சைவ வினா விடை

12. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார் யாவர்?

(கி.பி.660-840)

1. திருநீலகண்டர்

2. இயற்பகையார்

3. இளையான்குடிமாறர்

4. மெய்ப்பொருளார்

5. ஏனாதிநாதர்

6. ஆனாயர்

7. உருத்திரபசுபதியார்

8. திருநாளைப்போவார்

9. திருக்குறிப்புத்தொண்டர்

10. மூர்க்கர்

11. சிறப்புலியார்

12. கணநாதர்

13. அதிபத்தர்

14. கலிக்கம்பர்

15. கலியர்

16. சத்தியார்

17. காரியார்

18. வாயிலார்

19. முனையடுவார்

20. இடங்கழியார்

21. பூசலார்

22. நேசர்.
 
shiva.jpg
 
கலாநிதி க.கணேசலிங்கம்
அவர்களின்
சைவசித்தாந்த வினா விடை

13. சைவ சித்தாந்தம் என்பதன் பொருள் என்ன?

சைவம் சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம். சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை. அந்தம் - முடிவு
ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தம் சைவ சமயத்தின் தத்துவம்.
 
pantheon.jpg



‘பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே’
 
14. மெய்கண்ட சாத்திர நூல்கள் எப்பொழுது எழுதப்பட்டன?

மெய்கண்ட சாத்திர நூல்கள் சைவ ஞானிகளால் 12-ம் நூற்றாண்டுக்கும் 14-ம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டவை.
 
1. புருடன் - தத்துவ விளக்கம் வேண்டும்
2. வித்தியா தத்துவத்தில் உள்ள மாயைக்கும் பதி பசு பாசம் - தில் வரும் ஆணவம், கன்மம், மாயையில் உள்ள மாயைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும்
 
நாயன்மார்கள் செய்த அற்புதங்கள் எல்லாம் தற்போது ஏன் நிகழ்வதில்லை?
 
சிவபெருமானை விலங்குகள் வழிபட்ட தலங்கள் எவை?

சிவபிரானை வழிபட்ட விலங்குகள்
சிங்கம் வழிபட்ட தலம் திருநல்லூர்,
குதிரை வழிபட்டதலம் சீயாத்தமங்கை,
ஆடு வழிபட்டதலம் திருவாடானை,
பன்றி வழிபட்டதலம் அரித்தூவரமங்கலம்,
கழுதை வழிபட்டதலம் கரவீரம்,
குரங்கு,அணில்,காகம் வழிபட்டதலம் குரங்கணில் முட்டம்,
முயல் வழிபட்டதலம் திருப்பாதிரிப் புலியூர்,
நாரை வழிபட்டதலம் திருநாரையூர்,
கரிக்குருவி வழிபட்டதலம் வலிவலம்,
கருடன் வழிபட்டதலம் சிறுகுடி,
நண்டு வழிபட்டதலம் திருநீடூர்



150421_239764949460972_1916256109_n.jpg
 
விலங்குகள் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய தலங்கள் அறிந்தேன், தகவலுக்கு மிக்க நன்றி.
 
கூடுதல் தகவல்!

ஆனை வழிபட்ட தலம் - திருவானைக்கா (திருச்சி)
சிலந்தி வழிபட்ட தலமும் இதுவே!
பின்னர் அடுத்தப் பிறவியில் ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழ மாமன்னர் கோச்செங்கட்சோழராக பிறந்ததாகவும் சொல்லபடுகிறது வ
ஈ வழிபட்ட தலம் - ஈங்கோய் மலை
 
2. வித்தியா தத்துவத்தில் உள்ள மாயைக்கும் பதி பசு பாசம் - தில் வரும் ஆணவம், கன்மம், மாயையில் உள்ள மாயைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும்
'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்ற 'ஈசாவாஸ்யோபநிசத்' கூற்றுபட் மாயையும் இறையே என்றே அறிந்திருக்கிறேன். மேலும் தங்கள் விளக்கம் எதிர்பார்திருக்கிறோம் சிவசிவநேசன் அவர்களே!
 
அட்டமா சித்திகள் ஆவன எவை?

1. அணிமா * *= * சிறியதில் சிறியதாதல்
2. மகிமா = பெரியதில் பெரியதாதல் (அண்டங்கள் அணுவாகவும் அணுக்கள் அண்டங்களாகவும் ஆதல்)
3. லகிமா = உறுதியானவற்றை நுண்மையாக்குதல்
4. கரிமா = சிறியனவற்றை பெரிதாக்குதல்
5. பிரார்த்தி = பாதளத்தில் இருப்பவர் வானுலகத்தில் இருத்தல்
6. பிராகாமியம் = கூடுவிட்டு கூடு பாய்தல்( வேறொருவர் உடலில் பிரவேசித்தல்)
7. ஈசத்துவம் = முத்தொழிலை மேவுதல்
8.வசித்துவம் = யாவற்றையும் தன்வசம் ஆக்குதல்
 
Back
Top