப்பா பெரியா பாப்பாதான் இவருக்கு ஒரு மைனஸ் மார்காக போய்விட்டது.
 
ஓவியா;196239 said:
கம்பீர நடிப்பு. அந்த சீரியல் சின்ன பாப்பா பெரியா பாப்பாதான் இவருக்கு ஒரு மைனஸ் மார்காக போய்விட்டது.
ஏன் ஏன் ஏன்
அந்த நடிப்பில் என்ன குறை கண்டீர் நக்கீரரே(ரியே) :icon_clap:
 
சி.பா. பெ.பா. வில் பட்டாபியை "டேய்..நாயே..!" என்று அழைக்கும் அழகு,

கண்ணுக்கு அருகில் வைத்து எதையும் படிக்கும் குறும்புத்தனம்..

பிராம்மண உச்சரிப்பில் "ஷெருப்பு" என்னும் நேர்த்தி...

யாருக்கு வரும்..?
 
Last edited:
ஏன் ஏன் ஏன்
அந்த நடிப்பில் என்ன குறை கண்டீர் நக்கீரரே(ரியே) :icon_clap:

ஒரு அருமையான நடிகையை நகைச்சுவையாய் காட்டுவது போல் அவர் இமேஜை கெடுத்து விட்டார்கல்.

ராஜா அண்ணா சொன்ன அந்த 'பட்டாபியை "டேய்..நாயே..!" என்று அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை.
 
ஓவியா;196837 said:
ஒரு அருமையான நடிகையை நகைச்சுவையாய் காட்டுவது போல் அவர் இமேஜை கெடுத்து விட்டார்கல்.

ராஜா அண்ணா சொன்ன அந்த 'பட்டாபியை "டேய்..நாயே..!" என்று அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை.


தங்கள் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன்... மதிக்கிறேன் ஓவி...!
 
ராஜா;196842 said:
தங்கள் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன்... மதிக்கிறேன் ஓவி...!

நன்றி அண்ணா.

ஒருவரை மதிக்கும் தங்கள் கொள்கையை நான் உயர்வாக மதிக்கிறேன்.
 
எனக்கென்னவோ, ஸ்ரீப்ரியாவின் சிறந்த நடிப்பு அந்த சீரியலில்தான் வெளிப்பட்ட மாதிரி தோன்றியது.
 
Back
Top