பார்த்தவை : 7-1-2004 - தற்போது திரையரங்குகளில்

lavanya

New member
பீச்சில்,பார்க்கில் காதலர்கள் சந்திக்க தடையா....? ஒண்ணு விட்ட அண்ணனிடமிருந்து
உதவாக்கரை சித்தப்பா வரை பார்த்து விடுவார்கள் என்ற கவலையா...?

* கணவன் மனைவி மனம் விட்டு பேசிக்கொள்ள சுதந்திரமான ஒரு இடம் தேவையா...?

* மூன்று மணி நேரம் ரிலாக்ஸாக தூங்க வசதி வேண்டுமா...?

தற்போது நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அந்தவூர் திரையரங்கம் போகலாம்.காரணம்
தற்போதைய ரிலீஸ் படங்கள்.விவேக் ஒரு படத்தில் சொல்வதைப் போல் ' எவனாவது இன்கம்டாக்ஸ் கட்டுற பிரச்னையில இருப்பான் அவன்கிட்டே போய் சொல்லு உன்
கதையை ' என்பது போல் எடுக்கப்பட்டு வந்திருக்கும் படங்கள்

இப்போது திரையரங்குகளில் பிதாமகனும்,திருமலையும் கொஞ்சம் ஆசுவாசமாய் ஓடிக்கொண்டிருந்தாலும் (ஆஞ்சனேயாவை எங்கும் காணவில்லை..மறுபடி ரேஸ?க்கே போய்
விட்டதாக கேள்வி) புதிய படங்கள் எல்லாம் தியேட்டரில் வந்திருக்கின்றன..
அன்பே உன் வசம், சூரி , பத்திக்கிச்சு, காதல் கிறுக்கன்,கொஞ்சிப் பேசலாம் போன்ற படங்கள் எல்லாம் திரை அரங்குகளில் ரீலிஸாயிருக்கின்றன.ஆனால் பார்க்கத்தான் ஆள் இல்லை..திருட்டு வீசிடியில் கூட இவை சீண்டப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய வருத்தம்.இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பத்திக்கிச்சி என்றொரு படம் தஞ்சையில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விசிடி வந்துவிட்டது..அதை பற்றி அவ்வப்போது
விளம்பரம் டிவியில் பார்த்ததால் நல்லவேளை தப்பித்து கொண்டேன்...

ஆனால் ஒன்று தி.வீயை ஒழிக்க மிக நல்ல முடிவு இந்த மாதிரி படங்கள் வெளிவருவதாக
தான் இருக்க முடியும்...இந்த மாதிரி புதுமுக அறிமுகம் கொண்ட படங்கள் ,சின்ன பேனர்கள் எடுக்கும் படங்கள் தி.வீ செய்ய ஆர்வம் குறைந்து விட்டதாம். என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் நமக்கு வீசிடி தரும் கடை நண்பர் அதற்கான
காரணங்களை கீழ்க்கண்டவாறு விளக்கினார்.

* ஒரு படம் திரையரங்குக்கு வந்தவுடன் அந்த ஆபரேட்டரை சரி கட்ட போராடல்.

* பின்பு யார்க்கும் தெரியாமல் படப்பெட்டியை கொண்டுபோய் படத்தை காப்பி அடிக்க
எடுக்கும் ரிஸ்க்குகள்.

* இது எல்லா நேரங்களிலும், இடங்களிலும் முடியாத போது வீடியோ காமிராவுடன்
தியேட்டர் சுவர் காம்பவுண்ட் ஏறி குதித்து

* ஆபரேட்டர் ரூமில் கெஞ்சி கூத்தாடி,அவரை சரிகட்டி அங்கேயே நின்று பயந்து
பயந்து படம் எடுத்து

* இரவோடு இரவாக அதை நூற்றுக்கணக்கில் பிரிண்ட் போட்டு ஆயிரக்கணக்கில்
காப்பி போட்டு கடையில் கொண்டு வந்து வைத்தால்

" இந்த படத்தை எவன் பார்ப்பான் " என்று கஸ்டமர்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

