பூ திரை படம் சென்னையில் சாந்தி ஒரே திரை அரங்கில் சத்தமின்றி ஓடி கொண்டிருக்கிறது..
இந்த படத்தை நான் அங்கீகரிக்கிக்கிறேன் நண்பர்களே.... பார்க்காத நண்பர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள் திரு தமிழ்செல்வன் அவர்களது புதிணத்தை கொஞ்சமும் அதன் ஏதார்த்தம் குறையாமல் செதுக்கி இருக்கிறார்
இயக்குநர் சசி...
அந்த மாரி பெண் கதாபாத்திரம் தேசிய விருதுக்குக்கு தகுதியானவர்..
அற்புதமான ஒரு படைப்பு.... நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள் நண்பர்களே..!
காஞ்சிவரம் பிரகாஷ்ராஜ்தானே நடித்தது?
பாருங்க.... யார் நடித்த படமென்பதே ஞாபகத்திலில்லை....
நான் பார்த்தேன் அந்தப்படத்தை. அதில் ஓர் நெசவுத்தொழிலாழி தனது வாழ்க்கையிலேயே சிறந்த சீதனமாக எதைக் கருதுவான் என்பதை காட்டியிருக்கிறார்கள். அந்தப்படத்தை பார்க்கையில் எம் முன்னோர்கள் எவ்வளவு அடிமைகளாக ஏழ்மையாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் புலப்படும்.
இது எம்முடைய மதிப்பிடு தான் ஆனால் பார்க்க வேண்டிய படங்கள் வரிசையில் காஞ்சி வரம் கொண்டு வந்தமைக்கு எனக்கு பல பரிசுகள் தர வேண்டும்??????????
தனியாக விமர்சன திரி கூட வரவில்லையே ???
காஞ்சி வரம் போன்ற படங்கள் வர.. நாம் அதை திரையினில் சென்று காண வேண்டும்....
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
சென்னையில் கடந்தவாரம் மாசிலாமணி படத்தை காசி தியேட்டரில் பார்த்தேன்.
படத்தில் கதையென்று ஒன்றும் இல்லை. பழைய துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை கொஞ்சம் உல்டா செய்திருக்கிறார்கள். படம் பரவாயில்லை, பாடலுகளும் சுமாராக உள்ளன.