சைவ வினா விடை

3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்
 
6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.

8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
 
9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
 
10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.

(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.

(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.

(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.

(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.

(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.
 
7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.

(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.

(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.

(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.

(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.

(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.

(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
 
11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.

(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.

(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.

(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.
 
(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.

(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினது.

(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.

(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.
 
12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.

(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.

(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.

(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.
 
13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.

(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.

(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
 
14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.
 
17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.


திருச்சிற்றம்பலம்

சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது.
 




1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.

3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?

நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர ்.

4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.
 
[FONT=TSC_Avarangal]5. ????󦾡Ƣ?? ??Ŧ????? ????? ?? ????𧼡 ???? ????𧼡?[/FONT]
[FONT=TSC_Avarangal] ?????????; ?????ǡ??? ???? ?????. [????, ??, ????? ????? ?? ????? ??????.][/FONT]
[FONT=TSC_Avarangal]6. ????ġ?? ¡??[/FONT]
[FONT=TSC_Avarangal]????????? ?? ?ý ??? ???????? Ӿ? ??ý?ɢ??? ?????Ţ??.[/FONT]
[FONT=TSC_Avarangal]7. ???ġ?? ¡??[/FONT]
[FONT=TSC_Avarangal] ?????Ţ???? ?? ?ý ??? ???????? ?????.[/FONT]
[FONT=TSC_Avarangal]8. ?Ƣ?ġ?? ¡??[/FONT]
[FONT=TSC_Avarangal] ?? ?ý ??? ???????? Ӿ? ??ý?? ???̾? [/FONT]
 
[FONT=TSC_Avarangal]9. ????ġ?? ¡??[/FONT]
[FONT=TSC_Avarangal] ????츨? ??Ţ??? ????ǡ??? ???츢?? ??????Ǣ? ?????о?[/FONT][FONT=TSC_Avarangal].[/FONT]
[FONT=TSC_Avarangal][/FONT]
[FONT=TSC_Avarangal]10. ???ġ?? ¡??[/FONT]
[FONT=TSC_Avarangal]????????? ???? ??츢? ??????? Ţ??̾?.[/FONT]
[FONT=TSC_Avarangal][/FONT]
11. [FONT=TSC_Avarangal]?? ?ý ??? ????? ???? ?????[/FONT]
[FONT=TSC_Avarangal] ?? = ????; ?ý? = ?? ӾĢ? ??Ţ; ???? = ?????? ????????? ?ĸ?. ????? = ???Ţ????? ?????.[/FONT]
[FONT=TSC_Avarangal][/FONT]
[FONT=TSC_Avarangal]12. ?? ??â???? ??ý? ????[/FONT]
[FONT=TSC_Avarangal] Ӿ? ??ý?, Ш?? ??ý?, ????? ??ý? ?? ??ȡ?. ̼????? ??â????? Ӿ? ??ý? ??, Ш?? ??ý? ??â??, ????? ??ý? ????. ??â?? - ????.[/FONT]
 
13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?

முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.

14. சிவசத்தியாவது யாது?

அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.
 
15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?

அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.

16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?

அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?

ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.
 
18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?

சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமா�� �க் கொண்டு செலுத்துதல்]

19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?

சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ?க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.

20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.
 
21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?

பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.

22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]

23. மகேசுர வடிவம் எத்தனை?

சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ?ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.
 
24. ஆன்மாக்களாவார் யாவர்?
நித்தியமாய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடையுடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய்ச் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை அநுபவிப்பேராய்ச், சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையோராய்த், தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர். (சேதனம் - அறிவுடைப் பொருள்)

25. ஆன்மாக்கள் எடுக்கும் சரீரம் எத்தனை வகைப்படும்?
தூல சரீரம், சூக்கும சரீரம் என இரண்டு வகைப்படும்.
 
Last edited:
[FONT=TSCu_Paranar]26. தூல சரீரமாவது யாது?[/FONT]
[FONT=TSCu_Paranar]சாதி, குலம், பிறப்பு முதலியவைகளால் அபிமானஞ் செய்தற்கு இடமாய்ப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு. (பரிணமித்தல் - உருத்甜ிரிதல்)[/FONT]

[FONT=TSCu_Paranar]27. சூக்கும சரீரமாவது யாது?[/FONT]
[FONT=TSCu_Paranar]சத்த ஸ்பரிச ரூப ரச கந்தம் என்னும் காரண தன்மாத்திரையைந்தும், மனம் புத்தி அகங்காரம் என்னும் அந்தக்கரண மூன்றுமாகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு, ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அநுபவித்தற்குக் கருவியாய், ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.[/FONT]

[FONT=TSCu_Paranar]28. ஆன்மாக்கள் எப்படிப் பிறந்திறந்து உழலும்?[/FONT]
[FONT=TSCu_Paranar]நல்விணை, தீவிணை என்னும் இருவினைக்கும் ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்திறந்து உழலும்.[/FONT]
 
Back
Top