நமக்கு பழைய படங்கள் பற்றி அவ்வளவா தெரியாது அதனால ஒரு கேள்விக்கு விடை தெரியலை..என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன இதே போல் இங்கே பதில் தெரிந்தால் சொல்லுங்க
சின்ன வயசுல பக்கத்து வீட்டு பசங்களோடு, சரத்குமார் ட்ரிபிள் ஆக்ட் பண்ணிய படம் பேரு என்ன? , ரஜினி வில்லனா நடிச்ச படம் என்னனனு நாங்க எங்க சினிமா அறிவை பெருக்கிக் கொள்ள போட்டி வைத்து விளையாடுவோம் , சில சமயம் ஆசிரியர் இல்லாத போரடிக்கும் வகுப்பில், சில சமயம் ஆசிரியர் இருந்தும் போரடிக்கும் வகுப்பிலும் விளையாடுவோம்..
அப்படி நான் பெருக்கி கொண்ட சினிமா அறிவை உங்க கிட்ட காட்ட வேண்டாமா?

அதனால தான் இந்த சினி குவிஸ்ஸ்..தெரிஞ்சா சொல்லுங்க, கூகிள் பண்ணிக் கூட சொல்லலாம்..டிரை பண்ணுங்க
1. டி.எம்.சவுந்தர் ராஜன் தமிழ் சினிமாவில் பாடிய கடைசி பாடல் எது?
குறிப்பு: ஒரு புத்தகத்தில் இதை படித்தேன், இப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார், வேண்டுமென்றால் ராஜ் டிவியில் அவரை பார்க்கலாம்
2. புதிய முகம் படத்தில் வரும் 'கண்ணுக்கு மையழகு பெண் குரல் பாடியவர் யார் ??
குறிப்பு:இவங்க கூட ஓல்ட் பாடகி
3. டவுசர் ராமராஜனின் படத்தில் வரும் பேமஸ் 'செண்பகமே செண்பகமே 'பாடலை பாடிய பாடகி யார்..
குறிப்பு: தமிழ் தெரியாது என்றாலும் பிழை இல்லாமல் பாடியிருப்பார்.
4. வரிசை படுத்துக
a)பாண்டியராஜன்
b)விக்ரமன்
c)பாரதிராஜா
d)பார்திபன்
e)விக்ரமன்
f)கே எஸ் ரவிக்குமார்
குறிப்பு: யார் யாருக்கு கீழ அசிஸ்டெண்டா இருந்தாங்கன்னு வரிசை படுத்துங்க
5. எம்.எச்.வியும், இளையாராஜாவும் சேர்ந்து இசை அமைத்த படம் எது?
குறிப்பு: இளையராஜா 1985-90 ஸ்ஸ் ல பயங்கர பிஸி, ஒரே நேரத்துல பல படங்களுக்கு இசையமைத்தார், அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க நேரம் இல்லாம, எம்.ஸ்வி கு சேர்ந்து இசையமைத்தார்