சினிமா புதிர்.

சரோஜாதேவி MGR sivaji Gemeni இவர்களைத் தவிர
மணபந்தலில் SSRருடன் இணைந்து நடித்துள்ளார் வேறு தெரிநதால் சொல்லவும்
 
சரோஜாதேவி ரவிச்சந்திரனுடன் மாலதியில் நடித்துள்ளார்

சபாஷ் மீனாவில் சந்திரபாபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்
 
1. டைரக்டர் வாசுவின் முதல் படம் எது ??

குறிப்பு:: விடை தெரிந்தால் நீங்க நம்ப மாட்டீர்கள், இந்த படத்தை இவரா இயக்கினார் என, அப்படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம்.

clue:suresh is the hero of the film ,school love story + ooty



2.மணிரத்னத்தின் முதல் படம் எது(தமிழில்)?

குறிப்பு::இந்த படம் ஓட வில்லை

clue: murali + revathi



3.டைரக்டர் சங்கர் யாரோட அசிஸ்டெண்ட்?

குறிப்பு::குருவை போல சீடன் ரெண்டு பேரும் ஒரே கதையை வேற விதமா எடுத்து டார்சர் பண்றவங்க.

clue: vijaya kanth is the fav hero of his films, even he directed rajini in him film , in which rajini s characted is robin hood


4.சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பக பூ நாவல்' தமிழில் அதே பெயரில் வந்தது படமாக, அதன் ஹீரோ யார்?.

குறிப்பு::நாட்டுப் புற பாடல்களை பேஸ் பண்ணி ஒரு த்ரில்லர், யாராவது இந்த படம் பாத்துருக்கீங்களா?




clue: loose actor,actres shoba s first husband

5.'நிழல்கள்' படத்தில் கதை யாரோடது, இதன் டைரக்டர் பாரதிராஜா

குறிப்பு::இதையும் நம்பவே மாட்டீங்க,கதை யாரோடதுன்னு சொன்னா


clue: now he is govurava nadigar com comedian , thadi vaala ,his name contains money
 
1. வாசுவின் முதல் படம் மெல்ல பேசுங்கள் (பாரதி வாசு )
சந்தானபாரதி, வாசு இயக்கிய படம்

2. மணிரத்னத்தின் முதல் படம் பகல் நிலவு (பூ மாலையே தோள் சேரவா)

3. சங்கர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அசிஸ்டெண்ட்

4.கரையெல்லாம் செண்பகப்பூ ஹீரோ பிரதாப் போத்தன்


5. மணிவண்ணன்
 
குறிப்புகள் இல்லாமலே விடைகள் பின்னி எடுக்கக்கூடியவர் என் குரு..

குருவின் ஐந்து பதில்களும் - 100%
 
1. பன்னீர் புஷ்பங்கள்.


அதுசரி.. பிரதாப் போத்தன் (சித்தி) ராதிகாவின் முதல் கணவன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்!!
 
1. பன்னீர் புஷ்பங்கள்.


அதுசரி.. பிரதாப் போத்தன் (சித்தி) ராதிகாவின் முதல் கணவன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்!!

நீங்கள் தான் சரி
 
1) கமல்ஹாசனுக்கு முதன் முதல் பின்னணிப் பாடல் பாடியவர் யார்?
2) கமல்ஹாசன் முதன்முதல் தமக்குப் பாடிய பின்னணிப் பாடல் எது?
3) கமல்ஹாசன் அஜீத்குமாருக்குப் பின்னணி பாடிய பாடல் எது?
 
2. படம் அந்தரங்கம். ஞாயிறு ஒளி மழையில், திங்கள் குளிக்க வந்தாள்
1. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே குயிலி ராஜேஸ்வரி
 
3.முத்தே முத்தம்மா கமல் மற்றும் ஸ்வர்ணலதா
படம்: உல்லாசம்
 
கமல் இருட்டை வேடங்களில் நடித்த முதல் படம்.

கமல் திரைக்கதை எழுதிய முதல் படம்

கமல் பேசாமல் நடித்த முதல் படம்.

கமல் வசனம் எழுதிய முதல் படம்
 
கமல் இருட்டை வேடங்களில் நடித்த முதல் படம்.
சட்டம் என் கையில்

கமல் திரைக்கதை எழுதிய முதல் படம்
ராஜபார்வை

கமல் பேசாமல் நடித்த முதல் படம்.
உணர்ச்சிகள் (கோஷிஷ் என்ற இந்தி படத்தின் தழுவல்)

கமல் வசனம் எழுதிய முதல் படம்
ராஜபார்வை
 
அன்பின் ஆரென், குரு சொன்ன பதில்கள் மிகச்சரி..

அடுத்து தக்ஸ் கேட்டவைக்கும் ஆரென் கலக்கிவிட்டார்.

----------------------------------------------------

அடுத்து யார் கேள்வி கேட்கப் போகிறீர்கள்?
 
நானே ...

1. மனோ வாணிஜெயராம் பாடிய பாடல்களை கூறவும்

2. எஸ்.வரலட்சுமி சண்முகசுந்தரத்திற்கு ஜோடியாக நடித்த படம் எது?

3. ஆசை திரைப்படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தவர் யார்?
 
1. மனோ வாணிஜெயராம் பாடிய பாடல்களை கூறவும்

2. எஸ்.வரலட்சுமி சண்முகசுந்தரத்திற்கு ஜோடியாக நடித்த படம் எது?
ஜெமினியும் வாணிஸ்ரீயும் சேர்ந்து நடித்திருப்பார்கள். வாணிஸ்ரீ சிங்கப்பூரில் இருந்து லெட்டெர் மூலமே என்ன செய்யவேண்டும் என்று சொல்வார். படத்தின் பெயர் வெள்ளி விழா. 1972ல் வெளிவந்தது.

3. ஆசை திரைப்படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தவர் யார்?
விக்ரம்
 
Last edited:
ஆரென் ... இரண்டுமே தவறான பதில்கள்

வெள்ளி விழாவில் எஸ்.வரலட்சுமி ஜெமினியின் விதவை அம்மா வேடம்

ஆசையில் குரல் கொடுத்தவர் விக்ரம் அல்ல*
 
Back
Top