வெள்ளித்திரையில் கிரா?பிக்ஸ், அனிமேஷன்

வெள்ளித்திரையில் கிரா?பிக்ஸ், அனிமேஷன்

வெறும் கிசுகிசுகளை தவிர,திரைபடம் குறித்த அறிவியல்
செய்திகள் வழங்கினால் மிக நன்றாக இருக்கும்.
கிராபிக்ஸ்,அனிமேஸன் போன்றவைகள் விளக்கலாம்.
 
Last edited by a moderator:
தமிழ் குமரா அதை நீங்களே ஆரம்பித்துவைக்கலாமே???
 
Last edited by a moderator:
அவர் தலையிலேயே கட்டிட்டீரே.... நியாயமா நாராயணா?!!!
 
Last edited by a moderator:
பின்ன, யாராவது ஒருவர் ஆரம்பிக்க வேண்டுமல்லவா. அதான் நாரதர் இந்தக் கேள்வியை ஆரம்பித்தவர் தலையிலேயே கட்டிவிட்டார்.
 
Last edited by a moderator:
அவர் தலையிலேயே கட்டிட்டீரே.... நியாயமா நாராயணா?!!!

நாலுபேர்க்கு நல்லது நடக்கும்னா எதுவுமே நியாயம்தான்.................
தமிழ் குமரனைத்தான் காணவில்லை................
(தமிழ் சினிமா அதிகம் பார்த்ததன் விளைவு கண்டுகொள்ளாதீர்கள்)
 
Last edited by a moderator:
இருக்கிறேன் நண்பரே,
அறியாமையும், ஆர்வமிகுதியுமே இதை கேட்க தூண்ட்யது.
தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துலாமே,
 
Last edited by a moderator:
முதல் செய்தி நான் வழங்குகிறேன்....

டைட்டானிக் என்றொரு படம் வந்ததே பார்த்தீர்களா... கடலின் ஆவேசமும்,கப்பலின் அழிவும் பார்த்தும் பிரமித்துப் போயிருப்பீர்கள். ஆனால் உண்மையில் 400 அடிக்கு பள்ளமும்,ஒரு அலங்கார பொம்மைக் கப்பலும் மட்டுமே உண்மையாக உருவாக்கப்பட்டது. பின்பு ஆற்றல் மிகுந்த ஒரு பெண்டியம் கம்ப்யூட்டரும், 150 துணைக் கம்ப்யூட்டர்களும் கொண்டு லினக்ஸ்
என்ற ஆற்றல் வாய்ந்த செயல்பாட்டு இயக்கத்தில் இந்தப் படத்தின் மொத்தக்
கிராபிக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டன. கப்பல் கவிழ்ந்ததில் கன்னத்தில் கை வைக்காமலே கேமரூன் சில பிரம்மாண்டங்களை படைக்க இது உதவின
 
Last edited by a moderator:
முதல் செய்தி நான் வழங்குகிறேன்....

டைட்டானிக் என்றொரு படம் வந்ததே பார்த்தீர்களா... கடலின் ஆவேசமும்,கப்பலின் அழிவும் பார்த்தும் பிரமித்துப் போயிருப்பீர்கள். ஆனால் உண்மையில் 400 அடிக்கு பள்ளமும்,ஒரு அலங்கார பொம்மைக் கப்பலும் மட்டுமே உண்மையாக உருவாக்கப்பட்டது. பின்பு ஆற்றல் மிகுந்த ஒரு பெண்டியம் கம்ப்யூட்டரும், 150 துணைக் கம்ப்யூட்டர்களும் கொண்டு லினக்ஸ்
என்ற ஆற்றல் வாய்ந்த செயல்பாட்டு இயக்கத்தில் இந்தப் படத்தின் மொத்தக்
கிராபிக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டன. கப்பல் கவிழ்ந்ததில் கன்னத்தில் கை வைக்காமலே கேமரூன் சில பிரம்மாண்டங்களை படைக்க இது உதவின

நல்ல செய்தி. இவ்வளவையும் கம்ப்யூட்டரிலேயே செய்துவிட்டு, எல்லாம் நேரில் நடப்பதுமாதிரி அருமையாக காட்டியிருந்தார்கள். இது தொழில்நுட்பத்திற்கு ஒரு பெரும் வெற்றியே.
 
Last edited by a moderator:
இருக்கிறேன் நண்பரே,
அறியாமையும், ஆர்வமிகுதியுமே இதை கேட்க தூண்ட்யது.
தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துலாமே,

என்னப்பா? பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு?????
ஏதோ விளையாட்டுக்கு சொன்னா விளையாட்டா எடுத்துக்கனும்
உங்கள் கவலை போக்க தோழி அனுஷா ஜாஸ்மின் ஆரம்பித்துவிட்டார்களே....
இன்னும் அன்பர்கள் தொடர்வார்கள்........ தெரியாததை தெரிந்துகொள்ளத்தானே
இந்த தளம்?
 
Last edited by a moderator:
நாரதர் அவர்களே, வேடிக்கை காட்டுவதே உமது வாடிக்கையா,
தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.
நன்றி அனுஷா அவர்களே
 
Last edited by a moderator:
அடுத்த தகவல் நான் வழங்குகிறேன்

ஜுராசிக் பார்க் என்ற படத்தில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் ஸ்டோரி போர்ட் என்ற மென்பொருள். பெரிய பெரிய விலங்குகள் செய்யும் அட்டகாசமான அசைவுகள் இதிலேயே செய்யப்பட்டன.

