leomohan
New member
மெய்யுலகம்
கட்டுரை
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி
கட்டுரை
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி
இந்த கட்டுரையில் நான் மெய்யுலகம், மாய உலகம், பொய் உலகம் பற்றி பேச விரும்புகிறேன். பிரபல எழுத்தாளர்களின் மேற்கோள் கொடுத்துள்ளேன். கட்டுரை சுவாரஸ்யமாக இருக்க படங்கள், அட்டவனைகள் மற்றும் பட்டியல் பிரயோகித்துள்ளேன்
நாம் நம்மை ஒரு கொடிய உலகில் காண்கிறோம். நம்மை சுற்றி உள்ள விஷயங்களின் விவரங்கள் அறிய விரும்புகிறோம். புரிந்துக் கொள்ள முயல்கிறோம். நம் அண்டத்தின் இயல்பு என்ன? நம்முடைய பங்கு என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் காணும் விஷயங்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றன? - நேரத்தின் குறும் சரித்திரம் எனும் ஸ்டீவன் ஹாக்கிங் புத்தகத்திலிருந்து.
சில கேள்விகளும் சூழல்நிலைகளுடன் துவங்குவோம்:
சைவம் - இந்த உலகமே சைவமாக மாறிவிட்டால் என்ன நடக்கும். மக்கள் மற்ற உயிரினங்களை, இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை கொல்ல மறுத்தால்? விலங்குகளின் எண்ணிக்கை மக்களின் தொகையை கடக்கும். பிறகு அவற்றை கொல்ல வேண்டி வரும். நாம் உண்பதற்காக இல்லாவிட்டாலும் அவற்றின் தொகையை குறைக்க.
காடு அழிப்பு - நாம் காடுகளை ஆக்கரமிக்கின்றோம். மரங்களை வெட்டுகின்றோம். நாம் பல உயிர்களை கொல்கிறோம் அல்லவா. மரங்கள், விலங்குகள், பூச்சியினங்கள், தற்போது காட்டில் இருப்பவை, காடு அழிக்காமல் இருந்தால் எதிர்கால சந்ததி கொடுப்பவை அனைத்தும் அழிகின்றன. அப்படியென்றால் நாம் வீடுகள் கட்டக்கூடாது, கட்டிடங்கள் அமைக்கக்கூடாது, சாலைகள், தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. மீண்டும் காடுகளில் சென்று வாழவேண்டும், அல்லவா?
பூச்சிக் கொல்லிகள் - நாம் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துகிறோமே. வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட, வீடுகளில். இதை கொலை என்று சொல்ல முடியுமா? நாம் ஏன் தியானத்தின் மூலமும், பூஜைகளின் மூலமும் கோரிக்கை விடுத்து இந்த பூச்சிகளை தாமாகவே வீட்டிலிருந்து வெளியே செல்ல செய்யக்கூடாது. ஏன் கொல்கிறோம் இவற்றை.
பிராமணர் - ஒரு பிராமணர் கடல் கடந்து போனால் அவர் பிராமணர் இல்லை. அப்படியென்றால் தம்மை பிராமணர்களா சொல்லிக் கொள்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் தம் தகுதியை இழந்து விடுகின்றனர். அப்படியென்றால் பெரிய மகான்கள், சாமியார்கள் இந்த தகுதியை இழுந்தவிட்டனர் அல்லவா. இந்த மகான்கள் சொசுகுசு பேருந்துகளில் செல்வதும், விமான பயணம் செய்வதும், 5 நட்சத்திர விடுதிகளில் தங்குவதும் வெளிநாட்டவர்களிடமிருந்து பல ஆயிரம் டாலர்களை காணிக்கையாக பெறுவதும் சரியா? இவர்கள் தம் கோட்பாடுகளை தம் கிராமத்தில் பரப்பி முதலில் வெற்றியடைய வேண்டாமா? எதற்கு நம் நாட்டிலேயே வெற்றி பெறாத ஒரு கோட்பாடை வெளிநாடுகளில் பரப்ப முயலவேண்டும்? பௌத மதம் இந்தியாவில் பரவில்லை. வெளிநாட்டில் கிழக்கில் பரவியது. ஆக கௌதமரால் தம் கொள்கையை தம் நாட்டில் பரப்பும் அளவுக்கு பேச்சு சக்தி இல்லாதவரா?
உடலின் ஆசைகள் - நம் காம உணர்ச்சிகளை கட்டுபடுத்தினால் சந்ததி பெருகாது. ஆகையால் மனித இனத்தின் வளர்ச்சி நிற்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் அழிந்துவிடும். வேதங்கள் போதிப்பவர்கள் அதை கேட்கும் மக்களே இல்லாவிட்டால் வேதம் என்னவாகும். காமம் கொள்ளக்கூடாது என்று சொல்லும் கருத்துக்களை என்னவென்பது.