---------------
பொங்கல் படங்கள் எல்லாம் இந்த முறை பொங்கலுக்கு ஒருவாரம் முன்னமே ரீலிஸாவதாக
சில செய்திகள் பார்த்தேன்.எல்லாம் திருவாளர் தி.வீ அலர்ஜிதானோ என்று நினைத்தாலும்
வேறு சில பிரச்னைகளும் காரணமாக இருக்குமோ என தோன்றுகிறது...விருமாண்டியான
சண்டியரும், க்ரோனிக் பேச்சிலரான எங்க அண்ணாவும் புதுக்கோட்டையிலிருந்து வரும்
சரவணனும் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கலாம்..இதில் கோவில் கொள்ளப் போகும்
சிம்பு படமும் இயக்குனர் சாமி ஹரி என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது.
பார்ப்போம் மன்றம் வராமலா போகப்போகிறது.
 
Last edited by a moderator:
விருமாண்டி விற்பனை விலையை சரவணன் பல இடங்களில்
எகிறிவிட்டானாமே

மன்மதராசா பாண மயக்கமா?
ஈர ஸ்டில்களின் இறுக்கமா?

எத்தைத் தின்னா பித்தம் தெளியும்னு
பாபாவே பேபேன்னு முழிக்கிறப்ப

சாமிதான் காப்பத்தணும் தமிழ்ப்படவுலகை...
 
Last edited by a moderator:
லாவண்யா அவர்களே ..
நல்லாயிருக்கு ...


ஆனால் ஒன்று தி.வீயை ஒழிக்க மிக நல்ல முடிவு இந்த மாதிரி படங்கள் வெளிவருவதாக
தான் இருக்க முடியும்...இந்த மாதிரி புதுமுக அறிமுகம் கொண்ட படங்கள் ,சின்ன பேனர்கள் எடுக்கும் படங்கள் தி.வீ செய்ய ஆர்வம் குறைந்து விட்டதாம்.

இதைப் படித்தவுடன் குபீரெனச் சிரித்துவிட்டேன் ... :D
தி.வி. க்கே இந்த நிலைன்னா அப்ப தியேட்டர் பக்கம் யாரு போவாங்க ...
 
Last edited by a moderator:
லாவண்யா திருட்டு வீசிடியை ஒழிக்க முடியாது. ஆனால் நீங்கள் திரையரங்கு பற்றி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போ சில ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தியேடரில் பலான படம் போட்டு இருந்தால் அங்கு (வி....) கூட நடப்பதாக கேள்வி. மற்றபடி மவுண்டு ரோடில் வேலை தேடி அலைபவனும்.. நேர் முக தேர்வு செய்து விட்டு வருபவனும் நிம்மதியாக ஒரு 3 மணி நேரமாவது இருக்க நாடும் இடம் தியேட்டர்.
 
Last edited by a moderator:
இப்பத்தான் தமிழ்சினிமா எழுந்திருச்சிச்சி..
இப்பத்தான் மூச்சு விட ஆரம்பித்திருக்கு..
இப்பத்தான் நல்ல படங்கள் ஓட ஆரம்பித்திருக்கு..
என் சில மாதங்களுக்கும் முன்னர் திரையுலகினர் புது தெம்புடன் இருந்தனர்.. இப்படியொரு செய்தி கேள்விபட்டால் ஹார்ட் அட்டாக்தான்..
 
Last edited by a moderator:
சில நூறுகள் முதலீட்டில்...
சில பத்துக்கள் உதவியுடன்... பல படங்களை பார்க்கும் வசதி.... தி.வி.சி.டி!!

திரையரங்குகள் மெல்ல கல்யாண மண்டபமாகவும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவும் மாறிவருவது கவலைதரும் செய்தி... காதலர்களுக்கு..!!

தனுஷ் விடும் மன்மத பானங்களும் ஈர இருக்கங்களும் இருக்கும் படங்கள்தான் இனி ஓடும்.. ஏனெனில் தியேட்டர் வரும் சொற்பங்களும் அற்ப விடலைப்பயன்கள்தான்..

அம்மணிகள் சீரியலோடு அழுதுகொண்டிருந்தால்...நல்லபடங்கள் வர வாய்ப்பே இல்லை!!

தொடர்ந்து எழுத பாராட்டுக்கள் அக்கா!
 
Last edited by a moderator:
Back
Top