ஜீன்ஸ் படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் சிலிகான் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இது ரொம்ப ஜிகினா வேலை

உபரி தகவல் - தமிழ் சினிமாவின் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும்பாலும் பெண்டா?போர் என்ற நிறுவனத்தில் செய்யப்படுகின்றன. விசுவல் எ?பெக்ட் வெங்கி என்பவர் இதில் மிக பிரபலம்
 
Last edited by a moderator:
நன்றி உங்கள் தகவலுக்கு!!!!
 
Last edited by a moderator:
அனுஷாவுக்கு அடுத்து நல்ல ஒரு சுவையான தகவல் வழங்கிய
லாவண்யா.. உங்களுக்கு நன்றி + பாராட்டு + ஊக்கம்.
 
Last edited by a moderator:
டைட்டானிக் வந்த புதிதில் சன் டிவியில்கூட அது உறுவானவிதம் குறித்து காட்டினார்கள்... ஆனாலும் தோழி அனுஷ் சொன்னது இன்னும் விரிவாக உள்ளது. நன்றி.

லாவண்யாவிற்கும் நன்றி!!!
 
Last edited by a moderator:
அருமையான விளக்கம் தந்து உதவிய லாவண்யா,அனுக்ஷ?விற்கு பாரட்டுகள்.
 
Last edited by a moderator:
சந்தீப் ஜெயட்கா என்னும் இந்திய வல்லுனர் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளார். இதனை டிவி,ஆடியோ சிஸ்டம்,கம்ப்யூட்டர் இவற்றில் இணைத்து
கொள்ளலாம்.அவற்றில் நிகழ்ச்சி/பாடலுக்குரிய பொருத்தமான நறுமணத்தை
அக்கருவி பரப்பும். 'மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே' என்ற பாடல்
ஒலிக்கும்போது மல்லிகை வாசம் வீசும்.இக்கருவிக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார் சந்தீப்

சமீபத்தில் வர இருக்கும் ஒரு தமிழ் படத்தில் (பெயர் தெரியவில்லை).படம்
பாம்புக்கதை என கேள்விப்பட்டேன். அதில் 6 இடங்களில் வரும் பூக்களுக்கும்
ஒரு இடத்தில் பெட்ரோல் காண்பிக்கப்படும் அந்த இடத்திலும் அந்த 6 பூக்களின் வாசனை மற்றும் பெட்ரோலின் வாசனை திரையில் வரும்போது
திரையரங்கம் முழுக்க இந்த மணம் வீசும்.

இதுபற்றி தெரிந்தவர்கள் மேலும் விபரம் சொல்லுங்களேன்
 
Last edited by a moderator:
ஆகா வாசனையான செய்தி கேட்க நான் ரெடி.சீக்கிரம் தெரிந்தவர்கள் சொல்லுங்க.
 
Last edited by a moderator:
இந்த வாசனைச் சாமாச்சாரம்
டிஸ்னி வேர்ல்டில் செய்வதாகக் கேள்வி..
அங்கிருப்பவர்கள் இது பற்றி கூறலாமே.
இன்னொன்று..
அடுத்த தொழில்நுட்பமாக
பிலிம் ரோலுக்குப் பதிலாக
CDகளிலேயே பதிவு ச்ய்து
டிஜிட்டல் ஸ்கிரீனில் காண்பிப்பது.
அப்படி ஆகும் பொழுது வெள்ளித் திரைகள் எல்லாம் இனி கிடையாது..
 
Last edited by a moderator:
டிஸ்னி லேண்டில் இந்த வாசனைத் தொழில்நுட்பம் நான் பார்த்ததில்லை. ஆனால் 4D என்ற சமாச்சாரம் உண்டு. அதாவது 3D படங்களுடன் திரையரங்கிலும் புகை வர வைப்பது, உற்கார்ந்திருக்கும் நாற்காலி உலுக்கப்படுவது, கதாபத்திரங்களைப் போல வேடமிட்டவர்கள் இடையிடையே அரங்கில் தோன்றி இருக்கைகளின் இடையே ஓடி, நிஜத்தில் நடப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது போன்றவை. இது போன்ற காட்சிகள் யுனிவர்சல் ஸ்டுடியோவின் பொழுதுபோக்குப்
பூங்காவிலும் உள்ளது.

ஹோம் தியேட்டர் எனப்படும் வீட்டுத் திரையரங்குகள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. DVD என்கிற குறுந்தகடுகள் வந்ததில் இருந்து ஒலித்தொழில்நுட்பம் பெருமளவு முன்னேறியுள்ளது. கீழை நாடுகளில் VCD குறுந்தகடுகள் பிரபலமாருப்பது போல் மேலை நாடுகளில் DVD கள் பிரபலமாயுள்ளன. VCD களை விட DVD கள் பல மடங்கு தரம் வாய்ந்தவை. ஒரு தமிழ்ப் படம் பார்க்க 3 VCD குறுந்தகடுகள் தேவையெனில் ஒரே DVD குறுந்தகட்டில் முழுப் படமும் பார்த்துவிட முடியும். மேலும் DVD யில் ஒலித் தரம் மிக அதிகம். 5.1 சேனல்கள் / 7.1 சேனல்கள் ஒலியமைப்பு எல்லாம் DVD யில் சாத்தியம். இதனால் வீட்டின் உள்ளேயே தியேட்டரில் பார்ப்பது போன்ற உருவகத்தை ஏற்படுத்தி விட முடியும்.
 
Last edited by a moderator:
Back
Top