மக்கள் வெறும் பழங்கள் காய்கறிகள் மட்டும் உண்டால் உணவு சம்பந்தப்பட்ட ஆயிரமாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். மக்கள் தம் வேலைகளை இழுந்துவிடுவார்கள். நாம் பொய்யுலகத்தின் ஆசிகளை பெற நம் கண் முன்னால் இருக்கும் மெய்யுலகத்தை அழிப்பது சரியா?
மற்ற ஆசைகள் - பெண்கள் பொன், வெள்ளி, வைர நகைகளுக்கு ஆசைப்படுவதை நிறுத்தினால் ஆண்கள் சம்பாதிப்பதை நிறுத்துவார்கள். பிறகு விவசாய தொழில் மட்டும் இருந்தால் போதும்.
மனிதர் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி, ஆத்மாவை சுத்தப்படுத்த துவங்கினால், ஆசைகள் விடுப்பார்கள். வேலையும் தேவையில்லை. அதிகம் சம்பாதிக்கவும் தேவையில்லை. கடவுள் முன்னே அமர்ந்திருக்கலாம். இல்லை குருமார்களின் முன் அமர்ந்திருக்கலாம். பிறகு காடுகளுக்கு செல்லலாம். பழ வகைகளை பூசிக்கலாம். நாம் மீண்டும் காட்டு மனிதனாக மாறிவிட்டோமோ? பிறகு நாம் நம்மை மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ள மரங்களை வெட்டி ஆயுதங்கள் படைப்போம். விரைவாக செல்லும் மிருகங்களை விரட்ட வாகனங்கள் உருவாக்குவோம். அப்படியென்றால் இன்றைய நிலை அடைய மீண்டும் ஒரு பெரிய சக்கரத்தை கடந்து வருவோம். இன்றைய நிலையை மீண்டும் அடைய எதற்கு இத்தனை சிரமம்? நாம் இன்றில் இருக்கிறோமே இப்போதே?
நாம் இங்கு சட்டங்களை அமைக்கவோ கோட்பாடுகளை நிர்ணயம் செய்யவோ இல்லை. நாம் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை.
சில சமயம் எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டறிய நினைப்பது சாத்தியம் இல்லை. நமக்கு விடை தெரியாதவைகளுக்கு ஒரு பெரும் சக்தி தான் காரணம் என்று சொல்ல வேண்டியதில்லை.
அந்த பெரும் சக்தியை வணங்கி வ்ழிபட தேவையில்லை. அதை சுற்றி சடங்குகள் உருவாக்க தேவையில்லை. கடவுள் உயிருள்ள ஒன்று என்றால், உங்கள் கோரிக்கை கேட்கும் என்றால், அந்த கடவுளுக்கு இறப்பும் உண்டு இல்லையா.
நாம் எப்படி கடவுளை மட்டும் பிறப்பு-இறப்பு சக்கிரத்திலிருந்து வெளியேற்றுகிறோம்.
சில விஷயங்களை ஏற்போம்.
1. ஆண்கள் காமம், பலம், அங்கீகாரம், பணம் இவைகளை விரும்புவர்.
2. பெண் காமம், நகை, அலங்காரம், சமூக அந்தஸ்து, பணம் இவைகளை விரும்புவர்.
3. இந்த விருப்பங்கள் தான் உலகத்தின் பொருளாதாரத்தை இயக்குகின்றன.
4. மனிதன் அவன் விரும்பியதை உண்ணலாம்.
5. மனிதன் அவன் விரும்பியதை செய்யலாம்
6. இந்த சக்தரத்தில் மனிதன் அமைதியில்லாமல் இருக்கிறான்
7. சமுதாயம் நிலை, நிலையற்ற, சமநிலையில்லாத தன்மை கொண்டது. இது தான் சரி, இது தான் தவறு என்றில்லை.
ஒவ்வொருவருடைய பார்வைக்கு ஏற்றவாறு சரி-தவறு மாறுகிறது.
ஒரு வரைமுறை இருக்கிறது. வரைமுறையும் இல்லை. இது ஒரு வரைமுறையில் செல்லும் குழப்பம் Organized Chaos எனலாம். ஆனால் வரைமுறை உண்டு. சரியில்லாமல் இருக்கலாம். மேன்பாடுகள், திருத்தங்கள் தேவைப்படலாம். ஆனால், இதை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய சமுதாய கட்டுபாட்டை அமைக்க முடியுமா?
தொடரும்...........